கலை, கலகம்: கலை இயக்கங்கள் (பழைய கற்காலம் த�ொடங்கி ப�ோஸ்ட் மார்டனிச காலகட்டம் வரை) (கி.மு. 7,00,000 - கி.பி. 1950)
புக் - I
நவீனா அலெக்சாண்டர்
Andhazahi Vaitheeswaran Chockalingam, Gajiniganth Gulam Dhasthagir, Arun Kumar, Mahendran Ameeragam, David J Praveen, Karthik Dilli, Surendar Lohia, Aravind Sankar, Rameez Raja, Saravanan, Zahir Ibn Jaffarullah, Varshini, Amina Mohammed, Franklin Eden Copyright © 2017 by Naveena Alexander All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher/Author, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher/Author, at the email below. www.andhazahi.in
[email protected] First Edition. Sep. 2017 Price Rs. 120/Andhazahi 12, Pillayar Koil Street, Durga Nagar,Tambaram-Santorium, Chennai - 47 Printed in Chennai, Tamil Nadu.
ப�ொருளடக்கம் த�ொடங்குவதற்கு முன்….
1
வரலாற்றிற்கு முற்பட்ட கற்கால மனிதனின் கலைகள்
4
மெசப்பட்டோமிய கலை வரலாறு
15
சிந்து நாகரீக கலை வரலாறு
69
எகிப்திய கலை வரலாறு
78
Reference Books
IV
118
அந்தாழையின் பிற வெளியீடுகள் நவீனா அலெக்சாண்டர் உலகத் திரைப்படங்கள் விமர்சனப் பார்வை: திரைக்கதை உத்தி, கேமிரா உத்தி, எடிட்டிங் உத்தி க�ொரில்லா பிலிம் மேக்கிங்: Handbook For Independent Filmmakers புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும் உருகும் பூமி உறையும் உயிர்கள்: ஆன்திரப�ோசீன் பேரழிவு எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள்: An Introductory To Next Gen Screenwriting தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக் வர்ஷினி கிளிய�ோபாட்டிரா: சூழ்ச்சிகளின் அடையாளமில்லா அடையாளம் ப�ோதை அடிமைகள்: சமூக ஊடகம், இணையம், ப�ோர்னோ தி ஆஸ்கார்ஸ் நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி சமையலறையில் கல்லறை: விசமாகும் உணவுகள் குத்தக்கைக்கு ப�ொதுப்புத்தி: புதிய பரிணாம க�ொள்கை கிருமிக்கண்ட மானிடம் பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்: An Intro To Film Festival Circuit இண்டர்நெட் சினிமா: VOD (Video On Demand) Next Gen Film Distribution For Indie Filmmakers உலக சினிமாக்களின் கேமிரா & எடிட்டிங் உத்திகள்: Handbook For Indie Filmmakers
V
த�ொடங்குவதற்கு முன்….
ம
னிதனின் அடுத்தகட்ட சமூக வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக இருப்பது கலைகள். நிகழ் கால சமூகத்தின் அகப் புறப் பிரச்சனைகளையும், சமூகத்தின் மீதான ஆளும் வர்க்க அடக்கு முறைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து மனித சமூகம் ஒரு தீர்வை ந�ோக்கி நகர வடிகாலாகவும், கலக குரலாகவும் இருந்து செயல்படுபவைகள் கலைகள். அது எந்த வகையிலான கலைகளாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்த இயங்கியல் இதுவாகத்தான் இருக்கும். மனித சமூகம் த�ோன்றிய பல ஆயிரம் ஆண்டுகளாக கலைகள் மனித சமூகத்தை முன்னகர்த்தி செல்லும் கருவிகளில் முக்கியமான கருவியாக இருந்து வருகிறது.
மனித சமூகத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதுடன் சேர்த்து தன்னையும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திக்கொள்ள கூடியவைகள் கலைகள். கலைகள் ஒரே கட்டத்தில் தேங்கிவிடக் கூடியவைகள் அல்ல. சமூகத்தின் வளர்ச்சியை விரும்பாத, வளர்ச்சிப் பெறாத ஒரு சமூகத்தை அடிமையாக க�ொண்டு அதிகார ப�ொருளாதார குளிர்காய நினைக்கும் மனித முயற்சிகள் வேண்டுமானால் செயற்கையாக கலைகளை அடுத்தக் கட்டத்திற்கு நகரவிடாமல் ஒரு தேக்க நிலையிலேயே முடக்க முடியுமே ஒழிய, கலைகள் தன்னியல்பாக ஓரிடத்தில் தேங்க கூடியவைகள் அல்ல. மனித சமூகத்தின் கடந்த கால நிகழ் கால செயல்பாடுகளைப் புரிந்துக�ொள்ள பண்பாட்டு மானுடவியலும் அடிப்படையாக இருக்கிறது. பண்பாடுகளின் அடிப்படைகளில் ஒன்றாக இருப்பது கலைகள். அதன்படி மனித சமூகத்தின் கடந்தகால நிகழ்கால ப�ோக்குகளை நாம் புரிந்துக�ொள்ள கலைகளும் நமக்கு பெறும் உதவியாக இருக்கின்றன. கலையின் கடந்த கால பரிணாம வளர்ச்சிகளை நாம் திரும்பி பார்க்கும்போது நமக்கு அதன் ஊடே தெரியவருவது மனித 1
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
சமூக மற்றும் தனி மனித சிந்தனையின் பரிணாம வளர்ச்சிகளும் கூட. வேட்டை நாகரீக மனிதனின் கலைகள் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு மாற்றத்தை ந�ோக்கி நகர்கிறது. அதன் வழி தனி மனித சிந்தனைகள் விவசாய நாகரீகத்தின் அகப் புற பிரச்சனைகளில் இருந்து தப்பி ஒரு தீர்வை ந�ோக்கி நகர துணை செய்கிறது. விவசாய நாகரீகம் உலக பேரரசுகளின் நாகரீகமாக வளரும்போது கலைகளும் தங்களை அதற்கு ஏற்ப அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு நகர்த்திக்கொண்டு தனி மனித சிந்தனைகளையும் புதிய தீர்வுகளை ந�ோக்கி நகர்த்துகிறது. இப்படியே இன்றைய நவீன காலம் வரை கலைகளின் வளர்ச்சியானது எங்கும் தேங்காத ஒரு நீண்டப் பயணத்தை நடத்தி வருகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட வேட்டை நாகரீகத்தில் த�ொடங்கி (ஆப்பிரிக்க, இந்திய துணைக்கண்டம் மற்றும் ஸ்பெயின்), தமிழ் சிந்து, எகிப்து, சுமேரியா, கிரேக்கம், ர�ோமன், பைசாண்டியம், மீச�ோ அமெரிக்க கலைகள், சீனம், இஸ்லாமிய கலைகள், மத்தியக் கால க�ோத்திக் கலை, ரினையசன்ஸ், எக்ஸ்பிரசனிசம், இம்பிரசனிசம், கியுபீசம், தாதாயிசம், அப்ஸ்டிராக்ட்- எக்ஸ்பிரசனிசம், சர்ரியலிசம், ர�ோமான்டிஸசம், சிம்பாலிசம், நேச்சுரலிசம், இமேஜிசம், ஃபாவுசிம், டே ஸ்சிடஜல், ஃபியூச்சரிசம், மினிமலிசம், நிய�ோ-தாதா, நிய�ோஎக்ஸ்பிரசனிசம், ப�ோஸ்ட்- இம்பிரசனிசம், ப�ோஸ்ட்-மினிமலிசம், ரியலிசம், ஓப்-ஆர்ட், ப�ோர்க்யூ, கிளாசிசம், புலூம்ஸ்பரி குரூப், பிலாக் மெளண்டேய்ன் காலேஜ், ஆர்ட் டேக�ோ, ஆர்ட் நுவ�ோ, கன்ஸ்டிரக்டிவிசம், ஃபிலெமிஷ் ஸ்கூல், ஃபிலக்சூஸ், மேனரிசம், மாஸ்சர்ரியலிசம், நிய�ோ-கிளாசிக்கல், ப�ோட்டோரியலிசம், பாயிண்டலிசம், பிரீ-ராப்பாலடிஸ், சிச்சுவேசனிசம், ர�ோக�ோக�ோ, நபிஸ், ஆர்லம் ரினையசன்ஸ், கிராஃபிடி ஆர்ட், மார்டனிசம், ப�ோஸ்ட்- மார்டனிசம் என்று கலைகள் மனித வரலாற்றினூடே கடந்து வந்தப் பாதை மீக நீண்டது. கலைகளின் வரலாற்று பயணத்தை குறித்து நாம் தெரிந்துக�ொள்வது மிக அவசியமாகிறது. கலைகள் மனித சிந்தனைப் ப�ோக்கில் எத்தகைய தாக்கங்களை செலுத்தி சமூக மேம்பாட்டுக்கான புரட்சிகர மாற்றங்களுக்கு வழி ஏற்படுத்திக் க�ொடுத்தது என்பதை அதன் முழுப் பரிமாணத்துடன் புரிந்துக�ொள்ள இது நமக்கு வசதியாக இருக்கும். கலை வரலாறு என்கிறப் பெயரில் 2
நவீனா அலெக்சாண்டர்
அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்துக�ொள்வதைவிட முழுமையாக (வாசிப்பில் முழுமை என்பதற்கான வரையறை இல்லை என்கிற ப�ோதிலும்) தெரிந்துக�ொள்வது தமிழ் வெளியில் கலைகள் குறித்த ஆர�ோக்கியமான விவாதங்களையும் தேடல்களையும் முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதாலேயே இந்த புத்தகத்தை எழுத உட்கார்ந்தேன். கலைகளின் வரலாற்றைத் த�ொடங்குவதென்றால் அதன் மூலத்திலிருந்துதானே த�ொடங்கவேண்டும். த�ொடங்குவ�ோம் வாருங்கள். (இது கீற்று இணையதளத்தில் கட்டுரை த�ொடராகவும் வெளிவந்திருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்).
நவீனா அலெக்சாண்டர் 9841959890
3
வரலாற்றிற்கு முற்பட்ட கற்கால மனிதனின் கலைகள்
ஆ
திகால மனித சமூகத்தின் கலை வெளிப்பாடுகளில் ஒன்றாக இன்றைக்கு நமக்கு கிடைப்பவைகள் அவன் குகைகளில் தீட்டிய சுவர் ஓவியங்களே. இரண்டு இலட்சம் வருடத்திய தனி மனித சிந்தனை வளர்ச்சிப் ப�ோக்கை நமக்கு கண்ணாடிப் ப�ோல காட்டுபவை இந்த ஓவியங்கள். கற்கால மனிதன், தன் உணர்வு கிளர்ச்சியை, சிந்தனை முதிர்ச்சியை வெளிப்படுத்த பயன்படுத்திய இசை மற்றும் நடனக் கலைகளை இன்றைய நிலையில் அப்படியே மீட்டு உருவாக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
காரணம் ஓவியங்களைப் ப�ோன்று அந்த கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்படியே நிலைத்திருக்கும் ஊடகங்களில் நிகழ்த்தப்பட்ட (பாறைகள்) கலைகள் அன்று. அவைகள் குறித்த எத்தகைய எழுத்து வடிவ அல்லது குறியீட்டு வடிவ குறிப்புகளையும் கற்கால மனிதர்கள் நமக்கு விட்டு செல்லவில்லை. ஆக, கற்கால மனிதனின் கலைகள் என்று எடுத்துக்கொண்டால் (நம்மால் இன்றைக்கு காணக் கூடி கற்கால மனிதர்களின் கலைகள்) அவை ஓவியமும் சிற்ப கலையும் மாத்திரமே. கற்கால மனிதனின் சிந்தனையில் ஓவியம் என்பது மந்திரத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவே இருந்திருக்கிறது. கற்கால மனிதர்கள் தங்களின் அன்றாட வயிற்றுப் பாட்டிற்கு வேட்டை த�ொழிலையே பெரிதும் சார்ந்திருந்தார்கள். வேட்டையின் மூலம் பெறப்படும் உணவுகளே அவர்களின் பிரதான உணவுகளாக இருந்திருக்கின்றன. இன்றைக்கு அரிசி இல்லாத வாழ்வை எப்படி நம்மால் கற்பனையும் செய்துப் பார்க்க முடியாத�ோ அதேப் ப�ோன்று கற்கால மனிதர்களால் வேட்டை மிருகங்களின் வழி கிடைக்கும் மாமிச உணவுகள் இல்லாத வாழ்வை கற்பனைக் கூட செய்து பார்த்திருக்க முடியாது. அதன் காரணமாகவே அவர்கள் கற்பனை 4
நவீனா அலெக்சாண்டர்
முழுவதும் நிரம்பி இருந்தவைகள் வேட்டை த�ொழிலும், அவர்கள் உணவிற்காக வேட்டையாடிய மிருகங்களும். கற்கால மனித சமூகத்தில் வேட்டை த�ொழில் என்பது அவ்வளவு எளிதான ஒரு காரியமாக இருந்திருக்கவில்லை. உடம்பை வளர்க்க தினம் தினம் வேட்டையின்போது அவர்கள் தங்களின் உயிர்களை பணயம் வைக்கவேண்டியிருந்தது. இத்தகைய நித்திய கண்டம் பூரண ஆயுசு ப�ோராட்டம் வாழ்வைக் குறித்த சிந்தனை ப�ோராட்டத்தையும் அவர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களைப் ப�ொறுத்த வரையில் இயற்கை மற்றும் இயற்கை ப�ொருட்களில் இருக்கும் ஆன்ம சக்திகளே (spirits) தங்களின் வாழ்க்கை ப�ோராட்டத்தை (உணவுத் தேடல்) கட்டுப்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன என்பது அவர்களது திடமான தத்துவ புரிதல் மற்றும் ஆழமான நம்பிக்கை. இயற்கை ப�ொருட்களில் இருக்கும் ஆன்ம சக்திகளை தங்களின் கட்டுக்குள் க�ொண்டு வருவதன் மூலம் தங்களின் வாழ்க்கை ப�ோராட்டம் பாதுகாப்பான ஒன்றாக மாறிவிடும் என்று நம்பினார்கள். இந்த நம்பிக்கையை வெளிப்படுத்த அவர்களுக்கு பெரும் துணையாக இருந்தது ஓவியங்கள். கற்கால மனிதர்களின் குகை சுவர் ஓவியங்களுக்கு பின்னால் இருக்கும் உளவியல் அவர்கள் வேட்டையாடிய மிருகங்களின் ஆன்ம சக்தியைத் தங்களின் கட்டுக்குள் க�ொண்டுவருவதாகவே இருந்திருக்கிறது. வேட்டைக்கு புறப்படுவதற்கு முன்பாக வேட்டை மிருகங்களின் உருவங்களை குகைகளின் சுவர்களில் தீட்டி அந்த ஓவியங்களை தங்களின் ஆயுதங்களைக்கொண்டு தாக்கும் சடங்கின் மூலம் அந்த மிருகங்களின் ஆன்ம சக்தியை தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினார்கள். இது ஏறக்குறைய ஒருவகை மந்திர சடங்குப�ோன்றதாகவே கற்கால மனிதர்களிடம் செயல்பட்டிருக்கவேண்டும் என்று இன்றைய வரலாற்று மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். கற்கால மனிதர்கள் இடையே ஓவியங்களைத் தீட்டும் செயலானது மந்திர மத சடங்காகவே த�ொடங்கியிருக்க வேண்டும் என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் முக்கிய 5
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
காரணம் குகைகள். கற்கால மனிதர்கள் தங்களின் வசிப்பிடமாக க�ொண்டிருந்த குகைகளில் இத்தகைய ஓவியங்களை அவர்கள் தீட்டியிருக்கவில்லை. ஓவியங்களைத் தீட்டுவதற்கென்றே அவர்கள் சில குகைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிற்கால சமூகங்களில் வழிபாட்டிற்காக க�ோயில்களை கட்டி அதில் தெய்வ சிலைகளை வைத்து மனிதன் வழிபாடு நடத்தியதைப் ப�ோல, கற்கால மனிதர்கள் ஓவியங்கள் மூலமான தங்களின் மந்திர சடங்கை நடத்த சில பிரத்தியேக குகைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த குகைகள் இன்றைய மனித கண்களுக்கு அகப்படாமல் பாதுகாப்பான மறைவிடங்களில் இருப்பதற்கு காரணமும் இதுவே. தங்களின் மந்திர சடங்கு ஓவியங்களை மறைவிடத்தில் மிக பாதுகாப்பாக வைத்திருக்க (இயற்கை சீற்றங்களான வெயில், புயல் மழை ப�ோன்றவைகளில் இருந்து பாதுகாக்க) கற்கால மனிதர்கள் முயற்ச்சி செய்திருக்கிறார்கள். அவர்களின் குகை ஓவியங்கள் எத்தகைய இயற்கை சேதாரங்களும் இல்லாமல் இன்றைக்கு நமக்கு புதிதுப் ப�ோல கிடைக்க இதுவும் ஒரு காரணம். கற்கால மனிதர்களின் குகை ஓவியங்கள் பெரும்பான்மையாக ஆப்பிரிக்க கண்டத்திலும், இந்தியாவிலும், ஸ்பெயின் மற்றும் பிரான்சின் தெற்குப் பகுதியிலும் இன்றைக்கு நமக்கு காணக் கிடைத்திருக்கிறது. ஆப்பிரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசிய
6
நவீனா அலெக்சாண்டர்
பகுதிகளில் இத்தகைய ஓவியங்களை உருவாக்கிய கற்கால (Paleolithic) மனிதர்களை ஆருக்னேசியன்ஸ் என்றும் பிரான்சு மற்றும் ஸ்பெயின் ப�ோன்ற ஐர�ோப்பிய பகுதிகளில் குகை ஓவியங்களை உருவாக்கிய கற்கால மனிதர்களை மக்டலேனியன்ஸ் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள். இதில் ஆருக்னேசியன்ஸ் வரைந்த குகை ஓவியங்கள் சுமார் 1,00,00 - 40,000 வருடங்கள் பழமைக�ொண்டவைகள். இதற்கு உதாரணமாக இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்திலிருக்கும் பிம்பெட்கா குகை ஓவியங்களை குறிப்பிடலாம். குகை ஓவியங்களிலேயே காலத்தால் மிகப் பழமையானவையாக கருதப்படுபவை (சுமார் 50,000 – 1,00,000 ஆண்டுகள் பழமையானவையாக) பிம்பெட்கா குகை ஓவியங்கள். பிம்பெட்கா குகை ஓவியங்களை பெட்ரோகிளிப்ஸ் என்று வகைப்படுத்துகிறார்கள் கலை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். இவைகள் அப்ஸ்டிராக்ட் வகை ஓவியங்களாக இருக்கின்றன. இதற்கு அடுத்து மிக பழமையான குகை ஓவியங்கள் இருப்பதாக சமீபத்தில் கண்டறியப்பட்ட இடம் இந்தோனேசியாவின் சுலவேசியில் இருக்கும் டிம்புசெங் குகை. இவைகளின் காலமும் ஏறக்குறைய 70,000 – 40,000 வருடங்கள் இருக்கலாம் என்றுக் கருதப்படுகிறது. இவைகளும் அப்ஸ்டிராக்ட் வகை ஓவியங்களே.
7
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
இதற்கு அடுத்து கற்கால ஓவியங்கள் மிக பெரும் எண்ணிக்கையில் கிடைப்பது ஸ்பெயினிலும் பிரான்சிலும். பிரான்சின் லாஸ்கா என்னும் இடத்திலும் வடக்கு ஸ்பெயினின் அல்டாமிரா என்னும் இடத்திலும் இருக்கும் குகைகளில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட குகை ஓவியங்கள் கிடைக்கின்றன.
கற்கால மனித சமூகத்தில் ஓவியக் கலைஞர்கள் என்று தனி பிரிவு இருந்ததாகத் தெரிகிறது. இவர்கள் அன்றாட வேட்டைத் த�ொழிலில் ஈடுபடாமல் மந்திர சடங்கு நடத்தப்படும் குகைகளில் பெரும் பகுதி நேரத்தை செலவிட்டு ஓவியங்களை வரைந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. ஓவிய மந்திர சடங்கை நடத்திய பூசாரிகளும் இவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்றும் கருதப்படுகிறது. அப்ஸ்டிராக்ட் (இயற்கையிலிருக்கும் ப�ொருள்களை அப்படியே பிரதியெடுத்ததுப் ப�ோல வரையாமல் அந்த ப�ொருளை அடையாளப்படுத்தும் ஒரு அடையாளக் குறியைய�ோ அல்லது அடையாளத்தைய�ோ வரைவது. உதாரணமாக காட்டெருமையை அப்படியே வரைவதற்கு பதிலாக அதன் தலையில் இருக்கும் வளைந்த க�ொம்புகளை மாத்திரம் வரைந்து காட்டெருமையாக அடையாளப்படுத்துவது) வகை ஓவியங்களையும், நேச்சுரலிச வகை ஓவியங்களையும் கற்கால 8
நவீனா அலெக்சாண்டர்
மனிதர்கள் வரைந்திருக்கிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் ஓவியக் கலையின் மேம்பட்ட உத்திகளில் ஒன்றான ஃப�ோர் ஷார்டனிங் என்கிற உத்தியைக் கூட கற்கால ஓவியக் கலைஞர்கள் தங்களுடைய ஓவியங்களில் பயன்படுத்தியிருப்பதாக ச�ொல்கிறார்கள். வரையப்படும் ஓவியத்திற்கான மாஸ் மற்றும் வால்யூம் ப�ோன்ற முப்பரிமாண த�ோற்றங்களை உண்டாக்க கற்கால ஓவியக் கலைஞர்கள் தாங்கள் வரையும் குகையின் சுவர் பகுதியை மேடு பள்ளங்களாக செதுக்கி அதன் மீது தங்களின் ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். சிகப்பு, மஞ்சள், கருப்பு ப�ோன்ற நிறங்களையும், இவைகளின் கலவை நிறங்களையும் தங்களின் ஓவியங்களுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓவியத்தின் மீது பூசப்பட்ட வண்ணம் உதிர்ந்துவிடாமல் இருக்கவும், வெளுத்து விடாமல் இருக்கவும் மிருகங்களின் இரத்தத்தையும், மனித சிறுநீரையும், மூலிகைகளின் சார்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓவியங்களை தீட்ட விரல்களையும், மிருகங்களின் ர�ோமங்களை சேர்த்துக் கட்டிய கருவிகளையும், மரப்பட்டைகளையும் உபய�ோகித்திருக்கிறார்கள். மனித பரிணாம வளர்ச்சியில் ஹ�ோம�ோ ஹிரக்டஸ் காலம் த�ொட்டே மனிதன் ஓவியங்களை வரையத்தொடங்கியிருக்கவேண்டும். ஆனால் நமக்கு இப்போது கிடைப்பவைகள் ஹ�ோம�ோ சேப்பியன்ஸ் கால ஓவியங்களே. சிற்பக் கலையை ப�ொறுத்த மட்டில் ஹ�ோம�ோ ஹிரக்டஸ் கால சிற்பங்கள் சில இப்போது நமக்கு கிடைத்திருக்கின்றன. இவைகள் சுமார் ஆறிலிருந்து ஏழு இலட்சம் வருடங்களுக்கு முற்பட்டவை. சுண்ணாம்பு பாறை கற்கள், மிருகங்களின் க�ொம்புகள் மற்றும் தந்தங்கள் ப�ோன்றவற்றில் ஹ�ோம�ோ ஹிரக்டஸ் காலம் த�ொடங்கி கற்காலம் வரை சிறிய உருவிலான சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த சிற்பங்களில் பிரதானமானது இன்றைக்கு ஆராய்ச்சியாளர்களால் வீனஸ் என்று அழைக்கப்படும் பெண் வடிவ சிற்பங்கள். இந்த சிற்பங்கள் வளமையின் அடையாளக் குறி என்று மானுடவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த சிற்பங்களும் குகை ஓவியங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அனேகமாக கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இது நமக்கு உணர்த்தும் வரலாற்று 9
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
உண்மை, குகைகளில் ஓவியங்களை வரைந்த கலைஞர்களே இந்த சிற்ப உருவங்களையும் செதுக்கியிருக்கவேண்டும் என்பது. ஓவியங்கள் மந்திர சடங்கிற்கு பயன்பட்டதைப் ப�ோன்றே சிற்பங்களும் கற்கால மனிதர்களால் மந்திர சடங்கிற்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கற்கால மனித சிந்தனை பெண்களை வளமையின் குறியீடாகப் பார்த்திருக்கிறது. மிகவும் குறிப்பாக பெண்ணின் உடலை. தங்களுக்கான வேட்டை உணவு தடையின்றிக் கிடைக்க வேட்டை மிருகங்களின் இனப்பெருக்கம் என்பது மிகுதியான அளவில் இருக்கவேண்டும் என்பதை கண்டுக�ொண்டிருந்த அவர்கள், தாங்கள் வேட்டையாடும் விலங்குகளின் இனப்பெருக்கத்தை செயல்படுத்தும் இயற்கை சக்தியை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவர கற்கால மந்திர சடங்கு ஷாமன்கள் (குகை ஓவியங்களை வரைந்த கலைஞர்களும் இவர்கள்தான்) பெண் உருவம் க�ொண்ட வீனஸ் சிற்பங்களை வடித்திருக்கிறார்கள். மனித இனத்தை பெருக்க பெண்ணின் உடல் கருவியாக இருப்பதைப் ப�ோல உணவிற்கான மிருகங்களின்
இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் இயற்கை சக்தியை கையாளும் கருவியாகவும் பெண்ணின் உடல் இருக்கும் என்கிற மந்திர சிந்தனையின் அடிப்படையிலேயே கற்கால சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கற்கால சிற்ப கலையை ஐந்து வகைகளாக பிரிக்கிறார்கள் வரலாற்று 10
நவீனா அலெக்சாண்டர்
ஆராய்ச்சியாளர்கள். முதலாவது, அல்ட்ரா பிரிமிடிவ் ஹியுமனாயிட் ஹாப்ஜக்ட்ஸ். இவைகள் சுமார் 6,00,000 – 7,00,000 வருடங்களுக்கு முற்பட்டவை. இவைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகள் அல்ல. காற்று மற்றும் நீர் அரிப்பால் இயற்கையாக கற்களில் உண்டான வடிவங்கள். இவைகளை ஹ�ோம�ோ ஹிரக்டஸ் மனிதர்கள் தங்களின் வசிப்பிடங்களில் சேகரித்து வைத்திருந்திருக்கிறார்கள். தங்களின் மந்திர சடங்குகளுக்கு பயன்படுத்தவேண்டி. உதாரணமாக வீனஸ் ஆப் பெர்கத் ரேம் சிற்பத்தை ச�ொல்லலாம். இரண்டாவது, பிரிமிடிவ் ரிலிப்ஸ். இவைகள் இன்றிலிருந்து சுமார் 25,000 வருடங்களுக்கு முற்பட்டவை. இதற்கு உதாரணமாக வீனஸ் ஆப் வில்லன்டார்ப் சிற்பத்தை ச�ொல்லலாம்.
மூன்றாவது, வீனஸ் பிகரின்ஸ். இவைகள் சுமார் 40,000 வருடங்களுக்கு முற்பட்டவை. வீனஸ் ஆப் ஹ�ோலி பெல்ஸ் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். நான்காவது, கார்விங்ஸ் ஆப் ஆன்திர�ோப�ோமார்பிக் பிகர்ஸ். இறுதியாக கார்விங்ஸ் ஆப் அனிமல் பிகர்ஸ். இவை இரண்டும் சுமார் 35,000 வருடங்களுக்கு முற்பட்டவை. அப்ஸ்டிராக்ட் வடிவத்தில் த�ொடங்கிய பழைய கற்கால மனிதனின் கலைகள் (அப்ஸ்டிராக்ட் கலை என்றால் என்ன என்பதுக் 11
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
குறித்து முன்பேப் பார்த்திருக்கிற�ோம்) புதிய கற்காலத்தின் உச்சத்தில் நேச்சுரலிசத்தை ந�ோக்கி வளர்ச்சியடைந்திருந்தது. இதை வரலாற்றுக்கு முந்தைய நேச்சுரலிசம் என்றுக் கூட வகைப்படுத்திக்கொள்ளலாம். (நேச்சுரலிச கலை என்பது இயற்கையில் உள்ள ப�ொருட்களை – மனிதன் உட்பட – உள்ளது உள்ளபடி கலைகளில் பிரதிபலிப்பதாகும். இயற்கை வடிவங்களை உள்ளார்ந்த தனிப்பட்ட கருத்துகளுடன் திரித்தோ அல்லது மாற்றிய�ோ வெளிப்படுத்தாமல் இயற்கையில் இருக்கிறபடி அப்படியே கலை இரசனை மிளிர வெளிப்படுத்துவது நேச்சுரலிசம். நேச்சுரலிசத்திற்கும் ரியலிசத்திற்கும் இரண்டு முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. ரியலிச வகை கலை ச�ொல்லப்படும் ப�ொருளை – கருத்தை - மிக முக்கியமானதாக எடுத்துக்கொள்ளக் கூடியது. நேச்சுரலிசம் ச�ொல்லப்படும் ப�ொருள் எந்த முறையில் – வழி 12
நவீனா அலெக்சாண்டர்
முறையில் - வெளிப்படுத்தப்படுகிறது என்பதை முக்கியமானதாக எடுத்துக்கொள்ளக் கூடியது. இரண்டாவது வேறுபாடு, ரியலிச கலை அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பிரதிபலிக்க கூடியவைகள். நேச்சுரலிசம் அப்படியான எத்தகைய கருத்துகளையும் வெளிப்படுத்தாது.) லாஸ்கா மற்றும் அல்டாமிரா குகைகளில் கிடைக்கும் குகை ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய நேச்சுரலிச வகை கலைகளுக்கு உதாரணங்களாக இருக்கின்றன. பிரான்சிலிருக்கும் லாஸ்கா குகை ஓவியங்கள் குறித்த அரிதான ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டிருக்கிறது. The Cave of Forgetten Dreams என்பது அந்த ஆவணப்படத்தின் பெயர். இது 2010-ஆம் ஆண்டு வெளியானது. லாஸ்கா குகை ஓவியங்கள் தற்போது ப�ொது மக்களுக்கு அனுமதி இல்லாமல் மூடப்பட்டுவிட்டது. அதற்குள் இருக்கும் ஓவியங்களை பாதுகாக்கவேண்டி. லாஸ்கா குகை ஓவியங்கள் குறித்து முதலும் கடைசியுமாக எடுக்கப்பட்ட ஆவணப்படம் The Cave of Forgetten Dreams. இது புத்தக வடிவிலும் கிடைக்கிறது.
13
மெசப்பட்டோமிய கலை வரலாறு
14
க
மெசப்பட்டோமிய கலை வரலாறு
ற்கால மனிதனின் கலைகளில் எதிர�ொளித்த சிந்தனை வளர்ச்சி மாற்றங்களானது, மனித வரலாற்றையே தலைக் கீழாகப் புரட்டிப்போடும் மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஒன்றில் க�ொண்டுப�ோய் அவனை நிறுத்தியது. விவசாயம். தினப்படி உணவிற்காக வேட்டையில் வாழ்வை பணயம் வைக்கும் நிலையிலிருந்து முற்றிலும் விடுபட்டு, ஓரிடத்தில் தங்கி உணவை மண்ணிலிருந்து தேவையான அளவிற்கு உற்பத்தி செய்யும் த�ொழில் நுட்பத்தை விவசாயம் மனிதனுக்கு வரமாக க�ொண்டுவந்தது. அரசுகளையும் பேரரசுகளையும் உருவாக்கிய உலகின் மூன்று பழமையான நாகரீகங்கள் தலையெடுத்தன.
அவைகள் மெசப்பட்டோமிய, எகிப்திய மற்றும் சிந்துவெளி நாகரீகங்கள். இவைகள�ோடு சேர்த்து தென் கிழக்கு ஆசியாவில் மாண்டிரியன் என்று அழைக்கப்படும் சீன நாகரீகமும் நான்காவதாக உருவானது. இந்த நான்கு நாகரீகங்களை எடுத்துக்கொண்டால் தமிழ் வெளியில் மெசப்பட்டோமிய கலைகள் குறித்து அவ்வளவாக பேசப்படவில்லை என்பதால் முதலில் மெசப்பட்டோமிய கலைகள் குறித்து பார்க்கலாம்.
15
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
ப�ொதுவாக மெசப்பட்டோமிய நிலப் பகுதியை இரண்டு ஆறுகளின் நிலம் என்று அழைக்கிறார்கள். டைகிரிஸ் மற்றும் யூப்பிரடிஸ் ஆகிய இரண்டு நதிகள் செழுமைப்படுத்தும் நிலப் பகுதிகளை உள்ளடக்கியது மெசப்பட்டோமியா. இன்றைய ஈராக்கின் பெரும் பகுதி, தென் கிழக்கு துருக்கி மற்றும் கிழக்கு சிரியப் பகுதிகள் இவைகள். இந்த இரண்டு நதிகளின் வடக்குப் பகுதி மலைகள் சூழ்ந்த மழை அதிகம் பெறும் நிலப்பகுதியை உள்ளடக்கியது. தெற்குப் பகுதி செழுமையான விவசாய நிலப் பகுதியை உள்ளடக்கியது. தெற்குப் பகுதி செழுமையான விவசாய நிலப்பகுதி என்றாலும் இங்கே மழை என்பது நிச்சயமற்ற ஒன்று. இரண்டு நதிகளின் வெள்ளப் பெருக்கையே தெற்குப் பகுதியின் விவசாய செழுமை நம்பியிருக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாகவே கலை மற்றும் கலாச்சாரங்களின் அடிப்படையில் மெசப்பட்டோமியாவில் வடக்குத் தெற்கு என்கிற இரண்டு பிரிவுகள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே த�ோன்றிவிட்டிருந்தது. இன்றைக்கு மத்தியக் கிழக்கு என்று அழைக்கப்படும் நிலப் பரப்பின் கலைகளுக்கு வேராக இருப்பது 6,000 வருடங்களுக்கு முன்புத் த�ோன்றிய மெசப்பட்டோமிய நாகரீகத்தின் கலைகள். மெசப்பட்டோமிய கலைகள் என்பது ப�ொதுப்படையான பெயராகவே வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் மெசப்பட்டோமிய கலைகள் என்பது நான்கு பெரும் பிரிவுகளின் த�ொகுப்பாகும். அவைகள் சுமேரிய, அக்கேடிய, பாபில�ோனிய மற்றும் அசீரியக் கலைகள். இந்த நான்கும் நான்கு தனித் தனி காலக்கட்டங்களை உள்ளடக்கியது. மெசப்பட்டோமிய கலை நான்கு உட்பிரிவுகளைக் க�ொண்டது என்றாலும் அந்த நான்கின் கலை வெளிப்பாட்டு கருப் ப�ொருள் என்பது ஒன்றே. கடவுள் மற்றும் அரசன். இந்த இரண்டும் சார்ந்த மனித சிந்தனைகளே சுமேரிய, அக்கேடிய, பாபில�ோனிய மற்றும் அசீரியக் கலைகளின் பேசுப் ப�ொருள். கிருஸ்துவ சகாப்தத்திற்கு பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே டைகிரிஸ் மற்றும் யூப்பிரிடீஸ் நதிகளின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் விவசாய குடியிருப்புகள் த�ோன்றிவிட்டாலும், மெசப்பட்டோமிய நிலப் பகுதியில் நகர நாகரீகத்திற்கான 16
நவீனா அலெக்சாண்டர்
வலுவான த�ொல்லியல் ஆதாரங்கள் என்பது கி.மு. 3000-திலிருந்தே த�ொடங்குகிறது. (தற்போதைய த�ொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த காலப்பகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இனி வரும் காலத்தில் மேலும் பழமையான மெசப்பட்டோமிய நகரங்கள் கண்டுபிடிக்கப்படலாம். அச்சமயத்தில் இந்த கால எல்லை இன்னும் பின்னோக்கி செல்லக் கூடும்). சுமேரிய கலைகளுக்கு ஆதாரமான மூலக் கூறுகள் உபேய்டியன் கலாச்சாரக் காலகட்டத்திலேயே த�ொடங்கிவிடுகிறது. டைகிரிஸ் மற்றும் யூப்பிரடிஸ் நதிகளின் தெற்குப் பகுதியிலிருந்த செழுமையான வண்டல் மண் பரப்பில் த�ோன்றியது உபேய்டியன் கலைகள். இதன் காலம் கி.மு. 4000 – 6000. இன்றைய ஈராக்கின் அல்-உபேயத் என்கிற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமேரிய நகர குடியிருப்புகளுக்கு உபேய்டின் கால குடியிருப்புகள் என்று த�ொல்லியலாளர்கள் அடையாளப் பெயர் வைத்திருக்கிறார்கள். இன்றிலிருந்து எட்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அல்-உபேயத் பகுதியில் மிக செழிப்பான நகர நாகரீகம் ஒன்று இருந்திருக்கிறது. இந்த உபேயத் நாகரீகமே பிற்காலத்தில் இரண்டு நதிகளின் வடக்கு பகுதிகளுக்கும் பரவி மெசப்பட்டோமியா முழுவதும் வியாபித்திருக்கிறது. இரண்டு நதிகளின் வடக்குப் பகுதியில் உபேயத் கலாச்சாரத்திற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஆலாஃப் (கி.மு. 6000 – 7000) என்கிற கலாச்சாரம் இருந்திருக்கிறது. ஆலாஃப் நாகரீகத்தின் மண் பாண்ட ஓவியங்கள் மத்தியக் கிழக்கு முழுவதும் மிக பிரசித்திப் பெற்றதாக இருந்திருக்கிறது. ஆனால் அடுத்த சில நூறு ஆண்டுகளில் உபேயத் கலைகள், ஆலாஃப் கலைகளை தனக்குள் இழுத்துக்கொண்டுவிட்டது. அல்-உபேயத் த�ோன்றிய விவசாய கிராம குடியிருப்புகள் படிப் படியாக வளர்ந்து நகர நாகரீகமாக மாறியதற்கான த�ொல்லியல் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. நகரமயமாதலின் அடையாளங்களாக மிகப் பெரிய க�ோயில் கட்டிடங்களும், நகர திட்டமிடலும், சதுர பலகை கற்கள் பதித்த சாலைகளும், நீர்மேலாண்மை நடவடிக்கைகளும் அல்-உபேயத் பகுதி முழுவதும் காணக்கிடைக்கின்றன. இந்த பகுதியிலேயே சுமேரிய நாகரீகம் முழுவதிலும் மிகப் புகழ்பெற்ற ஊர், ஊருக் மற்றும் ஈரிடு ப�ோன்ற 17
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
நகரங்கள் இருந்தன. இன்றைக்கு கிடைக்கும் சுமேரிய எழுத்து ஆதாரங்கள் ஊர் நகரமே சுமேரியாவின் முதல் நகரம் என்று ச�ொல்கின்றன. (தமிழ் ம�ொழியிலிருக்கும் ஊர் என்கிற வார்த்தைக்கும் சுமேரியாவின் முதல் நகரமான இந்த ஊர் என்பதற்கும் இருக்கும் பெயர் ஒற்றுமைக் குறித்த ம�ொழி ஆராய்ச்சிகள் ஒருபக்கம் ப�ோய் க�ொண்டிருக்கின்றன. நம் நாட்டிலா என்று கேட்காதீர்கள் அதற்கெல்லாம் இங்கு வாய்ப்புக் கிடையாது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்தான்.) சுமேரிய நாகரீகம் சுமார் கி.மு. 6000 - 1750 சுமேரிய ம�ொழியே சுமேரிய நாகரீகத்திற்கான பெயரை க�ொண்டுவந்தது. கி. மு. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பே சுமேரியாவில் பன்னிரெண்டு பெரு நகரங்கள் இருந்தன. பெரு நகரங்கள் என்றால் துல்லியமான நகரத் திட்டமிடல், நீர் மேலாண்மை, நகர சுத்திகரிப்பு, மருத்துவ வசதிகள் என்று இன்றைய நவீன நாகரீக நகரங்களுக்கு நிகரானவைகள். கிஷ், ஊர்க், ஊர், சிப்பார், அக்ஷாக், இலராக், நிப்பூர், அடாப், ஊம்மா, லகாஷ், பேட்-டிபிரா மற்றும் லார்சா. இந்த நகரங்கள் அனைத்தும் ச�ொல்லி வைத்தார் ப�ோல மிக நீளமான மற்றும் பெரிய சுற்று சுவர்களால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
மேற்குல ஆராய்ச்சியாளர்களைப் ப�ொறுத்த வரையில் மனித 18
நவீனா அலெக்சாண்டர்
நாகரீகத்தின் முதல் நகரை உருவாக்கியவர்கள் சுமேரியர்கள். முதல் எழுத்து முறை – குனிபார்ம் – சக்கரம் க�ொண்ட முதல் வண்டி, முதல் சமூக சட்டதிட்டங்கள் என்று பல முதல் மனித த�ொழில் நுட்பங்களுக்கு மூலமாக இருப்பவர்கள் சுமேரியர்கள் (ஆனால் தெற்காசியாவில் தமிழர்களும் சீனர்களும், சுமேரியர்களுக்கு முன்பே இவைகளை வழக்கில் க�ொண்டிருந்தார்கள் என்பது வேறு விசயம்.) என்று கருதுகிறது மேற்குல ஆராய்ச்சிகள். சுமேரிய நாகரீகம் என்றவுடன் நினைவிற்கு வரும் அடுத்த விசயம் முத்திரைகள். சிந்து நாகரீகத்திலும் முத்திரைகள் மிகப் பிரதான இடம் வகிப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சதுர மற்றும் உருளை வடிவ முத்திரைகள் சுமேரிய சிற்பக் கலையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுமேரியர்கள் முத்திரைகளை பண்ட பரிவர்த்தனைகளுக்காக உபய�ோகப்படுத்தியிருக்கிறார்கள். இதைத் தவிர சுமேரிய முத்திரைகள் மற்றொரு முக்கிய மனித சிந்தனை வளர்ச்சிக்கான கருவியை வளர்த்தெடுத்திருக்கிறது. சுமேரிய ம�ொழி எழுத்து வடிவம் பெற பெரும் பங்களிப்பு செய்தது முத்திரைகள். சுமேரிய நாகரீகம் நாம் மேலேப் பார்த்த முக்கிய நகரங்களின் எழுச்சியிலிருந்தே த�ொடங்குகிறது. ஒன்றுக்கு ஒன்று குட்டி நாடுகளைப் ப�ோல பிரிந்து தங்கள் ப�ோக்கில் கலை, அரசியல் என்று வளர்ந்துக�ொண்டிருந்த இந்த நகரங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் க�ொண்டிருந்தன. ஒவ்வொரு நகரமும் மற்ற அனைத்து நகரங்களையும் வென்று ஒன்றுபட்ட பெரிய சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக்க முனைந்த நடவடிக்கை சுமேரிய நாகரீகம் காலம் முழுவதிலும் த�ொடர்ந்த சங்கதி. சுமேரிய நாகரீக வரலாற்று கால எல்லையை நான்கு கட்டங்களாக பிரித்திருக்கிறார்கள் இன்றைய ஆராய்ச்சியாளர்கள். உபேயத் காலகட்டம் (சுமார் கி.மு. 5000 – 4100), ஊருக் காலகட்டம் (சுமார் கி.மு. 4100 – 2900), பழைய வம்சாவளி காலகட்டம் (சுமார் கி.மு. 2900 – 2334) மற்றும் ஊருக் III காலகட்டம் (சுமார் கி.மு. 2047 – 1750). இதில் ஊருக் III காலக்கட்டத்தை சுமேரிய நாகரீகத்தின் பின்நவீனத்துவ காலக்கட்டம் என்றும் வரையறை செய்கிறார்கள். இதற்கு காரணம் இடையில் சுமார் இருநூறு ஆண்டுகள் சுமேரிய நாகரீக மக்கள் அக்கேடிய (சுமார் கி.மு. 2334 – 2218) மற்றும் குட்டியர்களுக்கு 19
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
(சுமார் கி.மு. 2218 – 2047 ) கீழ் அடிமைப்பட்டு கிடந்தது. இறுதியாக சுமார் பதினெட்டாம் நூற்றாண்டு (கிருஸ்துவுக்கு முன்) வாக்கில் பாபில�ோனிய நாகரீகத்திடம் வீழ்ச்சிக் கண்டது சுமேரியா. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் செழித்திருந்த நாகரீகம் சுமேர். சுமேரிய நாகரீக கலைகள் சுமேரிய நாகரீகத்தின் கலைகளைக் குறித்து முழுமையாகப் புரிந்துக�ொள்ள சுமேரியர்களின் கடவுளர்களைப் பற்றி நாம் அறிந்துக�ொள்ள வேண்டியது அவசியம். கற்கால மனிதர்களின் கலைகளில் உணவிற்கான வேட்டை மிருகங்கள் எத்தகைய முக்கியமான மைய கருவாகவும், பேசு ப�ொருளாகவும் இருந்தத�ோ அதேப் ப�ோல உலகின் முதல் நகர நாகரீகத்தில் கடவுளர்களும், அரசர்களும் கலைகளின் மையக் கருவாகவும், பேசு ப�ொருளாகவும் இருந்தார்கள். இது மற்ற மூன்று நகர நாகரீகங்களான சிந்து, எகிப்து மற்றும் சீன நாகரீகங்களுக்கும் ப�ொருந்தும் ப�ொதுவான ஒரு அம்சமாகும். விவசாய த�ொழிலைக் கண்டுபிடித்ததின் மூலம் அன்றாட உணவிற்காக மிருகங்களுக்குப் பின்னால் இடம் பெயர வேண்டிய கட்டாயம் மனித சமூகத்திற்கு இல்லாமல் ப�ோனது. ஓரிடத்தில் நிலையாக தங்கி அவனுக்கான உணவை அங்கேயே உற்பத்தி செய்வதற்கான - மனித வரலாற்றை புரட்டிப்போடும் – மிகப் பெரும் வசதியை விவசாயம் உண்டாக்கிக்கொடுத்தது. இதன் காரணமாக நிலையான கிராம குடியிருப்புகள் த�ோன்றின. மனித சமூகம் ஓரிடத்தில் நிலைபெற்ற நிலையான குடியிருப்புகளை உண்டாக்கியப் பிறகு சமூகத்தில் பல அடிப்படை மாற்றங்களும் தேவைகளும் த�ோன்றின. மனித வாழ்வுக் குறித்த புதிய சிந்தனைகள் ஊற்றெடுத்தன. அவைகளில் முக்கியமான இரண்டு கருத்துகள், கடவுள் க�ோட்பாடு மற்றும் கடவுள் தன்மைக�ொண்ட அரசர்கள். இந்த இரண்டு கருத்துகளுக்கும் பின்னால் இருப்பது சமூக நிர்வாகமும், வாழ்விட எல்லை விரிவாக்கமும் (நகர விரிவாக்கங்களின் வழி நாடு உருவாக்கம்). சமூக நிர்வாக (சமூக ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு) பணியை மத நிறுவனம் கவனித்துக்கொள்ள, நாடு உருவாக்கத்தை அரசன் கவனித்துக்கொண்டான். இதன் காரணமாக இந்த இரண்டும் 20
நவீனா அலெக்சாண்டர்
விவசாய நகர நாகரீகத்தில் புனைவு புனித தன்மையைப் பெற்றன. இவைகளே முதல் விவசாய நகர நாகரீக கலைகளிலும் பிரதிபலித்தது. கடவுளுக்கு பலியிடும் சடங்கு, மத ஊர்வலம், கடவுளர் குறித்த புனைவு கதை காட்சிகள், அரசனின் ப�ோர் வெற்றி காட்சிகள், ப�ோர்க்கள காட்சிகள் இவைகளே ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை ப�ோன்ற கலைகளின் பேசுப் ப�ொருள்களாக இருந்தன. ஆக, மனித சமூகத்தின் முதல் நகரை உருவாக்கிய சுமேரியாவின் கலைகளை அறிந்துக�ொள்ள நாம் அறிந்துக�ொள்ளவேண்டியது சுமேரியாவின் கடவுளர்களைக் குறித்து. சுமேரிய கடவுளர்கள் இயற்கை பூதங்களே (காற்று, நீர், க�ோள்கள் ப�ோன்றவைகள்) சுமேரியர்களின் பிரதான கடவுளர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு பாதி மனித பாதி பரம்பொருள் தன்மையை கற்பித்தன சுமேரிய கடவுள் க�ோட்பாட்டுப் புனைவுக் கதைகள். ஆன் இவர் வான் கடவுள் (Sky-God). நானா இவர் நிலாக் கடவுள். நின்கள் இவர் பெண் நிலாக் கடவுள். இனானா இவர் பெண் கடவுள். இவரை சுவர்க்கத்தின் பெண் (லேடி ஆப் ஹெவன்) என்று சிறப்பித்தார்கள் சுமேரியர்கள். பூமி மற்றும் சுவர்க்கத்தின் கடவுள் இவர். வளமை மற்றும் செழுமையின் கடவுளும் இவரே. நகர காவல் தெய்வமும் இவரே.
சுமேரியர்களின் பிரதான கடவுளும் இவரே. இவர் சுமேரிய 21
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
நாகரீகம் முழுவதும் மிகப் பிரசித்திப் பெற்ற தாய் தெய்வ கடவுள் ப�ோன்றவர். இவர், அன் கடவுளின் மகள் என்றும், நானா மற்றும் நின்கள் கடவுளர்களின் மகள் என்றும் இரு கருத்துகள் இருக்கின்றன. ஊர் மற்றும் ஊர்க் ஆகிய இரு நகரங்களிலும் இவருக்கு க�ோயில்கள் இருந்தன. ஊர்க் இனானா கடவுளின் சிறப்பு நகரம். இவருடைய சக�ோதரி ஈரஸ்சிகியால். ஈரஸ்சிகியால் பாதாள உலகின் கடவுள். இனானா கடவுளின் சக�ோதரன் ஊட்டு. இவர் சூரியக் கடவுள். இனானா கடவுளின் காதல் கணவர் தாமுழி. இவரை தாமுழ் என்றும் அழைப்பார்கள். இவர் மேய்ப்பின் கடவுள் (Shepherd God). இனானா கடவுள் குறித்து சுமார் நான்காயிரம் வருடத்தியப் பழமையான இரண்டு இலக்கிய எழுத்துப் பதிவுகள் இருக்கின்றன. ஒன்று உலகின் முதல் நாவலாக கருதப்படும் கில்காமேஷ் காவியம். இது சுமேரிய வீரன் கில்காமேஷின் கதையை ச�ொல்லும் காவியம். அடுத்தது, சைக்கிள் ஆப் இனானா. இது சுமேரிய கவிதை த�ொகுப்பு. சுமேரிய புனைவுக் கதைகளின் த�ொகுப்பான இனானாஸ் டிசன்ட் டு த அண்டர்வோல்டிலும் இஸ்தார் கடவுள் குறித்த குறிப்புகள் இருக்கின்றன. என்கி, இவர் நீர் கடவுள். எரிடு நகரம் என்கி கடவுளுக்கான சிறப்பு நகரம். இஸ்தார் மற்றும் தாமுழியின் திருமண சடங்கை ‘ஹ�ோலி மேரேஜ்’ என்கிறப் பெயரில் புது வருடப் பிறப்பு விழாவாக சுமேரியர்கள் க�ொண்டாடியிருக்கிறார்கள். வருடத்தின் முதல் அறுவடையை க�ொண்டாடும் விழா இது. இந்த சடங்கு குறித்த சித்தரிப்பு காட்சிகள் புடைப்பு சிற்பங்களாக திரும்பத் திரும்ப சுமேரிய சிற்பக் கலைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கே மற்றொரு முக்கிய விசயத்தையும் நாம் கவனத்தில் க�ொள்ளவேண்டியிருக்கிறது. சுமேரிய கடவுளர்களின் பெயர்களில் இருக்கும் தமிழ் சாயல். இதுக் குறித்த ஆராய்ச்சிகளை நம்மவர்கள் எவ்வளவு த�ொலைவிற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பது அந்த இஸ்தார் கடவுளுக்கே வெளிச்சம். நம் கடமை இதுக் குறித்து சிறிதாக புலம்பிவிட்டு ப�ோகவேண்டியதுதானே. ப�ோவ�ோம். ச�ொல்லப்போனால் இனானா மற்றும் தாமுழி கடவுளின் இறப்பும் மறுபிறப்பும் குறித்த புனைவுக் கதையே த�ொடக்க கால (உபேயத் மற்றும் ஜம்தத் நசுர் காலகட்டம்) 22
நவீனா அலெக்சாண்டர்
சுமேரிய கலைகளுக்கு பின்னால் இருந்த கலை சித்தாந்தம். இனானா தன்னுடைய சக�ோதரி ஈரஸ்சிகியாலின் பாதாள உலகத்தையும் தன்னுடையதாக்கி க�ொள்ள பாதாள உலகத்திற்கு செல்கிறாள். இதை அறிந்த ஈரஸ்சிகியால், இனானாவை சிறைபிடித்து அவளை க�ொன்றுவிடுகிறாள். பூமியை காப்பவள் இனானா அவள் இறந்துவிட்டாள் பூமியில் வளமைக்கும் செழிப்பிற்கும் வழியில்லாமல் ப�ோய்விடும் என்பதால் நீர் கடவுளான என்கி இந்த விசயத்தில் தலையிட்டு ஈரஸ்சிகியாலிடம் முறையிடுகிறார். இனானாவின் இடத்தில் யாரையாவது பிணையக் கைதியாக தன்னிடம் க�ொடுத்தால் இனானாவை மீண்டும் உயிர்ப்பித்து பூமிக்கு திரும்ப அனுப்புவதாக ஈரஸ்சிகியால் ச�ொல்கிறாள். தன்னுடைய காதல் மனைவியை காக்க தாமுழியும் இந்த உடன்பாட்டிற்கு சம்மதித்து ஈரஸ்சிகியாலின் கைதியாக பாதாள உலகத்திற்கு செல்கிறான். ஆறு மாதங்கள் அங்கே கைதியாக இருந்துவிட்டு அடுத்த ஆறு மாதங்கள் தன்னுடைய மனைவியைக் காண பூல�ோகத்திற்கு வருவது வழக்கம் என்று ச�ொல்கிறது அவனைக் குறித்த புனைவுக் கதை. இனானா பாதாள உலகத்தில் இறந்ததும், தாமுழி பாதாள உலகத்தில் கைதியாக இருப்பதும் பூமியில் இறப்புக்கு நிகராகவும், இனானாவின் மறுபிறப்பும், தாமுழி தன் மனைவியைப் பார்க்க பூல�ோகத்திற்கு வருவதும் பூமியில் மறுபிறப்பிற்கு நிகராகவும் பார்க்கப்பட்டது சுமேரியாவில். இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும், தாமுழி கடந்து செல்லும் இறப்பும் மறுபிறப்புமே த�ொடர்ந்து ஒரு சக்கரம் ப�ோல நிகழ்வதாக கருதினார்கள் த�ொடக்க கால சுமேரியர்கள். மனித வாழ்வு பூமியில் தாவரங்கள் மற்றும் கால்நடைகளை நம்பியிருப்பதுப் ப�ோலவே கடவுளர்களின் தெய்வீகத் தன்மையையும் நம்பியிருக்கிறது என்றும் நம்பினார்கள். 23
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
இந்த சிந்தனையானது அவர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் நேச்சுரலிசமாகவும், அப்ஸ்டிராக்ட் ரெப்ரஷன்டேஷனாகவும் கலந்து வெளிப்பட்டது. அறுவடை, கால்நடை விலங்குகள், இவைகளின் மூலம் பெறப்படும் உணவுப் ப�ொருட்களை இஸ்தார் கடவுளுக்கு அர்பணிக்கும் காட்சிகள் ஆகியவை நேச்சுரலிசத் தன்மையுடன் சித்தரித்தார்கள் த�ொடக்க சுமேரியக் கலைஞர்கள். இதில் புது வருட விழா ஊர்வலக் காட்சிகளும் அடங்கும். ப�ோர்கள் மற்றும் அதன் மூலமாக ஏற்படும் மரணங்கள் ஆகிய காட்சிகளை அப்ஸ்டிராக்ட் ரெப்ரஷன்டேஷனாக சித்தரித்திருக்கிறார்கள். சுமேரியக் கலையின் கால எல்லைகள் சுமேரிய கலையை த�ொடக்க கால உபேயத் மற்றும் ஜம்தத் நசுர் காலகட்டம், இடைக்கால மெசிலிம் காலகட்டம், இறுதிக் கால இம்டுகட் – சுக்குரு காலக்கட்டம் மற்றும் சுமேர்அக்கேடிய புத்தெழுச்சி காலக்கட்டம் என்று நான்கு நிலைகளாக பிரிக்கிறார்கள். சுமேர்-அக்கேடிய புத்தெழுச்சி காலக்கட்டம் என்பது அக்கேடிய பேரரசு வீழ்ந்தப் பிறகு மூன்றாம் ஊருக் வம்சாவளி அரசர்கள் மெசப்பட்டோமிய நகரங்களை கைப்பற்றி மீண்டும் சுமேரிய அரசை நிறுவியக் காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தை சுமேரிய கலைகளின் பின்நவீனத்துவக் காலம் என்றும் வகைப்படுத்துகிறார்கள். உபேயத் காலகட்டம் கி.மு. 6500 - 3800 மற்றும் ஜம்தத் நசுர் காலகட்டம் கி.மு. 3100 – 2900 (த�ொடக்க காலம்) கட்டிடக் கலை சுமேரியாவின் த�ொடக்க கால உபேயத் மற்றும் ஜம்தத் நசுர் காலகட்ட கலைகளை ப்ரோட்டோ-ஹிஸ்டாரிக் கால எல்லைகளை சேர்ந்ததாக இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் பிரித்திருக்கிறார்கள். ப்ரோட்டோ-ஹிஸ்டாரிக் கால எல்லை என்பது ம�ொழிக்கான எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டம். சுமேரியாவைப் ப�ொறுத்தவரை இது கி.மு. 7000-6000-க்குள் வருகிறது. ஊருக் (இன்றைய வார்க்கா நகரம்) நகரில் இனானா கடவுளுக்கான 24
நவீனா அலெக்சாண்டர்
க�ோயில் இந்த வருடங்களில் கட்டப்பட்டிருக்கிறது. இதுவே சுமேரிய கட்டிடக் கலையின் த�ொடக்கம். சமேரியாவின் த�ொடக்க கால கட்டிடக் கலைக்கு உதாரணமாக இன்றைக்கு நமக்கு கிடைப்பவைகள் க�ோயில் கட்டிடங்களே. இவைகளும் முழுமையான உருவத்தில் கிடைப்பதில்லை. இதற்கு ஆயிரமாயிரம் ஆண்டு கால இயற்கையின் செயல்பாடுகள் ஒரு காரணம் என்றாலும் சுமேரியக் கட்டிடக் கலை அமைப்பும் மற்றொரு காரணமாக இருக்கிறது. சராசரியாக நூறு வருட இடைவெளியில் பழைய க�ோயிலுக்கு மேலேயேப் பல புதியக் க�ோயில்களை கட்டியிருக்கிறார்கள் விரிவாக்கம் செய்து. இப்படியாக சில ஆயிரம் ஆண்டுகள் த�ொடர்ச்சியாக நடைபெற்றிருக்கிறது. இன்றைக்கு நமக்கு கிடைக்கும் த�ொடக்க கால சுமேரிய க�ோயில்களின் அடித்தளத்திற்கு கீழே சுமார் ஆறிலிருந்து பத்து காலத்தால் முந்தைய பழைய க�ோயில்களின் கட்டுமான அமைப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாக த�ொடக்க கால சுமேரியக் கட்டிடக் கலையை ஒரு தெளிவான வகைப்பாட்டிற்குள் க�ொண்டுவருவதில் பிரச்சனை இருக்கிறது. இன்றைக்கு கிடைக்கும் அந்த க�ோயில்களின் அமைப்புக்கள் குழப்பம் தரும் வகையிலும் இருக்கின்றன. ஆனாலும் த�ொடக்க கால சுமேரிய கட்டிடக் கலையை இரண்டு வகைகளில் பிரிக்கலாம். ஒன்று தரைமட்டத்தில் கட்டப்படும் க�ோயில்கள் அடுத்தது உயரமான மண் மேடுகளின் மீது கட்டப்படும் க�ோயில்கள். உயரமான மண் மேடுகளின் மீது கட்டப்பட்ட க�ோயில்களே பிற்காலத்தில் ஷிகுராத் வகை கட்டிடக் கலைக்கு முன்மாதிரிகளாக இருந்திருக்கின்றன. த�ொடக்க கால சுமேரியாவின் கட்டிடக் கலையை ச�ொல்லும் க�ோயில்களாக இருப்பவைகள், லைம்ஸ்டோன் டெம்பில், டெம்பில் ஆப் தவுஸண்ட் ஐய்ஸ், இனானா சேன்க்சுரி, வையிட் டெம்பில், டெம்பில் ஓவல், சாரா டெம்பில், அபு டெம்பில், சின் டெம்பில், ஸ்கொயர் டெம்பில், ஹை டெம்பில், ஸ்டோன் க�ோன் டெம்பில். இந்த அனைத்து க�ோயில்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு த�ொடர்ச்சியாக ஒரு அடுக்கின் மேல் பல அடுக்குகளாக திருத்தி திருத்தி கட்டப்பட்டவைகள் என்பதை நினைவில் க�ொள்ளவேண்டியது அவசியம். 25
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
த�ொடக்க கால, இடைக்கால மற்றும் இறுதிக் கால சுமேரியக் கட்டிடக் கலைகளுக்கு உதாரணம் இந்த க�ோயில்களின் வளாகத்திற்கு உள்ளேயே நமக்கு கிடைக்கிறது. இவற்றின் கட்டிடக் கலைக் குறித்த அனுமானங்களையே இன்றைய ஆராய்ச்சி உலகத்தால் முன்வைக்க முடிகிறது. ஊர்க் நகரில் இருக்கும் அனு கடவுளின் க�ோயில் இது. சிதிலமடைந்திருக்கும் க�ோயிலின் மீது இன்றைய ஆராய்ச்சியாளர்கள் வரைந்திருக்கும் அனுமானக் கட்டிட ஓவியம்.
26
நவீனா அலெக்சாண்டர்
த�ொடக்க கால சுமேரியக் கட்டிடக் கலையின் சிறப்பான அம்சங்களில் ஒன்று உருளை வடிவ கற்கள். இந்த கற்களை சுவர்களின் அலங்காரத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள் த�ொடக்க கால சுமேரிய கட்டிடக் கலைஞர்கள். இது ஒருவித ம�ொசைக் டிசைன் ப�ோன்ற சுவர் அலங்காரத்தை வெளிப்படுத்த உபய�ோகப்படுத்தப்பட்டிருக்கிறது. க�ோயில் கட்டிடங்கள் சுட்ட செங்கற்களாலேயே கட்டப்பட்டிருக்கிறது. மெசப்பட்டோமியாவின் தெற்குப் பகுதிகளான ஊர்க், ஊர் மற்றும் ஈரிடு ப�ோன்ற நகரங்கள் வண்டல் மண் சமவெளிப் பகுதியில் அமைந்தவைகள். இங்கு பாறைகளைக் க�ொண்ட குன்றுகள�ோ அல்லது மலைகள�ோ கிடையாது. த�ோப்பு என்கிற பெயருக்கு அர்த்தம் காட்டக் கூட இந்தப் பகுதியில் த�ொடர்ந்தார்போல நான்கு ஐந்து மரங்கள் வளர்ந்திருப்பது அதிசயம். ஆக கட்டிடக் கலைக்கு தேவையான கற்களும் மரங்களும் தெற்கு சுமேரியர்களுக்கு மிகவும் விலை உயர்ந்த கட்டுமானப் ப�ொருட்கள். வடக்கு சுமேரியப் பகுதி அல்லது ஈரான் ப�ோன்ற பகுதிகளில் இருந்துதான் இவைகளை இந்த நகரங்களுக்கு க�ொண்டு வரவேண்டியிருந்தது. எடை மிகுந்த கற்கள் மற்றும் மரங்களை த�ொடர்ச்சியாக தங்கள் பகுதிகளுக்கு க�ொண்டு வருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக த�ொடக்க கால சுமேரியர்கள் சுட்ட செங்கற்களையே தங்களின் கட்டிடக் கலைக்கு 27
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
பெரிதும் பயன்படுத்தினார்கள். செங்கற்கள் காலத்தை தாண்டி நிற்க கூடியவைகளாக இல்லாத காரணத்தாலேயே த�ொடக்க கால சுமேரியர்கள், சராசரியாக நூறு ஆண்டுகள் இடைவெளியில் தங்களின் க�ோயில்களை மீண்டும் மீண்டும் புதுப்பித்து கட்டும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். சுமேரிய நாகரீகம் வீழ்ந்தப் பிறகு அவர்களின் க�ோயில்களை புதுப்பித்து கட்ட ஆள் இல்லாததால் அவர்களுடைய செங்கல் கட்டிடங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து இன்றைக்கு செம்மண் மேடுகளாகவும் குன்றுகளாகவும் காட்சியளிக்கின்றன. ப�ொதுவாக இந்த க�ோயில் கட்டிட வளாகத்திற்குள் வேறு சில கட்டிடங்களும் க�ோயில் கட்டிடத்துடன் சேர்ந்தே இருந்திருக்கிறது. தங்கும் வசதிக�ொண்ட வீடுப் ப�ோன்ற கட்டிடங்கள், நிர்வாக அலுவலக கட்டிடங்கள் மற்றும் பலி செலுத்தும் இடங்கள். இவைகளை உள்ளடக்கியபடியான சுற்றுச் சுவரும் கட்டப்பட்டிருக்கிறது. சிற்பக் கலை சுவர் புடைப்பு சிற்பங்கள், கற்பலகை புடைப்பு சிற்பங்கள், முழு உருவ சிற்பங்கள் என்று சிற்பக் கலையை மூன்று வகைகளாகப் பிரித்துக்கொள்ளலாம். தெற்குப் பகுதியின் நிலவியல் அமைப்பு சிற்பக் கலையிலும் முட்டுக் கட்டைகளை ப�ோட்டது. கற்கள் அரிதான விசயம் என்பதால் களி மண் சிற்பங்களையே த�ொடக்க கால சுமேரிய சிற்பக் கலைஞர்கள் வடித்திருக்கிறார்கள். இதில் முக்கியமானது சிலிண்டர் சீல்கள். சிலிண்டர் சீல்கள் ஜிப்சம் மற்றும் அலபாஸ்டர் கற்களில் செதுக்கப்பட்டவைகள். இந்த சிலிண்டர் சீல்களை களிமண் கட்டைகளில் உருட்டி அலங்கார ப�ொருட்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ப�ொருட்களை க�ோயில்களிலும் வீடுகளிலும் அலங்காரத்திற்கு சுமேரியர்கள் பயன்படுத்தியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. ஜிப்சம் கற்களில் செதுக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் உருவ சிலைகளும் நமக்கு கிடைக்கின்றன. மத வழிபாட்டு சடங்கின் ஒரு பகுதியாக இந்த சிலைகள் சுமேரிய க�ோயில்களுக்கு ப�ொது மக்களால் காலம் காலமாக அர்ப்பணிக்கப்பட்ட சிலைகளாக 28
நவீனா அலெக்சாண்டர்
இருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இவைகள் உட்கார்ந்த நிலையில�ோ அல்லது நின்ற நிலையில�ோ வடிக்கப்பட்டிருக்கின்றன. கைகள் இரண்டும் முன்பக்கமாக க�ோர்த்து மரியாதை செய்யும் அல்லது வேண்டுதல் செய்யும் த�ோரணையில் இருக்கின்றன. இவைகள் சிமெட்டிரிக்கள் சிலைகளாகவே வடிக்கப்பட்டிருக்கின்றன. த�ொடக்க கால சுமேரிய சிற்பங்களில் கான்டிரப�ோஸ்டா உத்தி காணப்படவில்லை. (முழு உடல் எடையையும் ஒரு காலில் தாங்கிக்கொண்டு மற்றொரு காலை தளர்ந்த நிலையில் வைத்திருப்பதே கான்டிரப�ோஸ்டோ என்று அழைக்கப்படுகிறது. இப்படி ம�ொத்த உடல் எடையையும் ஒரு காலில் தாங்கி நிற்பதன் மூலம் நிற்கும் மனித உருவத்தில் S ப�ோன்ற வளைந்த தன்மை த�ோன்றும். மேலும், உடல் எடையைத் தாங்கும் பகுதி தசைகள் சற்று விறைப்பாக மேல் ந�ோக்கி உயர்ந்தும், தளர்ந்தப் பகுதி தாழ்ந்தும் இருக்கும்). சுமேரிய சிற்பக் கலையிலும், ஓவியக் கலையிலும் நேச்சுரலிசமும், அப்ஸ்டிராக்ட் சி ம்பா லி ச மு ம்தா ன் (அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசம் என்பது ஓவியக் கலையின் அ டி ப ்ப டை க ள ா ன வட்டம், க�ோடு, சதுரம், முக்கோணம், வர்ணம் ஆ கி யவை க ளை க ் க ொண் டு சமூகத்தில் பரவலாக அறியப்பட்ட அடையாளக் க �ோட்பா டு க ளைய�ோ அல்லது குறிகளைய�ோ வெ ளி ப ்ப டு த் து வ து ) அடிப்படை கலை க�ொள்கைகள். த�ொடக்க கால சுமேரிய சிற்பக் கலைஞர்கள் இதில் கரைகண்டிருக்கிறார்கள். உருளை வடிவம் க�ொண்ட சிறிய ஊடகத்தில் (சிலிண்டர் சீல்) சிற்பங்களை நேச்சுரலிசத் 29
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
தன்மையுடன் வெளிப்படுத்துவது என்பது சவாலான விசயம். அதை சுமேரிய சிற்பக் கலைஞர்கள் உன்னத தன்மையுடன் செய்துகாட்டியிருக்கிறார்கள். படைத்துக்காட்டியிருக்கிறார்கள் என்று ச�ொல்வது தகும். த�ொடக்க கால சுமேரிய சிற்பக் கலைஞர்கள் மனித உடற் கூற்றையும் (அனாட்டமி), மனித முக அமைப்பை குறித்தும் (பிசிய�ோகாமி) மிக நன்றாகவே அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. த�ொடக்க கால சுமேரிய சிற்பக் கலையை, கலைஞர்களை வளர்த்தெடுக்கும் நகரமாக ஊருக் நகரம் இருந்திருக்கிறது. சுமேரிய நாகரீகத்தில் கலைகளின் தலைநகரமாக இருந்தது ஊருக் நகரம். இந்த நகரின் கலைத் தாக்கம் எகிப்து மற்றும் சிந்து வெளி நாகரீகங்கள் வரை எதிர�ொளித்திருக்கிறது. ஓவியக் கலை த�ொடக்க கால சுமேரிய ஓவியக் கலை மண் பாண்டங்களை அலங்கரிப்பதற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் க�ோயில்களின் சில கட்டிட உறுப்புகளை அலங்கரிக்கவும் சுமேரியர்கள் ஓவியங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். க�ோயில்களில் இருக்கும் ஓவியங்கள் நேச்சுரலிசத் தன்மை க�ொண்டவைகளாக இருக்கின்றன. த�ொடக்க கால சுமேரிய ஓவியக் கலைஞர்கள் ஓவிய உருவங்களை உருவாக்கும் மாஸ் மற்றும் ஷேப்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள். (ஓவிய உருவத்தில் மாஸ் என்பது கன பரிமாணத்தையும் ஷேப் என்பது வடிவத்தையும் குறிக்கிறது). இதன் காரணமாக அவர்களின் ஓவியங்கள் நேச்சுரலிசத் தன்மையுடன் காட்சியளிக்கின்றன. வன விலங்குகளே த�ொடக்க கால சுமேரிய ஓவியங்களின் பேசுப் ப�ொருள்கள். சிற்பக் கலை அளவிற்கு த�ொடக்க கால சுமேரியாவில் ஓவியக் கலை முதன்மை பெற்றதாக இருக்கவில்லை. ஜம்தத் நசுர் காலக்கட்டத்தின் த�ொடக்கத்தில் கட்டிடக் கலை திடுதிப்பென்று பின்னோக்கி நகர்வது குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மத க�ொள்கைகள் த�ொடர்பாக மிகப் பெரிய மாற்றும் அல்லது புரட்சி இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்டிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அனுமானம் 30
நவீனா அலெக்சாண்டர்
செய்கிறார்கள். இந்த சமூக மாற்ற சிந்தனையானது அடுத்து வந்த சுமேரிய நாகரீகத்தின் இடைக்காலமான மெசிலிம் காலகட்ட கலைகளில் எதிர�ொளிப்பதை நம்மால் மிகத் தெளிவாக பார்க்க முடிகிறது. இதன் காரணமாக சுமேரியக் கலைகளைப் ப�ொறுத்த வரையில் மெஸ்லிம் காலகட்டம், பர்ஸ்ட் டிரான்ஷிசன் பீரியட் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. சிற்ப கலையை ப�ொறுத்தவரையில் பலக் கனிமங்களை கலந்து சிற்பங்களை வடிக்கும் முறை அறிமுகமாகிறது. ஒரு சிற்பத்தின் உறுப்புகளை கல், செம்பு, தங்கம், ஜிப்சம் மற்றும் அலபாஸ்டர் ப�ோன்ற பல கனிமங்களை க�ொண்டு உருவாக்கியிருக்கிறார்கள் ஜம்தத் நசுர் காலகட்ட சிற்பக் கலைஞர்கள். ஸ்டீலே என்று அழைக்கப்படும் புடைப்புச் சிற்பங்கள் க�ொண்ட கல் அல்லது செம்பு பட்டயங்கள் அறிமுகமானதும் இந்த காலக்கட்டத்தில்தான். மெசிலிம் காலகட்டம் கி.மு. 2900 - 2334 (முதல் நிலைமாற்ற காலகட்டம்) கட்டிடக் கலை நாம் முன்பேப் பார்த்ததைப் ப�ோல இந்த காலகட்டத்தில் சுமேரிய சமூகத்தில் மிகப் பெரிய சிந்தனைப் புரட்சி நடந்திருக்கவேண்டும். இதன் தாக்கம் அனைத்து கலைகளின் வழியும் எதிர�ொளித்தது. அனைத்திலும் புதுமையை ந�ோக்கிய தேடல். கட்டிடக் கலையைப் ப�ொறுத்தவரையில், அடிப்படை கட்டுமான ப�ொருளான சுட்ட செங்கற்களின் த�ோற்றத்திலேயே மாற்றம் கண்ணைப் பறிக்கும்படி இருக்கிறது. பிளான�ோ கான்வெக்ஸ் செங்கற்கள் கட்டிடங்களைக் கட்டப்பயன்படுத்தப்பட்டிருக்கிறது. த�ொடக்க காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட உருளை வடிவ செங்கற்களும், பாட்ஷன் வகை செங்கற்களும் முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது. க�ோயில் கட்டிடங்களின் சுவர்கள் பாதி பூமிக்கு அடியிலும் பாதி பூமிக்கு மேலும் இருக்கும்படியான அமைப்பில் க�ோயில்கள் கட்டப்பட்டன. க�ோயில் கட்டிட வளாகத்தை சுற்றி இரண்டாவதாக ஒரு சுற்றுச் சுவரும் சேர்த்துக் 31
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
கட்டப்பட்டது. திடீரென்று முளைத்த இந்த இரண்டாவது சுற்றுச் சுவர் எழுப்பும் வழக்கம், சுமேரிய மத நிறுவனங்கள் வெகு மக்களை விட்டு தன்னை தனிமைப் படுத்திக்கொண்டதை குறிப்பிடும் செயல்பாடு என்று கருதப்படுகிறது. த�ொடக்க காலத்தில் கடவுளர்களின் புனித தன்மையை மனிதனும் பங்கு ப�ோட்டுக்கொள்ள முடியும் என்கிற மதக் க�ோட்பாடு இப்போது மாற்றமடைந்து கடவுளர்களின் புனித தன்மையிலிருந்து மனிதர்கள் விலக்கிவைக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை வெளிப்படுத்துவதே இரண்டாவது சுற்று சுவர் அமைப்பு. முதன் முறையாக கிஷ் என்று அழைக்கப்படும் அரண்மனை கட்டிடங்களும் இந்த காலகட்டத்தில் த�ோன்றுகின்றன. இந்த அரண்மனை கட்டிடத்தின் ஆளை மிரட்டும் அங்கம் அதன் நுழைவாயில். இரட்டை கதவுகள் க�ொண்ட பிரம்மாண்டமான நுழைவாயிலுக்கு இருபக்கமும் சதுர வடிவ காவற்கோபுரங்களுடன் பார்ப்பவர்களுக்கு மிரட்சியை உண்டாக்க கூடியது இந்த நுழைவாயில். மிகப் பழைய சுமேரிய கவிதை ஒன்று இந்த நுழைவாயிலைக் கட்டியது கில்காமேஷ் என்கிறது. கில்காமேஷ் சுமேரிய நாகரீகத்தின் காவிய வீரன். இவனுக்கு பாதி மனித தன்மையும் மீதி அமானுஷ்ய தன்மையையும் தருகின்றன சுமேரிய இலக்கியங்கள். இவன் மீது இனானாவிற்கு ‘ஒரு கண்’ இருந்ததாகவும் ஆனால் அவன் இனானாவை கண்டுக�ொள்ளவேவில்லை என்றும் ச�ொல்கின்றன அந்த இலக்கியங்கள். த�ொடக்க காலகட்டத்தில் நகரின் காவல் தெய்வம் இனானா ஆனால் இப்போது ஊருக் நகரில் கிஷ் அரண்மனையை கட்டி அந்த நகரை பாதுகாத்தவன் கில்காமேஷ். இதுவும் கடவுளர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே விரிசல் விழுந்துவிட்டதற்கான அடையாளம். க�ோயில்கள் அதன் பெயருக்கு ஏற்றப்படி கடவுளர்கள் மட்டுமே வசிக்கும் இடமாக மாறிப்போனது. வெகு சனங்கள�ோடு கலந்து உறவாடிய நிலைப் ப�ோய் க�ோயில்கள் நகருக்குள்ளேயே தனித் தீவு மடங்களானது. அதே சமயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒழுங்கற்ற க�ோயில் கட்டிட அமைப்பு மாற்றமடைந்து மிகத் தெளிவான அமைப்புகளும் உருவானது. நீள் சதுர கருவறையும் அதை சுற்றி 32
நவீனா அலெக்சாண்டர்
இரண்டு துணை அறைகளும் க�ொண்டதே சுமேரிய க�ோயில்களின் அடிப்படை அமைப்பு என்பது மிகத் தெளிவாக புலனாவது இந்த காலகட்டம் த�ொடங்கித்தான். இந்த அடிப்படை அமைப்பில் மேலும் பல அறைகளையும், நுழைவாயில் மண்டபங்களையும், மத குருமார்களுக்கான தங்கும் அறைகளையும், க�ோயில் நிர்வாக அறைகளையும் சேர்த்துக்கொண்டேப் ப�ோனார்கள் சுமேரிய கட்டிடக் கலைஞர்கள். இது கிட்டத்தட்ட அரண்மனை கட்டிட அமைப்பை ஒத்த அமைப்பாக வளர்ச்சியடைந்தது. சிற்பக் கலை ஜம்தத் நசுர் காலகட்டத்தின் முடிவிலும் மெசிலிம் காலக்கட்டம் த�ொடங்குவதற்கு சற்று முன்பாகவும், சிற்பக் கலை நேச்சுரலிசத்திலிருந்து முற்றிலுமாக விலகி அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசம் ஒன்றையே பிரதிபலிக்கின்றன. மிருக மற்றும் தாவரங்களின் உருவங்கள் வெறும் க�ோடுகளாகவும் புள்ளிகளாகவும் மாற்றமடைந்து சதுர வட்ட க�ோட்டோவியத்தின் (அப்ஸ்டிராக்ட்) அலங்கார உறுப்புகளாக காட்சியளிக்கின்றன. சில சமயங்களில் இந்த உருவங்களுக்கும் க�ோட்டோவியத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத நிலைகள் கூட ஏற்படுகின்றன. ப�ோதாததற்கு சுமேரியர்களின் எழுத்து வடிவான குனிபார்ம் வடிவங்களும் ஓவிய அலங்காரமாக பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
33
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
கட்டிடக் கலையைப் ப�ோலவே மெசிலிம் காலகட்டத்தில் சிற்பக் கலையும் புரட்சிகர மாற்றங்களை ந�ோக்கி நகர்ந்தது. சிற்பத்தின் பேசு ப�ொருள் (subject), ரூபம் (form), வடிவம் (shape) என்று அனைத்திலும் புதுமைகளை க�ொண்டுவந்தார்கள் இந்த காலகட்ட சிற்பக் கலைஞர்கள். மனித வாழ்வும் கடவுளர்களின் வாழ்வும் ஒன்றுக்கொன்று சங்கமித்திருந்த காட்சிகளை வெளிப்படுத்திய பேசு ப�ொருள் கைவிடப்பட்டு, கடவுளர்களின் புனித தன்மைகளை மற்றும் அரசனின் புனித தன்மைகளை, மேன்மைகளை பேசும் இடமானது சிற்பக் கலை. இந்த காலகட்டத்தில் மேலிருந்து கீழ் ந�ோக்கிய அதிகார அடுக்கு மிகத் தெளிவாக சுமேரிய சமூகத்தில் கட்டமைக்கப்பட்டு மக்கள் அதற்கு பழக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. த�ொடக்க கால கட்டத்திலிருந்த ஒருவித சமூக ப�ொதுவுடமைத் தன்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதற்கான அடையாளம். மனித சமூகம் (ஹ�ோம�ோ சேப்பியன்கள்) முற்றிலுமாக தனது வேட்டை நாகரீக ப�ொதுவுடமை தன்மைகளிலிருந்து விடுபட்டு விவசாய நாகரீக தனியுடமை பண்புகளுக்கு தன்னை தகவமைத்துக்கொண்டது. த�ொடக்க காலகட்டத்தின் முடிவில் வழக்கிலிருந்த அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசத்தையே இந்த காலகட்ட சிற்பக் கலைஞர்கள் அடுத்த நிலைக்கு க�ொண்டு சென்றார்கள். சுமேரியாவின் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிச வகை சிற்பங்களின் உச்சம் இங்கிருந்தே த�ொடங்குகிறது. இவைகளின் கலை நேர்த்தியும், வெளிப்பாட்டுத்தன்மையும் சுமேரிய கலை வரலாற்றில் தனித்து நிற்கின்றன. பார்த்த மாத்திரத்தில் இவைகள் சுமேரிய மெசிலிம் காலகட்ட சிற்பங்கள் என்று அடையாளப்படுத்திவிடக் கூடிய அளவிற்கு தனித்துவமானவைகள். கற்களில் செதுக்கப்பட்ட சிலைகள், மணி கற்களில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள், களி மண் முத்திரைகளில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள், வெண்கலத்தை உருக்கி வார்க்கப்பட்ட வெண்கல சிலைகள் என்று பல நிலைகளில் சிற்ப கலை இந்த காலகட்டத்தில் வழக்கிலிருந்தன. வெண்கல சிற்பங்களைத் தவிர மற்ற அனைத்து சிற்பங்களும் அப்ஸ்டிராக்ட் வடிவங்களைக் க�ொண்டவைகளே. புடைப்பு 34
நவீனா அலெக்சாண்டர்
சிற்பங்களைப் ப�ொறுத்தவரையில் இந்த காலகட்டத்தின் தனித்துவமாக ஐஸ�ோசிபாலி என்கிற உத்தி பரவலாக கடைபிடிக்கப்பட்டிருக்கிறது (உட்கார்ந்திருக்கும், நின்றிருக்கும் அனைத்து உருவங்களின் தலைகளும் கண்களும் ஒரே உயரத்தில் இருக்கும்படி கம்போஸ் செய்வதை ஐஸ�ோசிபாலி என்பார்கள்). மணி கல் புடைப்பு சிற்பங்களில் பிகர்டு பேண்ட் (மனித மற்றும் மிருக உருவங்களை ஒன்றுக்கு ஒன்று மேலெழுந்து வரும்படி செதுக்குவது) இந்த காலகட்டத்தின் கண்டுபிடிப்பு என்று ச�ொல்லலாம். சிற்பக் கலை ப�ொதுவாக அதிகதிகமாக அப்ஸ்டிராக்ட் அலங்காரத்தின் உச்சம் ந�ோக்கி நகர்ந்தபடி இருந்தது. மனித உருவத்தின் இயற்கை ரூபத்தை தவிர்த்துவிட்டு அப்ஸ்டிராக்ட் வடிவங்களான சதுரம், வட்டம், முக்கோணம் ஆகியவைகளை கலந்து உருவங்களுக்கு தெய்வத்தன்மையை க�ொடுப்பதில் கவனம் செலுத்தினார்கள் இந்த காலக்கட்ட சிற்பக் கலைஞர்கள். இம்டுகட் – சுக்குரு காலகட்டம் (இரண்டாம் நிலைமாற்ற காலகட்டம்) ஊர் நகரின் முதல் அரச பரம்பரை இந்த காலக்கட்டத்திலிருந்துதான் த�ொடங்குகிறது. ஊர் நகரமும் ஊர்க் நகரமும் அரசியல் அதிகாரத்திலும், கலை கலாச்சார நடவடிக்கைகளிலும் முக்கியத்துவமும் முதன்மையும் பெறுகின்றன. இந்த காலகட்டத்தில் கலை வெளிப்பாட்டுத் தன்மைகளில் எத்தகைய பெரிய மாற்றங்களும் ஏற்படவில்லை. மெசிலிம் காலக்கட்ட கலை சித்தாந்தங்களே இந்த காலகட்டத்திலும் த�ொடர்ந்தன. சுமேர்-அக்கேடிய புத்தெழுச்சி காலக்கட்டம் கி.மு. 2047 – 1750 கட்டிடக் கலை இந்தக் காலப் பகுதியிலேயே க�ோயில் கட்டிடக் கலையில் சிகுரத் அமைப்புகள் த�ோன்றின. நான்கு பக்கங்களிலும் உள் பக்கமாக சரிந்த சிறியக் குன்றுப் ப�ோன்ற உயரமான கட்டிடத்தின் உச்சிப் பகுதியில் க�ோயில்கள் கட்டப்பட்டன. 35
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
குன்றுப் ப�ோன்ற உயரமான அமைப்பின் மீது க�ோயில்களைக் கட்டியதற்கான விளக்கங்கள் இன்றைக்கு கிடைக்கவில்லை. சுமேரிய மதக் க�ோட்பாடுகளில் இத்தகைய உயரமான குன்றுகள் எதை குறிக்கின்றன என்கிற ஆதார தகவல்களும் நமக்கு கிடைக்கவில்லை. மலைகள் அற்ற தெற்குப் பகுதியில் சிறு மலைப்போன்ற குன்று வடிவை உருவாக்கி அதன் மீது க�ோயில்களை சுமேரியர்கள் கட்டியதற்கான அனுமானங்களை வேண்டுமானால் முன்வைக்க முடியும். சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுமேரியாவின் தெற்குப் பகுதியில் ஊடுருவிய மக்களினம் மலைகள் சார்ந்த குறிஞ்சி நிலப் பகுதியிலிருந்து வந்திருக்கவேண்டும். தமிழர்களின் முருக கடவுள் குன்றுகளின் அதிபதி என்பதை இங்கே ஒப்பு ந�ோக்க வேண்டியிருக்கிறது. சுமேரியர்களிடையே மிக செல்வாக்குப் பெற்ற இனானா கடவுள் தமிழர்களின் க�ொற்றவைக்கு ஒப்பானவள் என்பதும் இங்கே ஒப்பு ந�ோக்க வேண்டிய சங்கதி. முதன் முறையாக கல்லறை கட்டிடக் கலையும் முக்கிய இடம் பிடித்தது இந்த காலக்கட்டத்தில்தான். இதற்கு முன்பும் சரி இதற்கு பின்பும் ஆகட்டும் மத்திய கிழக்கு பகுதி கட்டிடக் கலையில் கல்லறை கட்டிடக் கலைக்கு இத்தகைய முதன்மை இடம் 36
நவீனா அலெக்சாண்டர்
தரப்படவில்லை என்று துணிந்து ச�ொல்ல முடியும். சிற்பக் கலை அக்கேடிய சிற்பக் கலையின் த�ொடர்ச்சியாக அமைந்தது இந்தக் காலக்கட்ட சுமேரிய சிற்பக் கலை. இதற்கு சிறந்த உதாரணம் அரசன் குடியாவின் சிற்பங்கள். இந்த அரசனின் பல சிற்பங்கள் இப்போது நமக்கு கிடைத்திருக்கிறது. அவைகள் அக்கேடிய சிற்பக் கலையின் தாக்கங்களை க�ொண்டவைகளாக இருக்கின்றன. முற்கால சுமேரிய சிற்பங்களின் விறைப்புத் தன்மை இவைகளில் அறவேக் கிடையாது. மேலாடையை மீறிக்கொண்டு வெளித் தெரியும் உடல் பாகங்கள் இந்த காலக்கட்ட சிற்பக் கலைஞர்களின் உடல் கூற்றியல் புரிதலை வெளிப்படுத்துவதுடன் பார்வையாளர்களையும் கவரும்படி இருக்கிறது. குறிப்பாக வலிமை மிகுந்த த�ோள்களும், கைகளும் அவற்றின் தசைகள�ோடு கல்லில் சிறைவைத்ததைப் ப�ோன்ற த�ோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த சிலைகளில் எழுத்துகளும் ப�ொறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த காலகட்ட புடைப்பு சிற்பங்கள் இப்பொழுது கிடைக்கப்பெறவில்லை. ஓவியக் கலை இந்த காலக்கட்டத்தை சேர்ந்த இன்றைய நிலையில் பாதுகாக்கப்பட்ட சுவர் ஓவியங்களாக நமக்கு கிடைப்பவைகள் மாரி நகரத்திலிருந்த இடிந்த அரண்மனை ஒன்றை சேர்ந்தவைகள். இன்வெஸ்டிடியூர் ஆப் சிம்ரிலிம் என்கிற ஓவியம் சிறப்பான ஒன்று. அரசன் சிம்ரிலிமை குறிக்கும் ஓவியத் த�ொகுதி இது. 37
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
இஸ்தார் கடவுள், அரசன் சிம்ரிலிமிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும் காட்சியை சித்தரிக்கும் ஓவியம். இங்கே இஸ்தார் கடவுள் குறித்த சித்தரிப்பு கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இடது கையில் வாளும், வலது காலை சிங்கத்தின் மீது வைத்திருக்கும் 38
நவீனா அலெக்சாண்டர்
இஸ்தார் ப�ோர் கடவுளாக தெளிவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். தமிழர்களின் க�ொற்றவை இத்தகைய சித்தரிப்பு க�ொண்டவள் என்பது தற்செயலான ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த ஓவியத் த�ொகுதியில் முதன் முறையாக பெர்ஸ்பெக்டிவ் உத்தி மிகச் சிறிய அளவில் சுமேரிய ஓவியக் கலைஞரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பான சுவர் ஓவியங்கள் பெரும் அளவிலும் ஓரளவு பாதுகாக்கப்பட்ட நிலையிலும் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்பதால் இந்த ஓவியமே பெர்ஸ்பெக்டிவ் உத்தியின் த�ொடக்கமாக இருக்கலாம் என்று அனுமானமாக ச�ொல்ல முடியும். இஸ்தார் மற்றும் மற்ற துணை கடவுளர்களின் தலையில் இருக்கும் கிரீடங்கள் ப�ோர்ஷார்டனிங் உத்தியில் வரையப்பட்டிருக்கிறது. ஆர்காயிக் கால கிரேக்க ஓவியர்களே, ஓவியங்களில் ப�ோர்ஷார்டனிங் உத்தியை அறிமுகப்படுத்தியவர்கள் என்று கலை வரலாற்று ஆராய்ச்சிகளில் ச�ொல்லப்பட்டாலும் ஆர்காயிக் கால கிரேக்கர்களுக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சுமேரிய ஓவியர்கள் இந்த உத்தியை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதே வரலாற்று உண்மையாக இருக்கிறது. அக்கேடிய நாகரீகம் கி.மு. 2334 – 2218 தங்களுக்குள் அடித்துக்கொள்வதை வழக்கமாக க�ொண்டிருந்த சுமேரிய நகரங்களை முதன் முதலில் பெரும் சாம்ராஜ்யம் என்கிற வகைக்குள் க�ொண்டு வந்தவன் சாரக�ோன். அவன் பெயருக்கான அர்த்தம் பெரும் அரசன் (க�ோன்) என்பது. அரசர்களை க�ோன் என்று அடையாளப்படுத்தும் தமிழ் வார்த்தை இவனுடையப் பெயரில் தெரிவதுப் ப�ோல உங்களுக்குப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. சுமேரிய ம�ொழியின் பல வார்த்தைகள் தமிழுடன் ஒத்துப்போவது ஆச்சரியப்பட வேண்டிய விசயம் அல்ல நாம் அறிந்துக�ொள்ளாத விசயம் மாத்திரமே. நம் ஆராய்ச்சி உலகம் கண்டுக�ொள்ளாத ஒரு அம்சம் அவ்வளவே. ஊர், ஈழம், மாரி என்று பல முக்கியமான சுமேரிய நகரங்களின் பெயர்களிலும் நம் தமிழ் வாடை அடித்தபடிதான் இருக்கிறது. சரி விசயத்திற்கு வருவ�ோம், சாரக�ோன் அக்கேட் என்கிற புதிய 39
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
நகரத்தை உருவாக்கியதால் அவன் உருவாக்கிய சாம்ராஜ்யத்திற்கு அக்கேடிய சாம்ராஜ்யம் என்று பெயர் சூட்டிவிட்டது ஆராய்ச்சி உலகம். கிஷ் நகரின் அரசனான ஊர்-சபாபா என்பவனின் பணியாளாக இருந்தவன் சாரக�ோன். இவன் எப்படி அரசனாக மாறினான் என்பதைக் குறித்த வரலாற்றுத் தகவல்கள் எதுவும் இல்லை. அவன் வெளியிட்ட கல்வெட்டுகளிலும் கூட அதுக் குறித்த தகவல் ஏதும் இல்லை. ஒரு பேரரசனாக அவனுடைய வெற்றிகளை பற்றி மட்டுமே அவனுடைய கல்வெட்டுகள் பேசுகின்றனவேத் தவிர பணியாளாக இருந்த அவன் எப்படி அரசனாக ஆனான் என்பதைக் குறித்து ஏதும் பேசுவதில்லை. இவன் பெருமை பேசும் சுயவரலாறு கல்வெட்டும் கூட இவன் அரசனான சங்கதி குறித்து வாய் திறப்பதில்லை. இந்த சுய வரலாற்று கல்வெட்டு அக்கேடிய இலக்கிய படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இவன் பேரரசனாக இருந்த ஆண்டுகள் கி.மு. 2334 – 2279. இவனைத் த�ொடர்ந்து வந்த நான்கு அரசர்களின் காலகட்டம் வரையே அக்கேடிய பேரரசு நிலைத்திருந்தது. சாரக�ோனைத் த�ொடர்ந்து அவனுடைய மகன்கள் ரிமுசும் மானிஷ்டுசுவும் அக்கேடிய பேரரசர்களானார்கள். இவர்களைத் த�ொடர்ந்து சாரக�ோனின் பேரன் நரம்-சின். இவனுக்கு அடுத்து (கடைசி அக்கேடிய பேரரசன்) ஷர்40
நவீனா அலெக்சாண்டர்
காலி-ஷாரி. சாரக�ோனுக்கு என்ஹிடுவானா என்று ஒரு மகளும் உண்டு. அவள் ஆட்சி அதிகாரம் செலுத்தியதாக வரலாற்று பதிவுகள் இல்லை. ஆனால் மதம் சார்ந்த விசயங்களில் ஆளுமை மிக்க சக்தியாக அவள் செயல்பட்டிருப்பதாக தெரிகிறது. சுமேரிய கடவுளர்களே அக்கேடியர்களின் கடவுளர்களாகவும் இருந்தார்கள். சில சுமேரிய கடவுளர்களின் பெயர்களை மட்டும் அக்கேடியர்கள் மாற்றிக்கொண்டார்கள். அன் கடவுள் அனுவாக பெயர் மாற்றம் பெற்றார். ஊட்டு ஷாமசாகவும், இனானா இஸ்தாராகவும், ஈன்லில் ஈலிலாகவும் பெயர் மாற்றம் கண்டார்கள். அக்கேடிய நாகரீக கலை மெசப்பட்டோமியப் பகுதியில் (டைகிரிஸ் – யூப்பிரடிஸ் நதிகள் பாயும் பகுதிகள்) அக்கேடிய நாகரீகத்தை உருவாக்கியவர்கள் செம்மிட்டிக் இனக் குழு மக்கள். இவர்கள் மெசப்பட்டோமியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்குள் இருந்து சுமேரிய நாகரீகம் உருவாக்கிய நகரங்களுக்குள் ஊடுருவியவர்கள். அக்கேடியர்கள் இராணுவமயமாக்கப்பட்ட ஒரு இனக் குழுவாக இருந்தவர்கள். இதன் காரணமாக அவர்களுடைய கலைகளில் எதிர�ொளித்தவைகள் எல்லாம் மேலாண்மையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் பிரம்மாண்டங்களே. அரசனானவன் கடவுளர்களின் சேவகன் என்கிற நிலையிலிருந்து அவன் ஒரு ப�ோர் வீரன் என்கிற சிந்தனை மாற்றத்திற்கு உள்ளானது அக்கேடிய கலைகளின் தனி சிறப்பு. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இவர்களுடைய அரண்மனை கட்டிடக் கலை. இவைகள் இன்றைக்கு முழு உருவில் கிடைக்கவில்லை என்றாலும் தரைமட்டமாகிவிட்ட அடித்தளங்களே இவைகளின் பிரம்மாண்டத்தை எடுத்துக்காட்ட ப�ோதுமானவைகளாக இருக்கின்றன. பேரரசு ஒன்றைக் கட்டமைப்பதே அக்கேடியர்களின் பிரதான அரசியல் சமூக சிந்தனை மற்றும் செயல்பாடாக இருந்திருக்கிறது. அவைகள் அவர்களின் கலைகளிலும் பிரதிபலித்தது. சுமேரிய கலைகளைப் ப�ோல அல்லாமல் அக்கேடிய கலைஞர்கள் தங்களின் படைப்புகளில் உணர்ச்சிகளை பிரதிபலித்திருக்கிறார்கள் (எக்ஸ்பிரஷனிசம்). 41
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
அக்கேடிய கலை காலக்கட்டங்கள் கலை வரலாற்றின் அடிப்படையில் அக்கேடிய கலையை மூன்று காலகட்டங்களாக பிரித்திருக்கிறார்கள். சாரக�ோன் காலகட்டம், என்ஹிடுவானா-மனிஸ்டுசு காலகட்டம் மற்றும் நரம்சின்ஷர்காலிஷாரி காலகட்டம். கட்டிடக் கலை கடவுளர்களின் க�ோயில்களை விட அரசர்களின் அரண்மனைகள் ஆரவாரத்துடன் கட்டப்பட்டது அக்கேடிய பேரரசு காலம் முழுவதிலும். ஆனால் நம்முடைய துரதிர்ஷ்டம் இன்று அக்கேடிய அரண்மனைகள் முழுதுமாக கிடைக்கப்பெறவில்லை. இடிந்த அடித்தளங்களைக் க�ொண்டு அவைகள் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்கிற அனுமானமே செய்ய முடிகிறது.
சிற்பக் கலை அக்கேடிய சிற்பக் கலையின் சிறப்பம்சங்கள் உணர்ச்சி வெளிப்பாட்டு தன்மையும்(expression) இயங்கியலும் (movement). அக்கேடிய சிற்பங்களின் பேசு ப�ொருள் பெரும்பாலும் அரசர்களின் ப�ோர்க்களக் காட்சிகளே. புடைப்பு சிற்பங்கள் அக்கேடிய காலகட்டத்தில் மெசப்பட்டோமியா அதுவரை கண்டிராத ஒரு புதிய உச்சத்தை அடைந்தது. சிற்ப மனிதர்கள் முதல் முறையாக 42
நவீனா அலெக்சாண்டர்
தங்களின் மன உணர்வுகளை அவர்களின் முகங்களிலும் உடல் அசைவுகளிலும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரே இடத்தில் தேமே என்று நின்றுக�ொண்டிராமல் அவர்களின் செய்கை ஒன்றின் மத்தியில் உறைந்ததுப் ப�ோலக் காட்சியளிக்கிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் நரம்-சின் பேரரசனின் வெற்றி கற்பலகை. இதில் நரம்-சின் அவனுடைய பகைவர்களை வெற்றிக�ொள்வது சித்தரிக்கப்பட்டிருக்கிறது (லூலுபி என்கிற மலைவாழ் மக்களை வெற்றிக�ொண்டக் காட்சி).
இந்த சிற்பக் காட்சியின் குவிமையம் முழுவதும் நரம்-சின் உருவத்தின் மீதே இருக்கும்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவனைத் தவிர அவனுடைய ப�ோர்வீரர்களும் எதிரிகளும் உருவத்தில் சிறிதாக காட்டப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக உருவத்தில் பெரிதாக இருக்கும் நரம்-சின் மீது நம்முடைய பார்வை நம்மையும் மீறி இழுக்கப்படுகிறது. இதைத்தான் இந்த சிற்பத்தை செதுக்கிய கலைஞனும் விரும்பியிருக்கவேண்டும். 43
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
நரம்-சின் உடல் வெளிப்படுத்தும் உடற் கூற்றியலும் கவனத்தில் க�ொள்ளவேண்டிய அம்சம். அக்கேடிய கலைஞர்கள் மனித உடல் கூற்றியலை உள்வாங்கி அதை கலைத் தன்மையுடன் வெளிப்படுத்தியிருப்பதற்கு இது சிறந்த உதாரணம். சிற்பக் கலைஞர்கள் இரண்டு வகையான கட்டமைப்புகளை தங்களின் முத்திரை சிற்பங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒன்று த�ொடர்பற்றது மற்றொன்று த�ொடர்புடையது. இபின் ஷாரும் முத்திரை த�ொடர்புடைய கட்டமைப்பிற்கு எடுத்துக்காட்டு.
இந்த முத்திரையில் ஆர்னா வகை எருமைகள் (இந்த எருமை இனம் நம் நாட்டை சேர்ந்தவை என்பது இங்கே குறிப்பிட வேண்டிய சங்கதி. நம்மூர் எருமைகளுக்கு மெசப்பட்டோமியாவில் அதிலும் நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு என்ன வேலை என்பதையெல்லாம் நம்முடைய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்தான் ஆராய்ந்து ச�ொல்ல வேண்டும். ச�ொல்லிட்டாலும்!) இரு வீரர்களின் கைகளில் இருக்கும் குடுவைகளிலிருந்து ப�ொங்கிப் பெருகும் நீரை தலையை உயர்த்திக் அருந்துவதைப் ப�ோல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சிமெட்டிரிக் பேலன்சில் இருக்கும் இந்த புடைப்பு சிற்பத்தில் வீரர்கள் மற்றும் எருமைகளின் உடல் கூற்று அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய சுமேரிய சிற்பங்கள் வெளிப்படுத்தாத சிறப்பு அம்சம் இது. 44
நவீனா அலெக்சாண்டர்
பாபில�ோனிய நாகரீகம் கி.மு. 1820 - 539 டைகிரிஸ் மற்றும் யூப்பிரடீஸ் நதிகளின் இரு கரைய�ோரம் இருந்த நகரங்களில் பாபில�ோன் நகரமும் ஒன்று. சுமேரிய மற்றும் அக்கேடிய நாகரீகங்களின் காலக்கட்டத்தில் ஊர், ஊர்க், கிஷ் மற்றும் அக்கேட் நகரங்கள் அரசியல் அதிகாரத்தில் முதன்மை நகரங்களாக இருந்து இரு நதி கரைய�ோரம் இருந்த மற்ற நகரங்களை வென்று அடக்கி பெரும் பேரரசுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இந்த நகரங்களின் வரிசையில் அடுத்து வருவது பாபில�ோன்.
இந்த நகரின் எழுச்சியே மெசப்பட்டோமியாவில் பாபில�ோனிய நாகரீகத்தை உருவாக்கியது. கி.மு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் ஊருக் வம்சாவளியின் வீழ்ச்சியுடன் மெசப்பட்டோமியாவில் சுமேரிய நாகரீகம் முழுதுமாக முடிவிற்கு வந்தது. இதை முடிவிற்கு க�ொண்டுவந்தவர்கள் அம�ோரைட் இனக் குழு மக்கள். அரேபிய வளைகுடா பகுதியிலிருந்து மெசப்பட்டோமிய பகுதி நகரங்களுக்குள் ஊடுருவியவர்கள் அம�ோரைட் மக்கள். இவர்களின் அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகள் பாபில�ோன் 45
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
நகரை மெசப்பட்டோமிய பகுதி அரசியல் அதிகாரப் ப�ோட்டியில் முதன்மை இடத்திற்கு க�ொண்டுவந்தது. இது நடந்தது கி.மு. 1820-ல். இதைத் த�ொடர்ந்து பதின�ொரு வெவ்வேறு இனக் குழு மக்களின் அரச வம்சாவளிகள் பாபில�ோனை முதன்மையாக க�ொண்டு மெசப்பட்டோமிய பகுதியை ஆண்டிருக்கிறார்கள். கி.மு. 1820 த�ொடங்கி கி.மு. 539 முடிய சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் இது நீடித்திருக்கிறது. பிறகு பாபில�ோன் அலெக்சாண்டரின் கைகளுக்குள் சென்றுவிட்டது. பாபில�ோனை ஆண்ட மத்திய கிழக்கின் முக்கிய இனக் குழுக்கள் அம�ோரைட் (இவர்களை கானானியர்களின் ஒரு கிளை என்று ச�ொல்பவர்களும் உண்டு), காசைட், எலமைட், அசிரியர்கள் மற்றும் சால்டியன். அம்முராபி, நெபுசாண்ட்நேசர், பிளைசர் என்று பல வரலாற்று புகழ்பெற்ற அரசர்கள் பாபில�ோனை ஆட்சி செய்திருக்கிறார்கள். அரசியல் மற்றும் மத க�ோட்பாடுகளில் சுமேரிய, அக்கேடிய நாகரீகங்களின் த�ொடர்ச்சியாகவே பாபில�ோனிய நாகரீகம் விளங்கியிருக்கிறது. பாபில�ோனிய கலை காலகட்டங்கள் பழைய பாபில�ோனிய காலகட்டம், இடை பாபில�ோனிய காலக்கட்டம் (காசைட் கலை) மற்றும் புது பாபில�ோனிய காலக்கட்டம் என்று மூன்று வகையாக பாபில�ோனிய கலை வரலாறு பிரிக்கப்படுகிறது. பழைய பாபில�ோனிய காலகட்டம் கி.மு. 1792 - 1595 கட்டிடக் கலை இந்த காலக்கட்ட கட்டிடக் கலைக்கு உதாரணமாக இருக்கும் எத்தகைய கட்டிடங்களும் இப்போது கிடைக்கவில்லை. அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் இந்த காலக்கட்ட கட்டிடங்களின் அடிப்படை அமைப்புகளும் கூட குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. இந்த காலக்கட்டத்தின் புகழ் பெற்ற அரசனான அம்முராபியின் அரண்மனை எச்சங்களும் கூட தற்பொழுது நமக்கு கிடைக்கவில்லை. 46
நவீனா அலெக்சாண்டர்
சிற்பக் கலை மூன்றாம் ஊருக் வம்சாவளி (சுமேரிய பின்நவீனத்துவ காலகட்டம்) கலைகளின் மீட்சியாகவே பழைய பாபில�ோனிய சிற்பங்கள் இருக்கின்றன. கடவுளர் த�ொடர்பான கதைகளும், அரசர்களின் ப�ோர் வெற்றிக் காட்சிகளுமே சிற்பக் கலையின் பேசுப் ப�ொருள்கள். ஆனால் பாபில�ோனிய சிற்பிகள் கூடுதலாக ஒரு அம்சத்தையும் தங்களின் சிற்பங்களில் சேர்த்துக்கொண்டார்கள். அவைகள் மந்திர சடங்கு சார்ந்த குறியீடுகள் மற்றும் குறியீட்டு உருவங்கள் (ஒருவகையில் மேஜிகல் ரியலிச வகைப்பாட்டை சேர்ந்தவைகள் என்று க�ொள்ளலாம்). இந்த குறியீடுகள் மற்றும் குறியீட்டு உருவங்கள் உணர்த்தும் அர்த்தங்கள் குறித்த ஆழமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. இவைகள் இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கின்றன. கலை என்கிற தளத்தில் இல்லாமல் மனித வரலாற்றின் முக்கிய நிகழ்வு என்பதன் அடிப்படையில் உலகப் புகழ்பெற்ற புடைப்பு சிற்பம் அரசன் அம்முராபியின் கற்பலகை. இந்த கற்பலகை ஒருவகையில் மனித சமூகத்தின் முதல் சட்ட புத்தகமாக கருதப்படுகிறது. அம்முராபி தன் குடிமக்களுக்கான சட்டங்களை வகுத்து அதை மக்களுக்கு வழங்கிய நிகழ்வு இந்த கற்பலகையில் புடைப்பு சிற்பமாக காட்டப்பட்டிருக்கிறது. அத்தோடில்லாமல் அம்முராபி வகுத்த சட்டங்களும் இந்த கற்பலகை முழுவதிலும் குனிபார்ம் எழுத்து வடிவில் செதுக்கிவைக்கப்பட்டிருக்கிறது.
47
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
சுமேரிய பின்நவீனத்துவ கால, மாரி அரண்மனை ஓவியத்தில் நாம் கண்ட ஃப�ோர்ஷார்டனிங் உத்தி இந்த புடைப்பு சிற்பத்தில் த�ொடக்க அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்த சிற்பத்தின் அடுத்த சிறப்பு. சாமஷ் கடவுளின் (உட்கார்ந்திருக்கும் உருவம்) கிரீடத்தை முப்பரிமாணத் த�ோற்றத்தில் காட்ட ஃப�ோர்ஷார்டனிங் உத்தியை இந்த புடைப்பு சிற்பத்தை வடித்த கலைஞர்கள் ச�ோதனை முயற்ச்சியாக பயன்படுத்திப் பார்த்திருக்கிறார். சாமஷின் முகத் தாடியும் கூட இதே முறையில்தான் வடிக்கப்பட்டிருக்கிறது. அருவிப�ோல தத்துரூபமாக வழிந்தோடும் த�ோற்றத்தை தரும் அம்முராபியின் உடை செதுக்கிக் காட்டப்பட்டிருக்கும் நேர்த்தியும் அழகும் பாபில�ோனிய சிற்பக் கலைக்கான உதாரணங்கள். அம்முராபியின் உடை காற்றில் அலைந்தாடும் த�ோற்றத்தை உண்டாக்கி இந்த புடைப்பு சிற்பத்தில் இயங்கியலை (மூவ்மெண்ட்) வெளிப்படுத்துகிறது. இந்த காலக்கட்டத்தின் அடுத்த பிரசித்திபெற்ற புடைப்பு சிற்பம் இஸ்தார் கடவுளுடையது. இது மாரி அரண்மனை வளாகத்திலிருந்து அகழ்வாராய்ச்சியின்போது பெறப்பட்டது.
பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 48
இது புடைப்பு சிற்பம் என்றாலும் இஸ்தார் கடவுளின் உடலில் வெளிப்படும் கனப் பரிமாணம் (மாஸ்) காண்பவர்களை அசத்தக் கூடியதாக இருக்கிறது. மனித உருவத்தில் விலங்குகளின் உறுப்புகளை கலந்து வின�ோத வடிவங்களை (மேஜிக்கல் ரியலிச உருவங்கள்) உருவாக்குவது பாபில�ோனிய சிற்பக் கலையின் தனிச் சிறப்புகளில் ஒன்று. அந்த வகையில் இங்கே இஸ்தார் கடவுள் பாதி மனித உருவத்திலும் மீதி ஆந்தையின் உருவத்திலும் க ா ட்ட ப ்ப ட் டி ரு க் கி ற ா ர் . இஸ்தார் கடவுளின் கிரீடத்திலும் ஃப�ோர்ஷார்டனிங்
நவீனா அலெக்சாண்டர்
முழு உருவ சிலைகளைப் ப�ொறுத்தவரையில் இந்த காலக்கட்ட சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது நீர் கடவுளின் ஆள் உயர சுண்ணாம்பு கல் சிற்பம். ஓவியக் கலை இந்த காலகட்டத்தின் சிறப்பாக அடையாளம் காணுமளவிற்கு ஓவியங்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் சுமேரிய பின்நவீனத்துவ காலக்கட்டத்தை சேர்ந்த மாரி அரண்மனை சுவர் ஓவியங்களே பழைய பாபில�ோனிய ஓவியக் கலைக்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். இடை பாபில�ோனிய காலக்கட்டம் (காசைட் கலை) கி.மு. 1595 - 985 அர�ோமைட்டுகள் உருவாக்கிய பழைய பாபில�ோனிய பேரரசை ஹிட்டைட்டுகள் ப�ோர் நடவடிக்கைகளின் மூலம் முடிவிற்கு க�ொண்டுவந்தார்கள். இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட காசைட்டுகள் பாபில�ோனின் அரியணையில் வந்து அமர்ந்தார்கள். இதை த�ொடர்ந்து சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு பாபில�ோன் இவர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. கட்டிடக் கலை மெசப்பட்டோமிய கட்டிடக் கலையில் மீண்டும் ஒரு புதுவகை மாற்றத்தை க�ொண்டுவந்தவர்கள் காசைட்டுகள். அச்சில் வார்க்கப்பட்ட செங்கற்களை க�ொண்டு க�ோயில்களையும் அரண்மனைகளையும் கட்டி எழுப்பினார்கள். கட்டிட சுவர் பகுதியில் செங்கற்களைக்கொண்டே புடைப்பு சிற்பங்களை உருவாக்கியது இவர்களின் தனிச் சிறப்பு. மேலும் க�ோயில் கட்டிட 49
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
அடிப்படை அமைப்பிலும் சில மாறுதல்களை செய்தார்கள். அதேப் ப�ோல காசைட் அரண்மனை கட்டிடங்களும் பல மாறுதல்களை க�ொண்டிருந்தன. ஆனால் அவைகள் முழு வடிவில் கிடைக்கவில்லை. தர்-குரிகால்சு இடத்திலிருக்கும் அரண்மனை அறையும் குறையுமாக இன்றும் நிலைத்திருக்கிறது. இந்த கட்டிடத்தின் மேல் சிதிலமடைந்து நிற்கும் செங்கல் குன்று என்ன வடிவத்திலிருந்திருக்கும் அல்லது எதற்காக அந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறித்து இன்றைக்கு தெளிவான முடிவுகளுக்கு வருவதில் பிரச்சனை நீடிக்கின்றன.
சிற்பக் கலை காசைட்டுகள் ஐந்நூறு ஆண்டுகளுக்கு குறையாமல் பாபில�ோனை ஆண்டிருந்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற முழு உருவ சிற்பங்கள் மிக மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கிறது. இது நம் புருவங்களை உயர்த்தக் கூடிய சங்கதிகளில் ஒன்று என்றாலும் இதுக் குறித்த தெளிவான கருத்துகள் ஏதும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. அகழ்வாராய்ச்சிகளும் காசைட்டுகளின் முழு உருவ சிற்பங்களை வெளிக்கொண்டுவருவதாக இல்லை. 50
நவீனா அலெக்சாண்டர்
கிடைக்கும் ஒன்று இரண்டு சிற்பங்களை வைத்துக்கொண்டு பார்க்கும்போது காசைட் சிற்ப கலைஞர்கள் சிற்பங்களில் ரியலிசத்தை க�ொண்டுவர முயற்சித்திருக்கிறார்கள் என்றுத் தெரிகிறது. இதற்கு உதாரணமாக சிங்க உருவ சிற்பத்தை ச�ொல்லலாம். இது தர்-குர்கால்சு அரண்மனை வளாகத்திலிருந்து 51
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
கண்டு எடுக்கப்பட்டது. மெசப்பட்டோமிய நாகரீகம் கடந்த நான்காயிரம் ஆண்டுகளாக கண்டு வந்த முத்திரை மற்றும் கற்பலகை புடைப்பு சிற்பங்களை காசைட்டுகள்
52
நவீனா அலெக்சாண்டர்
முற்றிலுமாக கைவிட்டுவிட்டார்கள். அடுத்த ஐந்நூறு ஆண்டுகளுக்கு இந்த இரண்டையும் காசைட்டுகள் மறந்தேவிட்டார்கள் என்றும் ச�ொல்லலாம். இந்த இரண்டிற்கும் பதிலாக காசைட்டுகள் எல்லைக் கற்களாக பயன்படுத்திய குதுரூஸ் என்பதிலேயே புடைப்பு சிற்பங்களை செதுக்கினார்கள். புது பாபில�ோனிய காலக்கட்டம் கி.மு. 629 - 539 கலை வரலாறு ந�ோக்கில் பாபில�ோனிய கலைகள் காசைட் வம்சாவளி காலக்கட்டத்தில் இரண்டு பிரிவுகளாகப் பிரிகின்றன. ஒன்று அசீரிய கிளை மற்றொன்று காசைட் கிளை. அசீரிய கிளை, காசைட் கிளையை பின்னுக்குத் தள்ளி ஒட்டும�ொத்த மெசப்பட்டோமியாவின் முதன்மை கலையாக உருமாற்றம் அடைகிறது. அசீரிய கலை மெசப்பட்டோமிய நிலப்பகுதியில் கி.மு. ஏழாம் நூற்றாண்டு வரை வலிமையுடன் நிலைத்து அதற்கு பின்னான ஆண்டுகளில் வீழ்ச்சி அடைந்து காணாமல் ப�ோனது. அசீரிய கலையின் ஆதிக்கம் முடிவிற்கு வந்தப் பிறகு பாபில�ோனில் பழைய சுமேரிய-அக்கேடிய கலைப் பாணி உயிர்த்தெழுகிறது. இதை புது பாபில�ோனிய கலை என்று இன்றைக்கு வகைப்படுத்துகிறார்கள். ஒருவகையில் சுமேரிய கலையின் இரண்டாம் கட்ட பின்நவீனத்துவ எழுச்சி என்று இதைக் குறிப்பிடலாம். இந்த காலக்கட்டத்தை சேர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க அரசன் நெபுகண்ட்நேச்சர் II-யின் கட்டிடங்கள் அன்றைய உலகின், உலக அதிசயங்களின் பட்டியலில் இடம் பெற்றவைகள். வரலாற்றின் துரதிர்ஷ்டம் இந்த காலக்கட்டத்தை சேர்ந்த கட்டிடங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் என்று எதுவும் முழுமையாக இன்றைக்கு கிடைக்கவில்லை. ஆனால் கிடைக்கும் க�ொஞ்ச நஞ்ச விசயங்களைக் க�ொண்டு பார்க்கும்போது சுமேரியர்களின் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசத்தையே தங்களின் கலைப் படைப்புகளில் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்கள் இந்த காலக்கட்ட கலைஞர்கள். கட்டிக் கலையில் புதுமையாக இனாமல்ட் பிரிக் (சாயம் பூசப்பட்ட செங்கற்கள்)-களை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த செங்கற்கள் இன்றைக்கு பயன்படுத்தப்படும் டைல்ஸ் ப�ோன்ற த�ோற்றத்தை 53
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
க�ொண்டவைகள். நெபுகாண்ட்நேச்சர் கட்டிய கேட் ஆப் இஸ்தார் இத்தகைய செங்கற்களைக்கொண்டு கட்டிய கட்டிடத்திற்கு உதாரணம்.
இந்த சுவரில் சிங்கம், எருது மற்றும் டிராகன் ப�ோன்ற மிருகங்கள் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிச அடிப்படையில் புடைப்பு சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் ஓவியங்களாகவும் வரையப்பட்டிருக்கின்றன.
54
நவீனா அலெக்சாண்டர்
பழைய சுமேரியக் கலையை பிரம்மாண்டத்தை ந�ோக்கி நகர்த்தி உலக கலை வரலாற்றில் என்றென்றைக்குமான நினைவுச் சின்னங்களாக நிலைபெற வைத்துவிட்டார்கள் இந்த காலக்கட்ட கலைஞர்கள். இதில் அடுத்து வருவது மர்டூக் சான்க்சுரி. இது நெபுகண்ட்நேச்சர் மர்டூக் கடவுளுக்கு கட்டியக் க�ோயில். இதன் அந்திமக் கால கட்டிடப் பகுதிகளே இதன் பிரம்மாண்டத்திற்கான அடையாளமாக இன்றைக்கும் நம்மிடையே நின்றுக�ொண்டிருக்கின்றன. இந்த க�ோயில் மூன்று பெரும் பிரிவுகளைக்கொண்ட க�ோயிலாக இருந்திருக்கவேண்டும் என்பதை இதன் மிஞ்சிய கட்டிட அடித்தளங்கள் உணர்த்துகின்றன.
அடுத்த பிரம்மாண்டம் டவர் ஆப் பாபேல். இதன் மிச்ச ச�ொச்சம் கூட இன்றைக்கு இல்லை. ஆனால் இந்த க�ோயில் எப்படி இருந்தது என்பதற்கான புற ஆதாரங்கள் இருக்கின்றன. அதைக்கொண்டு அனுமானமாக வரையப்பட்ட இந்த க�ோயிலின் ஓவியப் படங்கள் இருக்கின்றன. மற்றொரு
பிரம்மாண்டத்தை
பற்றி
குறிப்பிடாமல்
புது 55
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
பாபில�ோனிய கலை வரலாற்றை முடிவிற்கு க�ொண்டு வர முடியாது. அது த�ொங்குத் த�ோட்டங்கள். இது நெபுகாண்ட்நேச்சர் அவனுடைய மனைவிக்காக கட்டியதாக ச�ொல்லப்படுகிறது. இதன் எஞ்சியப் பகுதிகள் கூட வழமைப�ோல இன்றைக்கு கிடைக்கவில்லை.
அசீரிய நாகரீகம் கி.மு. 3000 - 935 டைக்ரீஸ் யூப்பிரடீஸ் நதிகள் வடக்கு தெற்காக பல பலம் 56
நவீனா அலெக்சாண்டர்
மிக்க நகரங்களை உருவாக்கி அதன் மூலம் மெசப்பட்டோமிய பகுதியில் பேரரசிற்கான ஓயாதப் ப�ோர்களை உருவாக்கிய சங்கதி இதுவரையில் நாம் அறிந்ததுதானே. அந்த வகையில் ஊர், ஊர்க், கிஷ், அக்கேட், பாபில�ோனிய ப�ோன்ற பலமிக்க நகரங்களின் வரிசையில் வரும் அடுத்த நகரம் அசூர். இது டைக்ரீஸ் யூப்பிரடீஸ் நதிகளின் வடக்கு பகுதியில் இருந்த நகரம். இந்த நகரில் மனித குடியிருப்புக்களுக்கான த�ொடக்க கால த�ொல்லியல் ஆதாரங்கள் கி.மு. 3000 த�ொடங்கியே கிடைக்கத் த�ொடங்கிவிடுகிறது. இந்த நகரால் உருவாக்கப்பட்டது அசீரிய நாகரீகம். அசீரிய நாகரீகத்தை மூன்று நிலைகளாக பிரிக்கிறார்கள்.
பழைய அசீரிய காலக்கட்டம் (கி.மு. 3000 – 1364. சில ஆராய்ச்சியாளர்கள் கி.மு. இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் பழைய அசீரிய காலக்கட்டம் த�ொடங்குவதாக கருதுகிறார்கள்), இடை அசீரிய காலக்கட்டம் (கி.மு. 1365 – 1077) மற்றும் புதிய அசீரிய காலக்கட்டம் (கி.மு. 1076 – 935). பழைய அசீரிய காலக்கட்டம் முழுவதும் அசூர் நகரம் சுமேரிய மற்றும் அக்கேடிய அரசுகளுக்கு அடங்கியிருந்தது. இடை அசீரிய காலக்கட்டம் த�ொடங்கியே அசூர் நகரம் மெசப்பட்டோமிய ஒருங்கிணைந்த பகுதியின் வல்லரசாக மாற்றமடைகிறது. 57
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
அசூர் நகரில் முதல் அரசுத் த�ோற்றத்திற்கான முறையான வரலாற்றுத் தகவல்கள் கி.மு. இருபதாம் நூற்றாண்டு முதல் கிடைக்கத் த�ொடங்கிவிடுகிறது என்றாலும் பதினைந்தாம் நூற்றாண்டு வரையான ஐந்நூறு நூற்றாண்டு காலம் அசீரியா, மிட்டானிய இனக் குழு மக்களின் வல்லாட்சியின் கீழே இருந்து வந்தது. கலை, அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் அசீரிய நாகரீகத்திற்கான தனித்துவம் என்பது இல்லாமல் அனைத்தும் மிட்டானிய மயமாகவே இருந்தது. கி.மு. பதினான்காம் நூற்றாண்டு முதலே அசீரியாவின் எழுச்சி த�ொடங்குகிறது. அசீரிய கலை காலக்கட்டம் அசீரிய கலை வரலாறும் பல நிலைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பழைய அசீரிய காலக்கட்டம், இடை அசீரிய காலக்கட்டம் மற்றும் புது அசீரிய காலக்கட்டம். பழைய அசீரிய காலக்கட்டம் கி.மு. 1900 - 1364 முன்பே பார்த்ததைப் ப�ோல பழைய அசீரிய கலைகள் மிட்டானிய கலைகளின் நகல்களாகவும் பிரதிபலிப்புகளாகவுமே இருந்தன. மிட்டானிய கலைகள் குறித்து ப�ோதுமான அளவிற்கான த�ொல்லியல் மற்றும் கலை வரலாற்று ஆதாரங்கள் இன்னமும் கிடைத்தபாடில்லை. மிட்டானிய கலைகளை ஆராய்வதன் வழியாகவே பழைய அசீரிய கலைகளைக் குறித்து நாம் அறிந்துக�ொள்ள முடியும் என்கிற நிலை இருக்கிறது. கிடைத்திருக்கும் ச�ொற்ப்ப ஆதாரங்களைக்கொண்டு பார்க்கும்போது மிட்டானிய கலைகள் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசத்தை சிற்ப மற்றும் ஓவியக் கலைகளில் பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது. ஆனால் கலைகளின் பேசுப் ப�ொருள் குறித்த புரிதல்களுக்கு பல ஆதாரங்கள் நமக்கு கிடைக்கவேண்டியிருக்கிறது. இடை அசீரிய காலக்கட்டம் கி.மு. 1365 - 1077 எரிபா அடாட் I மற்றும் அசூர் உபாலிட் I ஆகிய அரசர்களின் ஆட்சியின்போதே அசீரியா மிட்டானிய வல்லாதிக்கத்தை மீறி தனிப் பெறும் சுதந்திர நாடாக நிலைமாற்றம் அடைகிறது. இந்த 58
நவீனா அலெக்சாண்டர்
நிலைமாற்றம் கலைகளிலும் எதிர�ொளித்தது. வேறு வகையில் ச�ொல்வதென்றால் கலைகள் எதிர�ொளிக்கத் த�ொடங்கி சுதந்திர சிந்தனையையே பிற்பாடு அரசியல் துறை முன்னெடுத்து சென்றது என்று ச�ொல்லலாம். க�ொசக் க�ொசவென்று உருவங்களை வைத்து படைப்பு வெளியை நிரப்பும் மிட்டானிய கலைகளின் பாணி சுத்தமாக கைவிடப்பட்டது. சிற்பக் கலை மெசப்பட்டோமிய கலை படைப்பின் கட்டமைப்பில் (கம்போஷிசன்) இயங்கியலை (மூவ்மெண்ட்) அதிகபட்சமாகவும் அழகியல் தன்மையுடனும் வெளிப்படுத்தியவர்கள் அசீரியக் கலைஞர்கள். மெசப்பட்டோமிய மேஜிக்கல் ரியலிச கலைகள் என்றாலே அம�ோரைட் பாபில�ோனிய கலைஞர்கள் நினைவிற்கு வருவதைப் ப�ோல இயங்கியல் கட்டமைப்பின் அடையாளமாக இருந்தவர்கள் அசீரிய கலைஞர்கள். சிற்பங்களில் மனித மிருக உருவங்கள் உறைந்துப�ோய் ஒரு நிலையில் நின்றுக�ொண்டு பார்வையாளர்களை வெறிப்பதை அசீரியக் கலைஞர்கள் விரும்பவில்லை என்றுத் தெரிகிறது. அவர்கள் வடித்த புடைப்பு சிற்பங்கள், முழு உருவ சிற்பங்கள் என்று அனைத்தும் தாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை இந்த உலகம் இருக்கும் அளவிற்கும் த�ொடர்ந்து செய்துக�ொண்டிருக்கும் அமைப்பில் இருக்கும்படியே வடிக்கப்பட்டிருக்கின்றன. உருளை முத்திரை சதுர முத்திரை என்று படைப் பி ற்கா ன ஊடகம் எதுவாக இ ரு ந ்தா லு ம் , எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதில் அகலமான இயற்கை வெ ளி ய ை யு ம் ( ஸ்பே ஸ் ) , இ யங் கி யலை யு ம் உ ரு வ ா க் கு வ தி ல் 59
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
அசீரிய சிற்பக் கலைஞர்களின் கற்பனை வளம் க�ொடிகட்டிப் பறந்திருக்கிறது. படைப்பு ஊடகத்தின் நிறை குறைகள் அவர்களின் கற்பனை வளத்தையும், படைப்பு சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தியதாக தெரியவில்லை. ஓவியக் கலை இந்த காலக்கட்டத்தை சேர்ந்த ஓவியங்கள் துண்டுத் துணுக்குகளாகத்தான் நமக்கு கிடைக்கின்றன. அவைகளை வைத்து ஒருவர் அனுமானம் செய்வதென்றால் ஓவியக் கலையிலும் இயங்கியலுக்கு அதிக முக்கியத்துவத்தை ஓவியக் கலைஞர்கள் க�ொடுத்திருப்பதாக தெரிகிறது. புது அசீரிய காலக்கட்டம் கி.மு. 1076 – 935 இடை அசீரிய காலக்கட்டத்தில் அசீரியா மெசப்பட்டோமிய நிலப் பகுதியில் பேரரசு நிலைக்கு வந்துவிட்டிருந்தாலும் அந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள ஓயாத படையெடுப்புகளில் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டிய நிலை. மனித வளம், இரத்தம் என்று இரண்டையும் சேர்த்து உறிஞ்சும் ப�ோர் நடவடிக்கைகள் நூற்றாண்டுகளுக்கு நீடித்துக்கொண்டிருந்தது. அசீரிய அரசர்கள் அசராமல் தலைமுறை தலைமுறையாக அக்கம் பக்கம் நாடுகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார்கள். ப�ோதாததற்கு நாட�ோடி இனக் குழு மக்களின் ஊடுருவல்கள் வேறு. அதையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த நாட�ோடி இனக் குழுவில் மெசப்பட்டோமிய, அனட்டோலிய (இன்றைய துருக்கி) அரசுகளுக்கு சிம்ம ச�ொப்பனமாக இருந்தது அரமேய இனக் குழு. அசீரிய அரசர்கள் இவர்களின் பரவலையும் தடுக்கவேண்டிய நிலையில் இருந்தார்கள். படையெடுப்பு, ப�ோர்கள், பேரரசு விரிவாக்கம், உலகப் பேரரசு கனவு என்று அசீரிய அரசர்கள் பூட்டன், முப்பாட்டன், பாட்டன், அப்பன், பேரன், க�ொள்ளுப்பேரன் என்று ஓடிக்கொண்டே இருந்தார்கள். இதன் காரணமாக கலைகளை ஆதரித்து வளர்த்தெடுப்பதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமும் ப�ொருளாதாரமும் இல்லாமல் ப�ோயிற்று. ஒருவழியாக இந்த ஓட்டத்திலிருந்து விடுபட்டு அவர்கள் அக்கடா என்று பெரு மூச்சு 60
நவீனா அலெக்சாண்டர்
விட்டது புது அசீரிய காலக்கட்டத்தில்தான். கட்டிடக் கலை அசுர்-நசிர்பல் II, தலைநகரான நிம்ரூதில் கட்டிய அரண்மனை இந்த காலக்கட்டத்து கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டு. அசீரிய அரசர்கள் வென்று அடக்கிய அரமேய அடிமை மக்களைக்கொண்டே அசுர்-நசிர்பல் II இந்த அரண்மனை கட்டிடத்தை மேலும் விரிவுபடுத்தியிருக்கிறான். பின்னர் அந்த மக்களை அவன் விடுதலை செய்துவிட்டது வேறு கதை.
61
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
பின்னால் வர இருக்கும் பிரம்மாண்ட அசீரிய அரண்மனைக் கட்டிடங்களுக்கெல்லாம் முன்னோட்டம் நிம்ரூத் அரண்மனை. அரசு, அரசன் குறித்த க�ோட்பாடு அசீரிய நாகரீகத்தின் உயிர் மூச்சுப் ப�ோன்றது. பல நூற்றாண்டுகள் அசீரிய அரசர்கள் சலைக்காமல் ப�ோர் களங்களில் அவர்களின் ஆயுசுகளை கழித்ததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். அசீரிய நாகரீகத்தின் எழுச்சி முன்பான காலக்கட்டம் வரை மெசப்பட்டோமியாவில் அரசு க�ோட்பாடு பெரிதும் மதத்துடன் கட்டுண்டதாகவே இருந்தது. சுமேரிய, அக்கேடிய, அர�ோமைட் பாபில�ோன் பேரரசுகள் என்று எதுவும் இதில் விதிவிலக்கானது கிடையாது. ஆனால் அசீரிய பேரரசு இதில் முற்றிலும் விதிவிலக்காக இருந்தது. அரசு, அரசன் தீமைகளை எதிர்த்து ப�ோர் புரிபவர்கள், ப�ோர் புரிபவர்களாக இருக்கவேண்டும், எந்த நிலையிலும் தீமைக்கு எதிராக ப�ோர் புரிந்துக�ொண்டே இருக்கவேண்டும் என்பது இடைக்கால மற்றும் புது அசீரிய நாகரீகத்தின் அரசியல் சமூக க�ோட்பாடு. இதுவே முதன்மையாக அவர்களின் கலைகளிலும் பிரதிபலித்தது. இதில் ஒன்று கட்டிடக் கலை. சிற்பக் கலை மெசப்பட்டோமிய நிலப் பகுதி அதுவரை கண்டிராத ஒரு புது வகை சிற்ப வகையை இந்த காலக்கட்ட அசீரிய சிற்பக் கலைஞர்கள் அசீரியாவில் அறிமுகப்படுத்தினார்கள். அது ஆப்லிஸ்க் சிற்பங்கள். மேலும் சிற்பங்கள், அரண்மனை மற்றும் க�ோயில் கட்டிடங்களின் அலங்கார உறுப்புகள் மட்டுமே என்கிற நிலையையும் உடைத்து சிற்பங்கள் அதன் இயல்பில் தனித்துவம் க�ொண்டவைகள் என்பதையும் மெசப்பட்டோமிய நிலப்பகுதிக்கு உணர்த்தியவர்கள் இந்த காலக்கட்ட சிற்பக் கலைஞர்கள். இதற்கு முழு சுதந்திரமும் அசீரிய அரசர்கள் அவர்களுக்கு க�ொடுத்திருக்கிறார்கள். அசீரிய சிற்பக் கலைக்கே உரிய தனித்த அடையாளமாக இருப்பது லாமாசு என்கிற புடைப்பு சிற்பங்கள். இது மேஜிக்கல் ரியலிச வகை புடைப்பு சிற்பம். இந்த புடைப்பு சிற்பத்தின் அடிப்படை மந்திர காத்தல் க�ோட்பாடு. எருது அல்லது சிங்கத்தின் உடலில் மனிதனின் தலையும், ஆந்தையின் 62
நவீனா அலெக்சாண்டர்
விரிந்த சிறகுகளும் க�ொண்ட உருவம் லாமாசு. லாமாசு புடைப்பு சிற்பங்கள் அசீரிய அரண்மனை மற்றும் க�ோயில் கட்டிடங்களின் நுழைவாயிலில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டிருக்கும். அரண்மனையில் அல்லது க�ோயிலுக்கு வருபவர்களை இந்த வின�ோத உருவம் தீய சக்திகளிடமிருந்து காக்கும் என்பது அசீரியர்களின் நம்பிக்கை. மேலும் தீய சக்திகளை உள்ளே நுழையவிடாது என்பதும். லாமாசு புடைப்பு சிற்பங்கள் மற்றொரு அ ம ்ச த்தை யு ம் கட்டிடக் கலையில் அறிமுகப்படுத்தியது. இதை பிற்காலத்தில் கிரேக்க கட்டிடக் க லை ஞ ர ்க ள் அ ப ்ப டி யே பயன ்ப டு த் தி அதன் வழி நவீன மே ற் கு ல கி ன் கட்டிடக் கலையிலும் இது அங்கமாக நீடித்து வருகிறது. அது கட்டிட சிற்பம் ( ஆ ர் கி டெக் சு றல் ஸ்கல்ப்சர்). கட்டிடத்தின் கட்டுமான கற்கள் புடைப்பு சிற்பங்களாக இருப்பது கட்டிட சிற்பம். இதை மீச�ோ அமெரிக்க கட்டிடக் கலையிலும் காண முடியும். ஹிட்டைய்ட் கட்டிடக் கலையின் அங்கமாகவும் இது இருந்திருக்கிறது. அசீரியாவில் கற்கள் கிடைப்பது கடினம் என்பதால் கட்டிட சிற்பங்களுக்கு அசீரிய கலைஞர்கள் களிமண்ணை பயன்படுத்திக்கொண்டார்கள். களிமண்ணை பெரும் சதுர பாறை கல்போல செய்துக�ொண்டு பிறகு அதை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தக் காலக்கட்ட அசீரிய புடைப்பு சிற்பங்களின் புதையலாக இருப்பது நிம்ரூத் அரண்மனை. அசுர்-நசிர்பல் II நிம்ரூத் 63
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
அரண்மனையை வளைத்து வளைத்து கலைக் கூடமாகவே மாற்றிவிட்டிருக்கிறான். அரண்மனைக்குள் எங்கு திரும்பினாலும் அங்கு அசீரிய புடைப்பு சிற்பங்கள�ோ அல்லது ஓவியங்கள�ோ நம்மை அசத்தும்.
இதில் குறிப்பிட வேண்டிய புடைப்பு சிற்பம் (புது அசீரிய காலக்கட்ட கலைகளுக்கான கருப்பொருளுக்கு உதாரணமாக இருக்கும் புடைப்பு சிற்பம்) அசுர்-நசிர்பல் II தெய்வீக மரத்தை 64
நவீனா அலெக்சாண்டர்
பணிவுடன் பராமரிக்கும் காட்சியை விளக்கும் சிற்பம். (கீழே இருக்கும் புகைப்படம்).
இந்த புடைப்பு சிற்பத்தில் தெய்வீக மரமானது அப்ஸ்டிராக்ட் சிம்பாலிச கருத்தை வெளிப்படுத்தும் கருவியாக இருக்கிறது. சுமேரிய நாகரீகம் த�ொடங்கி மெசப்பட்டோமியாவில் தெய்வீக மரம் பெருவாழ்வு (இம்மார்டல்) மற்றும் மரணத்தை குறிக்க கூடிய ஒரு குறியாக இருந்து வருகிறது. இந்த மரத்தின் வேர்கள் மரணத்தையும் இதன் வான் ந�ோக்கிய கிளைகள் பெருவாழ்வையும்
65
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
சிம்பாலிசமாக உணர்த்தக் கூடியவைகள். அதை அசீரிய சிற்பக் கலைஞன் இங்கே சித்தரித்துக்காட்டியிருக்கிறான்.
மேலும் அசுர்-நசிர்பல் II-வும் மேஜிகல் ரியலிச அமைப்பில் இங்கே சித்தரிக்கப்பட்டு அவனுக்கும் தெய்வீக தன்மை க�ொடுக்கப்பட்டிருக்கிறது. உடற் கூற்றியலைப் ப�ொறுத்தவரையில் த�ோள்களும், கைகளும் கால்களும் சிறப்பாக தசை அமைப்புகளுடன் செதுக்கப்பட்டிருக்கிறது. சிமிட்டிரிக்கல் பெலன்சை சிற்பி பயன்படுத்தியிருக்கிறார். ஒட்டும�ொத்தமாக இந்த புடைப்பு சிற்பம் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிச சிந்தனையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்த காலக்கட்டத்தின் த�ொடக்க ஆண்டுகளில் இதுவே புது அசீரிய காலக்கட்ட கலைகளின் தன்மை. கலைஞர்கள் கலை பாணிக்கு முக்கியத்துவம் க�ொடுக்காமல் அரசு மற்றும் மதம் சார்ந்த சிந்தனைகளை படக் குறியீடுகளின் (அப்ஸ்டிராக்ட்) வழியே சித்தரிக்கவே முனைந்திருக்கிறார்கள். ஆனால் அசீரிய நாகரீகத்தின் இறுதி ஆண்டுகளில் - குறிப்பாக அரசன் சென்னாசெரிப் மற்றும் அசுர்பனிப்பல் ஆட்சிக் காலங்களில் – அப்ஸ்டிராக்ட் ரெப்ரசன்டெஷனை கைவிட்டு நேச்சுரலிசத்தை ந�ோக்கி நகர்ந்துவிட்டார்கள் அசீரிய கலைஞர்கள். இது உடனடியாக 66
நவீனா அலெக்சாண்டர்
நடந்துவிடவில்லை. அப்ஸ்டிராக்ட் ரெப்ரசன்டெஷனிலிருந்து, ரிதமிக் மூவ்மெண்டுக்கு மாறி அதிலிருந்து நேச்சுரலிசத்திற்கு வந்திருக்கிறார்கள். மெசப்பட்டோமிய கலைகள் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுமேரியாவில் சிம்பாலிசத்தில் த�ொடங்கி அசீரிய நாகரீகத்தின் வீழ்ச்சியில் நேச்சுரலிசத்தில் முடிவடைகிறது. இதற்கு பின்பு மெசப்பட்டோமியா பெர்சியர்கள் மற்றும் மாசிட�ோனிய, கிரேக்கர்களின் கைகளுக்குள் சென்றுவிட்டது.
67
சிந்து நாகரீக கலை வரலாறு
68
சிந்து நாகரீக கலை வரலாறு
இ
மய மலைத் த�ொடர்களிலிருந்து பெருக்கெடுத்து வரும் சிந்து நதியின் கரைகளில் த�ோன்றியது சிந்துவெளி நாகரீகம். கி.மு. ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பிலிருந்தே சிந்துப் பகுதிகளில் மனித குடியிருப்புக்களுக்கான த�ொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன. இவைகள் கிராம குடியிருப்புகள். விவசாய நாகரீகத்தின் த�ொடக்க நிலை கிராம சமூக கட்டுமானத்தின் அடையாளங்களாக இவைகள் இருக்கின்றன. இதை த�ொடர்ந்து கி.மு. ஐந்தாயிரம் த�ொடங்கி நகர நாகரீகத்திற்கான அடையாளர்கள் த�ோன்றுகின்றன.
சிந்துவின் நகர நாகரீகம் ஒரு குடையின் கீழ் க�ொண்டுவரப்பட்ட பேரரசு கட்டுமானத்தை ந�ோக்கி நகர்ந்து சென்றதா அல்லது பல அரசுகளைக்கொண்ட நகர நாகரீகமாகவே இறுதி வரை நீடித்திருந்ததா என்பதை குறித்து தெளிவாக அறிந்துக�ொள்ள 69
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
முடியவில்லை. சிந்து நாகரீக ம�ொழியை படித்து புரிந்துக�ொள்ள முடியாததால் இந்த நாகரீகத்தின் அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளை மீட்டுருவாக்கம் செய்வதில் பிரச்சனைகளும் சிக்கல்களும் த�ொடர்கின்றன. சிந்து நாகரீகத்திற்கும் எகிப்து மற்றும் மெசப்பட்டோமிய நாகரீகங்களுக்கும் கலை, கலாச்சார, வணிகத் த�ொடர்புகள் பல ஆயிரம் ஆண்டுகளாக த�ொடர்ந்து நீடித்து வந்திருக்கிறது. இதற்கான வரலாற்று ஆதாரங்கள் மூன்று நாகரீகங்களிலிருந்தும் கிடைக்கின்றன. அன்றைய நகர நாகரீக உலகின் கலைக் கலாச்சார நடவடிக்கைகளில் வலிமையான தாக்கங்களை இந்த மூன்று நாகரீகங்களும் செலுத்தியிருக்கின்றன. அதன் வழி இன்றைய நவீன மேற்கத்திய கலை செயல்பாடுகளின் ஆணி வேராக இருப்பவைகள் இந்த மூன்று நாகரீகங்களே. இந்த மூன்று நாகரீகங்களில் எது முதன் முதலில் நகர நாகரீகத்தை த�ொடங்கி அதன் வழி வரலாற்று உலக கலை நடவடிக்கைகளை முதலில் த�ொடங்கியது என்பதே இன்றைய ஆராய்ச்சிகளின் ஆயிரம் ப�ொற்காசுகள் தரும் கேள்விக்கான பதில் தேடலாக இருக்கிறது. சிந்து நாகரீக கலை வரலாறு மெசப்பட்டோமிய மற்றும் எகிப்திய நாகரீகங்களின் குனிபார்ம் எழுத்து முறையும் ஹைகில�ோகிரிப் எழுத்து முறையும் இன்றைய ஆராய்ச்சியாளர்களால் படிக்கப்பட்டு இந்த இரண்டு நாகரீகங்களின் ஏழாயிரம் ஆண்டு கால வரலாறு வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் இந்த அதிர்ஷ்டம் இன்று வரை சிந்து நாகரீகத்திற்கு கிடைக்கவில்லை. சிந்து நாகரீகத்தின் எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்களால் படிக்க முடியவில்லை. இதன் காரணமாக சிந்து நாகரீகத்தின் ஏழாயிரம் ஆண்டுகால வரலாறானது இன்னமும் மறைப் ப�ொருளாகவே இருந்து வருகிறது. இந்த பின்னணியிலேயே சிந்து நாகரீகத்தின் கலைகளும் அணுகப்படவேண்டியிருக்கிறது. சிந்து நாகரீகத்தின் சமகால நாகரீகங்களான மெசப்பட்டோமியாவும் எகிப்தும் தங்கள் கலைகளின் பேசுப் ப�ொருள்களாக அரசன் மற்றும் மதக் க�ோட்பாடுகளை க�ொண்டிருக்க சிந்து நாகரீக கலைகள் அதிலிருந்து 70
நவீனா அலெக்சாண்டர்
முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. உதாரணமாக மெசப்பட்டோமிய எகிப்திய கட்டிடக் கலைகள் அரசனின் அரண்மனைகள் மற்றும் க�ோயில்களை அடிப்படையாக க�ொண்டிருக்க சிந்து நாகரீக கட்டிடக் கலை சமூகம் சார்ந்த ப�ொதுவான கட்டிடங்களையே – நகரின் மையத்திலிருக்கும் தானிய சேமிப்பு கிடங்கு, ப�ொது குளங்கள், சாமானிய மனிதர்களின் வீடுகள் என்று - சார்ந்திருக்கிறது. சிந்து நாகரீக அகழ்வாராய்ச்சிகள் ஆமை வேகத்தில் ஊர்ந்துக�ொண்டிருப்பதால் அதன் கலை வரலாற்றை அறிமுக அளவில் பார்ப்பதுக் கூட கடினமான அதே சமயத்தில் அறையும் குறையுமான காரியமாக முடிந்துவிடலாம். கி.மு. 6000-த்திலிருந்து த�ொடங்கும் சிந்து நாகரீகம் அதிகம் தென்னிந்திய மக்களுடன் த�ொடர்புடையது என்றாலும் சிந்துக் குறித்த பதிவுகள் சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் கிடைக்கப்பெறவில்லை. இருந்தும் சிந்து நாகரீக ம�ொழியை படித்துப் புரிந்துக�ொள்ள தமிழ் ம�ொழி ஆராய்ச்சி முக்கியம் என்பது இப்போதைய நிலை. சிந்த நாகரீக காலக்கட்டத்தை இரண்டு நிலைகளில் பிரிக்கிறார்கள். ஒன்று பழைய காலக்கட்டம் (கி.மு. 6000 – 2500) அடுத்தது முதிர்ந்த காலக்கட்டம் (கி.மு. 2400 – 1500). இதுவரையிலான அகழ்வாராய்ச்சிகள் இரண்டு காலக்கட்டத்தை சேர்ந்த கலைப் ப�ொருட்களையும் ஒரே அடுக்கில் (மண் அடுக்கு) வெளிக்கொண்டு வந்திருப்பதால் சிந்து நாகரீக கலைகளின் பாணியையும் வளர்ச்சியையும் அடையாளப்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது. சிந்து நாகரீக எழுத்துகளும் இதில் நமக்கு உதவிக்கு வராத காரணத்தால் சிந்து நாகரீக வரலாறும் கலைகளும் இன்னமும் இருளிலேயே மூழ்கியிருக்கிறது. சிற்பக் கலை சிந்து நாகரீக முத்திரை சிற்பங்கள் மிகவும் புகழ் பெற்றவை. த�ொல்பழங்கால வரலாற்று சின்னமாக. கலை வரலாற்று ந�ோக்கில் சிந்து முத்திரை சிற்பங்கள் எதை உணர்த்துகின்றன என்பது இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே நின்றுக�ொண்டிருக்கிறது. சிந்து நாகரீக கடவுள் க�ோட்பாடுகள் குறித்து தெளிவாக தெரியாததால் முத்திரை சிற்பங்கள் எத்தகைய சமூக சிந்தனையை 71
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
வெளிப்படுத்துகின்றன என்பது புரிபடாத நிலை. ப�ொதுவான கலைப் பாணியின் அடிப்படையில் பார்ப்பது என்றால் முத்திரை சிற்பங்கள் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிச கருத்துகளையே பிரதிபலிக்கின்றன என்கிற முடிவிற்கு வர முடியும். முத்திரை சிற்பங்களில் மிருகங்களே பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒரு சில முத்திரைகள் மட்டும் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு மனித உருவத்தை சித்தரிக்கின்றன. இந்த உருவம் தலையில் எருதின் க�ொம்புகளால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை அணிந்திருக்கிறது. த�ொல் தமிழர்களின் கடவுளான உருத்திரனை (சிவன்) இந்த உருவம் சித்தரிக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசமும், ரியலிசமும் கலந்த பாணியில் இந்த முத்திரையில் உருத்திரன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். அவனைச் சுற்றி மான், எருமை, புலி, யானை மற்றும் காண்டாமிருகமும் இதே வகையிலேயே காட்டப்பட்டிருக்கிறது. மேல் பகுதியில் சிந்து எழுத்துகள் ஆறு ப�ொறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த எழுத்துகள் 72
நவீனா அலெக்சாண்டர்
எதை குறிக்கின்றன என்பது புரிப்படாத காரணத்தால் இந்த சிற்பத்தில் இருக்கும் உருவங்கள் எதை விளக்குகின்றன என்பதை அடையாளம் காண முடியவில்லை. முழு உருவ சி ற ்ப ங ்களை எடுத்துக்கொண்டால் வெ ண ்க ல த் தி ல் வ ா ர ்க்க ப ்ப ட்ட சிற்பங்கள் சிந்து ந ா க ரீ க த் தி ன் த னி த்தன்மைய ை வெளிப்படுத்துவதாக இ ரு க் கி ன்ற ன . வெ ண ்க ல ந ட ன ம ங ்கை யி ன் சிற்பம் இதற்கு எடுத்துக்காட்டு. இந்த சிற்பம் முதிர்ந்த காலக்கட்டத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.
73
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
சிற்பக் கலையில் கான்டிரப்போஸ்டோ என்று அழைக்கப்படும் உத்தியை வெளிப்படுத்தும் உலகின் முதல் சிற்பம் இது என்று ச�ொல்வதில் தவறு இருக்க வாய்ப்பில்லை. (கான்டிரப்போஸ்டோ என்பது ஒரு முழு உருவ சிற்பம் நிற்கும் நிலையை குறிப்பது. சிலையானது ஒரு காலில் உடலின் முழு எடையையும் தாங்கியபடி நின்றுக�ொண்டு மற்றொரு காலை தளர்ந்த நிலையில் லேசாக வைத்துக்கொள்வதை கான்டிரப்போஸ்டோ என்பார்கள். இந்த நிலையில் நிற்கும்போது உடல் எடையை தாங்கும் கால் பகுதி உடல் இடுப்பிற்கு கீழே விறைத்து மேலெழுந்தும் மேல் பகுதி சுருங்கி கீழிறங்கியும் இருக்கும். தளர்ந்திருக்கும் கால் பகுதி உடல்கள் அங்கங்கள் முழுவதும் தளர்ந்து நீண்டு மேலெழுந்து இருக்கும். ஆர்காயிக் கால கிரேக்க சிற்பிகளே கான்டிரப்போஸ்டோ உத்தியை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்கள் என்று ச�ொல்பவர்களும் உண்டு.) இந்த நிலையிலிருக்கும் சிற்பங்கள் ரியலிசத் தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
சிந்து நாகரீக நடனமங்கை சிற்பத்திற்கு ஒருவித ரியலிசத் தன்மையை உண்டாக்குவது இந்த கான்டிரப்போஸ்டோ உத்தியே. சிலை ஏசிமெட்டிரிக் பேலன்சில் வடிக்கப்பட்டிருக்கிறது. அதேப் ப�ோல இந்த நடனமங்கை தலையை க�ொஞ்சமாக உயர்த்தி வலது புறமாக சற்றே சாய்த்திருக்கிறாள். இதுவும் இந்த சிற்பத்தின் தனிச் 74
நவீனா அலெக்சாண்டர்
சிறப்புகளில் ஒன்று. சிற்பங்களின் ப�ோசிங் மற்றும் கம்போசிஷனில் சிந்து நாகரீக சிற்ப கலைஞர்கள் பல சாதனை மற்றும் ச�ோதனை முயற்ச்சிகளை செய்துபார்த்துவிட்டார்கள் என்பதற்கு நடனமங்கை சிற்பம் அருமையான உதாரணம். சிந்து நாகரீக வீழ்ச்சிக்குப் பிறகு சுமார் ஆயிரத்து ஐந்நூறு வருடங்கள் கழித்து வந்த கிரேக்க சிற்பக் கலைஞர்களே சிற்பக் கலையில் இத்தகைய ப�ோசிங் மற்றும் கம்போசிஷன் உத்திகளை அறிமுகப்படுத்தியதாக ச�ொல்லப்பட்டு வருகிறது. சிந்து நாகரீகம் குறித்த அகழ்வாராய்ச்சிகள் தூங்கி வழிவதன் காரணமாக சிந்து நாகரீக சிற்பக் கலைஞர்களின் சிறப்புகளையும் சாதனைகளையும் உலக அரங்கில் வலிமையாக எடுத்து வைப்பதற்கு வழியில்லாமல் இருக்கிறது. இந்த நடனமங்கை இடது கை முழுவதும் அணிந்திருக்கும் வளையல்களும், அவளுடைய கூந்தல் அலங்காரமும் பார்ப்பவர்களின் கண்களை முதலில் கவரக் கூடியவைகள். இந்த நடனமங்கையின் முக த�ோற்றம் தென்னிந்திய பெண்களின் முகத்தை ஒத்திருப்பதாக மார்ட்டிமர் வீலர் கருதுகிறார். கல்லில் செதுக்கப்பட்ட முழு உருவ சிலை ஒன்றும் கிடைத்திருக்கிறது. ஆனால் முழுமையான த�ோற்றத்துடன் அல்ல. டார்சோ என்று ச�ொல்லப்படும் தலை, கை, கால் அற்ற உடல் பகுதி மட்டுமே கிடைத்திருக்கிறது. இது ஆண் நடனக் கலைஞனை சித்தரிக்கும் சிலையாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். சிந்து சிற்பக் கலைஞர்கள் தாங்கள் வடித்த சிற்பங்களில் ரியலிச மற்றும் நேச்சுரலிச பாணிகளை சர்வ சாதாரணமாக கைய ா ண் டி ரு க் கி ற ா ர ்க ள் என்பதற்கான அச்சாரம் இந்த நடன கலைஞனின் சிற்பம். இது சிமெட்டிரிக்கல் பேலன்சில் வ டி க ்க ப ்ப ட் டி ரு க் கி ற து . 75
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
மேலும் உடல் கூறுகளும் (அனாட்டமி) அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கலைஞன் தசைகள் முறுக்கேறிய உடல் அமைப்பை க�ொண்டிருக்கவில்லை. அதே சமயத்தில் சதைபிடித்த வலிமையான இளந்தொப்பையுடன் கூடிய உடற்கட்டுடன் காட்டப்பட்டிருக்கிறார். எகிப்திய மெசப்பட்டோமிய சிற்பிகள் மனித உடற் கூற்றை மெலிதாகவும் முறுக்கேறிய தசைகளுடன் காட்டுவதில் அதிக கவனம் செலுத்த சிந்து சிற்பிகள் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு எதார்த்த மனித உடற் கூற்றை சித்தரிக்கிறார்கள். எகிப்திய மெசப்பட்டோமிய சிற்பிகள் அழியும் உடலுக்கு வீர காவியத் தன்மையை தர சிந்து சிற்பிகள் அழியும் உடலை அதன் எதார்த்தத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சில எகிப்திய பார�ோக்களின் சிற்பங்களும் இதே எதார்த்த தன்மையுடன் வடிக்கப்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
76
எகிப்திய கலை வரலாறு
77
எகிப்திய கலை வரலாறு
நை
ல் நதியின் இரு கரை நெடுகத் த�ோன்றிய நாகரீகம் எகிப்திய நாகரீகம். மெசப்பட்டோமிய நாகரீகத்தைப் ப�ோலவே இதுவும் பல நகரங்கள் த�ோற்றுவித்த (சிட்டி ஸ்டேட்ஸ்) பல அரசுகளை க�ொண்ட நிலமாகவே இருந்தது. இந்த அரசுகளுக்கு இடையிலான - ஒட்டு ம�ொத்த எகிப்திய நிலப்பகுதிகளை ஒரு அரசின் கீழ் க�ொண்டுவரும் - அதிகாரப் ப�ோட்டிகளும் ப�ோர்களுமே த�ொடக்க கால எகிப்தின் வரலாறு. இதுக்
78
நவீனா அலெக்சாண்டர்
குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள எனது ‘எகிப்தின் மர்மங்கள்’ புத்தகத்தை படிக்கவும்.
நகரங்களுக்கு இடையிலான இந்த அதிகாரப் ப�ோர்களில் வெற்றிப் பெற்று ஒட்டு ம�ொத்த எகிப்தின் முதல் பார�ோவாக தன்னை அறிவித்துக்கொண்டவன் நார்மர். இவன் த�ொடங்கி கிளிய�ோப்பாட்டிரா முடிய நூற்றுக் கணக்கான பார�ோக்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் த�ொடர்ச்சியாக எகிப்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். கிளிய�ோப்பாட்டிராவின் வீழ்ச்சியுடன் எகிப்திய நாகரீகமும் வீழ்ச்சிக் கண்டுவிட்டது. இது நடந்தது கிருத்தவ சகாப்தம் த�ொடங்குவதற்கு ஒரு சில பத்தாண்டுகளுக்கு முன்பு. எகிப்தின் மூவாயிரம் வருடத்திய வரலாறு பலப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. த�ொடக்க வம்சாவளி காலக்கட்டம் (கி. மு. 2950 –2575), பழைய வம்சாவளி காலக்கட்டம் (கி.மு. 2575 2125), முதல் இடைக் காலக்கட்டம் (கி.மு. 2125 – 2010), இடை வம்சாவளி காலக்கட்டம் (கி.மு. 2010 – 1630), இரண்டாவது இடைக் காலக்கட்டம் (கி.மு. 1630 – 1539), புதிய வம்சாவளி காலக்கட்டம் (கி. மு. 1539 – 1069), மூன்றாம் இடைக் காலக்கட்டம் (கி.மு. 1069 – 664), இறுதிக் காலக்கட்டம் (கி.மு. 664 – 332). இறுதிக் காலக்கட்டத்தின் முடிவில் எகிப்து அலெக்சாண்டரின் கைகளுக்கு சென்றுவிட்டது. இதன் பிறகு எகிப்தில் மாசிட�ோனிய தாலமிகள் வம்சம் த�ொடங்குகிறது. தாலமிகள் தங்களை எகிப்தின் பார�ோக்களாக அறிவித்துக்கொண்டார்கள். தாலமிகளின் கடைசி பார�ோவான கிளிய�ோப்பாட்டிராவின் (கி.மு. 51- 30) தற்கொலையுடன் எகிப்திய நாகரீகம் முடிவிற்கு வந்துவிட்டது. எகிப்திய கலை க�ோட்பாடு த�ொல் பழங்கால எகிப்திய எழுத்துகளை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் புரிந்துக�ொண்டுவிட்டதால் மூவாயிரம் ஆண்டுகால எகிப்தின் கலை வளர்ச்சிகளை க�ோர்வையாக நம்மால் கட்டமைக்க முடிகிறது. அகழ்வாராய்ச்சி முடிவுகளும் அதன் பங்கிற்கு ப�ோதுமான தகவல்களை தருவதால் எகிப்திய கலைகளை 79
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
அதன் வேரிலிருந்து புரிந்துக�ொள்வதற்கு வசதியாக இருக்கிறது. எகிப்தி நாகரீகத்தின் கலைகள் கற்காலம் முதற்கொண்டேத் த�ொடங்கிவிடுகிறது. கற்கால மனித சமூகத்தின் கலைகளை நாம் தனியாக முன்பேப் பார்த்துவிட்டதால் எகிப்தின் பார�ோனிக் காலக்கட்ட கலைகளை பின் த�ொடரலாம் என்று நினைக்கிறேன். கட்டிடக் கலை, ஓவியக் கலை, சிற்பக் கலை என்று மூன்றிலும் பிரம்மாண்டத்தை காட்டியவர்கள் பார�ோனிக் கால எகிப்திய சிற்பிகள். உலக அதிசயங்களில் இன்றைக்கும் ஒன்றாக இருக்கும் கீசா பிரமிட் பார�ோனிக் கட்டிடக் கலை பிரம்மாண்டத்திற்கு வாயடைத்துப்போக வைக்கும் அளவிற்கான எடுத்துக்காட்டு. எகிப்திய நாகரீகத்தின் கலைகளுக்குப் பின்னால் இருக்கும் அடிப்படை சித்தாந்தத்தை புரிந்துக�ொள்ள நமக்குத் தெரியவேண்டியது மரணத்தைக் குறித்து. மரணத்தைக் குறித்தேதான் ஆனால் மேல�ோட்டமாக அல்ல. எகிப்தியக் கலைகளை ப�ோகிற ப�ோக்கில் பார்ப்பவர்களுக்கு, எகிப்திய கலைகள் மரணத்தை சுற்றியேப் பின்னப்பட்டிருப்பதைப் ப�ோலிருக்கும். உண்மையில் மரணத்தை கடந்த பெரு வாழ்வையே அவைகள் கருப் ப�ொருளாக க�ொண்டவைகள். மரணத்தை தவிர்த்த என்றென்றைக்குமான பெருவாழ்விற்கு த�ொல் பழங்கால எகிப்தியர்கள் பேராசைப்படவில்லை. மரணத்தை ஏற்றுக்கொண்டு அதை கடந்துவிட்டால் பிறகு பெருவாழ்வுதான்(இம்மார்டல்) என்பது அவர்களின் நம்பிக்கை. இது மத நம்பிக்கை அல்ல பூமியில் மனித வாழ்வைக் குறித்த அவர்களின் சித்தாந்தம். மரணத்தை ஏற்றுக்கொண்டு அதை கடந்துப�ோக அவர்கள் கையில் எடுத்துக்கொண்டது கலைகளை. கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை ஆகியவைகளின் துணைக�ொண்டு அவர்கள் மரணத்தை ஏமாற்ற நினைத்தார்கள். மரணத்தின் ப�ோது மனித உடலை விட்டுப் பிரிந்துப�ோகும் உயிரை (எகிப்தியர்கள் உயிரை ‘கா’ என்று அழைத்தார்கள்) அப்படியே அண்ட வெளிக்கு ப�ோகவிட்டுவிடாமல் மீண்டும் பழைய உடலுக்கு க�ொண்டுவந்து மரணத்தை வென்றுவிடலாம் என்பதும் இதன் மூலம் மரணத்தை கடந்துவிடலாம் என்பதும் அவர்களின் 80
நவீனா அலெக்சாண்டர்
எண்ணம். இதன் காரணமாகவே அவர்கள் இறந்தப் பிறகு உடலை மம்மியாக்கினார்கள். இறந்தவனின் உயிரைப் பிடித்து வைக்க அவனைப் ப�ோன்ற உருவம் க�ொண்ட சிற்பங்களையும், இறந்த உடலை பாதுகாத்து வைக்க பிரமிட் ப�ோன்ற கட்டிடங்களையும், இறந்தவனின் உயிர் தங்கியிருக்கும் சிலை தினப்படி மூன்று வேலையும் உணவு உண்டு உயிர் வாழ தேவைப்படும் உணவுப் ப�ொருட்களையும், உணவு சமைக்கும் ப�ொருட்களையும், உணவு உற்பத்தி செய்யும் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளையும் ஓவியங்களாக வரைந்துவைத்தார்கள். தீட்டப்பட்டிருக்கும் உணவுப் ப�ொருள் ஓவியங்களில் இருந்து இறந்தவனின் உயிர் தங்கியிருக்கும் சிலை உணவை எடுத்துக்கொள்ளும் என்றும் பலமாக நம்பினார்கள். இந்த நம்பிக்கையே எகிப்திய கலைகளின் கருப்பொருள். இந்த கருப்பொருளே எகிப்திய கலைகளின் முட்டுக்கட்டையும் கூட. மூவாயிரம் வருடத்திய எகிப்திய கலைகள் பல ச�ோதனை முயற்ச்சிகளை மேற்கொள்ள முடியாததற்கு காரணம் எகிப்தியர்களின் இந்த நம்பிக்கை. எகிப்தில் கலைகள் பயன்பாட்டு ப�ொருள் ப�ோலப் பார்க்கப்பட்டதால், கட்டுப்படுத்தப்பட்ட கற்பனை வளத்திற்கே அங்கே இடமிருந்தது. கட்டுப்பாடுகளற்ற சுதந்திர படைப்புக்கான கலம் அங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. மேலும் கலைகள் பார�ோக்கள் மற்றும் அதிகார வர்கத்தின் தயவில் இருந்ததால் எகிப்திய கலைஞர்களால் அவர்கள் விருப்பத்திற்கு செயல்படுவது என்பது முடியாத காரியமாக இருந்தது. எகிப்திய கலைகளைப் ப�ொறுத்தவரையில் மற்றொரு வின�ோத அம்சம் இருக்கிறது. சிற்ப, ஓவியக் கலைகள் ப�ொது மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக படைக்கப்பட்டவைகள் கிடையாது. பிரமிடுகளிலும், கல்லறை க�ோயில்களிலும், தி வேலி ஆப் தி கிங்ஸ் மற்றும் தி வேலி ஆப் தி குயின்சிலும் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்களும், முழு உருவ சிற்பங்களும், சுவர் ஓவியங்களும் ப�ொது மக்களின் பார்வைகளுக்குப் படாமல் இழுத்துப் பூட்டி வைக்கப்பட்டவைகள். மெசப்பட்டோமியாவைப் ப�ோலவே மூன்று கலைகளும் க�ோயில்களுடனும், பார�ோக்களின் 81
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
பிரமிடுகள் மற்றும் கல்லறைக் க�ோயில்களுடனுமே த�ொடர்புக்கொண்டவைகளாக இருந்தன. சரி அதுப�ோகட்டும் எழுந்து வாருங்கள் ஒரு நீண்ட கலைப் பயணத்திற்கு நாம் ப�ோக வேண்டியிருக்கிறது. கட்டிடக் கலை மேற்குலகின் கட்டிக் கலை குறித்த ஆய்வுகளில் ஒருவர் ஈடுபட விரும்பி அதற்கான மூலங்களை தேடத் த�ொடங்கினார் என்றால் அவர் நிச்சயம் ப�ோய் சேரும் இடம் எகிப்தாகத்தான் இருக்கும். வெள்ளையர்களின் கட்டிடக் கலையைக் குறித்து தெரிந்துக்கொள்ள அவர் ஏன் எகிப்திற்கு பயணம் ப�ோக வேண்டும் என்றால் எகிப்திய நாகரீக கட்டிடக் கலையின் நீட்சிதான் மேற்கின் கட்டிடக் கலை. அந்த நீட்சி எங்கிருந்து பெறப்பட்டு வளர்தெடுக்கப்பட்டது என்றால் கிரேக்கத்தின் வழி. கிரேக்க கட்டிட, ஓவிய மற்றும் சிற்பக் கலை வரலாறு குறித்து கிரேக்க கலை வரலாற்றில் விரிவாக பார்க்க இருப்பதால் அதுக் குறித்த விவாதத்தை இங்கே த�ொடங்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒன்றை மாத்திரம் நாம் இப்போதே நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். அது த�ொடக்கம் முதலே கிரேக்க நாகரீக கட்டிடக் கலை எகிப்திய கட்டிடக் கலையின் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகி வளர்ந்த ஒன்று என்பதை. ஆக இன்றைக்கு உலக பெரும் சக்தியாக (அப்படி நினைத்துக்கொள்ளும்) இருக்கும் அமெரிக்காவின் உயர் அதிகார பீட கட்டிடமான வெள்ளை மாளிகையும் கூட எகிப்து நாகரீக கட்டிடக் கலையின் அடிப்படை கூறுகளைக் க�ொண்டதுதான். சுமார் மூவாயிரம் வருட பழமை மிக்க எகிப்திய நாகரீகத்துடன் தமிழர்களுக்கும் மிக நெருங்கிய த�ொடர்பு உண்டு என்று நாம் ச�ொன்னால் “ஐய்ய இது தமிழ் பைத்தியம்போல”, “டம்ளர் தேசியவாதி” என்பது ப�ோன்ற உயரிய பட்டங்களை வழங்க ஒரு கூட்டம் தயாராகத்தான் இருக்கும். இருந்துவிட்டு ப�ோகட்டும். இந்த உயரிய பட்டங்களை பெற்றுக்கொள்ள கூடாது என்கிற பீதியில் எழுத்து இலக்கியம் என்று ச�ொல்லிக்கொண்டு கதை, கவிதைகளில் பெண்ணின் உடலை கூறுப�ோட்டு, த�ோரணமாக த�ொங்கவிட்டு காம கறி வியாபாரம் 82
நவீனா அலெக்சாண்டர்
செய்யும் கூட்டத்துடன் சேர்ந்துக் க�ொள்வதை காட்டிலும் இப்படியான உயரிய பட்டங்களுடன் திரிவது சிறப்பே. தேவையான இடங்களில் உண்மையை உரக்க எடுத்து ச�ொல்லும்போது அதற்கான எதிர் வினையாக இப்படியான பட்டங்கள் கிடைத்துத்தானே ஆகவேண்டும். விசயத்திற்கு திரும்புவ�ோம். எகிப்திய நாகரீகத்தின் த�ொடக்கம் குறித்தும், அந்த நாகரீகத்தின் கடவுளர்கள் மற்றும் கடவுள் க�ோட்பாடுகள் குறித்தும் எனது “எகிப்தின் மர்மங்கள்” புத்தகத்தில் பேசிவிட்டபடியால் அது குறித்து இங்கே மீண்டும் த�ொடராமல் நேரடியாக எகிப்திய நாகரீகத்தின் கலை வரலாற்றிற்குள் சென்றுவிடலாம். எகிப்திய கடவுளர்களுக்கும், இறந்துபட்டும் மம்மி உருவில் சுற்றித் திரிந்துக�ொண்டிருக்கும் எகிப்திய பார�ோக்களுக்கும் என்று கட்டப்பட்ட க�ோயில்களும், கல்லறைகளும் (பிரமிட் உட்பட) எகிப்திய நாகரீகத்தின் கட்டிட, ஓவிய மற்றும் சிற்பக் கலைகளுக்கான ஊற்றுக் கண்ணாக இருந்திருக்கின்றன. எகிப்து நாகரீகத்தின் கட்டிடக் கலை என்பது நான்கு பிரதான பிரிவுகளை உள்ளடக்கியது. அவை, க�ோயில் கட்டிடக் கலை (Temple Architecture) கல்லறை க�ோயில் கட்டிடக் கலை (Mortuary Temple Architecture) பிரமிட் கட்டிடக் கலை (Pyramid Architecture) குடைவரை கட்டிடக் கலை (Rock Cut Tomb Architecture) முற்கால (எகிப்தை ப�ொறுத்த வரையில் முற்காலம் என்றால் அது கி.மு. 5000 வருடங்களுக்கு முன்பு என்றுப் ப�ொருள். அதாவது இன்றையிலிருந்து ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பு.) எகிப்திய குடியிருப்புகள் நைல் நதியின் கிழக்கு கரையில் (மேற்கு கரை அரசர்களின் நித்திரை நிலம் என்பதால் அங்கே ப�ொதுவாக குடியிருப்புகள் இருக்காது) குழைந்து கிடந்த சேற்றைக்கொண்டும், அங்கே ஏக தாராளமாக வளர்ந்து கிடந்த பப்பைரஸ் மற்றும் பனை மரங்களைக்கொண்டும் கட்டப்பட்டவைகள். நைல் நதியின் சேற்றுக் கலவை சுவராகவும், பனை மரங்கள் வீட்டின் தளத்தை கட்டமைக்கும் உத்திரங்களாகவும், அதை தாங்கி பிடிக்கும் தூண்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 83
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
வெட்டப்பட்ட பனை மரத்தின் மேல் தழை பாகங்கள் முற்றிலும் அகற்றபடாமல் அவை அப்படியே உத்திர சட்ட பலகைகளாகவும், தூண்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ப�ோதா குறைக்கு பைப்பைரஸ் செடிகளும் அதன் மேல் வைக்கப்பட்டிருக்கின்றன. பழைய பேரரசு (Old Kingdom) காலக்கட்டத்தை சேர்ந்த மூன்றாம் அரச வம்சாவளி (Third Dynasty – கி.மு. 20-ஆம் நூற்றாண்டுகள்) காலக்கட்டம் த�ொடங்கி எகிப்திய கட்டிக் கலை முற்றிலும் கற்களைக்கொண்டு கட்டும் த�ொழில் நுட்பத்திற்கு வளர்ந்துவிட்டிருந்தது. கற்களை அறுத்து கட்டிடங்களாக அதிலும் ஸ்டெப் பிரமிடுகள் ப�ோன்ற அசூரத்தனமான கட்டிடங்களாக கட்டி எழுப்பும் த�ொழில் நுட்பம் கை வந்த பிறகும் அன்றைய எகிப்திய கட்டிடக் கலை நிபுணர்கள் பழமையை விட்டுவிடவில்லை. பனை மர உத்திர பலகைகளும், தூண்களும் கற்களுக்கு மாறிவிட்டிருந்தாலும் பனை மரங்களின் வடிவங்கள் கைவிட்டுப்போகாமல் அவை அலங்கார வடிவமைப்புகளாக கற்களில் தங்கிவிட்டன. அரக்கத்தனமாக கட்டியெழுப்பிய கற் தூண்கள் மற்றும் கற் பலகை உத்திரங்களில் எகிப்திய கட்டிட மற்றும் சிற்பக் கலைஞர்கள் பனை மரம், தாமரை மற்றும் பப்பைரஸ் செடிகளின் உருவங்களை அலங்கார ச�ோடனைகளாக செதுக்கிவைத்தார்கள். படம் 1 பார்க்கவும். சுமார் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பிலிருந்தே எகிப்தில் க�ோயில்களுக்கு என்று தனி கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்திருந்தாலும் இப்போது நமக்கு கிடைப்பதெல்லாம் புது அரச வம்சாவளி (கி.மு. 1570- 1069) காலக்கட்டத்தை சேர்ந்த க�ோயில்களே. அவைகளே இப்போது எஞ்சியிருக்கின்றன. பார�ோக்களின் கல்லறை வளாகத்துடன் கட்டப்பட்ட கல்லறை க�ோயில்கள் மாத்திரமே பழைய அரச வம்சாவளி காலக்கட்டத்திலிருந்து நமக்கு கிடைக்கின்றன. இப்போது த�ொல்லியல் ஆதாரங்களாக பாதியும் மீதியுமாக இடிந்து நிற்கும் புதிய அரச வம்சாவளி காலக்கட்ட க�ோயில்களின் கட்டிட அமைப்பே பழைய அரச வம்சாவளி காலக்கட்டத்திலும் இருந்திருக்கவேண்டும் என்பது எகிப்தாலஜிஸ்டுகளின் கணிப்பு. 84
நவீனா அலெக்சாண்டர்
85
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
86
நவீனா அலெக்சாண்டர்
படம் 2 பார்க்கவும். படம் 3 பார்க்கவும். எகிப்திய க�ோயில் கட்டிடக் கலை ஐந்து பெரும் பகுதிகளை உள்ளடக்கியது. அவை, நுழைவாயில் பெரும் சுவர்கள் (Pylon), உள் முற்ற அறை (Hypostyle), தூண்கள் சூழ்ந்த அறை (Peristyle), முதன்மை கடவுள் பயணம் செய்யும் படகு வைக்கும் அறை (Barque) மற்றும் கருவறை (Sanctuary). இந்த ஐந்து பகுதிகளும் பெரும் சுற்று சுவரால் சூழப்பட்டிருக்கும். நுழைவாயில் பெரும் சுவர்களின் உள் மற்றும் வெளிப் புறம், சுற்று சுவர், நான்கு அறைகளையும் தாங்கிப் பிடித்திருக்கும் 43 பெரும் தூண்கள், அறைகளை பிரிக்கும் தடுப்பு சுவர்கள் என்று அனைத்திலும் ஹைக்கிர�ோகிலிப் எழுத்துகள் ப�ொறிக்கப்பட்டிருக்கும். பார�ோ மற்றும் கடவுளர்களின் க�ோட்டுருவங்களும் செதுக்கப்பட்டிருக்கும். நுழை வாயில் பெரும் சுவர்களுக்கு முன்பாக (Pylon) இரு புறமும் நீண்ட வரிசையில் ஸ்பிங்ஸ் மிருகத்தின் உருவ சிலை ப�ொருத்தப்பட்ட மேடைகள் இருக்கும். இவைகளை கடந்து மிக நீண்ட நடைப் பாதையின் வழியாகத்தான் க�ோயிலுக்கு செல்ல வேண்டும். நுழை வாயில் பெரும் சுவர்களை கடந்தால் நாம் 87
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
அடைவது மிக நீண்ட அதே சமயத்தில் படு பிரம்மாண்டமான உள் முற்ற அறையை (Hypostyle). இங்கேதான் அந்த க�ோயிலுக்கு வரும் பக்தர்கள் கூடி கருவறையில் இருக்கும் கடவுளை வழிபடுவார்கள். உள் முற்ற அறையை தாண்டி செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. உள் முற்ற அறையை சுற்றிலும் பக்கத்திற்கு 14 தூண்கள் என்று இரு புறமும் சேர்த்து 24 தூண்கள் நிற்கும். அவைகளை தூண்கள் என்று ச�ொல்வது அதன் த�ோற்றத்தை குறைத்து மதிப்பிட வைத்துவிடலாம். அவைகள் தூண்கள் அல்ல இராட்சத உருளைகள். இன்றைய பெரும் த�ொழிற்சாலைகளில் இருக்குமே அதை ஒத்த உருளைகள் ப�ோன்றவைகள் அவைகள். உருவத்தில். பக்கத்திற்கு பதிநான்காக இருபத்தியெட்டு இராட்சத உருளைகளுக்கு மத்தியில் இருக்கும் திறந்த முற்றத்தில் நிற்பது எப்படியான அனுபவமாக இருக்கும் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடலாம். உள் முற்ற அறை, 8 தூண்கள் (இராட்சத உருளைகள்தான்) க�ொண்ட மற்றொரு அறையை (Peristyle) சந்திக்கும் இடத்தில் தரையானது சற்றே உயர்த்தப்பட்டிருக்கும். அதிலிருந்து எட்டு தூண்கள் க�ொண்ட அறையானது குறுக்கு சுவரால் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த அறையின் தரை தளம் உள்ள முற்ற அறையின் தரை தளத்தைவிட சற்றே உயர்த்தப்பட்டதாக இருந்தாலும் இதன் மேல் தளமானது உள்ள முற்ற அறையின் தூண் வரிசை மேல் தளத்தைவிட உயரம் குறைந்திருக்கும். இது க�ோயிலின் மேல் தள அமைப்பில் படிக்கட்டு (step) அமைப்பை க�ொடுக்கிறது. இந்த அறைக்கு அடுத்து இருப்பது கடவுளர் பயணம் (வான் வெளியிலும், பாதாள உலகிலும், நைல் நதியிலும்) செய்யும் புனித படகு சிலை வைக்கப்பட்டிருக்கும் மேடை க�ொண்ட அறை (Barque). அந்த கடவுளருக்கான திரு விழா காலங்களில் புனித படகு சிலை ஊர் முழுவதும் நகர் வலம் எடுத்து செல்லப்படும். இதன் மேல் தள உயரம் முந்தைய அறையின் மேல் தளத்தைவிட சற்றே உயரம் குறைந்ததாக இருக்கும். இந்த அறையை மூன்று தூண்கள் மாத்திரமே தாங்கி நிற்கும். இந்த அறையின் இரு புறமும் சில சிறிய அறைகள் உண்டு. இந்த அறைகளில் பூசை ப�ொருட்களும், உணவு தயாரிப்பதற்கான ப�ொருட்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். மேலும் பல துணை கடவுளர்களின் சிலைகளும் இந்த சிறிய 88
நவீனா அலெக்சாண்டர்
அறைகளில் வைக்கப்பட்டிருப்பார்கள். இந்த அறைக்கு அடுத்து இருப்பது கருவறை (Sanctuary). அந்த க�ோயிலின் முதன்மை கடவுளின் சிலை கருவறையில் வைக்கப்பட்டிருக்கும். கருவறையின் மேல் தளத்தை நான்கு இராட்சத உருளைகள் (தூண்கள்தான்) தாங்கி பிடித்திருக்கும். மேல் தளம் முந்தைய அறையின் மேல் தளத்தைவிட உயரம் குறைந்திருக்கும். கருவறையின் மேல் தளத்தில் கருவறைக்கு வெளிச்சம் வரும் வகையில் சிறிய சதுர வடிவிலான துளை ஒன்றும் இருக்கும். கருவறைக்கு இரு புறமும் பக்கத்திற்கு இரண்டு சிறிய அறைகள் என்று நான்கு சிறிய அறைகள் இருக்கும். கருவறைக்கு அடுத்து சிறிய அறை பகுப்பும் இருக்கும். அதன் மேல் தளம் கருவறை மேல் தளத்தை விட உயரம் குறைந்ததாக இருக்கும். பிரமிட் கட்டிடக் கலை குறித்து ஏற்கனவே எனது “எகிப்தின் மர்மங்கள்” புத்தகத்தில் விரிவாக எழுதிவிட்ட காரணத்தால் அதை மீண்டும் இங்கே விளக்க வேண்டாம் என்று கருதுகிறேன். பிரமிட் கட்டிடக் கலை குறித்து தெரிந்துக்கொள்ள விரும்புபவர்கள் அந்த புத்தகத்தை பார்க்கவும். பார�ோக்களின் அரண்மனைகள் எப்படி கட்டப்பட்டிருந்தன என்பதை தெரிந்துக்கொள்ள இன்றைய நிலையில் எந்த வாய்ப்புகளும் இல்லை. காரணம் பார�ோக்கள் உயிருடன் இருந்த ப�ோது உலவிய எந்த ஒரு அரண்மனை கட்டிடமும் பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றைக்கும் நிலைத்திருக்கவில்லை. அவை சுட்ட செங்கற்கள் க�ொண்டு கட்டப்பட்டிருந்த காரணத்தால் காலங்களைக் கடந்து அவைகளால் நிற்க முடியவில்லை. ஒட்டும�ொத்த எகிப்திய பேரரசின் அதிகார மையம் கீழ் எகிப்தின் (Lower Egypt) மெம்பிஸ் நகரிலிருந்து மேல் எகிப்தின் (Upper Egypt) தீப்ஸ் நகருக்கு மாற்றமடைந்த காலக்கட்டத்தில் உருவெடுத்தது குடைவரை கல்லறை கட்டிடக் கலை (Rock Cut Tomb architecture). இது நிகழ்ந்தது புதிய அரச வம்சாவளி (New Kingdom) காலகட்டத்தில். தலை நகர அதிகார பீட மாற்றம் ஒரு புறம் என்றால் பிரமிடுகளுக்குள் அட்டூழியம் செய்த கல்லறை திருடர்களின் அட்டகாசம் ஒருபுறம் குடைவரை கல்லறை கட்டிடக் கலை உருவாக காரணமாக இருந்தது. (இது குறித்தும் விரிவாக பார்க்க எனது “எகிப்தின் 89
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
மர்மங்கள்” புத்தகத்தை பார்க்கவும்). படம் 4 பார்க்கவும். குடைவரை கல்லறை க�ோயிலின் கட்டிட அமைப்பு ப�ொதுவாக ஐந்து பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். ப�ொதுவான ஐந்து பகுதிகளைத் தாண்டி சிக்கலான அமைப்பு க�ொண்ட குடைவரை கல்லறை க�ோயில்களும் உண்டு. நாம் ப�ொதுவான அமைப்புக்கள் குறித்தே பார்ப்போம். முகப்பு மண்டபம் (forecourt), நுழைவாயில் முன் அறை (Transverse Entrance Hallway), காரிடர் (Longitudinal Corridor), அனெக்ஸ் (Annex) மற்றும் இரகசிய பரியல் சேம்பர் (Burial Chamber). முகப்பு மண்டபம் நுழைவாயிலுக்கு முன்பாக இருக்கும் நீள் சதுர அறை. மம்மி உருவில் கல்லறைக்கு உள்ளே உயிருடன் சுற்றிக்கொண்டிருக்கும் (அப்படித்தான் நம்பிக்கை) பார�ோவிற்கு படையல் செய்ய வரும் ப�ொது மக்கள் இந்த அறை வரை மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த அறையில் பார�ோவிற்கு வேண்டிய உணவுப் ப�ொருட்களை படைத்து, ஊது பத்தி, சாம்பிராணி என்று புகை காட்டிவிட்டு நடையை கட்டிவிட வேண்டும். இதற்கு அடுத்து வருவதும் நீள் சதுர வடிவம் க�ொண்ட நுழைவாயில் முன் அறை. முகப்பு மண்டப அறையிலிருந்து இதற்கு வர கதவு உண்டு. பார�ோவின் மம்மி உடல் அடக்கம் செய்யப்பட்டப் பிறகு இந்த கதவும் இதை த�ொடர்ந்து வரும் மற்ற கதவுகளும் முற்றிலுமாக அடைக்கப்பட்டுவிடும். அடுத்து நீண்ட நடை பாதை அறை. இதற்கும் கதவு உண்டு. இதன் கதவை திறந்துக�ொண்டு உள் நுழைந்தால் வருவது பரியல் சேம்பர் என்கிற பார�ோவின் மம்மி உடல் வைக்கப்படும் சர்கோபிகஸ் (sarcophagus) கல் சவப்பெட்டி இருக்கும் அறை. இந்த அறை முழுதுமாக இரகசியம் காக்கப்பட்டிருக்கும். காரணம் இந்த அறையில் பார�ோவின் மம்மியுடன் சேர்த்து கில�ோ கணக்கிலான தங்க ப�ொருட்களும், ஆபரணங்களும், விலை உயர்ந்த அலங்கார ப�ொருட்களும் வைக்கப்படிருக்கும். இவைகளை கல்லறை க�ொள்ளையர்கள் “லவட்டிக்கொண்டு” ப�ோகாமலிருக்க. ஆனால் இரகசியமாக வைக்கப்பட்ட இந்த அறையின் இருப்பிட 90
நவீனா அலெக்சாண்டர்
91
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
92
நவீனா அலெக்சாண்டர்
இரகசியம் ஊர் அறிந்த இரகசியமாகவே இருந்தது. கூகுள் மேப் ப�ோன்ற எப்படியான அதி உயர் த�ொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கும் தேவையே வைக்காமல் கல்லறை க�ொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக முட்டு சந்திற்குள் நுழைவதைப் ப�ோல நுழைந்து பரியல் சேம்பருக்குள் இருந்த தங்க புதையலை க�ொள்ளையடித்து செல்வது த�ொடர் கதையாகத்தான் இருந்தது. ப�ோதா குறைக்கு கல் சவப்பெட்டிக்குள் இருக்கும் பார�ோவின் மம்மியையும் இடம் மாற்றி வைத்துவிட்டு சென்றுவிடுவதும் த�ொடர்ந்திருக்கிறது. பரியல் சேம்பர் அறையின் ஒரு பகுதியில் அனெக்ஸ் அறைக்கு செல்லும் வழி உண்டு. அது கதவு க�ொண்டு மூடப்பட்டிருக்கும். அந்த கதவை திறந்துக�ொண்டு நுழைந்தால் ப�ோய் நிற்பது அனெக்ஸ் அறையாக இருக்கும். இந்த அறையில் பார�ோவின் மம்மி உடலுக்கு தேவையான வாசனை திரவியங்கள், உணவுப் ப�ொருட்கள் (சமைக்காத உணவுப் ப�ொருட்கள்தான். சுவர் ஓவியங்களில் இருக்கும் பார�ோவின் வேலையாட்கள் ஒவ்வொரு நாளும் கீழே இறங்கி வந்து அந்த உணவுப் ப�ொருட்களைக்கொண்டு பார�ோவிற்கு ஆக்கிப்போடுவார்கள் என்பது பார�ோக்களின் நம்பிக்கை), வாசனை எண்ணெய் மற்றும் தயலங்கள் அப்படியே பார�ோவின் மம்மி க�ொஞ்சமாக அலுப்பு தீர ‘ஸ்ருதி’ ஏற்றிக்கொள்ள வைன் ப�ோன்ற 93
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
உயர் இரக பானங்களும் வைக்கப்பட்டிருக்கும். படம் 5 பார்க்க. பிரமிட், பிரமிட் வளாக கல்லறை க�ோயில், கடவுளர்களின் க�ோயில் ப�ோன்று குடைவரை கல்லறை க�ோயிலின் சுவர்களிலும் ஓவியங்களும், ஹைக்கிர�ோகிளிப் எழுத்துகளும் வரையப்பட்டிருக்கிறது. படம் 6 பார்க்க. ஓவியக் கலை பார்வைக் க�ோணம் (Perspective) மற்றும் ப�ோர் ஷார்டனிங் (Foreshortening) என்கிற இரண்டு முக்கிய ஓவியக் கலை உத்திகளை எகிப்திய ஓவியக் கலையில் காண முடியாது. இதற்கு காரணம் இதை குறித்த புரிதல் எகிப்திய ஓவியக் கலைஞர்களுக்கு இல்லை என்று ச�ொல்லிவிட முடியாது. நிச்சயமாக இந்த உத்திகளை குறித்த தெளிவு அவர்களுக்கு இருந்திருக்கிறது ஆனால் வேண்டுமென்றேதான் அதை அவர்கள் தவிர்த்திருக்கிறார்கள். மறுபுறம் அவர்களுடைய சிற்பக் கலை படு தத்ரூபமான சிற்பங்களை தந்துக�ொண்டிருக்க அவர்களுடைய ஓவியக் கலை மாத்திரம் க�ோட்டுருவங்களைப் (stick images) ப�ோல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்படியே நீடித்திருக்கிறது என்றால் அதற்கு பின்னால் நிச்சயமாக காரணம் இருந்திருக்க வேண்டும்தானே. இருந்தது. அதை புரிந்துக�ொள்ள நமக்கு தெரிய வேண்டியது ஓவிய மற்றும் சிற்பக் கலைகளில் பயன்படுத்தப்படும் கேன�ோன் ஆப் ப்ரப�ோர்ஷன் (Canon of Proportion) குறித்து. யதார்த்த உலகில் மனிதர்களுடைய உயரத்தை கண்டுபிடிப்பது மிக எளிது. ஓவிய மற்றும் சிற்பக் கலைகளில் படைக்கப்படும் மனித உருவத்தின் உயரத்தை கணிப்பது என்பது மிகவும் சிக்கலான விசயம். இந்த சிக்கலை ப�ோக்குவதற்கு உருவாக்கப்பட்டது கேன�ோன் ஆப் ப்ரப�ோர்ஷன் கருத்தாக்கம். மனித தலையின் உயரம் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. யதார்த்த உலகில் சராசரி உயரத்தில் இருக்கும் ஒரு மனிதனை ஓவியத்தில் அதே சராசரி உயரம் 94
நவீனா அலெக்சாண்டர்
95
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
96
நவீனா அலெக்சாண்டர்
க�ொண்டவனாக காண்பிக்க முதலில் வரையப்படும் தலையின் உயரம், எட்டு பகுதியாக பிரிக்கப்பட்டு வரையப்படும் மனித உருவத்தின் சராசரி உயரம் மீட்டுருவாக்கம் செய்யப்படும். படம் 7 பார்க்க. ஆனால் இந்த ப�ொதுவான விதியை எகிப்திய நாகரீக ஓவியங்களில் காண முடியாது. எகிப்திய ஓவியக் கலைஞர்கள் அவர்களுக்கு என்று தனியான கேன�ோன் ஆப் ப்ரப�ோர்ஷன் உத்தியை உருவாக்கி பயன்படுத்தினார்கள். அதை வலுக்கட்டாயமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பற்றவும் செய்தார்கள். இதுதான் அவர்களுடைய ஓவியங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒத்த தன்மையுடனேயே இருந்ததற்கான காரணமும் கூட. எகிப்திய ஓவியக் கலைஞர்கள் பயன்படுத்திய கேன�ோன் ஆப் ப்ரப�ோர்ஷன் என்பது சதுர கட்டங்கள் (square grid). உயர அகலத்தில் 18-க்கு 11 என்று சதுர கட்டங்களாக பிரித்துக்கொண்டு அதன் மீது மனித உருவத்தை ஓவியமாக தீட்டினார்கள். பதினெட்டுக்கு பதின�ொன்று என்று பிரிக்கப்பட்டிருக்கும் சதுர கட்டங்களுக்குள் எந்தெந்த மனித உடல் பாகங்கள் வர வேண்டும் என்பது கட்டாய விதியாக பின்பற்றப்பட்டிருக்கிறது. இதுதான் எகிப்திய ஓவியங்கள், பார்வைக் க�ோணம் (Perspective) மற்றும் ப�ோர் ஷார்டனிங் (Foreshortening) என்கிற தன்மைகளை இழந்து நிற்க காரணமாக அமைந்துப�ோனது. மற்றபடி எகிப்திய ஓவியக் கலைஞர்களுக்கு பார்வைக் க�ோணம் (Perspective) மற்றும் ப�ோர் ஷார்டனிங் (Foreshortening) குறித்த தெளிவு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஏற்படாமலேயே ப�ோய் விட்டது என்றில்லை. படம் 8 பார்க்க. பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த சதுர கட்ட கேன�ோன் ஆப் ப்ரப�ோர்ஷனில் எகிப்திய ஓவியக் கலைஞர்கள் செய்தே ஒரே மாற்றம் உயரத்தில் 18 சதுர கட்டங்கள் என்றிருந்ததை 22 என்று மாற்றியமைத்தது மாத்திரமே. படம் 9 பார்க்க. 97
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
ஒவ்வொரு சதுர கட்டத்திற்குள் உடலின் எந்த பாகங்கள் வர வேண்டும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டத�ோ அதேப் ப�ோன்று மனித உருவத்தின் வெளித்தோற்றமும் பக்கவாட்டு (profile) த�ோற்றம், எதிர்ப்படும் த�ோற்றம் (frontal) என்கிற அமைப்பிலேயே இருக்கும். படம் 10 பார்க்க. தலை முதல் கழுத்து வரையில் இருக்கும் பகுதி பக்கவாட்டில் பார்ப்பதைப் ப�ோலவும், த�ோள் பட்டை த�ொடங்கி இடுப்பு பாகம் வரை முன் பக்கத்தை பார்ப்பதைப் ப�ோன்றும், இடுப்பிற்கு கீழே த�ொடங்கி கால்கள் வரை மீண்டும் பக்கவாட்டு த�ோற்றத்தில் இருக்கும்படியும் சுவர் ஓவியங்களையும், க�ோட்டு ஓவியங்களையும் தீட்டுவது எகிப்திய ஓவியக் கலையின் அடையாளங்களில் ஒன்றுப் ப�ோன்றது. வரையப்படும் ஓவியம் இடது பக்கம் பார்ப்பதாக இருந்தால் அதன் இடது கால் ஓரடி முன்னால் எடுத்து வைத்திருப்பதைப் ப�ோல காட்டப்பட்டிருக்கும். வலது பக்கமாக பார்த்துக்கொண்டிருந்தால் வலது கால் ஓரடி முன்னால் எடுத்து வைத்து நடப்பதை ப�ோன்ற த�ோற்றம் உண்டாக்கப்பட்டிருக்கும். ஓவியக் கலைக்கு முற்றிலும் முரணான அமைப்பு இது. மனித உருவம் ஏடா கூடமாக முறுக்கிக்கொண்டு நிற்கும் த�ோற்றத்தை உண்டாக்க கூடியது. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகால த�ொடர்ச்சியான எகிப்தின் க�ோயில், கல்லறை க�ோயில் மற்றும் குடைவரை கல்லறை க�ோயில்களின் சுவர் ஓவியங்களை பார்க்கின்ற ப�ோது இந்த முரண் பார்வையாளனின் கண்களில் படாமல் மறைந்துக�ொள்வது எகிப்திய ஓவியக் கலையின் சிறப்பு அம்சங்களில் ஒன்று. ஓவியங்களில் வண்ணம் தீட்டுவது என்பது பழைய அரச வம்சாவளி காலக்கட்டம் த�ொட்டே வழக்கில் இருந்து வந்த ஒரு பழக்கம். எகிப்திய வண்ண ஓவியங்களை ப�ொறுத்த வரையில் அதில் ஒளி மற்றும் நிழலுக்கு எத்தகைய வேலையும் கிடையாது. அவை இரண்டும் ஓவியங்களில் கலந்து கட்டி விளையாடி எப்படியான முப்பரிமாண த�ோற்றத்தையும் உண்டாக்குவதில்லை. இருந்தால்தானே உண்டாக்க. ஓவியங்களில் ஆண் உருவங்கள் 98
நவீனா அலெக்சாண்டர்
பிரவுன் வண்ணத்திலும், பெண் உருவங்கள் மஞ்சள் நிறத்திலும், தீயக் கடவுளான சேத் சிகப்பு நிறத்திலும், கருப்பு நிறம் மரணத்தையும் அதே சமயத்தில் உயிர்த்தெழுதலையும் வெளிப்படுத்த தீட்டப்பட்டிருக்கின்றன. சிற்பக் கலை ஓவியக் கலையைப் ப�ோலவே சிற்பக் கலையும் பழைய வம்சாவளி காலக்கட்டத்திற்கு முன்பிலிருந்தே எகிப்திய நாகரீகத்தில் வழக்கில் இருக்கிறது. எகிப்திய ஓவியங்கள் எப்படி விறைப்புத் தன்மையுடன் இருக்கின்றனவ�ோ அதே தன்மையை அதன் சிற்பங்களில் கண் கூடாகவே காண முடியும். இதற்கு காரணம் எகிப்தியர்களின் தத்துவார்த்த நம்பிக்கை. உடலுக்கு மட்டுமே த�ோற்றமும், வளர்ச்சியும் அழிவும் ஆன்மாவிற்கு இல்லை என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்த காரணத்தால் உடல் அழிந்தப் பிறகும் உயிருடன் இருக்கும் ஆன்மாவிற்கு காலங்களை வெளிப்படுத்தாத (அதாவது தத்ரூபமான வடிவத்தை வெளிப்படுத்தாத) அடையாள குறியீடு ப�ொருட்கள் தேவைப்பட்டன அவைகள் வசிக்க. அந்த குறியீடாக பயன்படுத்தப்பட்டது இறந்த மனிதனின் ஓவியங்களும் சிற்பங்களும். இதற்காக வேண்டியே தத்ரூபமான த�ோற்றத்தை க�ொண்டிராத விறைப்பான, சதுர அமைப்புக�ொண்ட சிற்பங்கள் வடிக்கப்பட்டு கல்லறை க�ோயில்களிலும், குடைவரை கல்லறை க�ோயில்களிலும், பிரமிட்களிலும் வைக்கப்பட்டன. ப�ொதுவாக சிற்பங்கள் இரண்டு நிலைகளில் வடிக்கப்பட்டன. நின்ற நிலை (ஓவியங்களில் இருப்பதைப் ப�ோன்று ஒரு காலை முன்னோக்கி எடுத்து வைத்த நிலையில்) மற்றொன்று உட்கார்ந்த நிலை. உட்கார்ந்த நிலை சிற்பங்களின் மேலும் இரண்டு த�ோற்ற வேறுபாடுகள் உண்டு. இரண்டில் ஒரு கையை மார்புக்கு குறுக்காக பிடித்துக்கொண்டு மற்றொரு கையை த�ொடையின் மீது நீட்டி வைத்திருக்கும் த�ோற்றத்தில் வடிக்கப்படுவது. அடுத்தது இரண்டு கைகளையும் த�ொடையின் மீது நீட்டி வைத்தபடி உட்கார்ந்திருப்பது. படம் 11 பார்க்க. 99
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
100
நவீனா அலெக்சாண்டர்
எகிப்திய உருவ சிலைகளில் கான்டிரப�ோஸ்டோ என்கிற உத்தி பயன்படுத்தப்பட்டிருக்காது. அதேப�ோல சிலைகளுக்கு உரிய உருளை வடிவமும் எகிப்திய சிலைகளில் தென்படாது. எந்த திசையில் இருந்து பார்த்தாலும் சதுர வடிவம் துருத்திக்கொண்டு தெரியும் வடிவிலேயே சிலைகள் வடிக்கப்பட்டிருக்கும். அதேப�ோல சிற்பங்கள் சிமிட்டிரிக்கள் பேலன்சிலேயே இருக்கும். த�ொடக்க வம்சாவளி காலக்கட்டம் (கி.மு. 2950 –2575) – முதல் மற்றும் மூன்றாம் அரசவம்சாவளி முடிய கட்டிடக் கலை முதல் அரச வம்சாவளி காலத்தில் எகிப்தின் அபைட�ோஸ் நகரமே பார�ோக்களின் பிரதான நெக்ரோப�ோலிசாக இருந்தது. நெக்ரோப�ோலிஸ் என்றால் கல்லறை நிலம் என்றுப் ப�ொருள். சக்குரா நகரிலும் பார�ோக்களின் நெக்ரோப�ோலிஸ் இருந்தது. ஆனால் இந்தக் காலக்கட்ட பார�ோக்களில் பெரும்பால�ோர் அபைட�ோசிலேயே தங்களின் மம்மி உடல் மஸ்தபாக்களில் வைக்கப்படவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்கள். மஸ்தபா கல்லறை கட்டிடம் பிரமிடுகளின் பாட்டன் ப�ோன்றது. நீள் சதுர வடிவில் சிறிய குன்றுப்போலக் கட்டப்பட்டவைகள். சுட்ட 101
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
களிமண் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. த�ொடக்க கால மஸ்தபாக்களில் பார�ோக்களின் உடல்கள் தரைக்கு அடியில் த�ோண்டப்பட்ட பாறைக் கல் அறைகளில் வைக்கப்பட்டிருக்கிறது. உடல் வைக்கப்படும் அறையை சுற்றி மேலும் இரண்டு அறைகள் பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலேயே மஸ்தபா கட்டப்பட்டது. இரண்டாம் அரச வம்சாவளி காலம் த�ொட்டே பார�ோவின் உடல் வைக்கும் அறை தரைக்கு அடியில் பாறையில் செதுக்கப்படாமல் தரைக்கு மேலே அறைகளாக கட்டப்பட்டு அதற்கு மேலே மஸ்தபா கட்டும் வழக்கம் த�ோன்றியிருக்கிறது.
உ யி ரு ட ன் இ ரு க் கு ம்போ து அனுபவித்த அனைத்து ப�ொ ரு ள்களை யு ம் ம ரண த் தி ன்போ து ம் மறு உருவாக்கம் செய்வதன் மூலம் ம ரணத்தை க ட ந் து வி ட ல ா ம் 102
நவீனா அலெக்சாண்டர்
என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை என்பதால் மஸ்தபாக்களும் பார�ோக்களின் அரண்மனை கட்டிடங்களின் த�ோற்றத்தை பிரதிபலித்தன. வரலாற்றின் முரண்நகை, பார�ோக்கள் உயிருடன் இருந்தப�ோது வசித்த அரண்மனைகள் இன்றைக்கு நமக்கு கிடைக்கவில்லை ஆனால் அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை அரண்மனைகள் (மஸ்தபாக்கள்) பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றைக்கும் அழிந்துப�ோகாமல் நம் கண் முன்னே நின்றுக�ொண்டிருக்கின்றன. சிற்பக் கலை சுவர் புடைப்பு சிற்பங்கள், கற்பலகை மற்றும் பூண் தலை (கைத்தடி ஆயுதத்தின் தலைப் பகுதியில் ப�ொருத்தப்படும் பூண்) புடைப்பு சிற்பங்கள், முழு உருவ சிற்பங்கள் என்று வழமைப் ப�ோல எகிப்திய சிற்பக் கலையை மூன்று வகைகளாகப் பிரித்துக்கொள்ளலாம். இந்தக் காலக்கட்டத்தை சேர்ந்த சுவர் புடைப்பு சிற்பங்களைக் குறித்து அறிந்துக�ொள்ள முடியவில்லை. கல்லறைகளும், க�ோயில்களும் மணல் மேடுகளாக காட்சியளிப்பதால் அவைகளுக்குள் இருந்த புடைப்பு சிற்பங்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் கற்பலகை புடைப்பு சிற்பங்கள் கிடைக்கின்றன. கற்பலகைகள் காணிக்கை ப�ொருளாக க�ோயில்களுக்கு வழங்கப்பட்டவைகள். முதல் பார�ோவான நார்மர் த�ொடங்கி எகிப்தின் அனைத்துப் பார�ோக்களும் இத்தகைய கற்பலகைகளை அவர்கள் இஷ்ட தெய்வ க�ோயில்களுக்கு காணிக்கையாக க�ொடுத்திருக்கிறார்கள். இந்த கற்பலகைகளில் அந்த பார�ோவின் ப�ோர் நடவடிக்கைகளும் அரசியல் நடவடிக்கைகளும் புடைப்பு சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்த காலக்கட்ட கற்பலகை புடைப்பு சிற்பக் கலைக்கு உதாரணமாக முதல் பார�ோ நார்மரின் கற்பலகையே இன்றைக்கு கிடைத்திருக்கிறது. எகிப்திய இரு-பரிமாண கலை (புடைப்பு சிற்பமும், ஓவியமும் இரு-பரிமாண கலையை சேர்ந்தவைகள்) பாணிக்கு எடுத்துக்காட்டாக இருப்பது நார்மரின் கற்பலகை. இந்த கற்பலகையின் முன் பக்கத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சி, நார்மர் அவனுடைய அரசியல் எதிரிகளை தலையில் அடித்து 103
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
க�ொல்கிறான். எதிரியின் தலைமுடியை க�ொத்தாக இடதுக் கையில் பிடித்துக்கொண்டு உயர்த்திய வலது கையிலிருக்கும் கைத்தடி ஆயுதத்தால் எதிரியின் உச்சந்தலையில் அடிக்கிறான். அவன் கைப்பிடியில் இருக்கும் எதிரியின் உடல் குத்துயிரும் குலை உயிருமாக துவண்டுப�ோய் கிடக்கிறது. கீழ் பகுதியில் ஏற்கனவே இரண்டு எதிரிகளின் உயிரற்ற உடல்கள் கிடக்கின்றன. வலதுபக்கத்தில் மனித கரங்கள் க�ொண்ட பருந்து துண்டான எதிரியின் தலையை கயிற்றால் இறுக்கி பிடித்திருக்கிறது. நார்மருக்கு பின்னால் நார்மருக்கு சேவகம் செய்யும் வீரன் நின்றுக�ொண்டிருக்கிறான். மேல் பகுதியின் இரண்டுப் பக்கமும் மனித முகம் க�ொண்ட எருதின் தலைகள். கற்பலகையின் பின்ப் பக்கத்தில் கழுத்து நீண்ட இரண்டு சிங்கங்களை கட்டுப்படுத்தும் வீரர்கள், கீழ் பகுதியில் எருது ஒன்று ஒரு மனிதனை முட்டிம�ோதி அவனைக் க�ொல்லும் காட்சி. மேல் பகுதியில் நார்மரின் வெற்றி ஊர்வலம் காட்டப்பட்டிருக்கிறது. கூடவே நார்மரின் பெயரும் செதுக்கப்பட்டிருக்கிறது.
சரி இனி இந்த புடைப்பு சிற்பத்திற்கு பின்னால் இருக்கும் கலை சித்தாந்தங்களை பார்ப்போம். கற்பலகையின் முன் பகுதி 104
நவீனா அலெக்சாண்டர்
குறுக்கு வாட்டில் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பிக்டோரியல் ரெப்பிரஷன்டேஷனாக காட்சிகளை விளக்கவேண்டி இந்த புடைப்பு சிற்பத்தை செதுக்கிய கலைஞர்கள் இப்படி மூன்று பகுதிகளாக பிரித்திருக்கிறார். எகிப்திய புடைப்பு சிற்பத்தின் பிக்டோரியல் ரெப்பிரஷன்டேஷன் அடுத்து வந்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இப்படித்தான் குறுக்கு வாட்டில் பிரிக்கப்பட்டது. படைப்பு ஊடகத்தை இப்படி பகுத்துக்கொள்வதின் மூலம் கதை ச�ொல்லும் வடிவில் காட்சிகளை சம்பவக் க�ோர்வையாக வெளிப்படுத்த முடியும். அடுத்தது நார்மர் இடது பக்கத்திலிருந்து வலதுப் பக்கமாக பார்க்கும்படி வடிக்கப்பட்டிருக்கிறான். இடது பக்கமிருந்து வலது பக்கம் பார்க்கும்படி ஓவிய உருவங்களையும் புடைப்பு சிற்ப உருவங்களையும் வடிப்பது எகிப்தியக் கலைகளின் பண்பு. அதேப் ப�ோல இடதுக் கால் ஓரடி முன்னால் இருக்கும்படி சித்தரிப்பதும் எகிப்திய கலைகளின் பண்பு. இந்த கற்பலகையிலும் நார்மர் இடதுக் காலை ஓரடி முன்னால் வைத்திருப்பதை கவனிக்கலாம். அடுத்து ஸ்பேட்டியல் ரி லே ஷ ன் ஷி ப் பு ம் ( இ ரு - ப ரி ம ா ணக் க லை க ளி ல் ஸ்பே ட் டி யல் ரி லே ஷ ன் ஷி ப் என்பது உருவங்களின் உயரப் பண்பைக் குறிக்கும். ப�ொதுவாக இ ரு - ப ரி ம ா ணக் க ா ட் சி க ளைப் பு ரி ந் து க �ொள்ள பெரிய உருவத்தை மைய ம ா க வை த் து க ் க ொண் டு சிறிய உருவங்களை பார்ப்பது மனித 105
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
பார்வைக் க�ோணத்தின் பண்பு. இதையே ஸ்பேட்டியல் ரிலேஷன்ஷிப் என்று ச�ொல்வார்கள்) இந்த சிற்பக் கலைஞரால் பின்பற்றப்பட்டிருக்கிறது. நார்மரின் உருவம் பெரிதாக காட்டப்பட்டு மற்றவர்களின் உருவங்கள் சிறிதாக காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நார்மரின் உருவத்திற்கு முக்கியத்துவம் க�ொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கற்பலகை ஒட்டும�ொத்தமாக ரெப்ரஷன்டேஷனல் (கண் முன்னால் நடைப்பெற்ற காட்சிகளை அப்படியே இரு-பரிமாணக் கலையாக படைப்பதை ரெப்ரஷன்டேஷனல் ஆர்ட் என்பார்கள்) பாணியை அடிப்படையாக க�ொண்டிருக்கிறது. இதுவே அடுத்து வந்த மூவாயிரம் ஆண்டுகால எகிப்திய இரு-பரிமாணக் கலைகளின் பாணி. அதேப் ப�ோல எகிப்திய ஓவியம் மற்றும் புடைப்பு சிற்பக் கலையின் அடுத்த நிலையான பண்பு, மனித உருவத்தின் கால்களை பக்கவாட்டிலும், த�ோள்கள் வரையிலான உடலின் மேல் பகுதியை ஆளைப் பார்த்திருக்கும்படியும், முகத்தை பக்கவாட்டிலும் அமைப்பது. இந்த கற்பலகையின் அடிப்படை கலைப்பாணி ரெ ப ்ர ஷ ன்டே ஷ ன ல் என்றாலும் இதில் சிம்பாலிச பாணியும் பின்பற்றப்பட்டிருக்கிறது. மனித கரங்கள் க�ொண்ட பருந்து எகிப்தியக் கடவுள் ஹ�ோரசைக் குறிக்கிறது. பூமியை ஆள்பவர் கடவுள் ஹ�ோரஸ். (எகிப்திய கடவுளர்கள் குறித்து தெ ரி ந் து க ் க ொள்ள எனது ‘எகிப்தின் மர்மங்கள்’ புத்தகத்தை படிக்கலாம்). அதேப் ப�ோல கற்பலகையின் பின் 106
நவீனா அலெக்சாண்டர்
பக்கத்தில் இருக்கும் எதிரியை முட்டும் காளை பார�ோ நார்மரை குறிக்கிறது. இரு புறமும் மேல் பகுதியில் இருக்கும் மனித முகம் க�ொண்ட எருது கடவுள் ஹத்தோரைக் குறிக்கிறது. நான்கு பக்கங்களில் இருக்கும் கடவுள் ஹத்தோரின் தலைகள் சிமெட்டிரிக் பேலன்சில் வ டி க ்க ப ்ப ட் டி ரு க் கி ற து . பனி பக்கத்திலிருக்கும் பாம்பு ப�ோல நீண்டக் க ழு த் து க �ொ ண ்ட சிங்கங்களும் அதை அடக்கும் வீரர்களும் சி மெ ட் டி ரி க் பே ல ன் சி லேயேக் காட்டப்பட்டிருக்கிறார்கள். இதேக் காலக்கட்டத்தை சேர்ந்த மற்றொரு காலத்தால் அழியாத மற்றொரு கற்பலகை புடைப்பு சிற்பம் பார�ோ வஜ்ஜினுடையது. இந்த பார�ோ முதல் அரச வம்சாவளியை சேர்ந்தவன். இந்த கற்பலகையின் காலம் சுமார் கி.மு. 2850. எகிப்திய ரியலிச மற்றும் சிம்பாலிச பாணி சிற்பத்திற்கு உதாரணம் இந்த கற்பலகையில் இருக்கும் புடைப்பு சிற்பங்கள். கடவுள் ஹ�ோரஸ் பருந்தின் வடிவிலும், பார�ோ வஜ்ஜி பாம்பின் வடிவிலும் சிம்பாலிக்காக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த புடைப்பு சிற்பத்தில் பாம்பு உருவத்திலிருக்கும் பார�ோவும், பருந்து வடிவில் இருக்கும் கடவுள் ஹ�ோரசும் வலது பக்கமிருந்து இடது பக்கம் பார்க்க காரணமிருக்கிறது. மேற்கில் சூரியன் மறைவது எகிப்தியர்களைப் ப�ொறுத்தவரையில் மரணத்தின் குறியீடு. கிழக்கில் சூரியன் உதிப்பது உயிர்தெழுதலின் குறியீடு. பருந்தின் தலைக்கு மேல் இருக்கும் வளைவு கிழக்கிலிருந்து மேற்கு திசைக்கு சூரியன் பயணிக்கும் பாதையை குறிக்கிறது. அதுவே சுவர்க்கத்தின் 107
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
குறியீடும் கூட. பாம்பு இருக்கும் பகுதி பார�ோவின் அரசையும் அவனுடைய அரண்மனையையும் குறிக்கிறது. இரண்டாம் அரச வம்சாவளி காலக்கட்டத்தில் மஸ்தபா அறைகள் தரைக்கு மேல் கட்டப்படத் த�ொடங்கிய நேரத்தில் சுவர் புடைப்பு சிற்பங்களுக்கு வர்ணம் பூசும் புதிய வழக்கமும் எகிப்தில் த�ோன்றியது. கருப்பு, வெள்ளை, சிகப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை நிற வர்ணங்கள் புடைப்பு சிற்ப உருவங்களுக்கு தீட்டப்பட்டிருக்கிறது. பழைய வம்சாவளி காலக்கட்டம் (கி.மு. 2575 - 2125) – நான்கு முதல் எட்டாம் அரச வம்சாவளி முடிய கட்டிடக் கலை அடுத்து வர இருக்கும் மூவாயிரம் வருட எகிப்திய கலைகளின் முதல் ப�ொற்காலம் இந்த காலக்கட்டம். கல்லறை கட்டிடக் கலை அடுத்தப் பாய்ச்சலை நிகழ்த்தியது. உலக கட்டிடக் கலை வரலாற்று சிறப்பு மிக்க பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டிய எகிப்திய ப�ொறியியலாளர் ஈம�ோதெப். ஈம�ோதெப்பின் அசாதாரணமான கட்டிடக் கலை முயற்ச்சிக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் க�ொடுத்த பார�ோ, பார�ோ ஜ�ோசர். (இவர்கள் இருவர் குறித்தும் விரிவாக தெரிந்துக்கொள்ள எனது ‘எகிப்தின் மர்மங்கள்’ புத்தகம் படிக்கவும்). பார�ோக்களின் நெக்ரோப�ோலிஸ் அதுவரைக் கண்டிராத கட்டிடக் கலை பிரம்மாண்டம் அது. அன்றைய உலகின் மிகப் பெறும் கட்டிடமும் அதுவே. பார�ோ ஜ�ோசரின் ஸ்டெப் பிரமிட். ஒன்றின் மீது ஒன்றாக ஆறு தளங்களை க�ொண்ட கட்டிடக் கலை அரக்கன். உருவத்தில். இதை வடிவமைத்து கட்டிய ஈம�ோதெப் பிற்காலத்தில் எகிப்திய சகாப்த நாயகனாக மாறிப்போனார். 108
நவீனா அலெக்சாண்டர்
பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் எகிப்தில் ஈம�ோதெப் புகழ்பாடப்பட்டிருக்கிறது. சதுர வடிவ கருங்கற்களைக் க�ொண்டு கட்டப்பட்ட முதல் கல்லறை கட்டிடமும் இதுவே. பல ஆயிரம் டன் எடை க�ொண்ட இந்த கருங்கல் மலை – இதை விட இதன் பிரம்மாண்டத்தை வார்த்தைகளில் விளக்க வாய்ப்பில்லை – இன்றைக்கும் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் திணறவைக்க கூடியது. இதற்கு வடக்குப் பக்கத்தில் பார�ோ ஜ�ோசரின் ஒரு கல்லறை க�ோயிலும் இருக்கிறது. ஜ�ோசருக்கு அடுத்தடுத்து வந்த பார�ோக்கள் அனைவருக்கும் ஈம�ோதெப் உருவாக்கிய ஸ்டெப் பிரமிட் மீது வெறித்தனமான ஈர்ப்பு இருந்திருக்கிறது. ஸ்டெப் பிரமிட் ப�ோன்றே பிரம்மாண்டமான ஸ்டெப் பிரமிட்களை தங்களுக்கும் கட்டிக்கொள்ள முயற்ச்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மம்மிக்களுக்குத்தான் ஸ்டெப் பிரமிட் வாய்க்கவேயில்லை. அவர்களுக்கு வாய்க்கவில்லை என்பதற்காக பிரமிட் கட்டிடக் கலை தேக்க நிலையிலேயே நின்றுவிடுமா என்ன. ஜ�ோசருக்கு அடுத்த வந்த பார�ோக்களுக்கு ஸ்டெப் பிரமிட்கள் கட்டுவதில் முழுமையான வெற்றிப் பெறாத கட்டிடக் கலை வல்லுநர்கள் அதிலிருந்து நிறையவே பாடம் கற்றுக்கொண்டார்கள். இதன் எதிர�ொளி பழைய அரச பரம்பரையின் முடிவில் வெளித் தெரிந்தது. பார�ோ ஸ்னெப்ரூவின் (கி.மு. 2575 – 2545) ஆட்சி காலத்தில் அவனுக்கு என்று கட்டப்பட்ட பிரமிடுகள் இன்றைக்கு நாம் அறிந்திருக்கும் பிரமிடுகளின் உருவத்தை பெற்றன. இவன் காலத்திலேயே எகிப்தியர்கள் மிகப் பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டும் த�ொழில் நுட்பத்திற்குள் நுழைகிறார்கள். பிரம்மாண்ட பிரமிடுகளைக் கட்டுவதற்கான மனித உழைப்பை க�ொடுக்கப் ப�ோர் கைதிகளாகப் பிடிபட்ட 7000 நுபிய அடிமைகள் பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் பெயருக்குத்தான் அடிமைகள். ஆனால் உண்மையில் பார�ோ ஸ்னெப்ரு இவர்களுக்கு எகிப்திய குடியுரிமை க�ொடுத்திருக்கிறான். அது மாத்திரமல்ல இவர்களுக்கு வரி விலக்கும் கூடக் க�ொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கென்று தனிக் குடியிருப்பும் கூட ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறான் பார�ோ 109
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
ஸ்னெப்ரு. இந்தச் சலுகைகளுக்கெல்லாம் நன்றிக் கடனாக இவர்களிடமிருந்து உறிந்துக�ொள்ளப்பட்டது முதுகை உடைத்து இரண்டு கூறுகளாக்கும் பிரமிட் கட்டுமானப் பணி. பார�ோ ஸ்னெப்ரு காலத்தில் எகிப்திய நாகரீகம் சமூக வாழ்வு, அரசியல், கலை மற்றும் பிரமிட் கட்டிடக் கலை என்று அனைத்திலும் அடுத்த நிலைக்கு அடியெடுத்து வைத்தது. ஈம�ோதெப் விட்டுச் சென்ற இடத்திலிருந்து பிரமிட் கட்டிடக் கலையை மேலும் அதிகமாக அறிவியல் அடிப்படையிலான கட்டுமானமாக மாற்றியவர்கள் பார�ோ ஸ்னெப்ருவின் பிரமிட் கட்டிடக் கலை வல்லுநர்கள். மூன்றாம் வம்சாவளியைச் சேர்ந்த பார�ோ ஹெட்டெசகேமி பழம் பாரம்பரியத்தை உடைத்து ஸக்கராவை ஸ்டெப் பிரமிடுகள் கட்டுவதற்கான இடமாகத் தேர்ந்தெடுத்ததைப் ப�ோலப் பார�ோ ஸ்னெப்ரு மீண்டும் ஒருமுறை பழம் பாரம்பரியத்தை உடைத்து மெய்டுமை தன்னுடைய பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டுவதற்கான இடமாகத் தேர்ந்தெடுத்தான். இவன் காலத்திற்கு முன்புவரை கட்டப்பட்ட மஸ்தபாக்களும் ஸ்டெப் பிரமிடுகளும் வடக்கு திசைய�ோடு ஒத்திசைவாகக் கட்டப்பட்டு வந்தது. இதையும் முதல் முறையாக மாற்றித் தன்னுடைய பிரம்மாண்ட பிரமிடுகளைக் கிழக்கு மேற்கு திசைய�ோடு ஒத்திசைவாகக் கட்டினான் பார�ோ ஸ்னெப்ரு. மெய்டுமில் கட்டப்பட்ட இவனுடைய முதல் பிரமிடே வெளிப்பக்க சரிவுகளில் சுண்ணாம்பு கல் பூச்சுக்கொண்ட முதல் பிரமிட். இந்தப் பிரமிட் எட்டு அடுக்குகளைக் க�ொண்டதாக இருந்திருக்கவேண்டும் என்று இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். இன்றைக்கு இரண்டு அடுக்குகள் மாத்திரமே முழுமையாக இருக்கிறது. படம் 12 பார்க்க. இந்தப் பிரமிட் பார�ோ ஸ்னெப்ரு ஆட்சியின் முதல் பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே இது இடிந்தும் விழுந்திருக்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பிரமிட் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ப�ோதே இடிந்து விழுந்து கட்டிடப் பணியாளர்களைப் பலிவாங்கியிருக்கவேண்டும் என்று 110
நவீனா அலெக்சாண்டர்
111
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
112
நவீனா அலெக்சாண்டர்
கருதுகிறார்கள். இந்தப் பிரமிட் இடிந்து விழுந்ததன் எதிர�ொளியே இவன் கட்டிய இரண்டாம் பிரமிடின் வடிவமைப்பில் எதிர�ொலித்திருப்பதாக்க ஆராய்ச்சியாளர்கள் அனுமானம் செய்கிறார்கள். பார�ோ ஸ்னெப்ரு தனக்கான முதல் பிரமிட் இடிந்துவிழுந்துவிட்டதால் மற்றொரு புதிய பிரமிடைக் கட்டியெழுப்ப நினைத்தானா அல்லது த�ொடக்கத்திலேயே தனக்கென்று பல பிரமிடுகள் கட்ட நினைத்ததன் த�ொடர்ச்சிதான் மெம்பிசின் தெற்குப் பகுதியில் (இன்றைய தாஷுர்) கட்டப்பட்ட இரண்டாவது பிரிமிடா என்பது விவாதத்திற்குரிய விசயமாக இருந்துவருகிறது. இன்றைக்கு வேண்டுமானால் இது த�ொடர்பாக நாம் விவாதம் செய்துக�ொண்டிருக்கலாம் ஆனால் பார�ோ ஸ்னெப்ரு மிகத் தெளிவான திட்டமிடலுடனே இதைக் கட்டியிருப்பதாகத் தெரிகிறது. அவனுக்கு முன்பு இருந்த எந்த ஒரு பார�ோவுமே டாசூர் பகுதியில் எத்தகைய கல்லறை கட்டிடங்களையும் கட்டியதில்லை. இவனுடைய இரண்டாவது பிரமிடே டாசூர் பகுதி கண்ட முதல் கல்லறை கட்டிடம். இன்றைக்குப் பிரமிட் என்றால் நம் கண்களுக்கு முன்பாகத் த�ோன்றும் பிரமிடின் முக்கோண வடிவத்தின் முழுமையான த�ோற்றம் இந்தப் பிரமிடிலிருந்தே த�ொடங்குகிறது. எகிப்தின் முதல் முக்கோண வடிவ பிரமிட் இந்தப் பிரமிடே. இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பிரமிடிற்குப் பென்ட் பிரமிட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காரணம் அதன் த�ோற்றம். இந்தப் பிரமிடின் அடிப்பகுதிக்கென்று ம�ொத்தமாக 8-1/2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எட்டரை ஏக்கர் நிலத்தை அடைத்துக்கொண்டு ஒரு கட்டிடம் என்றால் அதன் பிரம்மாண்டத்தைக் கற்பனை செய்துக�ொள்ளுங்கள். ஒருவகையில் இந்தப் பிரமிடே இவனுடைய மகனான பார�ோ கூஃபுவின் தி கிரேட் பிரமிடின் முன் மாதரி என்று துணிந்து ச�ொல்லலாம். படம் 13 பார்க்க. 113
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
ஈம�ோதெப் பார�ோ ஜ�ோசருக்கு கட்டிய ஸ்டெப் பிரமிட் எகிப்திய பிரமிட் கட்டிடக் கலையின் ஒரு மைல் கல் என்றால் பார�ோ ஸ்னெப்ரு-வின் பென்ட் பிரமிட், பிரமிட் கட்டிடக் கலையின் அடுத்த மைல் கல். தரையிலிருந்து இந்தப் பிரமிடின் உச்சி 500 அடிகள் உயரத்திலிருக்கிறது. அதாவது இந்தப் பிரமிடின் ம�ொத்த உயரம் 150 மீட்டர்கள். தரையிலிருந்து முதல் 45 மீட்டர்கள் உயரம் வரை இந்தப் பிரமிடின் நான்கு பக்கங்களும் 60 டிகிரி க�ோணத்தில் வானத்தை ந�ோக்கி மேலே எழுகிறது. பிறகு 45 டிகிரி க�ோணத்தில் உள் பக்கமாக வளைந்து பிரமிடின் உச்சியைத் த�ொடுகிறது. வானத்தை ந�ோக்கி எழும் பாதையின் நடுவழியில் இந்தப் பிரமிடின் நான்கு பக்கங்களும் 45 டிகிரிக் க�ோணத்தில் வளைந்திருப்பதே இந்தப் பிரமிடிற்குப் பென்ட் பிரமிட் என்று பெயர் வரக் காரணம். இந்தப் பிரமிடின் 45 டிகிரிக் க�ோண வளைவிற்கு இரண்டு காரணங்கள் ச�ொல்லப்படுகின்றன. முதலாவது காரணம், இந்தப் பிரமிட் 45 மீட்டர்கள் உயரம் வரை கட்டப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில்தான் பார�ோ ஸ்னெப்ரு-வின் முதல் பிரமிட் இடிந்து விழுந்திருக்கவேண்டும் என்றும் அதே நிலைமை இந்தப் பிரமிடிற்கும் ஏற்ப்பட்டுவிடக் கூடாது என்கிற அச்சத்தில் இந்தப் பிரமிடை கட்டிக்கொண்டிருந்த கட்டிடக் கலை வல்லுநர்கள் இதன் பக்கவாட்டு சுவர்களின் க�ோணத்தை 45 டிகிரிகளாக வளைத்துவிட்டார்கள் என்பது. அடுத்தக் காரணம், எகிப்து அதுவரை கண்டிராத இத்தகைய பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கான கட்டுமானப் ப�ொருட்களின் தட்டுப்பாடு காரணமாகவே கட்டிடக் கலை வல்லுநர்கள் இதன் 60 டிகிரி க�ோணத்தை 45 டிகிரிகளாக வளைத்துவிட்டார்கள் என்பது. இதில் இரண்டாவதாகச் ச�ொல்லப்படும் காரணம் ஏற்புடையதாக இருக்க வாய்ப்பே கிடையாது. எகிப்தில் கற்களுக்குப் பஞ்சமே கிடையாது. வெட்ட வெட்டக் குறையாத கல் குவாரி மலைகள் எகிப்தில் ஏராளம். அதனால் முதல் காரணமே ப�ொருத்தமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் பிரமிடிற்கு வடக்குப் பக்கம் ஒன்று மேற்குப் பக்கம் ஒன்று என்று இரண்டு நுழைவாயில்கள் இருக்கிறது. இந்த ஏற்பாடு அனேகமாகப் பிரமிட் க�ொள்ளையர்களைக் குழப்புவதற்காக 114
நவீனா அலெக்சாண்டர்
இருக்கவேண்டும். இந்தப் பிரமிடிற்கு அருகிலேயே தெற்கில் மற்றொரு சிறிய பிரமிடும் இருக்கிறது (இவற்றைச் செட்டிலைட் பிரமிட் என்பார்கள்). கிழக்கில் கல்லறை க�ோயில் இருக்கிறது. இவற்றை உள்ளடக்கும் படி ஒரு மிகப் பெரிய சுற்றுச் சுவரும் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு அந்தச் சுற்றுச்சுவரின் சுவடு கூட இல்லை. சுற்றுச்சுவரின் கற்கள் பிற்காலப் பார�ோக்களால் உருவியெடுக்கப்பட்டுத் தங்களுக்கான கல்லறை க�ோயில்கள் கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய பிரம்மாண்ட கட்டிடத்தைக் கட்டுவதற்கான ப�ொருளாதார மற்றும் உணவுத் தேவைகளை ஈடுகட்டுவதற்கென்றே எகிப்தில் புதிதாக 35 பண்ணை நிலம் க�ொண்ட நகரங்களையும் 122 கால்நடை பண்ணைகளையும் உருவாக்கியிருக்கிறான் பார�ோ ஸ்னெப்ரு. இந்தச் செய்தியை அவனுடைய ஆட்சியின் பதினான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு நமக்குத் கம்பீரமாகத் தெரிவிக்கிறது. இதே கல்வெட்டு இந்தப் பிரமிடின் உள் கட்டுமான தேவைகளுக்கென்று 40 படகுகள் முழுக்க மிகப் பெரிய மரத் துண்டுகள் வந்தன என்று ச�ொல்கிறது. பார�ோ ஸ்னெப்ரு-வின் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரு படி மேலே சென்று தன்னுடைய பிரம்மாண்ட பிரமிட் கட்டுமானத்தின்போது செய்து காட்டினான் பார�ோ கூஃபு. இராட்சத த�ோற்றத்தில் பென்ட் பிரமிட் எழுந்து நின்றுவிட்டிருந்தாலும் பார�ோ ஸ்னெப்ரு-வின் பிரம்மாண்டத் தாகம் அடங்கியபாடில்லை. இந்த இரண்டு பிரமிடுகளைக் கட்டி முடிப்பதிலேயே அவனுடைய ஆட்சியின் இருபது ஆண்டுகள் கழிந்துவிட்டிருந்தது. தனக்கான மூன்றாவது பிரமிட் ஒன்றையும் கட்டத் திட்டமிட்டான் பார�ோ ஸ்னெப்ரு. கட்டிடக் கலை வல்லுநர்களுக்குப் பகீர் என்றது. எகிப்தியர்கள் அற்பாயுசுக் க�ொண்டவர்களாக இருந்ததால் தாங்களும் பார�ோவும் உயிருடன் இருக்கும்போதே இந்த முன்றாவது பிரமிடையும் கட்டி முடித்துவிட முடியுமா என்கிற பீதியே அவர்களின் பகீருக்குக் காரணம். பார�ோ ஸ்னெப்ரு கட்டிடக் கலை வல்லுநர்களின் இந்தப் பீதியை கண்டுக�ொண்டதாகத் தெரியவில்லை. தன்னுடைய மற்ற இரண்டு பிரமிடுகளுக்குச் செய்த முன் ஏற்பாடுகளைவிடப் பல மடங்கு 115
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
அதிகமாக அதே நேரத்தில் முன்னெச்சரிக்கையுடன் தன்னுடைய மூன்றாவது பிரமிட் கட்டுமானத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான். எகிப்தியப் பார�ோக்களின் வரிசையில் மிக வேகமாகத் தான் உயிருடன் இருக்கும்போதே மூன்று மிகப் பிரம்மாண்டமான பிரமிடுகளை முப்பதே ஆண்டுகளில் கட்டிமுடித்த ஒரே பார�ோ ஸ்னெப்ரு-வாகத்தான் இருப்பான். இவனுடைய ஆட்சியின் முதல் பத்து ஆண்டுகளில் எகிப்திய பிரமிட் கட்டிடத் த�ொழிலாளர்கள் வருடத்திற்கு 46,000 கியூபிக் யார்ட்ஸ் என்கிற கணக்கில் பிரமிடில் கற்களைப் பதித்திருக்கிறார்கள். இது இவனுடைய முதல் பிரமிட் கட்டுமானத்தின்போதான வேகம். படம் 14 பார்க்க. இவனுடைய இரண்டாவது பிரமிடான பென்ட் பிரமிட் கட்டப்பட்ட அடுத்தப் பத்தாண்டுகளில் வருடத்திற்கு 1,05,000 கியூபிக் யார்ட்ஸ் என்கிற கணக்கில் பிரமிடில் கற்களைப் பதித்திருக்கிறார்கள். இவன் இனி கட்டவிருக்கும் சிகப்புப் பிரமிட் கட்டப்பட்ட அடுத்தப் பத்தாண்டுகளில் வருடத்திற்கு 2,00,000 கியூபிக் யார்ட்ஸ் என்கிற கணக்கில் பிரமிடில் கற்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. இவனுடைய இந்த அசூர பிரமிட் கட்டுமான வேகத்தை இவனுக்குப் பிறகும் சரி இவனுக்கு முன்பும் சரி வேறு எந்த ஒரு பார�ோவும் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை. தி கிரேட் பிரமிடிற்கு முன்னோடியான ஸ்னெப்ருவின் சிகப்புப் பிரமிட் இவனுடைய ஆட்சியின் முப்பதாம் ஆண்டு முடிவிற்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இவனுடைய காலம் வரை எகிப்திய தி லேண்ட் ஆப் டெட் கண்ட மிகப் பெரிய பிரமிட் சிகப்புப் பிரமிட்தான். இதற்குச் சிகப்புப் பிரமிட் என்று பெயர் வர காரணம் இதன் வெளிப்புறம் சிகப்புச் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டதுதான். சிகப்புப் பிரமிடைக் கட்டியதன் மூலம் பார�ோ ஸ்னெப்ரு பிரமிட் கட்டிக் கலையில் 16 அடி பாய்ந்திருந்தான். இவனுக்கு அடுத்த எகிப்தின் பார�ோவானவன் இவனுடைய மகன் கூஃபு. பார�ோ கூஃபு கட்டிய தி கிரேட் பிரமிட் ஆஃப் கீசா (Great Pyramid 116
நவீனா அலெக்சாண்டர்
of Giza) எகிப்திய பிரமிட் கட்டிடக் கலையின் உச்சம் மாத்திரம் அல்ல பழைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றும் கூட. தி கிரேட் பிரமிட் பற்றியும் அதன�ோடு இணைந்திருக்கும் ஸ்பிங்ஸ் சிற்பம் குறித்தும் எனது “எனது எகிப்தின் மர்மங்கள்” புத்தகத்தில் விரிவாக பேசிவிட்டதால் அதை மீண்டும் இங்கே திரும்ப கூற விரும்பவில்லை. மேற்கொண்டு பிரமிட் கட்டிடக் கலையை த�ொடர்வோம்.
புக் – II இரண்டில் த�ொடர்ந்து பார்போம்…
117
Reference Books
Prehistory The Story of Art - E.H. Gombrich Mesopotamia The Art of Ancient Mesopotamia: The Classical Art of the Near East by Anton Moortgat Mesopotamia: The World’s Earliest Civilization - Edited by Kathleen Kuiper History Begins At Sumer by Samuel Noah Kramer The Ancient Near East: History, Society And Economy by Mario Liverani Egypt Painting, Sculpture and Architecture of Ancient Egypt by Wolfhart Westendorf Egyptian Art by Jaromir Malek Through Ancient Eyes: Egyptian Portraiture by Donald Spanel 118
நவீனா அலெக்சாண்டர்
Indus From Prehistoric To Modern Times: The Arts of India by Ajit Mookerjee The Indus Civilization by Sir Mortimer Wheeler Chinese A Short History of Chinese Art by Michael Sullivan Mesoamerica Pre-Columbian Archeitecture Of Mesoamerica by Doris Heyden & Paul Gendrop Greece The Architecture of Europe: The Ancient Classical And Byzantine World 3000 BC - AD 1453 - Doreen Yarwood The Art of Classical Greece - Karl Schefold The Art of Greece and Rome - Susan Woodford The Story of Art - E.H. Gombrich Ancient Literacies: The Culture of Reading In Greece And Rome A History of Art & Music - H.W. Janson and Joseph Kerman Understanding Greek Sculpture: Ancient Meanings, Modern Readings - Nigel Spivey 119
கலை, கலகம்: கலை இயக்கங்கள்: புக் - I
Isms of Arts The History of Art by A.N. Hodge Art Explained: The World’s Greatest Paintings Explored and Explained by Robert Cumming
120