புத்தர் சிலையை கைது செய்யுங்கள் ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
நவீனா அலெக்சாண்டர்
Andhazahi Jothi Raji, Vaitheeswaran Chockalingam, Gajiniganth Gulam Dhasthagir, Arun Kumar, Narashiman Sankariah, Mohamed Kasim, Navin Zelva, Mahendran Ameeragam, David J Praveen, Karthik Dilli, Surendar Lohia, Aravind Sankar, Keetru Nandhan, Rameez Raja, Arun Kumar, Haja Syed Abdulkahder, Saravanan, Zahir Ibn Jaffarullah, Ansari Mohamed Copyright © 2017 by Naveena Alexander All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher/Author, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher/Author, at the email below.
[email protected] www.andhazahi.in/ First Edition. February 2017. Price Rs. 100/Andhazahi 12, Pillayar Koil Street, Durga Nagar, Tambaram-Santorium, Chennai - 47 Printed in Chennai, Tamil Nadu.
ப�ொருளடக்கம்
முன்னுரை
1
ஞானத்திற்கு சுயநல சிறகுகள் கிடையாது
4
நான் இல்லை என்பதிலேயே நான் இருக்கிறேன்
14
கேள்விகளும் எதிர் கேள்விகளும்
20
முகச் சூரிய புத்தர் முகநிலா புத்தர்
28
கேள்விகளும் எதிர் கேள்விகளும் தியானமும்
34
கையில் ஒத்தை சந்தனக் கட்டை த�ொங்கும் குச்சி
38
உதிர்ந்த சறகுகளின் அலங்காரம் வாழ்க்கை
42
உன் மனமே புத்தர், புத்தரே உன் மனம்
48
சாப்பிடுவது நேற்றைய மனமா இன்றைய மனமா
56
உடலை சரியவிடுங்கள் மனதை சரியவிடுங்கள்
62
பசியெடுத்தா சாப்பிடுவேன்…தூங்கம் வந்தா தூங்குவேன்
70 III
புத்தாவின் சமாதி சும்மாய் இருத்தல்
76
நாய்க்கு புத்ததன்மை உண்டா
82
ஆதிகாலத்தில் யின்னும் யானுமே
86
தவறுகளை மறைக்கா மனம் புத்தா
92
தத்துவங்களின் நூறு பள்ளிகள்
98
சேறு ச�ொட்டி நிற்கும் எருமையாக என் மனம்
104
Reference Books
110
IV
முன்னுரை
ஒரு சிறிய பனி துளியும் அதற்கென்று விதிக்கப்படாத இடத்தில் விழுவதில்லை. – கென் டான்
மீ
ண்டும் ஒரு ஜென் புத்தகமா என்கிற ஒருவித சலிப்புடன் இந்த புத்தகத்தை கையில் எடுத்திருந்தால் உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள். இது மீண்டும் ஒரு ஜென் புத்தகம் அல்ல. சிறுகதையும் வரலாறும் கலந்த புனைவு இந்த புத்தகம். வரலாற்று நிகழ்வுகளைய�ோ அல்லது வரலாற்று நாயகர்களைய�ோ கதைக்களமாக, கதை மாந்தர்களாக க�ொண்ட வரலாற்று புதினமாக இருக்கலாம�ோ என்கிற முன் அனுமானமும் உங்களின் அவசரத்தையே காட்டுவதாக இருக்கும். அப்படியும் இல்லை. நீங்கள் படிக்க ப�ோகும் சிறுகதை சமகாலத்தில் நடைபெறக் கூடியது. அதில் வரக் கூடிய கதை மாந்தர்களில் ஒன்று வேண்டுமானால் சுமார் 800 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த ஒரு மனிதராக இருக்கலாம். மற்றபடி இது எந்த வகையிலும் வரலாற்று பின்புலம் க�ொண்ட historical fiction சிறுகதை புத்தகம் கிடையாது. இது முழுக்க முழுக்க ஜென் பற்றிய புத்தகம். க�ோகன் என்று அழைக்கப்படும் ஜென் துண்டு கதைகளை ப�ோட்டு பக்கங்கள் நிரப்பப்பட்டு உங்கள் கைகளில் தவழும் புத்தகமும் அல்ல இது. ஜென்னின் ஆதி அந்தம் குலம் க�ோத்திரம் என்று அனைத்தையும் விளக்கி செல்லும் ஒரு பகுதி வரலாற்று புத்தகம். அப்படியென்றால் மறு பகுதி? படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
1
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
ப�ோதி தர்மர் குறித்த புனைவுகளுக்கு பின்னால் இருக்கும் வரலாற்று உண்மைகள், உலகம் முழுவதிலும் இன்றைக்கு பரவலாக பேசப்படும் ஜென்-இந்த நிலையை அடைவதற்கான இலக்கிய பணி செய்த அந்த முக்கிய ஜென் குரு, வடக்கு சா-ஆன் பள்ளியின் பிரதானமாக இருக்கும் க�ோன் கதைகள் என்று பல புதிய வரலாற்று சங்கதிகளை உங்களுக்கு அறிமுகம் செய்யக் கூடிய புத்தம் இது. ஜென்னை குறித்து எனக்கு தெரியாது ஆனால் ஷாவ�ோலின் டெம்பிளை அடிப்படையாக க�ொண்ட சீன மார்ஷியல் ஆர்டஸ் திரைப்படங்களின் இரசிகனாக்கும் நான் என்று உங்களை நீங்கள் பிரஸ்தாபம் செய்துக்கொண்டால் உங்களை நிச்சயமாக இந்த புத்தகம் கைவிடப் ப�ோவதில்லை. சீன ஷாவ�ோலின் டெம்பிளின் பிரதான சங்கதியாக இருக்கும் குங்பூ தற்காப்பு கலை குறித்தும் உண்மையில் ப�ோதி தர்மர்தான் இந்த தற்காப்பு கலையை சீன நாகரீகத்தில் அறிமுகப்படுத்தினாரா என்பது குறித்தும் கூட பேச கூடியது இது. இவ்வளவுதானா என்று இலேசாக எடைப்போட்டுவிட வேண்டாம். பெளத்த மதத்தின் த�ொடக்கம் குறித்தும் அதிலிருந்து கிளைத்த மற்ற பெளத்த பிரிவுகள் குறித்தும் அதிலிருந்து உருவெடுத்த ஜென் குறித்தும் உங்களுடன் தனிப்பட்ட முறையில் அமர்ந்து பேசும் தன்மை க�ொண்டது இந்த புத்தகம். ஜென் புத்தகம் என்று ச�ொல்லிவிட்டு ஜென் கதைகள் இல்லையென்றால் எப்படியாம் என்கிற ஆதங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் கூட இது கவனமாகத்தான் இருக்கிறது. ஆம் நீங்கள் எதிர் பார்க்க கூடிய அதே சமயத்தில் வெகுசன வாசிப்பு தளத்தில் வாசித்து அறிந்திராத சில ஜென் கதைகளையும் கூட ச�ொல்கிறது இது. க�ோன் விடுகதைகளுக்கு விளக்க உரை எழுதிய ஜென் குருவே அவருடைய வாயால் இந்த கதைகளை ச�ொல்வது நீங்கள் வேறு எந்த ஒரு ஜென் புத்தகத்திலும் அறிந்திராத ஒன்று. அது எப்படி இவ்வளவும் இந்த ஒரு புத்தகத்தால் முடியும் என்று நீங்கள் புருவங்களை உயர்த்துவதற்கு பதிலாக இந்த புத்தகத்தின் பக்கங்களை உயர்த்தி புரட்டுங்கள். உங்களுக்கான விடை தானாகவே புலப்படும். ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும். நவீனா அலெக்சாண்டர்
[email protected]
2
நவீனா அலெக்சாண்டர்
3
ஞானத்திற்கு சுயநல சிறகுகள் கிடையாது
ஜென் என்பது வெளியில் தேடி கண்டடையக் கூடி அற்புதம் அல்ல, நம் அன்றாட பணிகளை ஒருமுகப் படுத்தப்பட்ட மனதுடன் செய்து வருவதே ஜென் – சுன்ரேயு சுசுகி.
நி
த்தின் தூக்கி வாரிப்போட்டு எழுந்து உட்கார்ந்தான். உடம்பு முழுவதும் வியர்வை திட்டுத் திட்டாக வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. அவன் முகத்திலும் முத்து முத்தாக வியர்வைத் துளிகள். சில வியர்வைத் துளிகள் ஜ�ோடி சேர்ந்துக�ொண்டு அவன் முகத்தில் த�ொடர் ஓட்டப் பந்தயம் நடத்துவதைப் ப�ோல வழிந்து ஓடின. முகத்தில் வழிந்து ஓடும் வியர்வையைத் துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் அறையைப் படபடப்புடன் சுற்றும் சுற்றும் பார்க்கிறான். தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தவன் சற்று நேரத்திற்கு முன்புதான் கண் அசந்தான். குப்புறப் படத்து தூங்கிக்கொண்டிருந்தவனின் முதுகில் யானை ஒன்று ஏறி அமுக்கியதைப் ப�ோன்ற உணர்வு. பல விநாடிகளின் ப�ோராட்டத்திற்குப் பிறகுதான் அவனால் கண்களை விழித்துக்கொண்டு இப்படி எழுந்து உட்கார முடிந்திருக்கிறது. அவனைத் தவிர அறைக்குள் மற்றொரு ஆசாமி இருக்கிறார். அப்படித்தான் ச�ொன்னது அவனுடைய உள்ளுணர்வு. தாளிட்ட அறைக்குள் எப்படி ஆள் நுழைய முடியும். அவனுடைய மூளை அதுவே கேள்வி எழுப்பிக் க�ொண்டு அவனை ஆசுவாசப்படுத்த முயன்றுக�ொண்டிருந்தது. 4
நவீனா அலெக்சாண்டர்
அவன் மூளை ச�ொல்வதைக் கண்டுக�ொள்ளாத மனம் அறையில் யார�ோ இருக்கிறார்கள் என்று அவனுக்கு அடித்துச் ச�ொல்லியது. நித்தின் பன்னாட்டுக் கார்பரெட் கம்பெனி ஒன்றில் அடிமையாக மன்னிக்கவும் டெக்னிக்கல் சப்போர்ட் எக்ஸிகியூட்டிவா வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். இரவில்தான் அவனுக்கு வேலை. பகலில் தூக்கம். பகல் வெளிச்சம் அறைக்குள் வந்தால் தூக்கம் கெட்டுவிடும் என்பதால் அறைக்குள் பகல் வெளிச்சம் வரக் கூடிய அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டு அறைக்குள் செயற்கை இரவை உண்டாக்கித் தூங்குவது அவனது வழக்கம். இன்றைக்கும் அப்படி அறையின் அனைத்துச் சந்து ப�ொந்துகளையும் அடைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தவனுக்குத்தான் இப்படியான ஒரு அனுபவம். இதற்கு முன்பு இப்படியான அனுபவம் அவனுக்கு ஏற்பட்டதே கிடையாது. நண்பர்கள் ச�ொல்ல கேட்டிருக்கிறான் ஆனால் அவன் நேரடியாக இப்படி அனுபவிப்பது இதுதான் முதல் முறை. பகலிலேயே அந்த அறை இரவு ப�ோல இருந்ததால் எழுந்து உட்கார்ந்த நித்தினின் கண்களில் மை இருட்டைத் தவிர வேறு எதுவும் தட்டுப்படவில்லை. ஆனால் மனம் மாத்திரம் ஓயாமல் அறைக்குள் யார�ோ இருக்கிறார்கள் என்று ச�ொல்லிக்கொண்டே இருந்தது. மூளை அது எப்படி முடியும் அறைக் கதவு தாழிடப்பட்டிருக்கிறது என்று அவனுக்குள் தைரிய சமாதான சுரப்பியை சுரந்துக�ொண்டிருந்தது. சட்டென்று உணர்வு வந்தவனாக உடம்பிலும் முகத்திலும் வழியும் வியர்வையைக் கட்டிலில் கையைத் துழாவி கழட்டிப்போட்டிருந்த சட்டையை எடுத்துத் துடைத்துவிட்டுக்கொண்டான். கட்டிலில் இருந்து எழுந்தவன் அறை சன்னலின் ஸ்கிரீனை விலக்கிவிட்டான். பகலின் சூரிய வெளிச்சம் அடித்துப்பிடித்துக்கொண்டு அறைக்குள் பரவியது. நித்தினுக்குச் சில விநாடிகளுக்குக் கண்களைத் திறக்க முடியாத அளவிற்குக் கூச்சம். கண்களை இறுக்கி மூடியிருந்தவன் திறந்துப் பாரத்தான். அறைக்குள் யாரும் இல்லை. அது ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு. அவனும் மேலும் இரண்டு நண்பர்களும் ஷேரிங்கில் அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். பெரிய அறைகள் க�ொண்ட வசதியான வீடுதான் அது. மற்ற இரண்டு நண்பர்களும் வேலைக்குச் சென்றிருந்தார்கள். மற்ற இரண்டு நண்பர்களும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். இவன் ஐடிஈஎஸ் நிறுவனத்தில். ஐடி எனேபில்ட் சர்வீசஸ் நிறுவனங்களில் பெரும்பாலும் இரவுதான் வேலை. அமெரிக்ககாரன் விழித்துக்கொண்டிருக்கும்போதுதானே 5
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
இவன் வேலை செய்ய முடியும். அதான் முழுக்க முழுக்க இரவு நேர வேலை. இந்த வேலையில் நித்தின் கடந்த மூன்று வருடமாக வேலை செய்துக�ொண்டிருக்கிறான். இந்த மூன்று வருடங்களும் அவனுக்கு இரவுதான் பகல். பகல்தான் இரவு. அறைக்குள் ஏத�ோ அசைவதைப் ப�ோல இருந்தது. நித்தின் சட்டென்று திரும்பிப் பார்த்தான். அறைக்குள் அவனைத் தவிர வேறு ஜீவராசி இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. இருந்தாலும் அவன் மனம் யார�ோ இருக்காங்க யார�ோ இருக்காங்க என்று பினாத்திக்கொண்டே இருந்தது. அறைக் கதவைத் திறந்துக�ொண்டு முன் அறைக்கு வந்தான். பேச்சுளர்களின் வீடுதான் என்றாலும் ஒழுங்குடன் நேர்த்தியாக இருந்தது வீடு. சமையலறைக்குள் சென்று ப்ரிட்ஜைத் திறந்து க�ோக்கை எடுத்து மூடியைத் திருகி அந்த கரும் பானத்தை வாய்க்குள் கவிழ்த்துக்கொண்டான். மட மடக்கென்று இரண்டு மிடறு குடித்துவிட்டு முன் அறையில் டீவிக்கு முன்னால் வந்து உட்கார்ந்தான். அவன் தலை அவனையும் அறியாமல் திரும்பி அவன் அறையைப் பார்த்துக்கொண்டது. அவன் அறை இப்போதும் வெறிச்சோடித்தான் கிடந்தது. ச�ோபாவிற்கு முன்னால் இருந்த மேஜையில் குப்புறக் கிடந்த ரிம�ோட்டை எடுத்துப் பாதிச் சுவரை அடைத்துக்கொண்டு சுவரில் த�ொங்கிக்கொண்டிருந்த டீவியை ஆன் செய்தான். அவ்வளவு பெரிய எல்சிடி திரையில் தமிழ் பாடல் ஓடத் த�ொடங்கியது. நித்தினின் கண்களைக் காட்சிகளை உள்வாங்க அவனுடைய மூளை அவனை நிதானப்படுத்தத் த�ொடங்கியது. காட்சிகளில் கவனத்தைக் க�ொண்டுவந்தவன் லேசாகத் தலையைச் சாய்த்துக் கண்களை மூட அவனுடைய அறையில் மீண்டும் ஏத�ோ அசைவு. படக்கென்று கண்களை விழித்துக்கொண்டு அவனுடைய அறையைப் பார்த்தான். நிச்சயமாக மஞ்சள் நிற உடை ஒன்று நகர்ந்த உணர்வு. எவன�ோ வீட்டிற்குள் புகுந்துவிட்டான் என்கிற எச்சரிக்கை உணர்வு நித்தினின் உடலில் க�ோர்டிச�ோலின் சுரப்பை அதிகரிக்கப் படகென்று எழுந்துக�ொண்ட நித்தின் அவசர அவசரமாகச் சமையலறைக்குள் சென்று காய் நறுக்கும் கத்தியை கையிலெடுத்துக்கொண்டு தன் அறை சுவருக்கு முன் ப�ோய் மிக எச்சரிக்கையாக நின்றுக�ொண்டான். ‘நீ நினைக்கற அளவுக்கு ஒன்னும் பிரச்சனையில்லை தம்பி’ அறைக்குள்ளிலிருந்து குரல். சற்றே கரகரப்பும் அழுத்தமும் க�ொண்ட குரல். 6
நவீனா அலெக்சாண்டர்
‘இங்க திருடறதுக்கு ஒன்னுமில்ல’ நித்தின் முன்னிலும் அதிகப் படபடப்புடன். ‘நிஜமா இங்க திருடறதுக்கு ஒன்னுமில்லையா’ ‘இல்ல இது பேச்சிலர்ஸ் வீடு இங்க திருடறதுக்கு ஒன்னுமில்ல’ நித்தின். அவன் பேசிக்கொண்டிருந்தாலும் அவனுடைய மூளை ப�ோலீசுக்கு ப�ோன் செய்யும்படி அவனுக்கு எச்சரிக்கை மணி அடிக்க டக்கென்று பாண்ட் பாக்கெட்டை துழாவியவனுக்கு அப்போதுதான் தெரிந்தது கைப்பேசி அவனுடைய அறைக்குள் இருப்பது. ஷிட் என்று கையை ஓங்கி சுவரில் குத்திக்கொண்டான். ‘ப�ோலீச குப்புடற அளவுக்கு நா ஆபத்தான ஆள் இல்ல தம்பி’ நித்தினுக்குத் தூக்கிவாரிப் ப�ோட்டது. நாம் நினைத்ததை இந்த ஆள் எப்படி அவனுக்குள் அதிர்ச்சி. ‘யார் நீ’ ‘உள்ள வா ச�ொல்றேன். எந்த ஆபத்தும் இல்ல நம்பலாம்’ வெளியே ப�ோய் யாரையாவது உதவிக்கு அழைத்து வந்துவிடலாம் என்று அவனுடைய மூளை அவனுக்கு அடுத்த ய�ோசனையைத் தூண்டியது. அந்த ய�ோசனை முடிவதற்கு முன்பே அறைக்குள்ளிருந்து குரல். ‘என்னைய நீ ஒருத்தனே அடிச்சுப்போட்டுறலாம் தம்பி. இதுக்காக நீ கூட்டத்தலாம் சேக்கனும்னு அவசியமில்ல’ நித்தினுக்கு மீண்டும் அதிர்ச்சி. ‘ய�ோசனைகள் உருவாகறதுமில்ல மறையறதுமில்ல தம்பி. உங்க மனசயும் மூளையையும் நா படிக்கிறதா நினச்சுக்க வேண்டாம். ஏற்கனவே இருக்கிற ஒன்ன நா எப்படிக் கண்டுபிடிக்க முடியும். பயப்படாம உள்ள வாங்க. இங்க வரக் கதகதப்பான காத்து உடம்பு நல்லா இருக்கு.’ இது நித்தினை மேலும் குழப்பியது. 7
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
‘முதல்ல நீ…..நீங்க யாருன்னு ச�ொல்லுங்க’ ‘ட�ோஜன் சென்ஜி’ நித்தினுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன ச�ொன்னீங்க’ ‘என் பேரு ட�ோஜன் சென்ஜின்னு ச�ொன்னேன். உடம்ப பிடிச்சுவிடற இந்தக் காத்த வீணாக்காதிங்க தம்பி உள்ள வாங்க. வந்து இங்க உக்காருங்க’ ட�ோஜன் சென்ஜி. நித்தின் என்ன செய்வது என்கிற குழப்பத்துடனேயே தயங்கியபடி தன் அறையை எட்டிப் பார்த்தான். கையிலிருக்கும் கத்தியை மேலும் உறுதியாகப் பிடித்தபடியே. அவனுடைய அறைக்குள் இருந்த ச�ோபாவில் மஞ்சள் உடை அணிந்திருந்த ட�ோஜன் சென்ஜி உட்கார்ந்திருந்தார். அவர் அணிந்திருந்த உடை அமைப்பை அவன் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்களில் பார்த்திருக்கிறான். ட�ோஜன் சென்ஜியும் அசப்பில் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்களில் வரும் ஷாவ�ோலின் டெம்பில் குரு ப�ோலவே இருந்தார். என்ன அவன் பார்த்த திரைப்படங்களில் ஷாவ�ோலின் டெம்பில் குருக்கள் கெழடுகளாக இருப்பார்கள் ஆனால் இவர் படு இளமையாக இருந்தார். அறைக்குள் நுழைந்த அவனைக் கண்டுக�ொள்ளாமல் சன்னலுக்கு வெளியே பகலின் வெயிலைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகளில் மெல்லிய புன்னகை. ஆனால் அவருடைய முகமும் சிரிப்பதைப்போன்றே இருந்தது. நித்தியன் தயங்கியபடியே அவருக்கு முன்னால் வந்து நின்றான். ரூம்மேட்ஸ் ச�ொந்தமா இருக்கும�ோ என்று அவனுக்குள் அடுத்த ய�ோசனை. ‘உக்காருங்க தம்பி. இங்க யாரையும் எனக்குத் தெரியாது. இங்க யாரும் எனக்குச் ச�ொந்தமும் இல்ல’ ட�ோஜன். நித்தினுக்குள் இருந்த பயமெல்லாம் சுத்தமாக மறைந்து இப்போது அவனை முழுவதுமாகப் பிடித்துக்கொண்டது ஆச்சரியம் மட்டுமே. அவர் மீதிருந்து கண்களை எடுக்காமல் நித்தின் மெதுவாகக் கட்டிலில் உட்கார்ந்தான். பல விநாடிகள் கடந்துவிட்டிருக்கும். நித்தின் தன் எதிரிலிருப்பவரையே பார்த்துக்கொண்டிருந்தான். ட�ோஜன் எதுவும் 8
நவீனா அலெக்சாண்டர்
ச�ொல்லாமல் அதே சிரித்த முகத்துடன் இன்னமும் சன்னலுக்கு வெளியேதான் பார்த்துக்கொண்டிருந்தார். ‘நீங்க சைனீசா’ நித்தியன் மெதுவாக. ட�ோஜன் அவனுடைய கேள்விக்கு இல்லை என்பதைப் ப�ோலத் தலையசைத்தார். ‘ஜப்பான். ஆனா சைனாவும் எனக்குப் பழக்கமான நாடுதான்’ ட�ோஜன். ‘இங்க எதுக்கு….’ நித்தின் தயக்கமாக இழுத்தான். ‘பயணமா வந்திருக்கிறேன். காஞ்சிபுரத்துக்குப் ப�ோகனும்.’ ட�ோஜன். ‘ஓ……’ நித்தின். ‘ஒரு கப் டீ கிடைக்குமா. கதகதப்பான இந்தப் பகல் வெளிச்சத்த டீ குடிச்சுக்கிட்டே ரசிக்கறது…..ஓ…..அருமையான தருணங்களா இருக்கும்’ ட�ோஜன். நீத்தினுக்கு அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பமே பெரிதாக இருக்க ட�ோஜன் கேட்ட டீ விசயம் அவன் மண்டைக்குள் ஏறவில்லை. ட�ோஜன் மெதுவாகத் தனக்குள் சிரித்துக்கொண்டே. ‘தாவ�ோ குரு லாவ�ோட்சாவுக்குக் கிடச்ச அந்த முதல் டீ விருந்துப�ோல’ ட�ோஜன்.** (** சீனாவில் விருந்தினர்களுக்கு டீ க�ொடுத்து உபசரிக்கும் வழக்கம், தாவ�ோ குரு லாவ�ோட்சுக்கு ஒரு சீடர் டீ க�ொடுத்து உபசரித்த நிகழ்விலிருந்தே த�ொடங்குவதாகச் சீன பாரம்பரியம் ச�ொல்கிறது. Source - Book Of Tea) நித்தின் தயக்கத்துடன் எழுந்து சென்றான். சில விநாடிகள் கழித்து ஆவி பறக்கும் டீ கப்புடன் வந்தான். ஆவி பறக்கும் டீ கப்பை அவனிடமிருந்து வாங்கிக்கொண்ட ட�ோஜன் அதை ஆர்வமுடன் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு மீண்டும் சன்னலுக்கு வெளியே வெளிச்சத்தைப் பார்க்கத்தொடங்கிவிட்டார். அவர் டீ குடித்த விதம் அதுவரை நித்தின் பார்க்காத ஒன்று. அப்படிய�ொரு இரசனையுடன் தன் கையிலிருக்கும் டீயை இரசித்துக் குடித்தார் ட�ோஜன். ‘சாசன்ல** டீக் குடிக்கறத ஒரு பழக்கமா மாத்துனவரு மிய�ோன் ஈசாய்***. ஓ ஜப்பானின் முதல் ஜென் குரு மிய�ோன் ஈசாயே’ ட�ோஜன். 9
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
(** சாசன என்பது தியானம். தியானத்தில் அமர்ந்திருப்பது. ***மிய�ோன் ஈசாய் [கி.பி. 1141-1215]. ஜப்பானில் ஜென் வழியை அறிமுகப்படுத்திய ஜென் துறவி. இவர் நிறுவிய ஜென் முறை ஜப்பானில் ரின்சாய் பிரிவு என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானின் முதல் ஜென் குரு) ஜென் என்கிற வார்த்தையை இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்கிறான் நித்தின். அவனுடைய பல கார்பெரட் கம்பெனி நண்பர்கள் ஜென் என்கிற வார்த்தையைப் பலமுறை உச்சரிக்கக் கேட்டிருக்கிறான். கார்பரெட் கம்பெனி வேலைக் கனவுகளில் திளைக்கும் அனைத்து இளைஞர்களும் அறிந்திருக்கும் ச�ொல்லப்போனால் கார்பரெட் நிறுவனங்களில் வேலை செய்யும் பல இளைஞர்களுக்கு உற்சாக மூட்டப் பயன்படுத்தப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் என்கிற பிம்பம் கூடச் ஜென் பயிற்சி மேற்கொண்டதாக நித்தின் கேள்விப்பட்டதுண்டு. கார்பரெட் கம்பெனி நிறுவனம் ஒன்றின் உயர் பதவிக்குப் ப�ோகவேண்டும் என்பது நித்தினின் கனவு. கனவு என்பதை விட அதை ஒருவிதமான விடாப்பிடியான அடம் என்று ச�ொல்லலாம். இந்த அடத்தை அடைய அவன் எந்த நிலைக்கும் இறங்கி வேலை செய்யத் தயாராக இருப்பவன். கார்பரெட் வேலைச் சூழலில் பிட்டஸ்ட்-வில்சர்வைவ் என்பதை நம்பக் கூடியவன். அது நம்பிக்கை என்பதைவிட அது நியாயம்தான் என்று கருதக்கூடியவன். நம்பிக்கைக்கும் நியாயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே. நம்பிக்கை புறவயமானது. நியாயம் உள்ளம் தீர்மானிக்கக் கூடியது. தான் செய்வது நம்புவது அனைத்தும் சரியானதுதான். தான் செய்வதே ச�ொல்வதே சரியானது என்பது நியாயம். ‘ஜென் பத்தி கேள்விப்பட்டிருக்கேன்’ நித்தின். ட�ோஜன் ஒன்றும் ச�ொல்லவில்லை. கையிலிருக்கும் டீயை இரசித்துக் குடித்துக்கொண்டே சன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். ‘நீங்க மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டரா’ நித்தின். இந்த மனிதன் எதற்குத் திடுதிப்பென்று நம் அறைக்குள் வந்து உட்கார்ந்திருக்கிறார். யார் இவர், எப்படி நம் வீட்டிற்குள் நுழைந்தார், எப்படி இந்த ஆளை இங்கிருந்து வெளியேற்றுவது ப�ோன்ற கேள்விகள் அவனுடைய மனதில் எழுந்து எழுந்து அடங்கிக்கொண்டிருந்தது. நாம் எதை நினைத்தாலும் இந்த மனிதர் அதைக் கண்டும் பிடித்துவிடுகிறாரே என்கிற பயமும் அவனுக்குள் ஒரு பக்கம். எது ய�ோசித்தாலும் மாட்டிக்கொள்வோமே 10
நவீனா அலெக்சாண்டர்
என்கிற முன்னெச்சரிக்கையும் சேர்ந்துக�ொண்டு குழப்பியெடுத்துக்கொண்டிருந்தன.
அவனைக்
நித்தினுடைய கேள்வியை அவர் கண்டுக�ொள்ளவே இல்லை. கையிலிருக்கும் டீயையே இரசித்துக் குடித்துக்கொண்டிருந்தார். அந்தக் கப் டீயை அவர் குடித்து முடிக்கச் சுமார் அரைமணி நேரம் ஆகியிருந்தது. அந்த அரைமணி நேரமும் அவரிடம் மெளனம்தான். நித்தின் இது என்னடா வேதனை என்பதுப்போல அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு கிளாஸ் டீயை அரைமணி நேரமாகக் குடிக்கும் ஒரு ஆளையும் அவன் இப்போதுதான் பார்க்கிறான். ‘நேர்மையும் நியாயமும் இல்லாத இடத்தில் ஞானம் இருக்க முடியாது. ஞானம் இல்லாத இடத்தில் நேர்மையும் நியாயமும் இருக்க முடியாது’ கையிலிருந்த டீயின் கடைசித் துளியை பருகி முடித்த ட�ோஜன் ப�ொறுமையாகச் ச�ொன்னார். ‘புரியல’ நித்தின். ‘நீ ஜென்னை அறிந்த இடத்தப் பத்தி ச�ொன்னேன்’ ட�ோஜன். நித்தின் மேலும் குழும்பிப�ோனான். பிறகு க�ொஞ்சமே சுதாரித்தவனாக, ‘ஷாவ�ோலின் டெம்பில் பத்தி ச�ொல்றீங்களா’ ‘கார்பரெட்டுகள் ச�ொல்லும் ஜென்னை ச�ொன்னேன். ஜாப்சோட ஜென்னைப் பத்தி ச�ொன்னேன்’ ட�ோஜன். ‘ஓ…’ நித்தின். ‘நித்திய பாதை** தனி மனித ஞானத்தை மட்டும் ச�ொல்லல’ ட�ோஜன். (** Great Way – நித்திய பாதை. மாஹாயன ப�ௌத்தம் நித்திய பாதையை அடிப்படையாகக் க�ொண்டது. ப�ௌத்தத்தில் மாஹாயனம் ஹீனாயனம் என்று இரண்டு பிரிவுகள் இருக்கிறது. இந்த இரண்டு பிரிவுகளின் அடிப்படைகளை இனி ப�ோகப் ப�ோகப் பார்க்கலாம். ஜென் மாஹாயன பெளத்த கருத்துக்களை அடிப்படையாகக் க�ொண்டது.) ‘சுயநல சிந்தனைய வச்சுக்கிட்டு ஞானத்தை அடையவே முடியாது. சுயநல ந�ோக்கத்துக்காகச் ஜென்னை பயன்படுத்தவும் முடியாது’ ட�ோஜன். 11
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
இது சரிப்படாது நேரடியாவே பேசிடவேண்டியதான் என்று முடிவெடுத்த நித்தின், ‘நா தூங்கனும். நைட்டு வேலைக்குப் ப�ோகனும். ச�ோ நீங்க கிளம்பினா நல்லாருக்கும்’ ‘ஓ….மன்னிக்கனும் தம்பி. நா கிளம்பிடறேன்’ ட�ோஜன் எழுந்துக�ொண்டு டீ கப்பை அவனிடம் க�ொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் ப�ோய்விட்டார். நித்தினுக்கு ஒரு பெரும் திருப்தி மூச்சு. அவருக்குப் பின்னாலேயே ப�ோய் மனிதர் தெருவில் இறங்கி நடப்பதை உறுதி செய்துக�ொண்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து பழையபடி எல்லாக் கதவு சன்னல்களையும் இழுத்து மூடிவிட்டுக் கட்டிலில் வந்து விழுந்தான். நடந்து முடிந்த விசயங்கள் அனைத்தும் ஒரு கனவு ப�ோல இருந்தது அவனுக்கு. உண்மையிலேயே இது கனவுதானா என்கிற தடுமாற்றமும். இருக்க வாய்ப்பே இல்லை. உண்மைதான். யார் இந்த ஆளு, எதுக்கு இங்க வந்துச்சு, அதுவும் நம்மளத் தேடி இது ப�ோன்ற கேள்விகள் அவனைத் தூங்க விடவில்லை. லேசான தூக்கமும் இப்படியான கேள்விகளுமாகப் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். அரையும் குறையுமாகத் த�ொடர்பற்று வந்துக�ொண்டிருந்த அவனுடைய கனவுக் காட்சிகளில் ஷாவ�ோலின் டெம்பில் கிழட்டுக் குருக்கள் சைனீஷ் ம�ொழியில் கத்திக்கொண்டே ஆக்கிர�ோஷமாகக் குங்பூ அசைவுகளைச் செய்துக�ொண்டிருந்தார்கள். திடீரென்று புரூஸ் லீ அவர்களுக்கு மத்தியில் நிற்கும் காட்சி. ஒரு ஜென் குரு ஓங்கி புரூஸ் லீயின் தலையில் அடிக்கிறார். அதைத் த�ொடர்ந்து புரூஸ் லீ பல பேரை அடித்து ந�ொறுக்கும் சினிமா காட்சிகள். இதையெல்லாம் டீ குடித்தபடியே ட�ோஜன் சென்ஜி அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் ஐ ப�ோன் ஒன்றை அறிமுகப்படுத்தும் காட்சி இடையில். ட�ோஜன் சென்ஜியின் காதுகளில் தீடிரென்று ஹெட்போன்கள். கைப்பேசியின் அலாரம் சத்தமாக அலறி நித்தினை எழுப்பி விட்டது. சில விநாடிகள் இரவா பகலா என்கிற குழப்பம் அவனுக்கு. இந்தக் குழப்பம் வழக்கமானதுதான். நில நாட்களில் தூங்கி எழும்போது எந்தத் தேதியில் எந்தக் கிழமையில் இருக்கிற�ோம் என்பது கூட அவனுக்குக் குழப்பமாக இருந்திருக்கிறது. அறைக் கதவை திறந்துக�ொண்டு முன் அறைக்கு வருகிறான். முன் அறையில் அவனுடைய ரூம் மெட்களில் ஒருவனான கார்த்திக் டீவி பார்த்துக்கொண்டிருக்க நித்தின் அவனைக் கடந்து பாத்ரூமிற்குள் நுழைந்தான். 12
நவீனா அலெக்சாண்டர்
13
நான் இல்லை என்பதிலேயே நான் இருக்கிறேன்
சாமானியன் ஒருவன் ஞானமடைகிறப�ோது அவன் ஞானியாகிறான். இதை புரிந்துக்கொள்ளும் ஞானி சாமானியனாகிறான். – ஜென் வார்த்தைகள்
நூ
ற்றுக் கணக்கில் கணினிகள் கண் சிமிட்டிக்கொண்டிருந்த அந்த மிகப் பெரிய நீண்ட அறையில் தன்னுடைய மேசை முன்பு கண்ணத்திற்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு கணினியை வெறித்துக்கொண்டிருந்தான் நித்தின். அவனுடைய வலது கை அருகிலிருந்து கம்பியூட்டர் மெளவுசை உருட்டிக்கொண்டிருந்தது. அந்தக் கார்பரெட் நிறுவனத்தின் இலாபத்தைக் கூட்டம் டீம் மீட்டிங் ஒன்றை அப்பொழுதுதான் முடிவித்துவிட்டு வந்து உட்கார்ந்திருந்தான். கடந்த இரண்டு நாட்களாகவே ஒரு நிமிடம் கூட அப்படி இப்படிப் பார்க்க முடியாத அளவிற்கான வேலை. இன்னும் ஆறு மாதத்திற்குள் டீம் மேனேஜரிலிருந்து ப்ரோஜக்ட் மேனேஜர் ஆகிவிடவேண்டும் என்பது அவனுடைய டார்கெட். இது அவனுக்கு அவனே ஏற்படுத்திக்கொண்ட டார்கெட். அவனுக்குக் கீழிருக்கும் டீமை சக்கையாகப் பிழிந்து கடந்த ஒரு வருடமாக ‘இம்பரசிவ் பெர்மான்ஸ்’ காட்டிக்கொண்டிருப்பதில் அவனுடைய டீம்தான் இப்போதைக்கு முதலில் இருக்கிறது. இந்த முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவன் தன் டீம் மெம்பர்களிடம் சாமத்தையும் தானத்தையும் பேதத்தையும் தண்டத்தையும் சரிவிகத்தில் கலந்து காட்டுவது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இரண்டு பேரின் வேலைக்கு உலைவைத்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறான். 14
நவீனா அலெக்சாண்டர்
எபிஷியன்சி இல்லை என்று காரணம் காட்டி. அவனுடைய மேனேஜர் கனவை நிறைவேற்ற உழைக்க முடியாத அல்லது உழைக்க மறுக்கும் அனைவரும் அவனைப் ப�ொறுத்த வரை எபிஷியன்சி இல்லாதவர்கள். அடுத்தவனின் உழைப்பில் தனக்கான வளர்ச்சி இருக்கிறது என்பதே அவனுடைய கார்பரெட் பாலபாடம். வளர்ச்சிக்கான வெற்றி சூத்திரம் கூட. இன்றைக்குத்தான் அவனுக்குக் க�ொஞ்சம் ஓய்வு. கூகுளில் ட�ோஜன் சென்ஜி என்று டைப் செய்து என்டர் க�ொடுத்தான். கணினித் திரையில் பக்கம் வந்து விழுந்தது. அதில் ஒரு லிங்கை தேர்வு செய்து அந்தப் பக்கத்தைத் திறந்தான். கண்ணை கவரும் பல ஆன் லைன் விளம்பரங்கள் அந்தப் பக்கத்தின் கீ இடங்களில் மின்ன ட�ோஜன் சென்ஜி கி.பி. 1200 – 1253 என்று க�ொட்டை எழுத்துக்களில் தலைப்பு. அதற்குக் கீழே ப�ொடி எழுத்துக்களில் மிக நீண்ட ஆங்கிலக் கட்டுரை. க�ொட்டை எழுத்துத் தலைப்பை பார்த்ததுமே நித்தினுக்குக் குழப்பம். இந்த ஆளு எட்னூறு வருசங்களுக்கு முன்பு இருந்தவரா என்று அவனுடைய நெற்றி சுருங்கிக் க�ொண்டிருக்கும்போதே அவனுக்கு அருகில் அந்தக் கரகரத்த குரல் ஒலித்தது. காலையில் கேட்ட அதே கரகரத்த மந்திரக் குரல். நித்தினின் உடல் முழுவதும் சிலிர்த்துச் சில்லிட்டுப்போய்க் குரல் வந்த திசையில் சட்டென்று திரும்பிப் பார்த்தான். ட�ோஜன் சென்ஜி அதே மஞ்சள் நிற உடையில் அவனுக்கு எதிரே உட்கார்ந்திருந்தார். அதே சிரிப்பு. ‘என்ன பத்தி தெரிஞ்சிக்க என் கிட்டியே கேட்டிருக்கலாமே. அதுக்கு எதுக்கு அந்தக் குப்பையைப் ப�ோய் ந�ோண்டறீங்க தம்பி’ ட�ோஜன் சென்ஜி. நித்தினுக்குப் பதில் ச�ொல்ல நாவே எழவில்லை. இவர் எப்படி இங்கே. கம்பெனிய�ோட செக்கியூரிட்டி மெஷர்ச கடந்து இவர் எப்படி உள்ள வந்தார். அதுவும் சரியா என் பிள�ோரை கண்டுபுடுச்சு. அவனுக்குள் மீண்டும் குழப்ப கேள்விகள். அத்தோடு சேர்த்து இந்த ஆளு பேயா பிசாசா என்கிற பயமும் லேசாகச் சேர்ந்துக்கொண்டுவிட்டது இப்போது அவனுக்கு. ‘ஒரு கப் டீ குடுச்சிக்கிட்டே பேசுவ�ோமா’ ட�ோஜன் கேட்டுக்கொண்டே எழுந்து கேபிட்டீரியா இருக்கும் திசையை ந�ோக்கி நடக்கத் 15
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
த�ொடங்கினார். நித்தினுக்குக் கை கால் லேசாக ஆட்டம் காணத் த�ொடங்கிவிட்டது. புல�ோரில் இருப்பவர் அவரைப் பார்த்துவிட்டால். படபடப்புடன் எழுந்து அவருக்குப் பின்னால் ஓட்டமும் நடையுமாக நடந்தான். புல�ோரில் இருப்பவர்கள் அவரை அதிசயமாகப் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். ஆனால் யாருமே அவரைக் கண்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. இப்படி ஒரு ஆள் அங்கே இருப்பதே தெரியாதவர்களைப் ப�ோலத்தான் இருந்தார்கள். நடந்துக�ொண்டிருந்த ட�ோஜனை கடந்து எதிரே வந்த அவனுடைய நண்பனும் உட்பட. ‘என்னா மச்சி, கேபிட்டீரியா தவற மத்த எங்கையும் வேல செய்யறதில்ல ப�ோல’ என்று கேட்டுக்கொண்டே அவனைக் கடந்து ப�ோனான். இவனும் பார்க்கவில்லை. அப்படின்னா இந்த மனிதர் நம்ம கண்ணுக்கு மட்டும்தான் தெரியறாரா.இது எப்படி முடியும். ஒரு வேல இது கனவா. நிச்சயமா இருக்க முடியாது. கேபிடீரியா இருக்க இடம் ர�ொம்ப நல்லா தெரிஞ்ச ஆளு மாதரி கரெக்டா அங்க ப�ோயிட்டிருக்காரு. இவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும். அந்தக் கம்பெனியில் நித்தின் வேலைக்குச் சேர்ந்த புதிதில் கேபிடீரியாவிற்குப் ப�ோகும் வழியைச் சரியாக அடையாளம் காணவே இரண்டு நாட்கள் பிடித்தது. ஆனால் இவர். கேபிடீரியாவிற்குள் நுழைந்த ட�ோஜன் டீ மெஷினில் பேப்பர் கப்பை வைத்து டீ என்கிற பட்டனை அழுத்தினார். அந்த டீ மெஷின் விர்க் என்கிற ஓசையுடன் அவர் க�ோப்பையில் டீயை நிரப்பிவிட்டு நின்றது. ட�ோஜன் நித்தினுக்கும் ஒரு க�ோப்பை டீயை நிரப்பிக்கொண்டு காலியாக இருந்த மேஜையில் ப�ோய் உட்கார்ந்தார். கண்ணாடி அரக்கன் ப�ோன்றிருந்த அந்தக் கட்டிடத்தின் கண்ணாடி சன்னல்களுக்கு வெளியே இரவு கவிழ்ந்து கிடந்தது. அந்த இரவில் நாலாபக்கமும் விதவிதமான அளவுகளில் மின்சார விளக்குள் ப�ொட்டுக்களாகத் தெரிந்தன. கேபிடீரியாவில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. இருந்த ஆட்களும் ட�ோஜனை கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. அவர்களின் கண்களுக்குத் தெரிந்தால்தானே அவர்கள் கண்டுக�ொள்ள. நித்தின் அங்கிருந்தவர்களையும் ட�ோஜனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே அவருக்கு முன்னால் உட்கார்ந்தான். அன்று காலைப்போலவே ட�ோஜன் தன் கையிலிருக்கும் டீயை இரசித்துக் குடி ஆரம்பித்துவிட்டார். நித்தின் படபடப்புடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் இருந்த டீ க�ோப்பையை அவன் த�ொடவேயில்லை. டீ குடிக்கும் மனநிலையில் அவன் இப்போது இல்லை. 16
நவீனா அலெக்சாண்டர்
‘சா-ஆன்** இப்படித்தான் சீன ம�ொழியில ஜென்னை ச�ொல்வாங்க. ஜப்பான்ல ஜென்’ ட�ோஜன் (**Ch’an என்பது ஜென்னிற்கான சீன ம�ொழி பெயர். Zen ஜப்பான் ம�ொழி பெயர். தியானம் என்கிற சமஸ்கிருத வார்த்தையின் சீன ம�ொழிபெயர்ப்பு சா-ஆன்.) ‘எனக்கு முன்னால பல ஜென் மாஸ்டர்கள் ஜப்பான்ல இருந்திருக்காங்க. மிய�ோன் ஈசாய்தான் எங்கள�ோட முதல் ஜென் மாஸ்டர். ஜப்பானுக்குச் ஜென்னை க�ொண்டுவந்ததும் மிய�ோன் ஈசாய்தான்.’ ட�ோஜன். நித்தின் தட்டுத்தடுமாறியபடியே, ‘நீங்க எட்னூறு வருசத்துக்கு முந்தி இருந்தவரா’ ‘தெரியல. அப்படியும் இருக்கலாம்’ ட�ோஜன். ‘இருக்கலாமா’ நித்தின். ஆச்சரியக் குழப்பத்துடன் அவரையே பார்த்தபடி. அவர் டீ க�ோப்பையை இன்னும் இரசித்துக் குடித்தபடியே இருந்தார். அவனுக்கு முன்பு இருந்த டீ க�ோப்பையில் இருந்த டீ ஏடு கட்டி கருங்சிவப்பு நிறத்திற்கு மாறிவிட்டிருந்தது. ‘ஜப்பான்ல இருந்து 1224-ல சைனாவுக்குக் கிளம்புனேன். என் வாழ்க்கையையே மாத்திப்போடற அந்தப் பயணத்துக்கு. ஐஞ்சு வருசம். சீனால நா ஏறியிரங்காத சா’ஆன் மடமே இல்ல. குங்டே மடத்துலதான் என்னோட தேடல் ஒருவழியா முடிவுக்கு வந்துச்சு. அந்த மடத்துல இருந்த ருஜிங்தான் என்னோட சா’ஆன் குரு’ ட�ோஜன். இதைச் ச�ொல்லும்போது அவருடைய முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சியும் பிரகாசமும். ‘நீங்க உண்மயில யாரு’ நித்தின். ‘வூ அரசருக்கும் ப�ோதி தர்மாவுக்கும் நடந்த டக்குசான்** பத்தி தெரியுமா?’ ட�ோஜன். நித்தின் இல்லை என்பதுப�ோலத் தலையசைத்தான். (**Dokusan டக்குசான் என்றால் சந்திப்பு என்று ப�ொருள். சென் குருவிற்கும் சிஷ்யனுக்கும் நடைபெறும் சந்திப்பு.) ‘அரசர் வூ தனக்கு முன்னால உக்காந்திருந்த ப�ோதி தர்மாவைப் பாத்து 17
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
நான் பார்த்துக்கொண்டிருக்கும் மனிதன் யார்னு கேட்டாரு. அதுக்குப் ப�ோதி தர்மா எனக்குத் தெரியாதுன்னு ச�ொன்னாரு. அதே பதில்தான் உனக்கும் நா யாருன்னு எனக்குத் தெரியாது’ ட�ோஜன். இந்தப் பதிலை கேட்டு படகென்று நித்தினின் ஞானக் கண் திறந்துக�ொள்ளும் என்கிற நினைப்பெல்லாம் ட�ோஜனுக்கு இல்லை. அவர் அதை எதிர்பார்க்கவும் இல்லை. ‘வெறுமையிலதான் எல்லாம் இருக்கு. எல்லாதலயும் வெறுமை இருக்கு. வெறுமையிலதான் நானும் இருக்கேன்.’ ட�ோஜன். ஹ�ோலக�ோஸ்ட் ரைடின் நடுவில் தடாலென்று கீழே தள்ளிவிட்டதைப் ப�ோல இருந்தது நித்தினுக்கு. ‘நாளைக்குக் காலயில தயாரா இரு. நாம ரெண்டுப்பேரும் காஞ்சிபுரத்துக்குப் ப�ோற�ோம். ப�ோதி தர்மாவ�ோட ச�ொந்த ஊருக்கு ப�ோற என்னோட பயணத்துல உன்னயும் சேத்துக்கிட்டேன்’ ச�ொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்குக் காத்திராமல் ட�ோஜன் எழுந்து நடக்கத் த�ொடங்கிவிட்டார். ட�ோஜன் நான்கு அடி நடந்துப�ோன பிறகே அவர் அவனிடம் கடைசியாகச் ச�ொன்ன விசயம் அவன் மண்டைக்குள் ஏறியது. என்னாது நாளைக்கு இவர�ோட காஞ்சிபுரத்துக்குப் ப�ோகணுமா. நா எதுக்கு இவர�ோட ப�ோகணும். கேள்விகள் சட்டென்று அவனுக்குள் வரிசைக் கட்ட வேகமாக அவர் ப�ோகும் திசையில் திரும்பி சத்தமாகக் கத்தியேவிட்டான். ‘நா எதுக்கு உங்க கூட வரணும்’ நித்தின். கேபிடிரியாவில் இருந்த ஒன்று இரண்டு தலைகளும் திரும்பி நித்தினைப் பார்த்தன. இவ்வளவு நேரம் தனியாக அவன் பேசிக்கொண்டிருந்ததை நமட்டு சிரிப்புடன் ஜாடையாக பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவன் ப�ோட்ட சத்தத்தை கேட்டு படக்கென்று திரும்பி அவனைப் பார்த்தார்கள். இப்போது அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லாத நித்தின் எழுந்து வேக வேகமாக ட�ோஜன் சென்ற திசையில் ஓடினான். கேபிடிரியாவிற்கு வெளியே வந்து அவன் பார்த்தப�ோது அங்கே ட�ோஜன் இல்லை.
18
நவீனா அலெக்சாண்டர்
19
கேள்விகளும் எதிர் கேள்விகளும் ஆவிகளின் சாமார்த்தியமும்
ஈடுபடும் காரியத்தில் நம்மை நாம் இழப்பதே ஜென் பயிற்ச்சி – க�ொவுன் யமடா
அ
திகாலை நான்கு மணிக்கு கம்பெனி கேபிலிருந்து இறங்கிக்கொண்ட நித்தின், தெரு முக்கிலிருந்த டீக்கடையில் ஒரு டீக்கு ச�ொல்லிவிட்டு, க�ொதித்துக்கொண்டிருந்த எண்ணெய் சட்டியிலிருந்து அன்றைய நாளின் முதல் ஈடாக எடுத்து நியூஸ் பேப்பர் விரிக்கப்பட்ட டிரேயில் க�ொட்டப்பட்ட மெது வடைகள் இரண்டைக் கையில் எடுத்துக்கொண்டு கடையின் ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்றுக�ொண்டான். அதிகாலை நேரத்திற்கே உண்டான குளிர், ஈர மண் வாசனையுடன் கலந்து வந்து அவனைத் த�ொட்டுச் சென்றது. ஆவி பறக்கும் டீ கிளாஸ் அவன் கைகளுக்கு வந்ததும் சட்டென்று அவனுக்கு ட�ோஜனின் நினைவு வந்துவிட்டது. வேலை நேரம் முழுவதிலும் கூட ட�ோஜன் நினைவுதான். கடந்த பல மணி நேரங்களில் அவனுக்குள் பல நூறு முறை வந்து ப�ோய்விட்ட அதே கேள்வி இப்போதும். இந்த ஆளு ஏன் என்ன புடுச்சுக்கிட்டு திரியறாரு இல்ல இது பிரமையா எதாவது சைக்கியாட்டிரிக் பிரச்சனையா இருக்குமா. அதிகாலை நேரத்தின் அந்த அமைதியும் ஆவிபறக்கும் டீயும் வடையும் அவனுக்குச் சற்றே ஆறுதலைக் க�ொடுத்தன. இன்றைக்கும் ட�ோஜன் தன் முன்னால் வந்தால் சைக்கியாட்டிரிக் யாரவயாவது ப�ோய்ப் பார்த்துவிட வேண்டியதுதான் என்கிற முடிவுடன் நித்தின் 20
நவீனா அலெக்சாண்டர்
வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வழக்கமாக அவன் வரும் நேரத்தில் அவனுடைய ரூம் மெட்கள் தூக்கத்தில் இருப்பார்கள். ஆனால் இப்போது முன் அறையிலிருந்து டீவி ஓடும் சத்தம் கேட்டது. விளக்கும் எரிந்துக�ொண்டிருந்தது. நித்தின் முகத்தில் ஏன் என்கிற கேள்வியுடன் முன் அறைக்கு வர அங்கே ட�ோஜன் ச�ோபாவில் சம்மணமிட்டு உட்கார்ந்துக�ொண்டு டீவி பார்த்துக்கொண்டிருப்பது கண்களில் பட்டது. நித்தின் ரூம் மெட்களின் அறையைப் பார்க்க அவை சாத்தப்பட்டிருந்தன. ‘நல்ல தூக்கத்துல இருக்காங்க’ ட�ோஜன் டீவியிலிருந்து கண்களை எடுக்காமல். நித்தின் ஏதும் பேச முடியாமல் ச�ோர்ந்துப்போனவனாக அவருக்கு முன் சரிந்து உட்கார்ந்தான். ‘இப்படி உட்கார்ந்துட்டா எப்படி. கிளம்பு தம்பி. இன்னும் அரமணி நேரத்தில் நாம பயணத்த த�ொடங்கனும்’ ட�ோஜன். ‘இப்ப நடந்துக்கிட்டிருக்கறதுலாம் நிஜமான்னே…..’ நித்தின். ‘எல்லாம் நிஜம்தான் தம்பி. எதுவும் கனவு இல்ல’ ட�ோஜன் அவனை முழுதும் முடிக்கவிடாமல் இடைவெட்டாகப் பதிலை ச�ொல்லி முடித்தார். ‘ஜி உங்களுக்கு எங்கயாவது ப�ோகணும்னா ப�ோங்க என்னை ஏன் த�ொல்லப்பண்ணுறீங்க’ நித்தின். ‘உனக்கு ஒரு ஜென் கதை ச�ொல்லட்டுமா’ என்று கேட்டுவிட்டு ட�ோஜன் அவனுடைய பதிலுக்கெல்லாம் காத்துக்கொண்டிருக்காமல் கதையைச் ச�ொல்லத் த�ொடங்கிவிட்டார். ‘ஒதுக்குப் புறமான அந்தக் காட்டுப் பகுதியில ஓஜன்னு ஒரு ஜென் துறவி காலத்த ஓட்டிக்கிட்டிருந்தாரு. ஒரு நாள் இரவு அந்த வழியா ப�ோயிட்டிருந்த நாலு துறவிங்க ஓஜன் இருக்கற இடத்துல நெருப்பு எறியறதப் பாத்துட்டு அங்க வந்தாங்க. ஓஜன் நெருப்பு மூட்டிக் குளிர் காஞ்சிக்கிடிருந்தாரு. நாங்களும் இங்க தங்கி க�ொஞ்சம் எங்க உடம்பக் கதகதப்பாக்கிகலாமான்னு அவர்கிட்ட 21
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
கேட்டாங்க. ஓஜன் தாராளமான்னு ச�ொல்லி அவங்களையும் தன் கூட நெருப்பு பக்கத்துல உக்கார வச்சிக்கிட்டார். அந்த நாலுபேரும் அவங்களுக்குள்ள மனம் பத்தி விவாதம் பண்ண ஆரம்பிச்சாங்க. க�ொஞ்ச நேரம் அவங்க பேசுறதை வேடிக்கை பாத்துக்கிட்டிருந்த ஓஜன் நானும் ஒன்னு கேக்கலாமான்னு கேட்டார். அவங்க ஓ தாராளமா கேளுங்கன்னாங்க. அத�ோ அங்க பெரிய பாராங்கல்லு இருக்கு பாத்தீங்களா. அது வெளியில இருக்கா இல்ல உங்க மனசுக்குள்ள இருக்கா. நாலுபேருல ஒருத்தரு, எல்லாப் ப�ொருளும் மனச�ோட பிம்பம்னு ப�ௌத்தம் ச�ொல்லது அதனால அந்தக் கல்லு என் மனசுக்குள்ள இருக்குன்னுதான் ச�ொல்வேன். அதுக்கு ஓஜன் திருப்பி இப்படிச் ச�ொன்னாரு, அப்ப உங்க மனசு ர�ொம்பக் கனத்துப் ப�ோயிருக்கனும். இவ்வளவு பெரிய கல்ல உங்க மனசுல சுமந்துக்கிட்டு திரிஞ்சீங்கன்னா’ ட�ோஜன் கதையை முடித்துவிட்டு நித்தினைப் பார்த்து, ‘ஓஜன் ச�ொன்ன மாதரி த�ொல்லைய உன் மனசு சுமந்துக்கிட்டு திரிஞ்சா உன் மனசு மனசா இருக்காது த�ொல்லையா மாறிடும். அதனால எதுவும் பேசாம சீக்கிரம் கிளம்பு’. ‘நீங்க ஏத�ோ இல்லூஷன். இந்தப் பிரச்சனைய எப்படித் தீக்கனும்னு எனக்குத் தெரியும்’ என்று உறுதியாகச் ச�ொன்ன நித்தின் எழுந்து அவனுடைய அறைக்குச் சென்றுவிட்டான். ட�ோஜன் மெல்லிய புன்னகையுடன் மீண்டும் டீவியைப் பார்க்கத் த�ொடங்கிவிட்டார். அன்று க�ொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்துக�ொண்டான் நித்தின். நண்பன் ஒருவன் மூலம் தெரிந்துக�ொண்ட அந்தச் சைக்கியாட்டிரிக் டாக்டரை பார்க்க கிளம்பிவிட்டான். அவன் அவசர அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருப்பதை டீவி பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ட�ோஜன் பார்த்துக்கொண்டிருந்தார். ‘ஒரு சென் கத ச�ொல்லட்டுமா’ என்றுவிட்டு மீண்டும் அவனுடைய பதிலுக்கு எதிர்பாராமல் கதை ச�ொல்லத் த�ொடங்கிவிட்டார். ‘அந்தப் ப�ொண்ணுக்கு அவ புருஷன் மேல அப்படிய�ொரு அன்பு. அவ சாகக் கிடந்த நேரத்துல புருஷனக் கூப்பிட்டு இப்படிச் ச�ொன்னா. நா செத்த பிறகு நீ வேற எந்தப் ப�ொண்ணையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. என் நினைப்பாவே வாழ்க முழுக்க இருந்துடனும். எந்தப் ப�ொண்ணவையாவது நீ கல்யாணம் பண்ணிக்கிட்டன்னா நா 22
நவீனா அலெக்சாண்டர்
பேயா வந்து உன்ன த�ொல்லப்பண்ணுவேன். உன்ன நிம்மதியா வாழவிடமாட்டேன்னு ச�ொல்லிட்டு செத்துப்போயிட்டா. அவ புருசனும் ப�ொண்ணாட்டிய�ோட கடசி ஆசைக்கு மதிப்பு க�ொடுக்கனும்னு க�ொஞ்சக் காலம் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கல. ஒரு நாள் அழகான ப�ொண்ணு ஒருத்தியப் பாக்குறான். அவளுக்கும் அவனப் புடுச்சுப் ப�ோயிடுது. ரெண்டுப் பேரும் கல்யாணம் பண்ணிக்க முடிவு செய்யறாங்க. அவங்க கல்யாணம் பண்ணிக்க முடிவு செஞ்ச அன்னிக்கு இரவுல இருந்து செத்துப்போன ப�ொண்டாட்டிய�ோட ஆவி அவனுக்கு முன்னால வந்து நீ எனக்குப் பண்ண சத்தியத்த மீறிட்டன்னு அவனைக் குறை ச�ொல்ல ஆரம்பிச்சுது. அத�ோட இல்லாம அவ புருஷனும் அந்தப் ப�ொண்ணும் சந்திச்சுக்கிட்ட ப�ோது பேசின எல்லா விசயத்தையும் ஒன்னு விடாம திரும்பச் ச�ொல்லியும் காட்ட ஆரம்பிச்சது. இதே மாதரி பல நாள் இரவு அந்த ஆவி அவனுக்கு முன்னால வந்து அவனுக்கும் கல்யாணம் பண்ணிக்கப்போற ப�ொண்ணுக்கும் நடுவுல நடந்த விசயங்களையெல்லாம் ஒன்னு விடாம ச�ொல்லிக்காட்டிக்கிட்டே இருந்துச்சு. இது அவனுக்கு ர�ொம்பத் த�ொல்லையா மாற ஆரம்பிச்சுது. அவனால தூங்கவே முடியாம ப�ோச்சு. அந்தப் பேய் அவன தூங்கவிடாம இந்த வேலயாவே இருந்துச்சு. இதப் பத்தி அவன் அவன�ோட நண்பன்கிட்ட ச�ொல்ல அவன் ஊருக்கு பக்கத்துல இருக்க ஜென் குரு ஒருவரைப் ப�ோய்ப் பார்க்க ய�ோசனை ச�ொன்னான். இவனும் வேறு வழி இல்லாம அந்தச் ஜென் குருவைப் ப�ோய்ப் பார்த்து தன்னுடைய பிரச்சனையைச் ச�ொன்னான். இம் செத்துப்போன உன் ப�ொண்ணாட்டிய�ோட ஆவி ர�ொம்பப் புத்திசாலியாதான் இருக்கு. நீ பண்ணற எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்குது. சரி அடுத்த முற அந்த ஆவி வரும்போது நா ச�ொல்ற மாதரி அதுகிட்ட ச�ொல்லி நா ச�ொல்ற ஒரு கேள்வியையும் அதுகிட்ட கேளுன்னு ச�ொன்னாரு. சரி ச�ொல்லுங்க குருன்னான் அவன். நா பண்ணுற எல்லாத்தையும் நீ கண்டுபுடுச்சுடற, உன்கிட்டருந்து என்னால எதையும் மறைக்க முடியாதுப�ோலருக்குன்னு ச�ொல்லி முதல்ல அந்த ஆவிய பாராட்டி பேசு. அதுக்குச் சந்தோசம் ஆயிடும் அப்ப பாத்து இப்படி ஒரு நிபந்தனய வை. நீ கேக்கற ஒரு கேள்விக்கு அது சரியா பதில் ச�ொல்லிடுச்சுன்னா நீ எந்தப் ப�ொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டன்னு அதுக்குச் சத்தியம் பண்ணிக்கொடு. 23
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
சரி குரு நா என்ன கேள்வி கேக்கனும்னான். ஒரு கைப்பிடி நிறையக் கடுக எடுத்துக்கிட்டு உன் கையில எத்தன கடுகு இருக்குன்னு கேளு. இதுக்கு அந்த ஆவியால பதில் ச�ொல்ல முடியலன்னா அந்த ஆவி உன்னோட கற்பனைன்னு முடிவு பண்ணிக்கலாம். அதுக்கப்பறம் உனக்கு எந்தத் த�ொல்லையும் இருக்காதுன்னாரு. சரின்னு ச�ொல்லிட்டு அவன் வீட்டுக்கு வந்துட்டான். அன்னிக்கு இரவும் ஆவி வந்துச்சு. ஜென் குரு ச�ொன்ன மாதரியே அவனும் அந்த ஆவிய பாராட்டி பேசுனான். ஆவிக்குப் பெருமை தாங்கள. ஆமா என் கண்ணுலருந்து நீ தப்பிக்க முடியாது. நீ பண்ணுற எல்லாம் எனக்குத் தெரிஞ்சிடும். இன்னிக்கு நீ சென் குருவ ப�ோய்ப் பாத்தது கூட எனக்குத் தெரியும்னு ச�ொல்லிச்சு. அப்படின்னா என் கையில இருக்கக் கடுகுல எவ்வளவு கடுகு இருக்குன்னு ச�ொல்லுப் பாக்கலாம்னு அந்த ஆவிக்கிட்ட கேட்டான். அந்த நிமிஷத்துல இருந்து எந்த ஆவியும் அவன் கண்ணுக்கு தெரியல. அதுக்கு அப்பறம் அவனுக்கு ஆவி பிரச்சனையும் இல்ல. இந்தக் கதயில வர ஆவி மாதரி நா உன்னோட கற்பனைன்னு நினைச்சா அத உறுதிப் படுத்திக்க நீ எதாவது ஒரு கேள்விய கேளு. என்னால பதில் ச�ொல்ல முடியலன்னா நா உன்னோட கற்பனைன்னு நீ உறுதியா முடிவு பண்ணிக்கலாம். அதுக்கு அப்புறம் என்னோட த�ொல்லையும் உனக்கு இருக்காது’ ட�ோஜன். நித்தின் கிளம்பிக்கொண்டே இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு ட�ோஜனுக்கு முன்னால் வந்து ‘ஐ கேன் மேனேஜ் திஸ் வித் சையன்ஸ்’ என்றான். ‘கேள்விகளும் எதிர் கேள்விகளும் மன விடுதலைக்கான பாதைங்கள்ல ஒன்னு தம்பி’ ட�ோஜன்.** (**கேள்விகளும் எதிர்க் கேள்விகளும் என்கிற உத்தி மனதைத் தூண்டி உலகமயமான கட்டுக்களில் இருந்து அதை விடுவித்து ஞானத்தை ந�ோக்கி அழைத்துச் செல்லும் என்று ச�ொல்கிறது ஜென். டக்குசான் என்கிற குரு சிஷ்யன் நேர்காணல் கேள்வி பதில்களும் இதனை அடிப்படையாகக் க�ொண்டது.) அதைக் கண்டுக�ொள்ளாதவனைப் ப�ோல நித்தின் வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான். அந்தச் சைக்கியாட்டிரிக் கிளினிக் படு அமைதியாக இருந்தது. கூட்டம் அதிகமாகத்தான் 24
நவீனா அலெக்சாண்டர்
இருந்தது. அனைவரும் இருபது மற்றும் முப்பது வயதுகளில் இருந்தவர்கள்தான். கார்பரெட் சூழ்யிலையில்தான் இருக்கிற�ோம�ோ என்கிற சந்தேகம் கூட எட்டிப்பார்த்தது நித்தினுக்கு. அங்கே இருந்த அனைத்து பேஷண்ட்களும் ஏத�ோ ஒரு கார்பரெட்களில் வேலை செய்பவர்களாகத்தான் இருக்கவேண்டும். ஒரு சைக்கியாட்டிரிக் டாக்டரின் பிரைவேட் கிளினிக் எப்படி இருக்கும் என்பதையும் அவன் இப்போதுதான் பார்க்கிறான். இதெல்லாம் அவனுக்குத் தெரியாத விசயம். ஆனால் இன்று பலருக்கு இது பழக்கமான விசயம்தான் என்பதும் அவனுக்குத் தெரியாது. நிச்சயமில்லாத வேலை, உத்திரவாதமில்லாத சம்பளம், வாங்கும் சம்பளத்திற்கு அதிகமான கடன் அட்டைகள், அடுத்தவன் உழைப்பில் முன்னுக்கு வந்துவிடவேண்டும் என்கிற க�ொள்கை, டார்கெட் வைத்து இரவு பகலாகப் பிழியப்படும் வேலைப் பளு, இயற்கைக்கு எதிரான இரவு வேலை, ஓய்வு என்கிற பேச்சிற்கே இடமில்லாத சூழ்நிலை, நாளின் இருபத்தி நான்கு மணி நேரத்தை விநாடிகளில் கடந்துவிடும் வேகமான வாழ்க்கை முறை என்று நவீன வாழ்வின், வேலைக் கலாச்சாரத்தின் பின் விளைவுகள் மிக அதிகமாக இன்றைக்கு இளைஞர்கள் இப்படியான கிளினிக்குகளுக்குப் படையெடுப்பது சர்வ சாதாரணமான ஒரு விசயம்தான். ஆனால் இப்படியான ஒரு உலகம் தயாராகி வருவதைக் குறித்துப் பலர் சுத்தமாக அறியாமலிருப்பதும் நடந்துக்கொண்டுதானிருக்கிறது. தன்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றம் மட்டுமே உலகம் என்று நம்பிக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு இவை பழக்கமில்லாத விசயங்கள். நித்தினும் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன்தான். தன் வாழ்வின் வளர்ச்சிக்கே இந்த உலகமும் அதன் ஜீவராசிகளும் இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பவன். இரண்டு மணிநேர காத்திருப்பிற்குப் பிறகு நித்தின் டாக்டரின் அறைக்குள் சென்றான். கடந்த இரண்டு நாட்களாக ட�ோஜன் சென்ஜி தனக்கு முன்னால் நடமாடுவதைக் குறித்துச் ச�ொன்னான். சைக்கியாட்டிரிக் டாக்டர் சிரித்துக்கொண்டே, ‘கன்டினியுவா நைட்ல வேலப் பாக்குற உங்களுக்குத் தூக்கம் பத்தல. பாடிய�ோட மெட்டபாலிசம் சைக்கிள் பிரேக் ஆகியிருக்கும். அதனால ஸ்டிரெஸ் அன்ட் டிப்ரஷன். சைக்காடிக் டிப்ரஷன�ோட ஸ்டார்டிங் சிம்ப்டெம்ஸ் மாதரி இருக்கு. இந்த மாத்திரைய ஒன் வீக் க�ோர்சா எடுத்துக்கங்க. சரியாகிடும்’ 25
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனில் ரிஸ்பெரிட�ோன் மாத்திரையை எழுதி அவனிடம் நீட்டினார். அதை வாங்கிக்கொண்டே நித்தின், ‘நா சிலீப்பிங் பில்ஸ் எடுத்துக்கலாமா டாக்டர்’ ‘இந்த மாத்திர இல்ல நீங்க ச�ொல்ற சிலீப்பிங் பில்ச விட இதற்குப் பெஸ்டான மெடிக்கேசன் உங்க வ�ொர்க் கல்ச்சர மாத்திர்கறதுதான்’ டாக்டர். ‘புரியல டாக்டர்’ நித்தின். ‘நைட் ஷிப்ட் வேல இல்லாத, டார்கெட் வச்சு மெண்டல் ஸ்டிரெஸ் ஏற்படுத்தாத வேலைக்குப் ப�ோக ஆரம்பிச்சீங்கன்னா உங்களுக்கு எந்த மாத்திரயும் தேவையில்லை’ டாக்டர் சிரித்துக்கொண்டே.
26
நவீனா அலெக்சாண்டர்
27
முகச் சூரிய புத்தர் முகநிலா புத்தர் (Sun Face Buddha Moon Face Buddha)
உங்களின் க�ோபத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படுவதில்லை. உங்களின் க�ோபமே உங்களை தண்டிக்கிறது. – புத்தா
இ
ந்த இடத்தில் பெளத்த மதம் குறித்துக் க�ொஞ்சம் தெரிந்துக�ொள்ளவேண்டியிருக்கிறது. ப�ௌத்தம் என்று ச�ொல்லும்போதே கெளதம புத்தர் தங்கு தடையின்றி வெகு சுலபமாகப் பலருக்கும் நினைவிற்கு வந்துவிடுவார். கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் புத்தர் பெளத்த வாழ்வியல் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார். தர்ம-வினயா (தர்மம்-க�ோட்பாடு, வினயம்ஒழுக்கம்) என்பதே அவர் தான் அறிமுகப் படுத்திய முறைக்கு வைத்த பெயர். இந்தப் பெயர் இன்றைக்குப் ப�ௌத்தம் என்று மாறியிருக்கிறது. தன் வாழ்வியல் முறையைப் பரப்ப சங்கத்தைத் த�ோற்றுவிக்கிறார். சங்கம் என்பது பிக்குக்களையும் (ஆண் துறவிகள்) பிக்குணிகளையும் (பெண் துறவிகளையும்) உள்ளடக்கிய மடம். புத்தர் தன்னுடைய காலத்தில் குரு சீடன் முறை அமைப்பிலேயே தன்னுடைய ப�ோதனைகளைச் சீடர்களுக்கு வழங்கிவந்தார். சீடர்கள் கூடி இருக்க உள்ளொளி மற்றும் ஞானம் அடைவதற்கான வழிகளை அவர் பிரசங்கங்கள் மூலமே வழங்கிவந்தார். வாயால் ம�ொழியப்பட்ட வார்த்தைகளின் மூலமே புத்தர் தன்னுடைய சீடர்களை ஞானம் அடைய செய்துக�ொண்டிருந்தார். இதுவே ஜென்னில் ச�ொல்லப்படும் டக்குசான்** மற்றும் க�ோன்களுக்கு*** அடிப்படை. புத்தர் தன்னுடைய
28
நவீனா அலெக்சாண்டர்
இறுதிக் காலத்தில் மகாகாஷ்யப்பருக்கு பல க�ோன்கதைகளைக் க�ொடுத்ததாக மிகப் பழைய ஜென் கையெழுத்துக் குறிப்புக்கள் ச�ொல்கின்றன. (**டக்குசான் – குருவும் சீடரும் நேர்காணல் நடத்தும் முறையில் கேள்விகேட்டுப் பதில் ச�ொல்லிக்கொள்வது. ***க�ோன் – க�ோன்கள் என்பது சிறு துணுக்குக் கதைகள். இப்படிப் பல நூறு துணுக்கு கதைகளின் த�ொகுப்புக்கள் ஜென்னில் இருக்கின்றன. இவைகளுக்கும் இப்போது பெருவாரியாக இருக்கும் ஜென் கதைகளுக்கும் த�ொடர்பு கிடையாது.) புத்தர் இறந்து பல நூறு ஆண்டுகள் கழித்துக் கி.பி. 250ல் சீடர்களுக்கு அவர் நிகழ்த்திய பிரசங்கங்கள் அனைத்தும் சங்கத்தால் த�ொகுக்கப்பட்டது. மூன்று பிரிவுகளின் கீழ் புத்தரின் பல்வேறு பிரசங்கங்கள் எழுத்துக்களாகவும் புத்தகங்களாகவும் த�ொகுக்கப்பட்டன. இந்தத் த�ொகுப்புக்களுக்குப் பிடகா (கூடை) என்று பெயர் வைத்தார்கள். மூன்று த�ொகுப்புக்கள் என்பதால் திரி (மூன்று) பிடகா என்று ப�ொதுவாக வழங்கப்பட்டது. வினைய பிடகா, சுத்த பிடகா மற்றும் அபிதம்ம பிடகா இவை மூன்றும் ஒன்றாகச் சேர்த்து திரிபிடகா. வினய பிடகா என்பது ஒழுக்கத்தின் கூடை எனப்படுகிறது. பெளத்த சங்கம் இயங்குவதற்கான மற்றும் பிக்குப் பிக்குணிகளுக்கான ஒழுக்க நடைமுறைகளை விதிமுறைகளைச் ச�ொல்வது வினய பிடகா. சுத்த பிடகா என்பது புத்தரும் அவருடைய நெருங்கிய சீடர்களும் நிகழ்த்திய கூட்டங்கள் மற்றும் பிரசங்கங்களின் த�ொகுப்பு. இது பிரசங்கங்களின் கூடை எனப்படுகிறது. அபிதம்ம பிடகா என்பது பெளத்த க�ொள்கைகளின் உளவியல் மற்றும் தத்துவவியல் ஆய்வுகள். இது க�ொள்கை விளக்கக் கூடை எனப்படுகிறது. வினய பிடகா மற்றும் சுத்த பிடகாவில் இருக்கும் சங்கதிகள் அனைத்தும் புத்தரின் நெருங்கிய சீடர்களான உபாலியும் ஆனந்தாவும் நடத்திய பிரசங்கங்களின் த�ொகுப்புக்கள் என்று பெளத்த பாரம்பரிய எழுத்துக் குறிப்புக்கள் ச�ொல்கின்றன. புத்தர் இறந்த பிறகு கூட்டப்பட்ட முதல் சங்கத்தில் மகாகாஷ்யபர், உபாலியை வினயம் த�ொடர்பாக (புத்தர் கூறிய) அனைத்து விசயங்களையும் விளக்கச் ச�ொல்லியிருக்கிறார். அப்போது உப்பாலி நடத்திய பிரசங்கத்தின் த�ொகுப்பே வினய பிடகா. மகாகாஷ்யபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆனந்தா தர்மம் குறித்து (புத்தர் கூறிய) நடத்திய பிரசங்கங்கள் சுத்த பிடகாவின் த�ொகுப்பு. 29
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
அபிதம்ம பிடகாவ�ோடு விபான்கா என்று ஒரு சூத்திரமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. (தேராவத பெளத்த பிரிவில் விபான்கா அபிதம்ம பிடகாவ�ோடு சேர்க்கப்பட்டிருக்கிறது. தேராவத ப�ௌத்தம் குறித்துப் பிறகு பார்ப்போம்). விபான்கா, பிரதிம�ோட்சம் குறித்த வழிமுறைகளைச் ச�ொல்கிறது. புத்தரின் சமகாலத்திலும் அவருக்குப் பின்னரான காலத்திலும் அபிதம்ம பிடகாவை அடிப்படையாக வைத்துப் பல தத்துவ உரையாடல்கள் த�ோன்றத் த�ொடங்கின. இது பெளத்தத்தில் பல்வேறு உட்பிரிவுகள் த�ோன்றக் காரணமாகிப்போனது. கிருத்துவச் சகாப்தத்தின் த�ொடக்கத்தில் பெளத்ததில் ம�ொத்தமாக 18 உட்பிரிவுகள் இருந்திருக்கின்றன. இந்த உட்பிரிவுகளுக்கு காரணமாக அமைந்தது புத்தரின் கருத்துக்கள் குறித்த அசல் தன்மையே. புத்தரின் கருத்துக்களை எத்தகைய தத்துவ விசாரணைகளுக்கும் உள்ளாக்காமல் அவருடைய கருத்துக்களை அதன் சாரத்தோடு ஏற்றுக்கொண்டவர்கள் ஒரு பிரிவாகவும், அவருடைய கருத்துக்களைத் தத்துவ விசாரணைகளுக்கு உட்படுத்தி அந்தக் கருத்துக்களில் இருந்த அசல் தன்மைக்கு முக்கியத்துவம் க�ொடுக்காமல் ச�ொல்லவரும் விசயத்திற்கு முக்கியத்துவம் க�ொடுத்த பிரிவு அபிதம்ம பிரிவாகவும் பிரிந்தார்கள். அபிதம்ம பிடகாவின் அடிப்படையில் அமைந்த பெளத்த க�ொள்கைகளை எதிர்த்து கி.பி. முதலாம் நூற்றாண்டு வாக்கில் த�ோன்றியது மஹாயன ப�ௌத்தம். இதன் த�ொடக்கம் ஆந்திரப் பகுதி என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். மஹாயன ப�ௌத்தர்கள் தங்களின் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கொண்டவர்கள் அனைவரையும் ஹீனாயன ப�ௌத்தர்கள் என்று அடையாளப்படுத்தினார்கள். இப்படிப் ப�ௌத்தத்தில் மஹாயனம் ஹீனாயனம் என்று இரண்டு பெரும் பிரிவுகள் த�ோன்றின. மஹாயனம் என்பதற்குப் பெரும் பாதை என்று ப�ொருள். மஹாயன ப�ௌத்தம் புத்தரை கடவுள் நிலைக்கு உயர்த்தி, பெளத்ததில் சிலை வணக்கத்தையும் தியான முறையையும் முக்கியமானதாக ஆக்கியது. த�ொடக்கக் கால மஹாயன ப�ௌத்தர்கள் தங்களைப் பெளத்ததின் சீர்திருத்தக்காரர்கள் என்று அறிவித்துக்கொண்டார்கள். பழம் பெளத்த முறையில் சிலை வணக்கம் கிடையாது. அதுவே ஹீனாயன பெளத்ததின் அடையாளமாகவும் ஆனது. தங்களுக்கு எதிரான கருத்துக்கொண்ட அனைவரையும் ஹீனாயனர்கள் என்று மஹாயன பெளத்த க�ொள்கையாளர்கள் அடையாளப்படுத்தினாலும் 30
நவீனா அலெக்சாண்டர்
சிலர் தங்களை ஹீனாயனர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அப்படியானவர்கள் தங்களைத் தேராவதக்காரர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள். தேராவத பெளத்த பிரிவு த�ோன்றியது. மஹாயன ப�ௌத்தம் திபேத், சீனா, க�ொரியா மற்றும் ஜப்பான் ப�ோன்ற ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இதனால் இதை வடக்குப் ப�ௌத்தம் என்று அடையாளப்படுத்துகிறார்கள். தேராவத ப�ௌத்தம் இலங்கை, பர்மா, தாய்லாந்து, மியான்மார் ப�ோன்ற நாடுகளுக்குப் பரவியது. இதைத் தென் ப�ௌத்தம் என்று அழைக்கிறார்கள். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுகளில் காஞ்சிபுரத்திலிருந்த மஹாயன பெளத்த மடத்தில் துறவியாக இருந்தவர் ப�ோதிதர்மர். ப�ோதி தர்மர் பிறந்தது தென்னிந்தியாவின் காஞ்சிபுரம் என்று ச�ொல்லப்படுகிறது. பல்லவ பேரரசு காலத்தில். ப�ோதி தர்மர் பல்லவ அரசன் ஒருவனின் மகன்களில் ஒருவர் என்றும் அவர் சிறுவயதிலேயே பெளத்த துறவியாகத் துறவரம் சேர்ந்துவிட்டார் என்றும் ச�ொல்லப்படுகிறது. ஆனால் முற்காலப் பல்லவ பேரரசர்களின் வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இதற்கான ஆதாரத்தைத் தரவில்லை. சில பழம் சீன எழுத்துக்கள் ப�ோதி தர்மர் மத்திய ஆசியப் பகுதியை சேர்ந்தவர் என்று ச�ொல்கின்றன. பெரும்பாலான பழம் சீன வரலாற்றுப் பதிவுகள் ப�ோதி தர்மர் தென்னிந்தியாவின் காஞ்சிபுரம் நகரிலிருந்தே கடல் வழியாகச் சீனாவிற்கு வந்ததாகச் ச�ொல்கின்றன. ப�ோதி தர்மர் சீனாவிற்குப் ப�ோவதற்கு முன்பே சீனாவில் ப�ௌத்தம் வெகுவாகப் பரவியிருந்தது. ப�ௌத்தம் குறித்து அதிகம் அறிந்துக்கொள்ளும் தேடலில் சீனாவிலிருந்து பல பெளத்த துறவிகள் இந்தியாவிற்கு வந்துப் ப�ோயிருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஃபாஹியான் – கி.பி. நான்காம் நூற்றாண்டுகளில் மஹாயன பெளத்த க�ொள்கை விளக்க எழுத்துக்களைத் தேடி சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்), ஹீஜிங் மற்றும் யுவான்சுவாங் – (இவர்கள் இருவரும் தனித் தனியாகக் கி.பி. ஏழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு வந்த சீன பெளத்த துறவிகள்.) ப�ோதி தர்மருக்கு முன்பும் அவர் காலத்திலும் இந்தியாவிலிருந்து பெளத்த துறவிகள் சீனாவிற்குப் ப�ோவதும், சீனாவிலிருந்து பெளத்த துறவிகள் இந்தியாவிற்கு வருவதுமாக இருந்திருக்கிறார்கள். சீனாவிற்குச் சென்ற ப�ோதி தர்மர் தியானத்தை அடிப்படையாக க�ொண்ட மஹாயன க�ோட்பாடுகளைப் பரப்பத் த�ொடங்கினார். சீன ம�ொழியில் தியானம், சா’ஆன் என்று அழைக்கப்பட்டது. ப�ோதி தர்மர் 31
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
பரப்பிய பெளத்த க�ோட்பாடுகளுக்குச் சீனர்கள் சா’ஆன் ப�ௌத்தம் என்று பெயர் வைத்தார்கள். கி.பி. 64-களுக்குச் சற்று முன்பான ஆண்டுகளில் முதன் முதலாகப் ப�ௌத்தம் சீனாவிற்குள் பரவுகிறது. அன்றைய சீனாவின் மத்திய கிழக்கு பகுதியான ஜியாங்சு மாகாணத்தில் பெளத்த துறவிகள் சிலர் வசித்து வந்ததாக முதல் வராலற்றுப் பதிவுகள் ச�ொல்கின்றன. இதன் பிறகு ப�ௌத்தம் மெல்ல மெல்லச் சீனாவின் மற்ற பகுதிகளுக்குப் பரவினாலும் சீன மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. சீனக் கலாச்சாரத்தில் ப�ௌத்தத்தை மிக வலுவாக ஊன்றியவர் ப�ோதி தர்மர். சா’ஆன்னோடு சேர்த்து குங்பூ தற்காப்புக் கலையையும் சீனாவில் அறிமுகப்படுத்தினார். தென்னிந்தியாவிலிருந்து புறப்பட்ட ப�ோதி தர்மர் மூன்று ஆண்டுகள் கடல் பயணத்தில் அங்கும் இங்கும் சுற்றி அலைந்து கழித்துக் கி.பி. 475-ல் சீனாவின் தெற்கு பகுதியில் இருக்கும் நன்ஹை துறைமுகத்தை (இப்போதும் இந்தத் துறைமுகம் இருக்கிறது) அடைந்து சீனாவிற்குள் நுழைகிறார். அதன் பிறகு தென் சீனா முழுவதிலும் இருந்த பெளத்த மடாலயங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் ப�ோது சீன ம�ொழியையும் கற்றுக்கொள்கிறார். இது நடந்தது கி.பி. 490களில் என்று Transmission of The Lamp புத்தகத்தில் தாவ�ோ-யுவான் குறிப்பிடுகிறார். இந்தப் புத்தகம் கி.பி. 1002-களில் எழுதப்பட்டது. இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ப�ோதி தர்மருக்கும் லியாங் பேரரசர் வூ-க்கும் இடையே அந்தப் புகழ்பெற்ற சந்திப்பு நிகழ்கிறது. இந்தச் சந்திப்பின்போதுதான் ப�ோதி தர்மர் வெறுமை க�ோட்பாடு குறித்துப் பேசியதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் Transmission of The Lamp புத்தகத்திற்கும் சற்று முற்பட்ட வரலாற்று எழுத்துப் பதிவுகள் இப்படியான ஒரு சந்திப்பே நடைபெறவில்லை என்று ச�ொல்கின்றன. தென் பகுதியில் சுற்றுப் பயணத்தை முடித்த ப�ோதி தர்மர் யாங்ட்சி ஆற்றைக் கடந்து வட சீனப் பகுதிக்கு செல்கிறார். யாங்ட்சி ஆறு தென் சீன நிலப்பரப்பையும் வட சீன நிலப்பரப்பையும் குறுக்கு வெட்டாகப் பிரிக்கும் மிகப் பெரிய நீண்ட ஆறு. வடக்கு வேய் பேரரசின் பெங்ஜிங் நகரில் முதலில் ப�ோதி தர்மர் தங்குகிறார். கி.பி. 494-ல் பேரரசன் ஹசிய�ோ-வென் தனது தலைநகரத்தை ல�ோயாங் பகுதிக்கு மாற்றியப�ோது பெங்ஜிங் பகுதியிலிருந்த அனைத்து பெளத்த துறவிகளும் பேரரசனுடன் சேர்ந்து ல�ோயாங் பகுதிக்கு மாறினர். இதில் ப�ோதி தர்மரும் அடக்கம் என்று வரலாற்றுப் பதிவுகள் ச�ொல்கின்றன. இந்த நிகழ்வில் ப�ோதி தர்மரின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை. ஆனால் அவர் தீட்சை அளித்த அவருடைய 32
நவீனா அலெக்சாண்டர்
சீடரான ஷெங்-பூவின் பெயர் இடம் பெறுகிறது. பேரரசனுடன் இடமாறிய பெளத்த துறவிகளின் பெயர் பட்டியலில் ஷெங்-பூவின் பெயரும் இடம்பெறுகிறது. தாவ�ோ-வுசான் கி.பி. 654-ல் எழுதிய Further Lives of Exemplary Monks என்கிற புத்தகத்தில் ப�ோதி தர்மர் ஷெங்பூவிற்குத் தீட்சையளித்ததைப் பற்றிப் பதிவு செய்திருக்கிறார். இனி குங்பூ தற்காப்பு கலைக்குப் பெயர் ப�ோன ஷாவ�ோலின் டெம்பிள் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
33
கேள்விகளும் எதிர் கேள்விகளும் தியானமும்
எதைப் பற்றிய சிந்தனையும் அற்று தன்னிலை மறந்து இருப்பதே ஜென். இதை நீங்கள் உணர்ந்துக்கொண்டால் நடப்பது, உட்கார்வது, படுப்பது என்று நீங்கள் செய்யும் அனைத்து காரியமும் ஜென்தான். – ப�ோதி தர்மர்
நி
த்தினுக்கு வேலையே ஓடவில்லை. அந்தக் கம்பெனியில் சேர்ந்த நாள் த�ொடங்கி இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அவன் இப்படி வெறுமையாக உட்கார்ந்திருந்தது கிடையாது. தனக்கு முன்பாக இருந்த ரிஸ்பெரிட�ோன் மாத்திரையை விரலால் சுண்டி விட்டுக்கொண்டே இருந்தான். டாக்டர் குறிப்பிட்டிருந்த சைக்கோடிக் டிப்ரசன் குறித்தும் ரிஸ்பெரிட�ோன் மாத்திரை குறித்தும் இப்போதுதான் கூகுளில் தேடலை முடிந்திருந்தான். தீவிரமான மனந�ோயின் ஆரம்பக்கட்டம் சைக்கோடிக் டிப்ரசன் என்று மருத்துவக் கட்டுரைகள் ச�ொல்லியது அவனைச் சற்றே ஆட்டம் காணவைத்துவிட்டது. ஒருமுறை இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டு அதுவே பழக்கமாகிவிட்டால் என்னாவது என்கிற பயம் வேறு ஒரு பக்கம். இந்த மாத்திரையைத் த�ொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் உண்டாகும் பக்க விளைவுகளும் அவனை மிரட்டின. அவனுக்குக் கீழ் வேலை செய்தவர்கள் மன அழுத்தத்தை உணர்ந்திருக்கிறார்களே தவிர அவன் அப்படியெல்லாம் உணர்ந்ததேயில்லை. கார்பரெட் வேலை மாதரியே
34
நவீனா அலெக்சாண்டர்
அப்படியானதுதானே. தனக்குக் கீழே இருப்பவனை எல்லா வகையிலும் சுரண்டுவதில் சுகம் காணக் கூடியதுதானே. கடந்த இரண்டு வருடங்களாக அடுத்தவர்களின் உழைப்பிலேயே அலுங்காமல் குலுங்காமல் முன்னேறி வந்தவனுக்கு மன அழுத்தம் என்பதற்கு எங்கே வழி இருந்திருக்கப் ப�ோகிறது. வேண்டிய இடங்களில் கூழை கும்பிடு ப�ோடும் பழக்கமும், ஒத்து ஊதும் சந்து ப�ொந்துகளை அடையாளம் காண்பதும், ஊற்றிக்கொடுத்து கவிழ்ப்பதும், ப�ோட்டியாக முளைக்கக் கூடிய திறமைகளைப் ப�ோட்டுக்கொடுத்து வேர�ோடு கலைவதும், ஏறிய ஏணிகளைப் புரட்டி தள்ளுவதும் மன அழுத்தம் என்பதையே அவனை நெருங்க விடாமல் பார்த்துக்கொண்ட விசயங்கள். வேலையில் ந�ோகாமல் ந�ொங்கு எடுத்தவனுக்கு மன அழுத்தம் என்றால் யார்தான் நம்புவார்கள். அதனால்தான் அவனாலும் அதை நம்ப முடியவில்லை. இருந்தாலும் ட�ோஜன் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்று நினைக்கும்போது கையிலிருக்கும் மாத்திரையை ஒருமுறை முயற்சி செய்துப் பார்த்தால் என்ன என்கிற அடுத்த ய�ோசனையும் அவனுக்குள் லேசாக எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. அவனுடைய ய�ோசனைகளை வெட்டிக்கொண்டு அவனுடைய காதுகளில் புகுந்தன அந்த வார்த்தைகள். ‘புலி வாயிக்கு தப்பிச்சு ஓடுனவன் கத தெரியுமா தம்பி உனக்கு’ ட�ோஜன் அவனுக்கு எதிரில் காலியாகக் கிடந்த சேரில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார். அவருடைய கையில் அந்தக் கார்பரெட் கம்பெனி டீ மெசினிலிருந்து வந்த டீக் க�ோப்பை. ‘ஷிட்……’ நித்தின் வாய்க்குள் பற்களைக் கடித்துக்கொண்டே வலது கையிலிருக்கும் மாத்திரையுடன் மேசையை அழுத்திக் குத்துகிறான். ‘சும்மா ப�ோயிட்டிருந்தவன் மேல அந்தப் புலி வந்து பாஞ்சுது. அந்தப் புலியை எதிர்த்து நின்னு ப�ோராட விரும்பாத அவன் அதுக்கிட்ட இருந்து தப்பிக்கத் தலதெறிக்கக் கண்ணுலப்பட்ட வழியிலலாம் புகுந்து ஓடுனான். அவன் ஓடுனது ஒரு மல முக்குன்னு அவனுக்குத் தெரியாது. அது தெரியாம ஓடுன அவன் மல முக்கோட முடிவுக்கு வந்து அதாள பாதாளத்துல விழப்போனான். தடுமாறி விழப்போனவன் கையில ஒரு திராட்சக் க�ொடி மாட்ட அதப் புடுச்சுக்கிட்டு உயிர காப்பாத்திக்கத் த�ொங்கி கிட்டிருந்தான். அவன் த�ொங்கிகிட்டிருந்த இடத்துக்குப் பக்கத்துல ஒரு ப�ொந்து இருந்துச்சு. அதுக்குள்ள இருந்து ரெண்டு எலிங்க வந்து அவன் த�ொங்கிகிட்டிருந்த திராட்ச க�ொடியில 35
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
இருந்து திராட்சைகளைச் சாப்புட ஆரம்பிச்சதுங்க. அப்பத்தான் அவனுக்குத் தெரிஞ்சது தான் த�ொங்கிகிட்டிருக்கறது திராட்ச க�ொடின்னு. அந்தத் திராட்சக் க�ொடில அவன் கண்ணுக்கு ஒரு செரிப் பழம் தென்பட்டுச்சு. பதட்டத்துல என்ன பண்ணுற�ோம்னு தெரியாம அதப் பறிச்சு அவன் திண்ணுட்டான். அது உயிர எடுக்கற விச பழம்னு அவனுக்குத் தெரியாது’ ‘வாழ்கைய�ோட இந்த நிமிஷ பிரச்சனைய எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாதவங்க இந்தப் புலிக்கிட்ட இருந்து தப்பிச்சவன் கதயாத்தான் வாழ்கைய ஓட்டிக்கிட்டிருக்காங்க. நீயும் எனக்குப் பயந்துக்கிட்டு புலிக்கு பயந்தவன் விச செரிப்பழத்த சாப்பிட்ட மாதரி கையில இருக்கற மாத்திரைய சாப்பிட ய�ோச்சிட்டிருக்க’ ட�ோஜன். ‘என் வாழ்கைய எப்படி நடத்தனும்னு எனக்குத் தெரியும். நீங்க என்னய த�ொல்லப்பண்ணாம என்ன விட்டு த�ொலஞ்சுப்போனாலே ப�ோதும். உங்களாலத்தான் இந்தப் பிரச்சனையே’ நித்தின். ‘சில த�ொல்லை தானா வரதில்ல தம்பி. நமக்கு வந்த த�ொல்லைகளப் பாத்து பயந்து ஓடாம அத எதுத்து எதிர் கேள்விகள கேக்க ஆரம்பிச்சோம்னா அந்தத் த�ொல்லைகள சுலபமா சமாளிச்சு கடந்து ப�ோயிட முடியும். கேள்விகளும் எதிர்க் கேள்விகளும் த�ொல்லை நம்மகிட்ட வந்த வழியையும் அது நம்மல விட்டு ப�ோற வழியையும் காட்டிக்கொடுத்துடும். நாம யாருன்னு நமக்கு அடையாளம் காட்டுறதும் கேள்விகளும் எதிர்க் கேள்விகளும்தான்’ ட�ோஜன். ‘அப்ப எதனால இந்தப் பிரச்சன எனக்கு’ நித்தின். ‘ஹா…ஹா….அருமை. கேள்விகள கேக்க ஆரம்பிச்சுட்ட. இனிமே உனக்கான பதில் கிடைக்க ஆரம்பிச்சுடும்’ ட�ோஜன். ‘இந்தக் கேள்விய திரும்பத் திரும்ப உனக்குள்ளயே கேட்டுப் பாத்துக்க. இப்படி நமக்குள்ளயே ஒரு கேள்விய திரும்பத் திரும்பக் கேட்டு அதுக்கான பதில தேடுறதும் தியானம்தான். தியானம்னா சம்மணம்போட்டு உக்காந்துக்கிட்டு வெத்துக்குன்னு கண்ண மூடிக்கறது இல்ல. இதுவும் தியானம்தான். இந்தத் தியானத்த பண்ணிக்கிட்டே நாளைக்குக் காலயில கிளம்பியிரு நாம ப�ோற பயணத்துக்கு’ ச�ொல்லிவிட்டு ட�ோஜன் சேரில் இருந்து எழுந்து நின்றார். கையிலிருக்கும் காலி டீ கப்பைப் ப�ோடுவதற்கான இடத்தைத் 36
நவீனா அலெக்சாண்டர்
தேடிப்பார்த்து மேசைக்கு அடியில் இருந்த வாயில் பிளாஸ்டிக் கவர் சுற்றிய குப்பை த�ொட்டியில் குனிந்து ப�ோடுகிறார். ‘நா எதுக்கு உங்க கூட வரணும்’ நித்தின். ‘இந்தக் கேள்வியும் கூடச் சேத்து உனக்குள்ளயே கேட்டுக்க’ ட�ோஜன் நீண்ட கணினி மேசைகளுக்கு இடையே புகுந்து நடக்கத் த�ொடங்கினார். ‘என்னால திடுதிப்புன்னு லீவுலாம் ப�ோட முடியாது. என்னால வர முடியாது புரிஞ்சுக்கங்க’ அவனை விட்டு வெகு தூரம் சென்றுவிட்ட ட�ோஜனின் முதுக்குப் பின்னால் உறக்க கத்தினான் நித்தின். அந்த மிகப் பெரிய புல�ோரில் இருந்த அனைவரும் கணினிக்குள் புதைத்து வைத்திருந்த தங்களின் முகத்தை நிமிர்த்தி தீடிரென்று கத்திய நித்தினைப் பார்த்தார்கள். நித்தின் கத்திய திசையையும் பார்த்தார்கள் அங்கே யாரும் இல்லை. மீண்டும் அவர்களின் பார்வை நித்தின் மீது விழுந்தது வின�ோத அர்த்தத்துடன். இரண்டு நாட்களாகவே அந்தப் பில�ோர் முழுவதும் நித்தின் தனியாகப் பேசிக்கொள்வதாகப் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. சிலர் டிப்ரஸன் முற்றி அவனுக்கு மறை கழண்டுவிட்டது என்றும் கூடப் பேசிக்கொண்டார்கள். அனைவரின் வின�ோதப் பார்வை தன் மீது விழுந்திருப்பதைச் சட்டென்று உணர்ந்துக�ொண்ட நித்தின் அமைதியாக அவனுடைய இருக்கையில் தலைசாய்த்து உட்கார்ந்துக�ொண்டான். சிறிது நேரம் கழித்து அவனுடைய மனதிற்குள் அந்தக் கேள்விகள் வந்து உட்கார்ந்துக�ொண்டன. எதுக்கு இவர் என்னைய த�ொல்லை செய்யறாரு, நான் ஏன் காஞ்சிபுரத்திற்கு இவருக்கூட ப�ோகணும்.
37
கையில் ஒத்தை சந்தனக் கட்டை த�ொங்கும் குச்சி
புத்தா தன்மை பெறும் வரை அன்றாட காரியங்களை செய்துக்கொண்டே இருங்கள். புத்தா தன்மை பெற்ற பிறகும் அன்றாட காரியங்களை செய்துக்கொண்டே இருங்கள். – புத்தா
கி
.பி. 496 வாக்கில் வேய் பேரரசர் ஹசிய�ோ-வென், சூங் மலையில் ஷாவ�ோலின் டெம்பிளை கட்டுவதற்கு ஆணையிட்டார். இந்த மலை ல�ோயங் நகருக்குத் தென்கிழக்கில் இருந்த ஹ�ோனான் மாகாணத்தில் இருந்தது. ஷாவ�ோலின் டெம்பிள் இன்றைய சீனாவின் மிக முக்கியச் சுற்றுலாத் தளங்களில் ஒன்று. உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் மக்கள் இந்த மடத்திற்கு வந்து பார்த்து செல்கிறார்கள். உலகம் முழுவதிலும் இந்த மடத்திற்கு ஈர்ப்பை உண்டாக்கிய விசயம் குங்பூ. மேற்கில் வெற்றி பெற்ற சீன மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்களின் வழியே ஷாவ�ோலின் மடத்தின் பழமை சிறப்புக் குறித்தும் அதன் பெளத்த குருமார்கள் பாரம்பரியம் குறித்தும் மேற்குலக மக்கள் அறிந்துக�ொண்டார்கள் என்றால் அது மிகையாகாது. இன்றைக்கும் பலர் இந்த ஷாவ�ோலின் மடத்துடன் ப�ோதி தர்மரை வெகு எளிதாகத் த�ொடர்பு படுத்திக்கொள்கிறார்கள். ப�ோதி தர்மரே இந்த ஷாவ�ோலின் மடத்தைக் கட்டியதாக நினைப்பவர்களும் உண்டு. ஆனால் உண்மையில் இந்த மடம் மற்றொரு இந்திய பெளத்த குருவிற்காகவே பேரரசர் ஹசிய�ோவெனால் கட்டப்பட்டது. தெற்கில் அரசர் வூவை சந்தித்துவிட்டுப்
38
நவீனா அலெக்சாண்டர்
ப�ோதி தர்மர் இந்த மலைக்கு வந்து, சுவர் ப�ோல உயர்ந்திருந்த இந்த மலையின் மேற்கு சிகரமான ஷாவ�ோஷியை பார்த்தபடி உட்கார்ந்துக�ொண்டு ஒன்பது வருடங்கள் தியானத்தில் கழித்ததாகப் பழம் எழுத்துக்கள் ச�ொல்கின்றன. ஷாவ�ோலின் மடத்தில் தனது சீடர்களுக்கு அவர் குங்பு கலையை அறிமுகப்படுத்தியதாகச் ச�ொல்லப்படுகிறது. ஆனால் இதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை. ப�ோதி தர்மர் ஷாவ�ோலின் மடத்தில் மாத்திரமே தங்கியிருக்காமல் லிய�ோங் பகுதி முழுவதும் சுற்றித் திரிந்திருக்கிறார். ஓரிடத்திலும் சேர்ந்தார் ப�ோலப் பல நாட்கள் தங்கியதாகத் தெரியவில்லை. ஷாவ�ோலின் மடத்திற்கும் வருவதும் ப�ோவதுமாக இருந்திருக்கிறார். அவர் காலத்தில் சீனா முழுவதும் ப�ௌத்தம் செல்வாக்கும் புகழும் பெற்று இருந்தும் ப�ோதி தர்மருக்கு மூன்றே மூன்று சீடர்களே கிடைத்திருக்கிறார்கள். அதாவது அவர் சீனாவில் சா-ஆனை தீவிரமாகக் கற்றுக்கொடுத்தது ஷெங்-பூ (இவரை முன்பே நாம் பார்த்துவிட்டோம்), தாவ�ோ-யூ மற்றும் ஹூய்-க�ோ ஆகிய மூவருக்கு மாத்திரம்தான். தாவ�ோ-யூம் ஹூய்-க�ோவும் சுமார் ஆறு வருடங்களுக்கு அவரிடம் மாணவர்களாக இருந்து ஞானம் பெற்றதாகத் தெரிகிறது. தாவ�ோ-யூ ஞானம் பெற்றதுடன் அப்படியே இருந்துவிட்டதால், ப�ோதி தர்மர் ஹூய்-க�ோவை தனக்குப் பின் தன்னுடைய சாஆன் பெளத்த முறையைப் பரப்பும் அதிகாரப் பூர்வ சீடராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். பெளத்த குருவானவர் தனது காலத்திற்குப் பிறகு தன்னுடைய பெளத்த முறைகளைக் கற்பிக்கத் தான் உயிருடன் இருக்கும்போதே தன்னிடம் ஞானம் பெற்ற ஒரு தகுந்த சீடரைத் தேர்வு செய்வது முறை. அப்படித் தேர்வு செய்யப்பட்டவர் அதிகாரப் பூர்வமானவர் என்பதை நிரூபிக்கும் அத்தாட்சியாகக் குருவானவர் தன்னிடம் இருக்கும் புனித துறவி உடையையும் அன்ன பாத்திரத்தையும் தருவது வழக்கம். இதைக் குரு சீடர் பரம்பரை என்கிறார்கள். அப்படியே ஹூய்-க�ோவிடம் ப�ோதி தர்மர் புனித துறவி உடையையும் அன்ன பாத்திரத்தையும் க�ொடுத்தார். கூடவே லங்கவாத்ரா சூத்திரா என்கிற நூலையும் க�ொடுத்ததாகச் ச�ொல்லப்படுகிறது. ஆனால் ப�ோதி தர்மா தன்னுடைய சீடர்களுக்கு (இந்த மூவருக்கும்தான்) நடத்திய பிரசங்கங்களில் லங்கவாத்ரா சூத்திர மேற்கோள்கள் எங்குமே இல்லை என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ப�ோதி தர்மர் 39
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
பெரும்பாலும் நிர்வானா, அவதம்சாகா மற்றும் விமலகீர்த்தி ஆகிய சூத்திரங்களில் இருந்தே பிரசங்கம் செய்திருக்கிறார். ஹூய்-க�ோவே லங்கவாத்ரா சூத்திராவை பெரிதும் கையாண்டதாகத் தெரிகிறது. ப�ோதி தர்மர், ஹூய்-க�ோவை தன்னுடைய அதிகாரப் பூர்வ சீடராக அறிவித்த பிறகு கி.பி. 528 பத்தாம் மாதம் ஐந்தாம் நாள் இறந்ததாகத் தாவ�ோ-யுவன் தன்னுடைய Transmission Of The Lamp புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ப�ோதி தர்மரின் இறப்பிற்குக் காரணமாக இவர் கூறுவது ப�ொறாமை க�ொண்ட மற்றொரு துறவி ப�ோதி தர்மருக்கு உணவில் விஷம் வைத்துவிட்டார் என்பதே. தாவ�ோ-ஹுசான் எழுதிய ப�ோதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், ப�ோதி தர்மர் ல�ோ ஆற்றின் கறையில் இறந்ததாக மாத்திரமே குறிப்பிடுகிறது. அவர் இறந்த தேதியைய�ோ அல்லது அதற்கான காரணத்தைய�ோ குறிப்பிடவில்லை. ப�ோதி தர்மரின் உடல், ல�ோயாங் பகுதியிலிருந்த பியர் இயர் மலைப்பகுதியில் இருந்த டிங்லின் மடத்திற்கு அருகில் புதைக்கப்பட்டதாகத் தாவ�ோயுவான் ச�ொல்கிறார். ப�ோதி தர்மரின் இறப்பிற்குப் பிறகு நடந்ததாக மற்றொரு சம்பவத்தையும் அவர் குறிப்பிடுகிறார். அது, அரசின் உயர் பதவியிலிருந்த ஒருவர் மத்திய ஆசிய மலைப்பகுதிகளில் ப�ோதி தருமர் ஒரு கையில் சிறிய சந்தனக் கட்டை கட்டித் த�ொங்க விடப்பட்ட குச்சியைப் பிடித்தபடி நடந்துப�ோய்க் க�ொண்டிருந்ததைத் தான் பார்த்ததாகவும், அவரை இடைமறித்த எங்கே ப�ோகிறீர்கள் என்று கேட்டதற்குப் ப�ோதி தருமர் தான் தன்னுடைய ச�ொந்த ஊரான காஞ்சிபுரத்திற்குப் ப�ோய்கொண்டிருப்பதாகச் ச�ொன்னதாகவும் அந்த அதிகாரி அரசரிடம் வந்து ச�ொல்லிய சம்பவம். இதைக் கேள்விப்பட்டதும் மற்ற துறவிகள் ப�ோதி தருமரின் கல்லறையைத் திறந்து பார்ப்பது என்று முடிவு செய்து அவருடைய கல்லறையைத் திறந்து பார்த்தப�ோது அங்கே ஒரு சிறிய சந்தனக் கட்டை மாத்திரமே எஞ்சியிருந்ததைப் பார்த்ததாகவும் தாவ�ோயுவான் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அது முதல் ப�ோதி தர்மரைச் சித்தரிக்கும் அனைத்துச் சீன ஓவியங்களும் அவர் சந்தனக் கட்டை கட்டிய குச்சியைக் கையில் வைத்துக்கொண்டு இருப்பதைப�ோலவே அவரைக் காட்டின. சீனாவில் சுற்றித் திரிந்த காலங்களில் ப�ோதி தருமருக்கு அப்படிய�ொன்றும் பெரும் பெயரும் புகழும் கிடைத்துவிடவில்லை. அவர் அங்கே இருந்த சுமார் ஐம்பது ஆண்டுகளில் மூன்றே மூன்று சீடர்களை மாத்திரமே அவரால் பெற முடிந்திருக்கிறது. சீனாவிலிருந்த ஆயிரக் கணக்கான பெளத்த 40
நவீனா அலெக்சாண்டர்
துறவிகளில் இவரும் ஒருவர். அவ்வளவுதான். தனக்கென்று பெரும் சீடர் பட்டாளமும் அதன் வழியான அரசாங்க த�ொடர்புகளும் செல்வாக்கும் இல்லாமல் மிகச் சாதாரணப் பெளத்த துறவியாகவே சீன மடங்களில் சுற்றித் திரிந்திருக்கிறார். பெரும் மக்கள் ஆதரவு பெற்ற துறவியாகவும் கூட அவர் இருந்திருக்கவில்லை. சீனாவில் சா’ஆன் பாரம்பரியம் ப�ோதி தருமரிலிருந்து த�ொடங்குவதாகவே கருதப்பட்டாலும் அவருக்கு முன்பே சா’ஆன் ப�ௌத்தம் சீனாவில் பெரும் புகழுடன்தான் இருந்திருக்கிறது. சீனாவில் அவர் வாழ்ந்த காலத்தில் மிக மிகச் சாதாரணத் துறவியாக இருந்த ப�ோதி தருமர் பிற்காலத்தில் எப்படிச் சீனாவின் கதாநாயக பிம்பமாக எழுந்து நின்றார்?
41
உதிர்ந்த சறகுகளின் அலங்காரம் வாழ்க்கை
அறிந்துக்கொள்ள வேண்டி கேள்வி எழுப்புபவன் அந்த ந�ொடி மாத்திரமே முட்டாளாக இருக்கிறான். கேள்வியே எழுப்பாதவன் என்றைக்கும் முட்டாளாகவே இருந்துவிடுகிறான். – புத்தா
‘சரி உங்க கூடக் காஞ்சிபுரத்துக்கு வந்தா நீங்க இனிமே என்னய டிஸ்டர்ப் பண்ணமாட்டீங்கள’ நித்தின். ‘அதுக்கு அப்பறம் உனக்குப் பிரச்சனைன்னா என்னான்னு தெரிஞ்சிடும். அதனால பிரச்சனை இருக்காது’ ட�ோஜன். நித்தின் ஒரு முடிவிற்கு வந்தவனாகச் ச�ோபாவில் இருந்து எழுந்துக�ொண்டு, கார் சாவியைத் தேடிக் கையில் எடுத்துக்கொண்டான். ‘கிளம்புங்க’ அவன். ‘என்ன அது’ அவன் கையிலிருந்து கார் சாவியைச் சுட்டிக்காட்டிக் கேட்டார் ட�ோஜன். ‘கார் சாவி’ நித்தின். ‘நமக்கு வண்டித் தேவயில்ல’ ட�ோஜன். ‘அப்பறம். வேற எப்படிப் ப�ோறது’ நித்தின். 42
நவீனா அலெக்சாண்டர்
‘நடந்து’ ட�ோஜன். ‘நடந்தா? இங்கருந்து காஞ்சிபுரம் வரைக்குமா…..என்ன விளயாடுறீங்களா’ நித்தின் அதிர்ச்சியானவனாக. ட�ோஜன் அதற்குச் சிரித்தபடியே இல்லை என்று தலையசைத்தார். ‘கார்லப் ப�ோன ரெண்டு மணிநேரத்துல காஞ்சிப்புரத்துல இருக்கலாம். நடந்துப்போனா ஒரு நாளாகிப�ோகும்’ நித்தின். ‘ஒருநாள்தான் ஆகுமா. அப்ப கிட்டதான் இருக்கு’ ட�ோஜன். நித்தினுக்கு என்ன ச�ொல்வது என்றே தெரியவில்லை. அவனுக்குள் க�ோபம் க�ொஞ்சம் க�ொஞ்சமாக எச்சரிக்கை அளவுகளைக் கடந்துக�ொண்டிருந்தது. ‘கிளம்புவமா’ என்றுக்கேட்டுக்கொண்டே ட�ோஜன் வீட்டை விட்டு வெளியே வந்தார். ‘இது முட்டாள்தனம் ரெண்டு மணி நேரத்துல முடிக்கற ஒரு விசயத்துக்கு ஒரு நாள் ஃபுள்ளா வேஸ்ட் பண்ணறது’ நித்தின். ‘எதுக்கு மனுசனுக்கு நூறு ஆயுசு. ஒரே நாள்ல வாழ்ந்துட்டுப் ப�ோயிடலாமே. நூறு வருசம் நேரத்த வீணாக்கி வாழ்ந்துட்டுப் ப�ோறத விட ஒரே நாள்ல வாழ்ந்து முடிச்சுட்டு நேரத்த மிச்சப்படுத்தலாமே’ ட�ோஜன். ‘எதுக்குன்னா…….ஷிட்’ இதற்கு என்ன பதில் ச�ொல்வது என்று தெரியாமல் நித்தின் தடுமாறிப் ப�ோனான். ட�ோஜன் முன்னால் தெருவில் இறங்கி நடந்துக்கொண்டிருக்க நித்தின் வேறு வழியில்லாமல் அவருக்குப் பின்னால் நடக்கத் த�ொடங்கினான். வழித் தெரிந்தவரைப் ப�ோல ட�ோஜன் சாலையில் நடந்துக�ொண்டிருந்தார். ‘க�ோவமும் அகங்காரமும் மனுசன�ோட ப�ொறந்ததில்ல. அதுங்களால மனுசனுக்கு எந்தப் பிரய�ோஜனமும் இல்ல. அதனால அது ரெண்டுத்தையும் விட்டுட்டு அமைதியா என் கூட நடந்துக்கிட்டே இரு. உனக்கு இப்ப ரெண்டு ஜென் கத ச�ொல்றேன். ஜென் மாணவன் ஒருத்தன் ஒரு நாள் வேக வேகமா அவன�ோட குருக்கிட்ட ஓடிவந்தான். 43
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
மாஸ்டர், அடிக்கடி எனக்குக் கெட்ட க�ோவம் வருது, இத எப்படி நா சரிப்படுத்தன்னு கேட்டான். ஓ, அப்படியா வின�ோதமான விசயம்தான். எங்க அந்த வின�ோதமான கெட்ட க�ோவத்த காட்டு நா பாக்குறேன்னார் ஜென் குரு. இப்ப என்னால அந்தக் க�ோவத்த காட்ட முடியாதுன்னான் மாணவன். எப்ப உன்னால அத காட்ட முடியும்னு கேட்டார் குரு. அது திடீருன்னுதான் வருதுன்னு ச�ொன்னான் மாணவன். அப்ப அது உன் கூடவே ப�ொறந்ததில்ல. அது உன்னோட உருவத்துலயும் இல்ல. அப்படி இருந்திருந்தா நீ எப்பவேண்ணா அத எனக்குக் காட்டியிருக்க முடியும். உன் கூடப் ப�ொறக்காத விசயத்த ஏன் நீ வீணா சுமந்துக்கிட்டு திரியறன்னு கேட்டார். அந்த அரசருக்கு அவர�ோட அரண்மனைக்கு வந்திருந்த ஜென் மாஸ்டர் மேல அப்படி ஒரு மரியாத. வந்திருக்கச் ஜென் மாஸ்டருக்கு எல்லா வசதிகளயும் செஞ்சிக்கொடுத்தான் அரசன். சாயங்காலம் ஆனப்ப அவன் ப�ோய்ச் ஜென் மாஸ்டரப் பாத்தான். உங்க கிட்ட கேக்க எனக்கு ஒரு கேள்வி இருக்கு மாஸ்டர்னு பணிவா ச�ொன்னான். தாராளமாகக் கேளுங்கன்னாரு மாஸ்டர். அகங்காரம்னா என்ன அது எப்படி இருக்கும்னு அரசன் கேட்டான். என்ன முட்டாள் தனமான கேள்வி இதுன்னு திருப்பிக் கேட்டார் ஜென் மாஸ்டர். நம்மை முட்டாள்னு ஒருதர் ச�ொல்றதான்னு அரசனுக்குப் ப�ொசுக்குன்னு க�ோவம் வந்துடுச்சு. அதப் பாத்த ஜென் மாஸ்டர் இதுதான் அகங்காரம். ஒருத்தனுக்கு அகங்காரம் வந்தா இப்படித்தான் இருக்கும்னாரு.’ அவர் ச�ொன்ன கதைகள் எல்லாம் நித்தினின் க�ோபம் தெரிக்கும் காதுகளில் ஏறவேயில்லை. தனக்குள் ப�ொங்கி வந்துக�ொண்டிருக்கும் க�ோபத்தையெல்லாம் பற்களுக்குக் கடத்தி, பற்களைக் கடித்துக்கொண்டு மெளனமாக ட�ோஜன் சென்ஜியுடன் நடந்துக�ொண்டிருந்தான். ‘நேரத்த மிச்சப்படுத்தறேன்னு ஒரு விசயத்த அதிவேகமா பண்ணுறதும் தப்பு, நேரத்த வீண்டிக்கறமாதரி ச�ோம்பேறித்தனமா பண்ணுறதும் தப்பு. நேரத்த மிச்சப்படுத்தறேன்னு கருவிகள�ோட பயன்படுத்தி ஒரு வேலய வேகமா முடிக்கும்போது நம்முடைய சக்தி எல்லாம் வேகமா செலவாகிப்போகும். த�ொடர்ச்சியா இப்படி வேக வேகமா செயல்படுறது மன அழுத்தத்த உண்டுபண்ணிரும். அளவுக்கு அதிகமாக விறப்பா இழுத்துக் கட்டப்பட்ட வயலின் இசைக் கருவிய�ோட கம்பிகளுக்குச் சமமானது இது. விறப்பான இசைக் கருவியிலருந்து இனிமையான இசை வராது. அதே மாதரி ச�ோம்பேறித்தனமா ஒரு 44
நவீனா அலெக்சாண்டர்
காரியத்த செய்யும்போது நம்மோட சக்திய சரியா பயன்படுத்தாம அத வீணாக்குற�ோம். இதுவும் நமக்குக் கேடுதான். இது விறைப்பு இல்லாம த�ொங்கும் இசைக் கருவிய�ோட கம்பி ப�ோல. நேரத்த வீணாக்காம நிறுத்தி நிதானமா ஒருமுகப்படுத்தப்பட்ட மனச�ோட செய்யற வேலைங்கதான் ஞானத்திற்கான வழி.’ ‘ஒரு ஊருல வயலினை அருமையா வாசிக்கற ஒரு இளைஞன் இருந்தான். அவன் வாசிக்கும்போது அவன�ோட வயலின்ல இருந்து வர இசை அப்படி ஒரு இனிமையா இருக்கும். ஆனா இந்த இளைஞனுக்கு லேசா ப�ொறுமையும் இருந்துச்சு. அவன�ோட ஊருக்கு பக்கத்துல இருந்த ஜென் மடத்துல இருக்கற துறவிங்களாம் மனச எவ்வளவு அழகா ஒருமுகப்படுத்திக்கிட்டு இருக்காங்கங்கறது அவன�ோட ப�ொறாமைக்குக் காரணம். ஒரு நாள் அவன் தன்ன மறந்து வயலின் வாசிச்சிக்கிட்டிருந்தப்ப அந்த மடத்தோட ஜென் மாஸ்டர் அவனுக்கு முன்னால வந்து நின்னாரு. இளைஞனுக்கு ஒரே சந்தோசம். ஜென் மாஸ்டர் கேட்டார் இந்த இனிமையான இச உன் வயலின்ல இருந்து வந்துச்சா இல்ல உன் மனசுல இருந்து வந்துச்சான்னு. என்னோட மனசுல இருந்து வயலினுக்கு வந்துச்சு மாஸ்டர். அப்ப இந்தக் கருவியை வாசிக்கும்போது உனக்கு வேற எந்த நினைப்பும் இல்லாம உன் மனசு பூரா இந்தக் கருவியிலயும் இசையிலயும்தான் இருந்துச்சா. ஆமா மாஸ்டர். அப்ப உனக்கும் என் மடத்துல இருக்கத் துறவிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல. அவங்க தியானத்துல செய்யறத நீ உன் இசையில செய்யற அவ்வளவுதான் வித்தியாசம். பின்ன ஏன் வீணா அவங்க மேல உனக்குப் ப�ொறாமன்னு கேட்டுட்டு அந்த மாஸ்டர் ப�ோயிட்டர். அந்த இளைஞனுக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு. உனக்கும் சீக்கிரமா புரியும்’ ட�ோஜன். ‘நேரத்த மிச்சப்படுத்தி வாழ்க்கைய எளிமைய�ோக்குற�ோம்னு ச�ொல்லிக்கிட்டே நாம இயற்கைய�ோடு சேர்ந்து இருக்க வேண்டிய நம்ம வாழ்க்கையை அடிய�ோட பிச்சியெடுத்துச் செயற்கை கருவிகள�ோட ஒட்ட வச்சிக்கிட்டிருக்கோம். வளர்ச்சி வளர்ச்சின்னு ச�ொல்லிக்கிட்டு என்னத்தான் நாம நம்மோட வாழ்க்கைய இயந்திரங்கள வச்சு அழகு பண்ணாலும் இயற்கை நம்ம வாழ்க்கையில க�ொண்டுவர அழகச் செயற்கை இயந்திரங்களால க�ொண்டுவர முடியாது. அந்தச் ஜென் துறவிக்குத் த�ோட்டத்த அழுகு படுத்தறது அவ்வளவு பிடிக்கும். அதனாலேயே அவர் இருந்த ஜென் மடம் த�ோட்டத்த அழுகுப் படுத்தற வேலைய அவர் கிட்ட க�ொடுத்துட்டாங்க. கருவிகள வச்சுக்கிட்டு 45
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
நாள் முழுக்க அவர் த�ோட்டத்த பாத்துப்பாத்து கூட்டிப் பெருக்கி அழுகுப்படுத்துவாரு. மரத்துல இருந்து விழற எல்லாச் சறுகுகளையும் கூட்டிப் பெருக்கி தள்ளி பளிச்சுன்னு ஆக்கிடுவாரு. அந்த மடத்துக்குப் பக்கத்துல இன்னொரு ஜென் மடம் இருந்துச்சு. அந்த மடத்துல ர�ொம்ப வயசான ஒரு ஜென் மாஸ்டர் இருந்தாரு. அந்த வயசான ஜென் மாஸ்டருக்கு, இந்தச் ஜென் துறவி த�ோட்டத்த அழுகுப்படுத்தறது அங்க இருந்து பாத்துக்கிட்டே இருக்கறது பழக்கம். ஒரு நாள் வழக்கம்போலச் ஜென் துறவி தன்னோட மடத்து த�ோட்டத்த கூட்டிப் பெருக்கி சுத்தம்பண்ணி அழகுப்படுத்திட்டு பக்கத்து மடத்துல இருந்த வயசான ஜென் மாஸ்டர்கிட்ட எப்படி இருக்குன்னு கேட்டாரு. வயசான அந்தச் ஜென் மாஸ்டர் க�ொஞ்ச நேரம் அந்தத் த�ோட்டத்தையே பாத்துக்கிட்டிருந்துட்டு ஒரே ஒரு குறை இருக்குன்னாரு. என்ன குறைன்னு ஆச்சரியத்துல இந்தச் ஜென் துறவி கேட்டாரு. இந்தச் சுவர் ஏறி குதிச்சு அங்க வர எனக்கு உதவிப்பண்ணு காட்டுறேன்னாரு வயசான ஜென் மாஸ்டர். இந்தச் ஜென் துறவியும் அவர் சுவர் ஏறி குதிச்சு த�ோட்டத்துக்கு வர உதவிப் பண்ணாரு. த�ோட்டத்துக்கு வந்த வயசான ஜென் மாஸ்டர் த�ோட்டத்துல இருந்த எல்லா மரத்தையும் புடுச்சி உலுக்கிவிட்டாரு. எல்லா மரமும் தரையில் இலைகள உதுத்து விட்டுச்சு. இப்ப பாரு எவ்வளவு அழகாக இருக்குன்னு ச�ொல்லிட்டு வயசான ஜென் மாஸ்டர் ப�ோயிட்டாரு.’ ‘இயற்கையிலேயே அழகா இருக்கற நம்ம வாழ்க்கைய நாம செயற்கையா அலங்கரிச்சிக்கிட்டிருக்கோம்’ ட�ோஜன்.
46
நவீனா அலெக்சாண்டர்
47
உன் மனமே புத்தர், புத்தரே உன் மனம்
நீ முன்னேறும் பாதையைப் பற்றி அறிந்துக்கொள்ள அதில் திரும்பி வந்துக்கொண்டிருப்பவர்களை கேள். – புத்தா
கி
.பி. 534-ல் வடக்கு வேய் அரச வம்சாவளி மேற்கு மற்றும் கிழக்கு வேய் அரச வம்சாவளி என்று இரண்டு பெரும் பிரிவுகளாக உடைந்தது. லிய�ோங் நகரம் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த நகரில் வாழ்ந்த அனைத்து பெளத்த துறவிகளும் கிழக்கு வேய் வம்சாவளியின் தலைநகரமாக இருந்த ஹேக்கு இடம் பெயர்ந்துவிட்டார்கள். இப்படி இடம் பெயர்ந்தவர்களில் ப�ோதி தர்மரின் சீடர் ஹூய்-க�ோவும் அடக்கம். இடம் மாறிய இந்த இடத்தில்தான் முதல் முதலாக ஹூய்-க�ோ, டான்-லின்னை சந்தித்தார். சமஸ்கிருத ம�ொழியிலிருந்து சீன ம�ொழிக்கு ம�ொழிபெயர்க்கப்பட்ட மஹாயன பெளத்த சூத்திரங்களுக்கு முன்னுரையும் விளக்கக் குறிப்புக்களும் எழுதிக்கொண்டிருந்தவர் டான்-லின். தன்னுடைய குருநாதர் ப�ோதி தர்மரின் புத்தகமான Outline of Practiceக்கு முகவுரை எழுதித் தரும்படி அந்தப் புத்தகத்தை டான்-லினிடம் ஹூய்-க�ோ க�ொடுத்தார். பல்வேறுப்பட்ட பெளத்த நூல்களுக்கு முகவுரையும் விளக்க உரையும் எழுதுவதையே த�ொழிலாகக் க�ொண்ட டான்-லினுக்கு எடுத்த எடுப்பிலேயே ப�ோதி தர்மரின் புத்தகம் தனித்துவம் மிக்கது என்பது தெரிந்துவிட்டது. தனித்துவம் என்பதுடன் மாத்திரம் அவை நின்றுவிடக் கூடியவை அல்ல என்பதையும் அவர் உணர்ந்துக�ொண்டார். சா’ஆன் ப�ௌத்தத்தைச் சமஸ்கிருத நூல்களும் 48
நவீனா அலெக்சாண்டர்
சீன நூல்களும் பழமை முறையிலேயே ச�ொல்லிக்கொண்டிருக்கத் தடாலடியாக மாற்றிச் ச�ொல்லியிருந்தது ப�ோதி தர்மரின் விளக்கங்கள். ‘உன் உள்ளார்ந்த இயல்பைப் பார்ப்பதே ஜென்……ஜென் என்று எதையெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள�ோ அவை ஜென் இல்லை’ என்று ஒரேயடியாக அடித்தது ப�ோதி தர்மரின் ஜென் குறித்த விளக்கங்கள். இப்படியான விளக்கங்களை எல்லாம் டான்-லின் அதற்கு முன்பு கேட்டதும் கிடையாது பார்த்ததும் கிடையாது. மற்ற சீன பெளத்த நூல்கள் ஜென் என்பது பெளத்த ஞானத்திற்கான ஒரு வழி என்று ச�ொல்லிக்கொண்டிருக்க, ப�ோதி தர்மர�ோ ஜென்தான் பெளத்த ஞான விடுதலை என்றார். நம்மை அறிவதுதான் ஜென் என்று ச�ொன்ன ப�ோதி தர்மர், ஜென்தான் பெளத்த ஞான விடுதலையும் என்கிறார். அதாவது நம்மை அறிவதே, நம்மை ந�ோக்கிய உள்ளொளி தேடலே பெளத்த ஞான விடுதலை என்பது ப�ோதி தர்மர் சா’ஆனுக்குக் க�ொடுத்த விளக்கம். சிறந்த வாள் வீரன் ஒருவன் படு இலாவகமாக வாளை வீசிக் கட்டுக்களை அறுப்பதைப் ப�ோலப் ப�ோதி தர்மரின் சா’ஆனும் மனிதர்களின் மனத் துயரங்களை அறுத்து எறிந்து மன விடுதலையைத் தரக் கூடியதாக இருந்தது. தினசரி வாழ்க்கையில் சா’ஆனை பயன்படுத்தும் வகையில் மிக எளிமைப் படுத்தியவர் ப�ோதி தர்மர். பழமையான சா’ஆன் பெளத்த நூல்கள் ஓழுக்க முறைகளையும் தியான முறைகளையும் கடுமையாகப் பின்பற்ற சீடர்களுக்கும் மக்களுக்கும் வழிகாட்டிக்கொண்டு இருக்க, நீயே ஜென்னாக இருக்கும்போது, நீ செய்யும் அன்றாடச் செயல்களே ஜென்னிற்கான தியானமாக இருக்கும்போது எதற்கு வேலை மெனக்கெட்டுக் கால்களை மடக்கிக்கொண்டு தியானத்தில் உட்கார வேண்டும் என்று கேட்டார் ப�ோதி தர்மர். இதனால் ஒழுக்க நெறிகளையும், தியானத்தையும் முற்றிலுமாகத் தவிர்க்க ச�ொல்லிவிடவில்லை அவர். நாம் செய்யும் அன்றாடச் செயல்களையே முழுக் கவனத்துடனும், மனதைச் சிந்தனைகளால் அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்திச் செய்வோமானால் அதுதான் ஜென் தியானம் என்றார். இது நமக்கான ஞான விடுதலையைத் தரும் என்றார். இதன்படி நாம் அன்றாட வாழ்வில் மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் அனைத்துக் காரியங்களும் ஜென்னாகிவிடுகிறது. எதையும் ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் செய்யும் ப�ோது அது நேர்த்தி அடைகிறது. தனித்தன்மையைப் பெறுகிறது. ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் வாழ்வை இந்த ந�ொடியில் இரசித்த வாழ நமக்குக் 49
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
கற்றுக்கொடுக்கிறது. நாம் வாழும் இந்த ந�ொடி மகிழ்ச்சிகரமாகிறது. அடுத்த ந�ொடியைக் குறித்தோ அடுத்த நாளைக் குறித்தோ எத்தகைய கவலையும் நமக்கு ஏற்படுவதில்லை. காரணம் நாம் இந்த ந�ொடியில் முழுமையாக வாழ்ந்துக�ொண்டிருப்பதால். பழமையான பெளத்த விளக்கங்கள் மனதைச் சுத்திகரிப்பு செய்யும் பயிற்சிகளை முதலில் கடைப்பிடித்துவிட்டு பிறகு ஜென் தியானத்தில் அமரும்படி ச�ொல்ல, ப�ோதி தர்மர�ோ மனம் ஒருமுகப்படுத்தப்பட்டுவிட்டாலே அது சுத்தமாகிவிடும்போது எதற்குத் தனியாக அதற்கு என்று பயிற்சி செய்து நேரத்தை வீணாக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இப்படிச் ஜென்னின் பல அடிப்படை கூறுகளை எல்லாம் படு எளிமைப் படுத்தி அதைச் சாமானிய மனிதனும் தன்னுடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் வகையில் மாற்றியமைத்ததுதான் பிற்காலத்தில் ப�ோதி தர்மரை சீனாவில் கதாநாயக வழிபாடு அளவிற்கு உயர்த்தியது. அவர் இறந்து இருநூறு வருடங்கள் கழித்தே அவருடைய ஜென் குறித்த எழுத்துக்கள் சீனா முழுவதிலும் பெரும் புகழ்பெறத் த�ொடங்கின. அதில் முக்கியமானது அவருடைய Outline of Practice புத்தகம். இதன் பிறகு அவர் த�ொடர்பான அனைத்து விசயங்களும் சீனாவின் பழம் பெருமைகளில் ஒன்றாகிப்போனது. அவருடைய ஜென் ப�ௌத்தம் எளிய மனிதர்களுக்கும் ஏற்றது என்பதால் சீனாவில் ஜென் ப�ௌத்தம் இன்னும் அதிகமாகவும் வேகமாகவும் பரவியது. இதன் பிறகே ஷாவ�ோலின் மடத்தில் இருந்தப�ோது குங்பூ கலையை அவர் அறிமுகப்படுத்தியதாக எழுதப்பட்டன. அவரை மையமாகக் க�ொண்டு பல நாட்டுப் புற புனைவுக் கதைகள் இறக்கைக்கட்டத் த�ொடங்கின. அவர் தியானம் செய்யும்போது தூக்கம் வராமலிருக்க வேண்டி இரண்டு இமைகளையும் வெட்டி வீசி விட்டார் என்றும் அவருடைய இமைகள் விழுந்த இடத்தில் டீ இலை முளைத்தது என்பது ப�ோன்ற பல புனைவுகள். இன்றைக்கு நமக்குக் கிடைக்கும் ப�ோதி தர்மரின் பழங்கால ஓவியங்களில் அவர் கண்களில் இமை இல்லாமல் முண்ட முழியுடன் இருப்பதற்குக் காரணம் இப்படியான புனைவுகளே. ஷாவ�ோலின் மடத்தில் அவர் குருவாக இருந்ததாகவும் அவரைத் த�ொடர்ந்து சில ஆண்டுகளுக்கு அவருடைய சீடர் பரம்பரை ஷாவ�ோலின் மடத்தின் குருமார்களாக இருந்தார்கள் என்று ச�ொல்லும் பாரம்பரிய எழுத்து பதிவுகளும் இருக்கின்றன. கி.பி. 527-ல் அவர் ஷாவ�ோலின் மடத்தின் தலைமை குருவாகப் பதவியேற்றுக்கொண்டார் என்று அந்தப் பதிவுகள் ச�ொல்கின்றன. 50
நவீனா அலெக்சாண்டர்
அவர் குருவாக இருந்த சமயத்தில் சீட துறவிகள் உடல் வலிமை அற்று இருப்பதைப் பார்த்துவிட்டு அவர்கள் உடல் வலிமை பெறவேண்டி ல�ோன்-ஷி-பா-ஷூ (குங்பூ)-வை அவர்களுக்குக் கற்றுத் தந்ததாகச் ச�ொல்லப்படுகிறது. குங்பூ கலையுடன் டிராகன், புலி, சிறுத்தை, க�ொக்கு மற்றும் பாம்பு ஆகிய விலங்குகளின் உடல் ம�ொழியையும் சேர்த்து வூ-சிங்-ஷூவையும் அவர்களுக்குக் கற்றுத் தந்தார் என்றும் கருதப்படுகிறது. ஆனால் இவற்றை உறுதி செய்யும் வரலாற்று எழுத்துப் பதிவுகள் கிடைக்கவில்லை. ஜப்பானிலிருந்து பெளத்த துறவிகள் சீனாவிற்கு வந்து பெளத்த க�ொள்கைகளைக் கற்றுக்கொள்வது வழக்கமான ஒன்று. எப்படிச் சீன பெளத்த துறவிகள் மேலும் ஆழமாகப் ப�ௌத்தம் குறித்து அறிந்துக�ொள்ள இந்தியாவிற்கு வந்தார்கள�ோ அதே ப�ோல. மஹாயன பெளத்த க�ொள்கைகளை மேலும் ஆழமாகக் கற்றுக்கொள்ள ஜப்பான் பெளத்த துறவிகள் சீனாவிற்கு வந்துப்போய்க் க�ொண்டிருந்தாலும் ப�ோதி தர்மர் வளர்த்தெடுத்த சா’ஆன், ஜென்னாகப் பெயர் மாற்றம் பெற்று ஜப்பானுக்குள் வந்தது கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில்தான். ப�ோதி தர்மரின் ஜென்னை ஜப்பானில் அறிமுகப்படுத்தியவர்கள் மியான்-ஈசாயியும் (கி.பி. 1141-1215) ட�ோஜன் சென்ஜியும் (கி.பி. 1200 – 1253). மியான்-ஈசாய் அறிமுகப்படுத்திய ஜென் ரின்சாய் பிரிவு என்றும், ட�ோஜன் சென்ஜி அறிமுகப்படுத்திய ஜென் ச�ோட்டோ பிரிவு என்றும் அழைக்கப்படுகிறது. ஓபாக�ோ என்று மூன்றாவது ஜென் பிரிவும் பிற்காலத்தில் த�ோன்றியது. இன்றைக்கு உலகம் முழுவதிலும் குறிப்பாக மேற்கில் பெயரும் புகழும் பெற்றிருக்கும் ஜென் ஜப்பானிய ஜென்தான். சீனாவின் சா’ஆனைவிட ஜப்பானின் ஜென்னே இன்றைக்குப் ப�ோதி தர்மர் அறிமுகப்படுத்திய தியான ப�ௌத்தத்தின் முகமாக அறியப்படுகிறது. இதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பவர் ட�ோஜன் சென்ஜி. அது எப்படி? இதைப் பார்ப்பதற்கு முன்பாக சா-ஆன் எப்படி ஐந்தாக உடைந்து பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து இரண்டு பிரதான கிளையாகத் தழைத்தது என்கிற வரலாற்றை தெரிந்துக�ொள்வது ஜென் குறித்த ஒரு முழுமையான புரிதலுக்கும் அதன் மூல வேர்களை அடையாளம் காண்பதற்கும் வசதியாக இருக்கும். மாற்றுக் கருத்துக்களும், எதிர் கருத்துக்களும் மனித சிந்தனை முறையின் தவிர்க்க முடியாத அற்புதங்கள். நிச்சயமாக அற்புதங்கள்தான். மனிதனுடைய 51
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
சிந்தனை முறையைப் பல தளங்களில் விரிவாக்கக் கூடியது மாற்றுக் கருத்துக்களும் எதிர் கருத்துக்களும். உலகில் த�ோன்றிய எந்த ஒரு மதமும், தத்துவமும் இந்த இரண்டிலிருந்தும் விதிவிலக்கு பெற்றவையாக இல்லை. ப�ொதுப்புத்தியிலிருந்து அணுகும்போது எதிர் கருத்துக்களும் மாற்றுக் கருத்துக்களும் மதங்களின் தத்துவங்களின் சங்கடங்களாகப் பார்க்கப்பட்டாலும் இவைகளின் கருத்தாழத்திற்கும் பல்வேறுபட்ட பரிமாணங்களுக்கும் வழியமைத்து தருபவைகள் என்பதைப் புறம்பே தள்ளிவைத்துவிட இயலாது. அந்த வகையில் ப�ோதி தர்மரால் உண்டாக்கி வைக்கப்பட்ட சா-ஆன் தத்துவமும் மாற்றுக் கருத்துக்களுக்கும் எதிர் கருத்துக்களுக்கும் உள்ளானது. அதன் வெளிப்பாடே தெற்கு சா-ஆன் பள்ளிக்கூடம் (Southern School of Chan) மற்றும் வடக்கு சா-ஆன் பள்ளிக்கூடம் (Northern School of Chan). பெயரில் தெற்கு, வடக்கு என்று இருந்தாலும் யதார்த்தத்தில் இந்த இரண்டும் நிலவியல் சார்ந்த அடையாளம் காரணமாக வந்து ஒட்டிக்கொண்ட பெயர்கள் அல்ல. ஞானம் அல்லது உள்ளொளி தேடலுக்கான பதில் அல்லது தன்னையறிதல் என்று பல வகைகளில் அடையாளம் சுட்டப்படும் புத்தா தன்மை என்பது திடுப்பென்று ஒருவனுக்குள் த�ோன்றக் கூடியது என்று மாற்றுக் கருத்து எடுத்து வைத்து கச்சைக் கட்டியவர்கள் தெற்கு சா-ஆன் வகையறா என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். தியானம் மற்றும் இடைவிடா பயிற்சிகளின் வழி படிப் படியாக வருவதே புத்தா தன்மை என்று ச�ொன்னவர்கள் வடக்கு சா-ஆன் பிரிவினர் என்று முத்திரைகுத்தப்பட்டார்கள். இந்தப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனித உயிரும் தனக்குள் இயல்பிலேயே புத்தா தன்மையுடனேயே பிறக்கிறது என்பதே சாஆனின் அடிப்படை க�ொள்கை. ச�ொல்லப்போனால் ப�ௌத்தத்தின் அடிப்படையும் கூட. மஹாயன பெளத்த சூத்திரங்களில் ஒன்றான தத்தகத்தகர்பா (சீன ம�ொழியில் இந்தச் சூத்திரத்தை ருலாய்சாங் என்று குறிப்பிடுகிறார்கள்) இந்தக் க�ோட்பாட்டை வலியுறுத்தக் கூடியதாக இருக்கிறது. மனித வாழ்வின் இன்ப துன்பங்களில் சிக்கும் மனித மனமானது தன்னுடைய புத்தா தன்மையை உணர முடியாமல் ப�ோய்விடுகிறது. மனதின் புத்தா தன்மையை மனதிற்கு அடையாளம் காட்டுவதே ஞானமடைதல் என்று ச�ொல்கிறது சாஆன். வேறு வார்த்தைகளில் ச�ொல்வது என்றால் புத்தரை வெளியில் 52
நவீனா அலெக்சாண்டர்
தேடித் திரியாமல் ஒவ்வொரு மனிதனும் புத்தனே என்று உணர்ந்து தெளியும் அந்த ந�ொடியே ஞானம் பெறுவதின் த�ொடக்கம். மனதின் புத்தா தன்மையை, நாமே புத்தன்தான் என்பதை அடையாளம் காட்ட கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகளை முன் வைத்து உருவானது சா-ஆணின் இரு பெரும் பிரிவுகள். அமைதி பேர�ொளி (silent illumination) வழிமுறையைக் கடைப்பிடித்தவர்கள் தெற்கு சா-ஆன் பிரிவினர். மனதை அலை பாய விடாமல் ஒருநிலைப்படுத்தி தியானத்தில் உட்காரும் தருணம் ஒன்றின்போது மனம் திடுமென்று தன்னுடைய புத்தா தன்மையை உணரும் இதற்கென்று தனியாக எத்தகைய பயிற்சிகளையும் உடலை வருத்திச் செய்யவேண்டியதில்லை என்று ச�ொன்னார்கள் தெற்கு சா-ஆன் பெளத்த குருமார்கள். நம்முடைய ட�ோஜன் சென்ஜியும் இந்தப் பிரிவை சேர்ந்தவர்தான். தியானத்தோடு சேர்த்து க�ோன் கதை பயிற்சிகளையும், டக்குசான் பயிற்சிகளையும் கடைப்பிடிப்பதின் வழியே மனதின் புத்தா தன்மையை ஒருவனால் உணர முடியும் என்று நம்பியவர்கள் (kanhua) வடக்கு சா-ஆன் குருமார்கள். இரண்டு பிரிவுகளும் சீனாவிலும், ஜப்பானிலும், க�ொரியாவிலும் தங்களின் தாக்கங்களை முறையே செலுத்தியிருக்கிறது. ஜப்பானில் ட�ோஜன் சென்ஜி உருவாக்கிய ச�ோட�ோ (soto) ஜென் பிரிவு அமைதி பேர�ொளி முறையையும், ரின்சாய் (Rinzai) க�ோன் முறையையும் தங்களின் இயங்கு முறைகளாகக் க�ொண்டிருந்தன. க�ொரியாவிலும் க�ோன் முறையே பெரும் தாக்கத்தைச் செலுத்தியது. (க�ொரியாவில் ஜென்னை ச�ோன் (son) என்று குறிப்பிடுவார்கள். க�ோன் முறையிலான ஜென்னை க�ொரியாவில் வளர்த்தெடுத்த முக்கியமான ஜென் குருக்கள் சினுலும் (கி.பி. 1158–1210) இவருடைய சீடரான ஹெய்சிமும் (கி.பி. 1178–1234). க�ொரியாவில் அமைதி பேர�ொளி முறையிலான ஜென்னால் எத்தகைய தாக்கமும் த�ொடக்கக் காலம் த�ொட்டே செலுத்த முடியவேயில்லை). அமைதி பேர�ொளி முறையை அறிமுகப்படுத்தித் தூக்கிப்பிடித்தது காட�ோங் குடும்பம், க�ோன் முறையைப் பலப்படுத்தியது லின்ஜி குடும்பம். இந்த இரண்டுமே சா-ஆனின் மிகப் பெரும் பிரதான குடும்பங்கள். சீன, ஜப்பான் மற்றும் க�ொரிய ஜென்களுக்கு மூலவேராக இருப்பவைகள். சீனாவின் சாங் அரச வம்சாவளி (கி.பி. 960 – 1279) காலத்தில் சா-ஆனில் ஐந்து முக்கியமான குடும்பங்கள் த�ோன்றின. அந்த ஐந்தில் இந்த இரண்டும் மிக முக்கியமானவை. ப�ொதுவாக 53
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
சாங் அரச வம்சாவளி காலகட்டமே சா-ஆனின் ப�ொற்காலம் என்று கருதப்படுகிறது. ப�ோதி தர்மரின் காலத்திற்கு பிறகான ஒரு சில நூற்றாண்டுகளிலேயே அவர் உருவாக்கிய சா-ஆன் சீனா முழுவதும் பெரும் செல்வாக்கு பெற்று அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்துவிட்டது என்றாலும் அதன் உச்சக்கட்ட வளர்ச்சி என்பது சாங் அரச வம்சாவளி காலகட்டத்திலேயே நிகழ்ந்தது. இந்த காலகட்டத்திலேயே சா-ஆனின் ஐந்து குடும்பங்களுடைய த�ோற்றமும் வளர்ச்சியும் நிகழ்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் டாங் அரச வம்சாவளி (கி.பி. 618 – 907) காலகட்டம் முதலே இது நிகழத்தொடங்கிவிட்டதாகக் கருதுகிறார்கள். இருந்தாலும் சாங் வம்சாவளி காலகட்டமே சா-ஆன் அடுக்குமுறையையும் மிகச் சிறந்த வளர்ச்சியையும் ஒருங்கே கண்ட காலகட்டம். ப�ோதி தர்மருக்கு அவர் காலத்திய சீன பேரரசில் பெரும் செல்வாக்கு இருந்திருக்கவில்லை என்றாலும் அவர் உருவாக்கிச் சென்ற சா-ஆனிற்கு பிற்காலத்தில் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. முக்கியமாக மேல் குடியாக கருதப்பட்ட அரச குடும்பத்தை சேர்ந்த கூட்டத்தாரிடையே. சா-ஆன் உயர் குடி அடையாளமாகவே மாறிப்போனது. இதன் காரணமாக சீன பேரரசர்களின் சிறப்பு கவனமும் ப�ொருளாதார உதவிகளும் சா-ஆன் மடங்களுக்கும் அவற்றை நிர்மாணித்த குருக்குளும் தங்கு தடையின்றி கிடைத்தன. இதன் விளைவாகச் சா-ஆனும், சா-ஆன் குருக்களும் சீன மக்களிடையே பிம்ப கதாநாயகர்களாகிப்போனார்கள். கண்பட்ட கதையாக இந்தப் பிம்ப வழிபாட்டு நிலை நீண்ட காலத்திற்கு நிலைக்கவில்லை. டாங் அரசபரம்பரையின் வீழ்ச்சியின்போது சாஆனும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பெளத்த மடங்கள் குறிப்பாக சா-ஆன் மடங்கள் தாக்குதலுக்குள்ளானது. பேரரசு ப�ோட்டில் தங்களுக்குள் அடித்துக்கொண்ட மாகாண இராணுவங்களே இந்தக் காரியத்தை செய்தன. சீனாவும் மாகாண சண்டையும் வானமும் பூமியும் ப�ோல. பேரரசுகளின் முடிவில் மாகாணங்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது சீனாவின் நீண்ட நெடிய பாரம்பரியம். அப்படியான ஒரு பாரம்பரிய மறு சுழற்சி நிகழ்வான டாங் பேரரசின் வீழ்ச்சியின்போது ஏற்பட்ட மாகாணங்களுக்கிடையிலான சண்டையின்போது இராணுவ தளபதிகள் பெளத்த மடாலயங்களை பெரும் ஆபத்தாகப் பார்த்தார்கள். மடாலயங்கள் தங்களுக்கு எதிரான புரட்சிகரக் கருத்துக்களையும் அதன் வழி ஆட்சிக்கு எதிரான புரட்சியாளர்களையும் உருவாக்கக் கூடும் என்று அவர்கள் நம்பினார்கள். இதன் காரணமாக பெளத்த 54
நவீனா அலெக்சாண்டர்
மடாலயங்கள் மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டன். ஒன்று அல்ல இரண்டல்ல ஆயிரக் கணக்கிலான மடாலயங்கள். டாங் பேரரசு வீழ்ச்சியைத் த�ொடர்ந்த ஆண்டுகளில் 30,000-த்திற்கும் மேற்பட்ட பெளத்த மடாலயங்கள் செயல்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டன. புதிய மடங்கள் நிறுவுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. சா-ஆன் மடாலயங்களே இதில் முக்கிய குறி. ஆளும் அதிகார வர்க மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் சா-ஆன் ப�ௌத்தத்தில் அதிகப்படியாக இருந்ததால் அதற்கு இப்படிய�ொரு சிறப்பு கவனிப்பு. மாகாண சண்டையை முடிவிற்குக் க�ொண்டுவந்து சாங் பேரரசை உருவாக்கிய டாய்சுவும் இதற்கு விதி விலக்கில்லை. பேரரசனான டாய்சு கன்பூசிய கருத்துக்களை தன்னுடைய பேரரசு முழுவதிலும் மீண்டும் வழக்கிற்குக் க�ொண்டு வந்தான். ப�ௌத்தத்தின் தாக்கம் கட்டம்கட்டி முடக்கப்பட்டது. ஒருவகையில் கன்பூசியம் ஆளும் வர்கத்தை ந�ோக்கிய கண் மூடித்தனமான அடிபணிதலை ப�ொது மக்களிடம் க�ோருவதால் அதை தூசித்தட்டியெடுத்து நிலைநிறுத்துவது தன்னுடைய ஆட்சியைப் பலப்படுத்த உதவும் என்று கணக்கு ப�ோட்டான் டாய்சு. இதன் காரணமாகவே சாங் பேரரசின் த�ொடக்கம் கன்பூசியத்தின் நவீன மறுமலர்ச்சி (Neo-Confucianism) காலகட்டம் என்று கருதப்படுகிறது. ப�ௌத்தத்தை முடக்கி கன்பூசியத்தை மீண்டும் ஒருமுறை வரலாற்று சுழற்சியில் முதன்மைப் படுத்தினாலும் சா-ஆன் மீதான கவர்ச்சி மாத்திரம் சாங் பேரரசர்களை பிடித்து ஆட்டிக்கொண்டே இருந்தது. விளைவு, வலது கையால் சா-ஆனை முடக்கிக்கொண்டே இடது கையால் சா-ஆன் வளரச்சிக்கான கலை, இலக்கிய, ப�ொருளாதார உதவிகளையும் செய்துக�ொண்டே இருந்தார்கள். இத்தகைய அரசியல் பின்புலத்தில்தான் சா-ஆனின் ஐந்து குடும்ப பிரிவு த�ோன்றுகிறது. இதற்கு மூல காரணமாக இருந்தவர் யார்?
55
சாப்பிடுவது நேற்றைய மனமா இன்றைய மனமா நாளைய மனமா
என்னத்தான் தங்க துகள் விலை மதிப்பில்லாதது என்றாலும் அது நம் கண்களில் விழுமானால் அது நமக்கு இடைஞ்சலே. – புத்தர்
இ
ருவரும் நடக்கத் த�ொடங்கி இரண்டு மணி நேரம் கடந்துவிட்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அரக்க பரக்க ப�ோய்க்கொண்டும் வந்துக�ொண்டுமிருக்க அந்தப் பரபரப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாக ட�ோஜனும் நித்தினும் நடந்துக�ொண்டிருந்தார்கள். நித்தினுடைய வாழ்வில் இதுதான் முதல் முறை, இரண்டு மணி நேரம் த�ொடர்ச்சியாக நடந்துக�ொண்டிருப்பது. வீட்டிலும் அலுவலகத்திலும் நடக்கும் குட்டி நடைகளைத் தவிர அவன் இவ்வளவு நீண்ட தூரம் நடந்து பழக்கப்பட்டதே கிடையாது. அவனுடைய இரண்டு கெண்டை கால்களும் வலியெடுக்கத் த�ொடங்கிவிட்டது. வியர்வை உடல் முழுவதும் பரவி அவன் ப�ோட்டிருந்த உடைகளை அவன் உடம்புடன் இறுக்கிப்பிடித்து வைத்துக்கொண்டது. வலியையும், வியர்வையையும், க�ோபத்தையும் தாண்டி அவனுடைய மனம் ஏன�ோ லேசாகிவிட்டதைப் ப�ோன்ற உணர்வு. கண்களுக்கு எதிரில் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் உலகில் இருந்து முற்றிலும் விடுபட்டுத் தனித்து இயங்குவதைப் ப�ோன்றிருந்தது அவனுக்கு இந்த இரண்டு மணி நேர நடை. சட்டென்று ஒரே உலகில் இருவேறு தன்மைகள் இருப்பதைக் கண்டுக�ொண்டான். 56
நவீனா அலெக்சாண்டர்
மனிதனுடைய நடைக்கும் மனதிற்கும் இருக்கும் த�ொடர்பு இன்றுதான் அவனுக்கு முதன் முறையாகப் புலப்பட்டது. அவன் உலக வரலாறுகளையும் இலக்கியங்களையும் வாசித்தவனில்லை. இருந்தும் ஏன�ோ அவனுடைய மனம் நடைக்கும் அவற்றுக்கும் த�ொடர்பு இருந்திருக்கலாம�ோ என்று கேள்வி எழுப்பி அமைதியானது. ‘அதனாலதான் பல பெரிய மேதைங்களும், ஞானிகளும் ஒரு இடத்துல நிக்காம அங்கயும் இங்கயும் சுத்தி திரிஞ்சது’ ட�ோஜன் சென்ஜி. ‘பசிக்குது எதாவது சாப்பிடலாமா’ நித்தின். ‘தாராளமா’ ட�ோஜன் சென்ஜி. இருவரும் சாலைய�ோரம் இருந்த உணவகத்திற்குள் சென்றார்கள். ட�ோஜன் தனக்கு டீ மாத்திரம் ப�ோதும் என்று ச�ொல்லிவிட்டார். டீயும் உணவும் நித்தினுக்கு முன்பு வைக்கப்பட்டது. டீ கிளாசை நித்தின் தனுக்கு முன்பு உட்கார்ந்திருந்த ட�ோஜனை ந�ோக்கி நகர்த்தி வைத்துவிட்டு உணவில் கையை வைத்தான். இல்லாத ஆளுக்கு டீ கிளாசை நித்தின் நகர்த்தி வைப்பதை வின�ோதமாகப் பார்த்துக்கொண்டே நகர்ந்து சென்றான் சர்வர் பையன். ‘இந்தச் சாப்பாட நேத்து இருந்த மனச�ோட சாப்புடுறியா, இப்ப இருக்கற மனச�ோட சாப்புடுறியா இல்ல நாளைக்கு வரப்போற மனச�ோட சாப்புடுறியா’ ட�ோஜன் டீ கிளாசை எடுத்து டீயை உறிஞ்சியப்படி கேட்டார். சாப்பிட்டுக்கொண்டிருந்த நித்தின் நிமிர்ந்து ய�ோசனையில் அவரைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு தெரியவில்லை என்று உதட்டை லேசாகப் பிதுக்கினான். ‘டேசான் பெரிய ஜென் மாஸ்டர். எல்லாப் பெளத்த சூத்திரங்களயும் கறச்சு குடிச்ச ஆளு. அதுலயும் டைமண்ட் சூத்திரத்துக்கு விளக்கம் ச�ொல்றதுல அவர அடிச்சுக்க ஆளே கிடையாது. அதனாலேயே அவர் எங்க ப�ோனாலும் வந்தாலும் தன்னோட முதுகுல இருக்கப் பையில அந்தச் சூத்திர புத்தகத்தை வச்சிருப்பாரு. அவராலேயே அந்தச் சூத்திரத்துக்கும் பெரிய பேரு கிடச்சது. அதுக்காகவே பல ஜென் மாஸ்டர்கள் அவருக்குப் பெரிய மரியாதை க�ொடுத்தார்கள். ஊர் மக்களுக்கும் இதனாலேயே அவர் மேல பெரிய பக்தி. 57
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
ஒரு நாள் பயணம் செஞ்சிக்கிட்டிருந்தப்ப சாப்புட்டா தேவலாம்போல இருக்குமேன்னு அவருக்குத் த�ோணுச்சு. சாலைய�ோரத்துல வயசான பாட்டி டீயும் சாப்பாடும் விக்கறதப் பார்த்தாரு. சாப்புடலாம்னு நினச்சுட்டாரே ஒழிய அப்ப அவர் கையில சாப்பாடு வாங்கிச் சாப்பிட காசு இல்ல. அந்தப் பாட்டிக்கிட்ட ப�ோயி சாப்பாடு வேணும்னு கேட்டாரு. அந்தப் பாட்டி சாப்பாட்டுக்கான விலய ச�ொன்னாங்க. என் கையில காசு இல்ல ஆனா என் கிட்ட டைமண்ட் சூத்திரா இருக்கு. காசு இல்லாம எனக்குச் சாப்பாடு க�ொடுத்தா நா பதிலுக்கு இந்த டைமண்ட் சூத்திரால இருக்க ஞான ரகசியத்த ச�ொல்றேன்னு பேரம் பேசினாரு. அந்தப் பாட்டி டைமண்ட் சூத்திராப் பத்தி கேள்விப்பட்டதுண்டு. இருந்தாலும் அந்தப் பாட்டி, ஓ சென் மாஸ்டர் நா கேக்கற கேள்விக்கு நீங்க பதில் ச�ொன்னா காசு க�ொடுக்காம சாப்பிட்டு ப�ோகலாம்னு ச�ொன்னாங்க. நல்லதா பேச்சுத் தாராளமா கேளுங்கன்னாரு சென் மாஸ்டர். இந்தச் சாப்பாட சாப்பிடும்போது நேத்தைய மனசால சாப்பிடுவீங்களா, இப்பத்தைய மனசால சாப்பிடுவீங்களா இல்ல நாளைய மனசால சாப்பிடுவீங்களான்னு அந்தப் பாட்டி கேட்டாங்க. இந்தக் கேள்விக்கு அந்தச் சென் மாஸ்டருக்கு ஒரு பதிலும் த�ோனல. படிச்ச எல்லாச் சூத்திரங்களையும் ஞாபகத்துக்குக் க�ொண்டுவந்து இதுக்கான பதில் இருக்கான்னு பாத்தாரு. இல்ல. இதுக்கே பாதி நாளு ப�ோயிட்டுது. அந்தப் பாட்டி அவரப் பாத்து சிரிச்சுக்கிட்டே அவங்க வேலய பாத்துக்கிட்டிருந்தாங்க. கடசியா தன் முதுகுப் பையிலருந்த டைமண்ட் சூத்திரத்தை எடுத்து இதுக்கான பதில தேடி பக்கம் பக்கமா புரட்டு ஆரம்பிச்சுட்டாரு ஜென் மாஸ்டர். நேரம் ப�ோய்கிட்டே இருந்துச்சு. ஆனா அவருக்குப் பதில் மட்டும் கிடைக்கல. ப�ொழுது சாஞ்சும் ப�ோச்சு. அந்தப் பாட்டி கடையை ஏறக்கட்டிட்டு வீட்டுக்கு கிளம்பும் ப�ோது ஜென் மாஸ்டரைப் பாத்து நீங்க நெசமாவே முட்டாள் துறவியாத்தான் இருக்கனும். சாப்பாட்ட வாயாலதான சாப்பிடனும் என்று ச�ொல்லிவிட்டு அந்தப் பாட்டி ப�ோய்விட்டார். சென் மாஸ்டருக்கு பேச்சே வரல. சாப்பாட்டு வண்டிய தள்ளிக்கிட்டு ப�ோற பாட்டியையே பாத்துக்கிட்டு உக்காந்திருந்தார்’ ட�ோஜன். சாப்பிட்டுக்கொண்டிருந்த நித்தின் முதல் முறையாக அவர் ச�ொன்ன கதையைக் கேட்டுச் சிரித்தான். ட�ோஜனும் அவனிடம் சேர்ந்து சிரித்தார். பில் கெளண்டரில் நின்றுக�ொண்டிருந்த சர்வர் பையனும் கேஷியரும் தானாகச் சிரிக்கும் நித்தினை வைத்த கண் வாங்காமல் 58
நவீனா அலெக்சாண்டர்
வின�ோதமாகப் பார்த்தார்கள். நித்தின் சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்குப் பணம் க�ொடுக்க வந்தப�ோது அவனை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டே மீதி சில்லறையைக் க�ொடுத்தார். நித்தினும் ட�ோஜனும் மீண்டும் சாலையில் நடக்கத் த�ொடங்கினார்கள். ‘நீங்கச் ச�ொன்ன ஜென் கத புரிஞ்ச மாதரியும் இருக்கு புரியாத மாதரியும் இருக்கு ஆனா கேக்க செம காமடியா இருக்கு’ நித்தின் முதல் தடவையாக அவர் கூறிய கதைக் குறித்த விளக்கத்தைக் கேட்டான். ‘அந்தச் ஜென் மாஸ்டர் எல்லாச் சூத்திரத்தையும் கறச்சு குடிச்சுட்டதால உலகத்துல இருக்க எல்லா ஞானமும் தனக்கு வந்துட்டதா நெனச்சுக்கிட்டாரு. ஞானம்கறது புத்தகத்துல இல்லங்கறத அவரு புரிஞ்சுக்கவே இல்ல. புத்தகங்கள் நமக்கு ஞானத்தைப் பத்தி ச�ொல்லுதே தவற அதுவே ஞானமாயிடாது. அந்தச் ஜென் மாஸ்டர் அவர் படிச்ச புத்தகங்கள் வழியாவே உலகத்தப் பாத்தாரே ஒழிய அவருடைய மனசு வழியா அவர் பாக்கல. பாக்கவும் அவருக்குத் தெரியல. ஏன்னா என்னத்தான் அவரு உலகத்துல இருக்க எல்லாச் சூத்திரங்களையும் படிச்சிருந்தாலும் அவருக்கு உண்மையான ஞானம் வரவேயில்ல. நம்ம மனசே நமக்கான ஞானத் திறவுக�ோள். நம்மல நாம தெரிஞ்சுக்கறதே, அடையாளம் கண்டுக்கறதே உண்மையான ஞானம். ஞானம் விடுதலை’ ட�ோஜன். ‘அந்தப் பாட்டிய�ோட கேள்விக்கான பதில அவர் சூத்திரங்கள்ல தேடினாரே தவிரத் தன்னுடைய மனசுக்கிட்ட அதுக்கான பதில கேக்கனும்னு அவருக்குத் த�ோனவேயில்ல. இதுதான் அவருடைய த�ோல்வி. இதத்தான் அந்தப் பாட்டியும் அவருக்கு உணர்த்திட்டுப் ப�ோனாங்க. நாம அதிக அதிகமா புத்தக அறிவை மண்டைக்குள்ள ஏத்திக்கிட்டோம்னா சாதாரண விசயத்தையும் சிக்கலா பாக்க த�ொடங்கிடுவ�ோம். என்னத்தான் படிச்சிருந்தாலும் மனச எளிமையா வச்சிக்கிறதே நல்லது. அதுக்காக எதையும் படிக்கக் கூடாதுன்னு அர்த்தமில்ல. எல்லாத்தையும் படிக்கனும். தேடித் தேடி படிக்கனும். ஆனா படிக்கற விசயங்கள நம்மள�ோட மனசக்கொண்டு அணுகனும். நம்ம மனச நாம படிக்கற விசயங்கள எதிர்க் கேள்வி கேக்கவிட்டு அதுக்கான பதில தேடி படிக்கனும். புத்தகங்கள படிக்கற வரைக்கும் நம்மள�ோட மனசு அந்தப் புத்தகமாக இருக்கனும் அந்தப் புத்தகத்த படிச்சு முடிச்சப் பிறகு மனசு நம்ம மனசா மாறிடனும். அந்தப் புத்தகத்தோட கருத்தையே நம்ம மனசு சுமந்துக்கிட்டு திரயக் கூடாது. அந்தப் புத்தகத்துல இருந்து நாம கத்துக்க முடிஞ்சது என்னன்னு 59
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
பாக்கனுமே தவிர. அந்தப் புத்தகத்த படிச்சிட்டதாலயே நமக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சின்னு குருட்டுத்தனமா நம்பிக்கிட்டிருக்கக் கூடாது. அப்படிச் செஞ்சா நம்ம மனசு அத�ோட அடையாளத்த இழந்துடும்.’ ‘மலைகளும் ஆறுகளும், மலைகளும் ஆறுகளுமாகவே இருந்தன தங்களை அறியும் முன்பு. மலைகளும் ஆறுகளும், மலைகளாகவும் ஆறுகளாகவும் இருக்கவில்லை தங்களை அறியும்போது. மலைகளும் ஆறுகளும், மலைகளும் ஆறுகளாகவும் மாறிவிட்டன தன்னை அறிந்த பின்பு. இப்படித்தான் நம்ம மனசும் இருக்கனும். ஒரு வயதான ஜென் மாஸ்டர் சாகற நிலமையில இருந்தாரு. தன்னோட மடத்துக்கான அடுத்த வாரிசு சீடர தேர்ந்தெடுக்கனும்னு அவருக்குத் தெரிஞ்சுப்போச்சு. தன்கிட்ட படிச்ச சீடர்கள்ல ஞானம் அடஞ்ச ஷாசேன்னை கூப்பிட்டாரு. ஷாசேன் அவருக்கு அருகில் வந்தாரு. அடுத்தக் குரு நீ தான்னு ச�ொன்ன ஜென் மாஸ்டர் தான் வச்சிருந்த சூத்திர நூல்களை எடுத்து என்னோட மாஸ்டர் எனக்குக் க�ொடுத்தது இத இப்ப நா உனக்குக் க�ொடுக்றேன்னு ச�ொல்லி ஷாசேன்கிட்ட க�ொடுத்தாரு. அப்பறம் எனக்கு ர�ொம்பக் குளிருதுன்னு ச�ொன்னாரு ஜென் மாஸ்டர். அவருக்கு நல்லா ப�ோர்த்திவிட்ட ஷாசேன் குளிர் காய எறிஞ்சுக்கிட்டிருந்த நெருப்ப தூண்டிவிடத் தன் கையில இருந்த சூத்திர நூல்களை ஒன்னு ஒன்னா நெருப்புல தூக்கிப் ப�ோட த�ொடங்குனாரு. அதிர்ச்சி அடஞ்ச சென் மாஸ்டர் என்ன காரியம் பண்ணுறேன்னு பதற்னாரு. ஞானம் அடஞ்சவனுக்கு இது தேவயில்ல மாஸ்டர்னு ச�ொன்னாரு ஷாசேன்.’ ட�ோஜன்.
60
நவீனா அலெக்சாண்டர்
61
உடலை சரியவிடுங்கள் மனதை சரியவிடுங்கள்
இயற்கை அவசரப்படுவதேயில்லை. ஆனால் அதிலுள்ள அனைத்தும் முழுமையடைந்துவிடுகிறது. – ஜென்
பு
த்தரின் காலம் த�ொடங்கி வாரிசுடமை என்பது பெளத்தத்தின் மிக மிக முக்கிய அம்சங்களில் ஒன்று. வாரிசுடமை என்றவுடன் பெளத்த மடங்களின் அசையும் அசையா ச�ொத்துக்களை கைமாற்றிவிடும் குடும்ப பிரச்சனை சங்கதிப்போலும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டாம். கண்டடைந்த ஞானத்தை, புத்தா தன்மையை சீடருக்கு கடத்துவதையே வாரிசுடமையாக கருதுகிறது பெளத்தம். ஒரு பெளத்த குருமாரின் கீழ் இருக்கும் அனைத்து சீடர்களுக்கும் இந்த வாய்ப்பும் பாக்கியமும் கிடைத்துவிடுவதும் இல்லை. புத்தா தன்மையை கண்டுக்கொண்ட சீடரை பெளத்த குருவிற்கு அடையாளம் தெரியும். அந்த சீடரையே தனக்குப் பின் தன்னுடைய பயிற்சி முறைகளை, க�ொள்கைகளை பரப்பும் குருவாக தேர்ந்தெடுப்பார். இதுவே பெளத்தத்தின் குரு சீடர் வாரிசுடமை மரபு. கெளத்தம புத்தரும் கூட தனது வாரிசாக மஹாகாஷ்யப்பரை தனக்கு பின்னான தலைமை குருவாக அடையாளம் கண்டு தேர்வு செய்தார். வார்த்தைகள் அற்ற ஞான பரிமாற்றத்தின் (wordless transmission) மூலமாக புத்தரின் ஞானத்தை மஹாகாஷ்யப்பர் பெற்றுக்கொண்டதாக பெளத்த சூத்திரங்கள் தெரிவிக்கின்றன. (கெளத்தம புத்தர் தனக்கு பிறகான குருவாக யாரையும் தேர்வு செய்யவில்லை என்று ச�ொல்பவர்களும்
62
நவீனா அலெக்சாண்டர்
உண்டு). இதன்படி பெளத்த க�ொள்கையின் முதல் தலைமை குரு கெளத்தம புத்தர், இரண்டாம் தலைமை குரு மஹாகாஷ்யப்பர். மஹாகாஷ்யப்பர் தனக்கு பிறகு மூன்றாம் தலைமை குருவாக அனந்தாவை அடையாளம் காட்டிவிட்டு சென்றார். இவர்கள் இருவரும் புத்தரின் பிரதான சீடர்களில் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெளத்த மடங்களின் அசல் தன்மைக்கும், நம்பகத்தன்மைக்கும், ஆளுமைக்கும் இந்த குரு சீடர் வாரிசுடமை என்பது அடிப்படை. குரு சீடர் வாரிசுடமை பட்டியலின் படி 28-வது தலைமை குருவாக ப�ோதி தர்மரை வைத்து பார்ப்பது சீன சா-ஆன் பெளத்த பாரம்பரியத்தின் வழக்கம். சா-ஆனின் முதல் தலைமை குரு ப�ோதி தர்மர். ப�ோதி தர்மர், தனது சீட வாரிசாக தேர்ந்தெடுத்தது ஹூய்-க�ோவை. இவர் சா-ஆனின் இரண்டாவது தலைமை குரு. மூன்றாவதாக வந்தவர் செங்ஷான். ப�ோதி தர்மருக்கு பிறகான நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே சா-ஆனின் செல்வாக்கு சீனா முழுவதிலும் பரவி விட நான்காம் சாஆன் தலைமை குரு த�ொடங்கி சீடர் பரம்பரையின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கிறது. நான்காவது தலைமை குருவாக அறியப்படுபவர் டாவ�ோக்சின். இவருக்கு அடுத்து ஐந்தாவது ஹூங்-ஜென். சா-ஆனின் சீடர் பாரம்பரியம் குறித்த பெருமைக்கான த�ொடக்க புள்ளியாக அமைந்தது யாங்ஷி நதியை ஒட்டிய ஹூபேய் நகரம். ஹூங்-ஜென் காலம் வரை சா-ஆனின் சீடர் பரம்பரை பட்டியல் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் செல்ல அவருடைய காலத்திற்கு பிறகு ஆறாவது தலைமை குரு உண்மையில் யார் என்பதில் வந்து முட்டிக்கொண்டு நின்றுவிடுகிறது. ப�ோதி தர்மரின் சா-ஆன் சீடர் பரம்பரை பட்டியலை முதன் முதலில் எழுத்தில் பதிவு செய்தவர்கள் ஹூங்-ஜென்னின் சீடர்கள்தான். மற்ற சமகாலத்தைய பழம் சீன எழுத்து மூலங்கள் இது குறித்து ஏதும் பேசாத நிலையில் ப�ோதி தர்மரின் சீடர் பரம்பரை பட்டியலை தரும் முதல் எழுத்து ஆதாரமாக இருப்பது ஃபாரு (கி.பி. 638 – 689)-வின் கல்லறை கல்வெட்டு. அந்த கல்வெட்டில் சா-ஆன் சீடர் பரம்பரையின் ஆறாவது தலைமை குருவாக தன்னை அறிவித்துக்கொள்கிறார் ஃபாரு. அதாவது ஐந்தாவது தலைமை குருவான ஹூங்-ஜென்னின் சீடரான தான் அவருக்கு பிறகு ஆறாவது தலைமை குருவாக ஆனதாக. இந்த கல்வெட்டு பல அடிதடிகளுக்கு காரணமாகிப்போனது. சாஆனில் ஐந்து வெவ்வேறு குடும்ப பிரிவுகள் த�ோன்றவும், தெற்கு 63
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
மற்றும் வடக்கு சா-ஆன் பள்ளிகள் த�ோன்றுவதற்கான காரணங்களில் ஒன்றாகவும் மாறிப்போனது இந்த கல்வெட்டு. ஹூங்-ஜென்னின் மற்ற சீடர்கள் இந்த செயலுக்கு எதிராக கச்சைக் கட்டினார்கள். அதில் முக்கியமானவர் சென்-ஷியூ (கி.பி. 606 – 706). அவருடைய வாழ் நாளில் த�ொடர்ந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் விதமாக அவருடைய கல்லறை கல்வெட்டு அமைந்தது. சென்-ஷியூவானே தானே உண்மையான ஆறாவது சா-ஆன் தலைமை குரு என்று அவருடைய கல்வெட்டில் அவர் அறிவித்துக்கொண்டார். இவருடைய சீடரான ஃபூஜி (கி.பி. 651 – 739) இந்த கருத்தை மிக வலிமையாக தூக்கிப் பிடித்து ஹூங்-ஜென்னின் உண்மையான சீட வாரிசு தன்னுடைய குருவான சென்-ஷியூ மட்டுமேதான் என்று பிரச்சாரம் செய்துவந்தார். ஃபூஜியின் பிரச்சாரத்திற்கு எதிராக கிளம்பியவர் சென்-ஹூய் (கி. பி. 684 – 758). சுமார் கி.பி. 730 த�ொடங்கி சென்-ஹூய், ஃபூஜியின் பிரச்சாரத்திற்கு எதிராக நிகழ்த்திய தாக்குதல் பிரச்சாரங்களுக்கான எழுத்துப் பூர்வ ஆதாரங்கள் கிடைக்க த�ொடங்குகிறது. ம�ோசமான அல்லது கேலிக்கூத்தான பயிற்ச்சிகளையும் க�ொள்கைகளையும் க�ொண்டவர்கள் ஃபூஜியும் அவருடைய குரு சென்-ஷியூம் என்று தாக்குதல் பிரச்சாரம் செய்த சென்-ஹூய், இந்த இருவரும் கற்றுக்கொடுத்த சா-ஆனிற்கு வடக்கு சா-ஆன் பள்ளி என்று முதன் முதலாக நாமகரனம் சூட்டுகிறார். மேலும் இந்த இருவரும் சேர்ந்து ஆறாவது தலைமை குரு பதவியை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டதாகவும் குற்றம் சாட்டுகிறார். உண்மையில் ஹூங்ஜென்னின் சீடரான ஹூயி-நெங்கே ஹூங்-ஜென் அடையாளம் காட்டிய ஆறாவது தலைமை குரு என்று தன்னுடைய எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் வலியுறுத்துகிறார் சென்-ஹூய். தன்னுடைய குருவான ஹூயி-நெங்கே தெற்கு சா-ஆன் பள்ளியை நிறுவியதாகவும் குறிப்பிடுகிறார். இப்படியான பிரச்சாரம் செய்து தன்னுடைய குருவை ஆறாவது தலைமை குருவாக பிரதான படுத்துவதன் மூலமாக அவருடைய சீடரான தான் ஏழாவது தலைமை குரு பதவிக்கு சட்டப் பூர்வ தகுதி க�ொண்டவன் என்பதை நிலை நாட்டுவதே சென்-ஹூயின் மறைமுக திட்டமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. வடக்கு சா-ஆன் பள்ளி மீதான இவருடைய தாக்குதல் கருத்துக்களும் தன்னுடைய குருவை ஆறாவது தலைமை குருவாக நிலை நிறுத்த இவர் செய்த பிரச்சார கருத்துக்களுமே பிற்பாடு பிளாட்பார்ம் சூத்திராவாக (Platform Sutra) த�ொகுக்கப்பட்டு சீனா முழுவதிலும் உள்ள சா-ஆன் 64
நவீனா அலெக்சாண்டர்
மடலாயங்களில் புழக்கத்திலிருந்தது. புழக்கத்தில் விடப்பட்டது என்று ச�ொன்னாலும் அது மிகையில்லைதான். இதை பார்த்துவிட்டு ஹூங்ஜென்னின் மற்ற சீடர்களும், அவர்களுடைய சீடர்களும் களத்தில் இறங்கினார்கள். சீடர் பரம்பரை என்பது ஒருவருக்கு மாத்திரமே பாத்தியதை க�ொண்டதல்ல, தலைமை குருவின் மற்ற சீடர்களுக்கும் அதில் சரி சமமான பங்கு இருக்கிறது என்று ச�ொல்லி தனித் தனி சீடர் பரம்பரைகளை உருவாக்கினார்கள். இதில் புரண்நகை மற்றும் விசேசம் என்னவென்றால் ஒவ்வொரு சீடர் பரம்பரையும் தன்னுடைய குருவே ஆறாவது தலைமை குரு என்று பட்டியலிட்டுவிட்டு எதிர் சீடர் பரம்பரையின் பட்டியலையும் ஏற்றுக்கொண்டு தங்களின் பட்டியல�ோடு இணைத்துக்கொண்டதுதான். இதுவே சா-ஆனின் ஐந்து குடும்பங்களுக்கான அடிப்படையாக மாறியது. இதில் மற்றொரு விசேசமும் உண்டு. இந்த ஐந்து குடும்பங்களும் தங்களின் தலைமை குருவாக க�ொள்வது ஹூயி-நெங்கையே. இன்னும் தெளிவாக ச�ொல்வது என்றால் ஹூயி-நெங்கின் இரண்டு சீடர்களான நன்யு ஹூயிராங் மற்றும் குயிங்யுவான் சிங்சியை தலைமை குருக்களாக க�ொண்டது இந்த ஐந்து குடும்பங்களும். கி.பி. பதின�ொராம் நூற்றூண்டு த�ொடங்கி சா-ஆனின் நிலைத்த வழக்கமாக இது மாறிப்போனது. இந்த ஐந்து குடும்பங்களின் பெயர்களைக் குறித்து நாம் முன்பே பார்த்திருக்கிற�ோம். காட�ோங் குடும்பம் இடையில் வீழ்ச்சியை ந�ோக்கி சென்று அடையாளம் இல்லாமல் ஒழிந்துப�ோய் பிறகு புத்தெழுச்சிப் பெற்ற குடும்பம். ஐந்தில் காட�ோங் குடும்பமும் லின்ஜி குடும்பமுமே இன்றைக்கு வரைக்கும் நிலைத்திருக்கும் சாஆன் குடும்பங்கள். இன்றைக்கு உலகம் முழுவதிலும் அடிப்படும் பெயரான ஜென் காட�ோங் குடும்ப க�ொள்கைகளை (தெற்கு சா-ஆன் பள்ளி) அடிப்படையாக க�ொண்டதுதான். மேற்குலகில் ஜென் என்றவுடன் நினைவிற்கு வரும் அடுத்த விசயம் ட�ோஜன் சென்ஜி. ஜப்பான் ம�ொழியில் ஜென் குறித்து ட�ோஜன் எழுதிய அனைத்துப் புத்தகங்களும் ஆங்கிலத்திலும் மற்ற முக்கிய ஐர�ோப்பிய ம�ொழிகளிலும் ம�ொழிப் பெயர்க்கப்பட்டுவிட்டது. அனைத்துப் புத்தகங்களும் என்றால் ஒன்று இரண்டு இல்லை அவருடைய நூற்றுக் கணக்கான ஜென் கட்டுரைகள் அடங்கிய பல புத்தகங்கள். தியான முறையான ஜென்னிற்கு இலக்கிய முகம் க�ொடுத்தவர் ட�ோஜன் சென்ஜி. இன்றைய நிலையில் ட�ோஜன் சென்ஜியின் எழுத்துக்கள் ஜென்னின் கிளாசிக் இலக்கியங்கள். ஜென் தத்துவ விளக்க எழுத்தில் பல புதுமைகளைக் க�ொண்டுவந்தவர் ட�ோஜன். ஜப்பானில் ட�ோஜன் 65
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
முதன் முதலாகச் ஜென்னை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் அதனுடைய பரவலான தாக்கத்திற்குக் காரணமாக இருந்தார். கி.பி. 1200-களில் ஜப்பானின் அரச குடும்பத்தில் பிறந்த ட�ோஜன் குழந்தையாக இருந்தப�ொழுதே படு புத்திசாலியாக இருந்திருக்கிறார். கற்பூர புத்தி என்பார்களே அந்தப் புத்திதான் அவருக்கு. மூன்று வயதில் தந்தையை இழந்தவர் அவருடைய ஏழாம் வயதில் தாயையும் இழந்துவிட்டார். தாயாரின் உயிரற்ற உடல் கிடத்தப்பட்டிருக்கத் தலைமாட்டில் எறிந்துக�ொண்டிருந்த ஊதுபத்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தப�ோதே வாழ்க்கையின் நிலையற்றத் தன்மைக் குறித்த ஆழமான சிந்தனைகள் அவருக்குள் எழுந்ததாகப் பாரம்பரிய எழுத்துக்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வைத் த�ொடர்ந்து ஐந்து வருடங்கள் கழித்து அவர் பெளத்த துறவியாக மாறுகிறார். அதாவது அவருடைய பன்னிரெண்டாவது வயதில். க�ோய�ோட்டோ பகுதி, ஹைய் மலைமேல் இருந்த டென்டாய் மடத்தில்தான் முதலில் அவர் பெளத்த சீடராக இருந்தார். பிறகு அவருடைய பதினேழாம் வயதில் கென்னின்ஜி மடத்திற்கு மாறிப்போய்விட்டார். இதற்கான சரியான காரணம் தெரியவில்லை. கென்னின்ஜி ஜப்பானின் முதல் ஜென் பெளத்த மடம். அவருடைய இருபதினான்காம் வயதில் அதாவது கி.பி. 1223-ல் சீனாவிற்குப் பயணம் செல்ல முடிவு செய்து அவருடைய சக மட சீடர் புட்சுஜூ மைய�ோசென்னுடன் சீனாவிற்குக் கிளம்புகிறார். புட்சுஜூ மைய�ோசென் கென்னின்ஜி மடத்தின் அடுத்தக் குருவாகத் தேர்வு செய்யப்பட்டவர். அதாவது ஜென்னை முதலில் ஜப்பானுக்கு அறிமுகப்படுத்திக் கென்னின்ஜி மடத்தைக் கட்டிய மைய�ோன் ஈசாயின் அடுத்தச் சீடர் வாரிசாகத் தேர்வு செய்யப்பட்டவர். ஜப்பானில் இருக்கும் மடங்களின் பெளத்த விளக்கங்களில் மாத்திரம் திருப்பதி அடையாத துறவிகள் சீனாவிற்குப் பயணம் செய்வது வழக்கம். அப்படித்தான் ட�ோஜனும் புட்சுஜூவும் சீனாவிற்குப் பயணமானார்கள். இருவரும் சீனாவில் பல மடங்களுக்குப் பயணம் செய்துக�ொண்டே இருந்தார்கள். எங்கும் அவர்களுக்கு ஞானத்தை ஒரு ந�ொடியில் கண்டடையும் அற்புதம் நிகழவே இல்லை. இந்த இடத்தில் மஹாயன பெளத்த முறையில் சீடர் ஞானத்தை அடையும் முறைக் குறித்துக் க�ொஞ்சம் தெரிந்துக�ொள்வது நல்லது. மன விடுதலையை அதன் மூலமான ஞானத்தைத் தேடும் ஒருவர் பெளத்த குரு ஒருவரிடம் 66
நவீனா அலெக்சாண்டர்
சீடராகத் தன்னைச் சேர்த்துக்கொள்வார். குருவானவர் பிரசங்கங்களின் மூலமும், கேள்வி பதில்கள் மூலமும் ஞானத்தைச் சீடருக்கு கடத்துவார். கவனிக்கவும் ஞானத்தைச் ச�ொல்லித் தரமாட்டார் ஞானத்தைத் தன்னிடமிருந்து சீடருக்குக் கடத்த மட்டுமே செய்வார். இதற்காக வேண்டி சில குருக்கள் சீடர்களைத் திட்டுவதும் அடிப்பதும் கூட நடக்கும். திட்டுவாங்கும் கணத்திலும் அடிவாங்கும் கணத்திலும் ஞானம் அடைந்த சீடர்களும் ஏராளம் உண்டு. இந்த நாளில் இந்த ந�ொடியில்தான் சீடருக்கு ஞானம் கிடைக்கும் என்கிற திட்டமெல்லாம் கிடையாது. சில சீடர்களுக்குச் சேர்ந்த அன்றே கூட ஞானம் கிடைக்கலாம். சிலருக்கு முப்பது நாற்பது வருடங்கள் கழித்தும் கூடக் கிடைக்கலாம். அது அது அவர் அவருடைய புரிதலைப் ப�ொறுத்தது. இந்தப் பயிற்சிக்கு ஜென் ப�ௌத்தத்தில் க�ோன் என்கிற குட்டிக் கதைகளும் தியான பயிற்சியும் க�ொடுக்கப்படும். க�ோன் கதைகள் விடுகதைகளைப் ப�ோன்றது. க�ோன் கதைகளுக்கான பதிலைத் தேடி சீடர் பலமணி நேரங்கள் தியானத்தில் உட்காரவேண்டும். சிலருக்குக் க�ோன் கதைக்கான பதிலை தேடி தியானத்தில் உட்கார்ந்திருக்கும் சமயத்தில் கூட ஞானம் கிடைத்துவிடும். க�ோன் கதைகளும் தியானமும் ஜென்னின் முக்கியமான அம்சங்கள். ஜென் பயிற்சியில் ஈடுபடும் புதிய சீடருக்கு Gateless Gate என்கிற க�ோன் கதை த�ொகுப்பிலிருக்கும் க�ோன் கதைகள் தியான பயிற்சிக்காக க�ொடுக்கப்படும். க�ோன் கதைகளில் த�ொடக்க நிலை கதைகள் த�ொடங்கி மிகக் கடினமான கதைகள் வரை உண்டு. சீடரின் பயிற்சி நிலைக்கு ஏற்ப க�ோன் கதைகள் அவருக்குக் க�ொடுக்கப்படும். சீன ம�ொழியில் இது குங்’ஆன் என்று அழைக்கப்படுகிறது. மிகப் புகழ்பெற்ற க�ோன் கதை த�ொகுப்பு பி-யென்-லு. இதன் ஆங்கில ம�ொழிபெயர்ப்பு The Blue Cliff Record. சுமார் ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கும் முற்பட்ட பெளத்த துறவிகள் ச�ொல்லிய குட்டிக் கதைகளின் த�ொகுப்பு இது. இந்தக் கதைகள் சீனாவின் சாங் அரச வம்சாவளி காலத்தின்போது ஜென் மாஸ்டர் ஹூசுயு-துவ�ோ-சுங்-ஹைசின் (கி.பி. 980-1052) என்பவரால் ஒரு புத்தகமாகத் த�ொகுக்கப்பட்டது. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களுக்கு உரையாசிரியர்கள் பாயிர உரை எழுதியதைப் ப�ோலத் தான் த�ொகுத்த க�ோன் கதைகளுக்கு விளக்க உறை எழுதினார் ஹைசின். இதற்குப் பின்பு தங்களுடைய சீடர்களுக்கு இந்தக் க�ோன் கதைகளைக் க�ொடுக்கும் ஜென் மாஸ்டர்கள் இந்தக் கதைகளுக்கு உறையாக 67
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
அவர்களுக்குப் புரிந்த விளக்கங்களைக் க�ொடுக்கும் பழக்கம் த�ோன்றியது. இதனால் இன்றைக்குக் கிடைக்கும் க�ோன் கதைகளுக்குப் பல உறை விளக்கங்கள் இருக்கின்றன. ஜென் இலக்கியத்தின் மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது The Blue Cliff Record. சீனாவில் டியான்டோங் மடத்தில் தங்கி ட�ோஜன் பயிற்சிப் பெற்றுக்கொண்டிருந்தப�ோது ஜென் மாஸ்டர் ரூஜிங்கை சந்தித்தார். ரூஜிங்கே தான் ஞானத்தை அடைய வழி செய்தவர் என்று ட�ோஜன் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அந்த நிகழ்வையும் பதிவு செய்திருக்கிறார். ஒருநாள் வழக்கம் ப�ோல மற்ற துறவிகளுடன் ட�ோஜனும் தியானத்தில் உட்கார்ந்திருந்தார். அப்போது அவருடன் தியானத்தில் உட்கார்ந்திருந்த மற்றொரு துறவி அப்படியே தூங்கி விழ, இதைப் பார்த்த ரூஜிங் தூங்கி விழுந்த துறவியைப் பார்த்துத் தியானம் என்பது உடலையும் மனதையும் துறப்பது (dropping away of body and mind), தூங்கி வழிவது அல்ல என்று சத்தம் ப�ோட்டார். உடலையும் மனதையும் துறப்பது என்கிற ரூஜிங்கின் அந்த வார்த்தைகள் அந்த ந�ொடியிலேயே ட�ோஜனுக்கு ஞானத்தை அடைய வழி செய்துவிட்டது. தான் அதுவரை தேடி அலைந்த ஞானத்தை அந்த ந�ொடியில் பெற்றுக்கொண்டவராக ட�ோஜன் ஜப்பானுக்குத் திரும்ப முடிவு செய்தார். ஊர் திரும்பும் பயணத்திற்கு முந்தைய இரவில் ட�ோஜன் எதேச்சையாக The Blue Cliff Record த�ொகுப்பை பார்த்ததாகக் கூறப்படுகிறது. அந்த இரவு முழுவதும் நின்றபடியே இந்தத் த�ொகுப்பில் இருந்த அனைத்துக் கதைகளையும் ட�ோஜன் தனக்கென்று படியடுத்துக்கொண்டார் என்று ச�ொல்லப்படுகிறது. சீனாவில் ஐந்து வருடங்கள் தங்கி பயிற்சிப் பெற்ற பிறகு கி.பி. 1227ல் ட�ோஜன் ஜப்பானுக்குத் திரும்பினார். இருவராகப் ப�ோனவர்கள் ஒருவராகத் திரும்பினார். சீனாவில் டியான்டோங் மடத்தில் பயிற்சிப் பெற்றுக்கொண்டிருந்தப�ோது 1225-ல் புட்சுஜூ மைய�ோசென் இறந்துவிட்டார். ஞானமடைந்து ஊர் திரும்பிய ட�ோஜனுக்குச் ஜென் ப�ௌத்தம் என்கிற பெயரில் அன்றைக்கு ஜப்பானில் நடந்துக�ொண்டிருந்த விசயங்கள் பெரும் சலிப்புத் தட்டிவிட்டது. அவருடைய தாய் மடமாக இருந்த கென்னின்ஜியில் நடந்த விசயங்கள் கூட அவருக்கு ஏற்புடையதாக இல்லை. கி.பி. 1230-ல் அவர் மடத்தை விட்டு வெளியேறி புக்காகுசா என்கிற கிராமத்திற்குச் சென்றுவிட்டார். அங்கே அவர் தனியாக வசிக்கத் த�ொடங்கினார். அப்போது பெண்டோவா என்கிற புத்தகத்தை 68
நவீனா அலெக்சாண்டர்
எழுதினார். அதன் பின் மூன்று வருடங்கள் கழித்து அதே ஊரில் க�ோஷ�ோஜி மடத்தை நிறுவினார்.அடுத்த பத்து வருடங்கள் அந்த மடத்தில் சாமானியன் த�ொடங்கித் துறவிகள் வரை பலருக்கு ஜென் பயிற்சிக் க�ொடுத்தார். இந்தக் காலகட்டத்தில் ஜென் குறித்துப் பல கட்டுரைகளை எழுதினார். பிற்காலத்தில் ட�ோஜனுக்குப் பெரும் புகழ் தேடித் தந்த ஷ�ோப�ோகென்சு (True Dharma Eye Treasury) புத்தகத்தையும் இந்தக் காலகட்டத்தில்தான் எழுதினார். ஜப்பானிய ஜென் இலக்கியத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புத்தகம் இது. ஆங்கிலம் மற்றும் மேற்குலகின் முக்கிய ம�ொழிகளில் ம�ொழிமாற்றம் செய்யப்பட்ட புத்தகம். கி.பி. 1695ல் ஷ�ோப�ோகென்சு முழுதுமாகத் த�ொகுக்கப்பட்டு ஜப்பானில் வெளியிடப்பட்டது. ஜப்பான் ம�ொழியில் எழுதப்பட்ட முதல் தத்துவப் புத்தகமும் இதுதான். அதுவரை ஜப்பானில் இருந்த பெளத்த புத்தகங்கள் அனைத்தும் சீன ம�ொழியிலேயே எழுதப்பட்டவை. அதுவே புனிதம் என்கிற நம்பிக்கையும் நிலவி வந்தது. இதை உடைத்து ட�ோஜன் தன்னுடைய மிகப் பெரிய ஆக்கத்தை ஜப்பான் ம�ொழியிலேயே துணிந்து எழுதினார். இதைத் தவிரப் பல சீன க�ோன் கதைகளையும் இந்தக் காலகட்டத்தில் அவர் சேகரித்துத் த�ொகுத்து வைத்தார். இந்தக் க�ோன் கதைகளை அவர் எங்கிருந்து பெற்றார் என்பது தெரியவில்லை. இந்தத் த�ொகுப்பிற்கு மானா ஷ�ோப�ோகென்சு என்று பெயர். இந்தச் சீன க�ோன் கதைகளை அடிப்படையாக வைத்து அவர் ஜப்பான் ம�ொழியில் எழுதிய க�ோன் கதைகளின் த�ொகுப்பிற்குக் கானா ஷ�ோப�ோகென்சு என்று பெயர். கி.பி. 1243-ல் ஏழாம் மாதத்தில் அவர் க�ோஷ�ோஜி மடத்தை விட்டுவிட்டு திடீரென்று வடக்கே ஆள் அரவமற்ற எஜிசேன் பகுதிக்கு இடம் பெயர்ந்துவிட்டார். இப்படித் திடீரென்று அவர் நிறுவிய மடத்தை விட்டு விட்டு இடம்பெயரக் காரணம் என்ன?
69
பசியெடுத்தா சாப்பிடுவேன்…தூங்கம் வந்தா தூங்குவேன் – என்னோட சென்
புத்தா தன்மையை அறிந்துக்கொள்வது என்பது நம்மை அறிந்துக்கொள்வதாகும். நம்மை அறிந்துக்கொள்வது என்பது நம் சுயத்தை மறப்பதாகும். – ட�ோஜன் சென்ஜி
ம
தியம் கடந்துவிட்டது. நித்தினுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஐந்து மணி நேரம் த�ொடர்ந்து நடந்தும் அவனுக்குச் ச�ோர்வு தட்டவே இல்லை. கால்களில் மாத்திரம் வலி இருந்தது. அதுவும் அவனை நடக்க விடாமல் முடக்கும் அளவிற்கு எல்லாம் இல்லை. மனம் மற்ற சிந்தனைகளை விட்டு விட்டு அமைதியானதைப் ப�ோல இருந்தது. வயிறு முட்ட குடிவித்துவிட்டு தூங்கிய நாட்களில் கூட மனம் இப்படி அமைதியுடன் இருந்திருக்குமா என்று அவனுக்குச் சந்தேகம். ‘இவ்வளவு தூரம் இதுவரைக்கும் நா நடந்ததேயில்ல. உடம்பு டயர்டே ஆகல’ அருகில் உதட்டில் புன்னகையுடன் நடந்துக�ொண்டிருந்த ட�ோஜனிடம், நித்தின். ‘இதுவும் கடந்துப்போகும்’ ட�ோஜன். ‘புரியல’ நித்தின். ‘ஒரு சீடன் அவன�ோட ஜென் மாஸ்டருக்கு முன்னால ப�ோய் 70
நவீனா அலெக்சாண்டர்
நின்னான். மாஸ்டர் என்ன விசயம்னு கேட்டார். கால மடக்கி ர�ொம்ப நேரம் தியானத்துல உட்காந்திருக்கப்ப காலெல்லாம் வலிக்குது. அப்படியே தூக்கமும் வந்துடுது. நா ம�ோசமா தியானம் செய்யறேன்னு நினைக்கறேன்னு ச�ொன்னான். மாஸ்டர் இதுவும் கடந்துப்போகும்னாரு. க�ொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் அந்தச் சீடன் மாஸ்டர்கிட்ட வந்தான். மாஸ்டர் என்னான்னு கேட்டார். தியானம் பண்ணும்போது இப்பலாம் எனக்குக் காலே வலிக்கறதில்ல. தூக்கமும் வர்ரதில்ல. எந்தத் த�ொல்லையும் இல்லாம தியானம் பண்ணுறது அருமையாக இருக்குன்னு ச�ொன்னான். மாஸ்டர் இதுவும் கடந்துப்போகும்னாரு’ ட�ோஜன். அந்தக் கதையைக் கேட்ட நித்தின் மெலிதாகச் சிரித்துக்கொண்டான். இதுவும் கடந்துப்போகும் தனக்குள்ளேயே ஒருமுறை ச�ொல்லிப்பார்த்துக்கொண்டான். ‘நா இதுக்கு முன்னால ஜென் கதைங்க கேட்டதில்ல. நீங்கச் ச�ொல்லித்தான் கேள்விப்படறேன். இன்டரஸ்டிங். இந்தக் கதைங்களலாம் யார் எழுதுனாங்க’ நித்தின். ‘இதுலாம் க�ோன் கதைகள�ோட எளிய வடிவம். ஞானமடைந்த ஜென் துறவிகள் எழுதுனது. அவங்களுக்கு ஞானம் கிடைக்கக் காரணமா இருந்த சம்பவங்கள இந்த மாதரி ஜென் கதைகளா எழுதி வச்சாங்க. பின்னால வரத் துறவிகளுக்கு உதவியா இருக்கும்னு.’ ட�ோஜன். ‘ஒரு நாலஞ்சு கதைங்கள சேந்தாப்ல ச�ொல்லுங்களேன். நடந்துக்கிட்டே இந்தக் கதைகள கேக்கறதுக்குச் சூப்பரா இருக்கு’ நித்தின். ‘ஜென் மாஸ்டர�ோட சீடன் ஒருத்தன் இன்னொரு மாஸ்டர�ோட சீடன்கிட்ட தன்னோட மாஸ்டரப் பத்தி ர�ொம்பப் பெருமை பீத்திக்கிட்டிருந்தான். என்னோட மாஸ்டர் தண்ணி மேல நடப்பாரு, காத்துல பறப்பாரு, அந்தரத்துல த�ொங்குவாறு…..இப்படி ச�ொல்லிக்கிட்டே ப�ோய் அடுத்தவனப் பாத்துக் கேட்டான் உன்னோட மாஸ்டர் என்னலாம் பண்ணுவார்னு. அதுக்கு அவன் ச�ொன்னான் என்னோட மாஸ்டர் தூக்கம் வந்தா தூங்குவாரு. பசிச்சா சாப்புடுவாரு.’ ட�ோஜன். ‘புரியல’ நித்தின். 71
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
‘ஜென் தியானம் பண்ணுறது யாருமே செய்ய முடியாத காரியங்கள செய்யறதுக்கு இல்ல. இந்த நிமிசத்த முழுசா அனுபவிச்சு வாழக் கத்துக்கொடுக்கறதுதான் ஜென். நாம செய்யற வேலய முழு மனச�ோட முழுக் கவனத்தோட செய்யறதே தவத்துக்குச் சமமானதுதான். அதுவே ஒரு அற்புதம்தான். நம்மல்ல எத்தனப் பேரு செய்யற வேலய வேற எந்தச் சிந்தனையும் இல்லாம வீணான கவலையும் இல்லாம செய்யற வேலயில மட்டும் முழுக் கவனத்த செலுத்தி வேல செய்யற�ோம். அப்படி ஒருத்தன் செய்யறான்னா மத்தவங்களால செய்ய முடியாத காரியத்த அவன் செய்யறான்னுதானே அர்த்தம். அப்ப அதுவே ஒரு அற்புதம்தானே. அற்புதமான காரியங்கறது தண்ணில மேல நடக்கறுதும், காத்துல பறக்கறதுமில்ல. ஒரு சின்ன வேலையையும் முழுக் கவனத்தோட செய்யறது’ ட�ோஜன். ‘இப்ப நடந்துக்கிட்டிருக்க நா வேற எதப் பத்தியும் ய�ோசிக்காம நடக்கறதுல மட்டுமே கவனமா இருந்தா அது ஜென்னா. ஐ மீன் தியானமா?’ நித்தின். ஆம் என்பதைப் ப�ோல ட�ோஜன் தலையசைத்தார். ‘அடுத்தவன ச�ொரன்டாம, அடுத்தவனுக்குத் துர�ோகம் செய்யாம, அடுத்தவனுக்குக் கெடுதல் செய்யாம உன் வாழ்கைய நீ கவனமா வாழறதும் ஜென்தான். அந்த வாழ்க்கையும் அற்புதம்தான்’ ட�ோஜன். நித்தின் திரும்பி அவரைப் பார்த்தான். அவர் இப்போதும் உதட்டில் மெல்லிய சிரிப்புடனேதான் இருந்தார். ‘ஊர் ஊரா பயணம் செஞ்சிக்கிட்டிருந்த பெயர்போன ஜென் குரு ஒருமுற ஒரு அரசன�ோட அரண்மனைக்குப் ப�ோனார். அரண்மனை வீரர்கள் யாரும் அவரைத் தடுக்கல. அவரு யாருன்னு எல்லாருக்கும் தெரியும் அதனால. ஜென் குரு நேரா அரசனுக்கு முன்னால ப�ோய் நின்னாரு. அரசனுக்கும் அவர் யாருன்னு தெரியும். ஜென் குருவப்பாத்து என்ன வேணும்னு கேட்டான் அரசன். இன்னிக்கு இரவு இந்த விடுதில நா தூங்கறதுக்கு ஒரு இடம் வேணும்னாரு ஜென் குரு. இது வழிப்போக்கர்கள் தங்கற விடுதியில்ல என்னோட அரண்மனைன்னு பதிலுக்குச் ச�ொன்னான் அரசன். அப்படியா அப்ப நா ஒரு கேள்வி கேக்கலாமான்னு கேட்டாரு குரு. கேளுங்கன்னான் அரசன். உனக்கு முன்னால இந்த அரண்மனை யாருக்குச் ச�ொந்தமா இருந்துச்சு குரு கேட்டாரு. என்னோட அப்பாவுக்கு ஆனா இப்ப அவரு 72
நவீனா அலெக்சாண்டர்
இல்ல செத்துட்டாருன்னான் அரசன். உங்க அப்பாவுக்கு முன்னால இந்த அரண்மனை யாருக்கு ச�ொந்தமா இருந்துச்சு குரு கேட்டாரு. என்னோட தாத்தாவுக்கு. அவரும் இப்ப உயிர�ோட இல்லன்னான் அரசன். அப்ப இந்த இடம் சில பேரு சில காலம் வந்து தங்கிட்டுப்போற இடமாத்தான இருக்கு. அப்ப இது விடுதிதானேன்னு கேட்டாரு குரு.’ ட�ோஜன். ‘உண்மதான். அப்ப இந்த உலகம் கூட அப்படித்தான் இல்ல’ நித்தின். ‘நாமளே க�ொஞ்சக் காலம் வந்து தங்கிட்டுப் ப�ோற இந்த உலகத்துலத்தான் அடுத்தவன வாழ விட மாட்டேங்கற�ோம். இந்த உலகத்துல நாம என்னம�ோ நிரந்தரமா இருந்தடற மாதரி பாக்கறத எல்லாம் ச�ொந்தமாக்கிக்கனும்னு நினைக்கற�ோம். அதுக்குப் பணத்தால விலையும் வைக்கற�ோம் விலையும் பேசற�ோம். அடிச்சிப் பிடிங்கி பணத்த சம்பாதிக்கறதுக்கு வளர்ச்சின்னு பேரு வச்சிருக்கோம்.’ ட�ோஜன். நித்தின் எதுவுமே பேசவில்லை. மெளனமாக நடந்துக�ொண்டிருந்தான். ‘யுனான் மாகாணத்துல இருந்த ஒரு ஜென் மடத்துல குருவும் சீடர்களும் தியானத்துக்கான நேரம் வந்ததும் தியான மண்டபத்துல கூடுனாங்க. எல்லாரும் தியானம் செய்ய உக்காருற நேரம் பாத்து அந்த மடத்துல இருந்த பூன கத்தி அமர்களம் பண்ணுச்சு. குரு அந்தப் பூனயப் புடிச்சு கட்டிப்போட ச�ொன்னாரு. உடனே ஒரு சீடர் அந்தப் பூனை புடுச்சி ஒரு மேசய�ோடு கால்ல கட்டிப்போட்டாரு. அதுலயிருந்து எல்லாரும் தியானம் செய்ய உக்காரதுக்கு முன்னால அந்தப் பூனைய புடுச்சி கட்டிப்போடறது வழக்கமா மாறிப்போச்சு. அந்தக் குருவும் ஒரு நாள் செத்துப்போனாரு. இருந்தாலும் தியானத்துக்கு முன்னால் பூனைய கட்டிப்போடறப் பழக்கத்த அவர�ோட சீடர்கள் விடல. ஒரு நாள் அந்தப் பூனையும் செத்துப்போச்சு. உடனே சீடர்கள் வேற ஒரு பூனைய வாங்கிட்டுவந்து தியானம் பண்ணற நேரம்பாத்து பூனைய காட்டிப்போடற பழக்கத்த த�ொடர்ந்தாங்க. க�ொஞ்சக் காலம் கழிச்சு அந்த மடத்துல இருந்த துறவி ஒருத்தரு தியானம் செய்யறதுக்கு முன்னால பூனைய கட்டிப்போடறது கட்டாயம்னு எழுதி வச்சாரு’ ட�ோஜன். ‘நாமளும் இந்த முட்டாள் சீடர்கள் மாதரித்தான் நம்ம வாழ்கைய 73
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
வாழ்ந்திட்டிருக்கோம். எவன�ோ நாலுப் பேரு க�ொள்ளக் க�ொள்ளையா காசு சம்பாரிக்கறதுக்காக நாம இப்படித்தான் வாழனும், இப்படித்தான் சம்பாதிக்கனும்னு நமக்குச் ச�ொல்லிக்கொடுத்துக்கிட்டிருக்காங்க. எந்த எதிர் கேள்வியும் இல்லாம நாமளும் அதுதான் உண்மயான வாழ்க்கைன்னு அதே மாதரி வாழ்ந்துக்கிட்டிருக்கோம். என் வாழ்க்கைய இப்படித்தான் வாழனும்னு ச�ொல்றதுக்கு நீ யாருன்னு நாம கேக்கறதும் இல்ல. அடுத்தவன் உழைப்புல நாம வாழ்க்கையில மேலப்போறதுதான் வெற்றி பெற்ற வாழ்க்கன்னு எவன�ோ எங்கைய�ோ உக்காந்துக்கிட்டுச் ச�ொல்றது நாம அப்படியே கேட்டுக்கிட்டு அதுப்படியே வாழ்ந்துக்கிட்டிருக்கோம்.’ ட�ோஜன். நித்தினுக்கு நன்றாகவே புரிந்தது. ஏன�ோ திடீரென்று அவன் வேலையை விட்டு அனுப்பியவர்களின் முகங்கள் எல்லாம் மனதிற்குள் வந்து ப�ோயின. அவன் நடத்தும் டீம் மீட்டிங்குகளும், அவனுக்கு அவனுடைய மேலதிகாரிகள் நடத்தும் டீம் மீட்டிங்குகளும் அலையென வந்து ப�ோயின. அப்போது சாலையில் ஒரு வாகனம் சட்டென்று சாலையைத் தேய்த்துக்கொண்டு நிற்கும் ஓசைக் கேட்டது. அதைத் த�ொடர்ந்து ஒரு நாய் அலறும் சத்தம். விநாடிகளில் அந்த நாயைச் சாலையில் அடித்துத் தூக்கிப்போட்ட வாகனம் ப�ோய்விட்டது. சாலையின் ஓரத்தில் அடிப்பட்ட நாய் சத்தம் க�ொஞ்சம் க�ொஞ்சமாக அடங்க உடல் மாத்திரம் வெட்டி வெட்டித் துடித்துக்கொண்டிருந்தது. அதன் வாய்க் காது மூக்கு என்று இரத்தம் வடிந்துக�ொண்டிருந்தது. நித்தின் அவசர அவசரமாக அதன் அருகில் ப�ோய்ப் பார்த்தான். ஆனால் ட�ோஜன் அங்கே எதுவுமே நடைபெற வில்லை என்பதுப�ோல அந்த நாயைக் கடந்து ப�ோய்க் க�ொண்டிருந்தார்.
74
நவீனா அலெக்சாண்டர்
75
புத்தாவின் சமாதி சும்மாய் இருத்தல்
இந்த உலக வாழ்க்கை புத்தா தன்மையை அடைய தடையாக இருக்கிறது என்று நம்புபவர்கள், அன்றாட வாழ்வியலில் இருக்கும் புத்தா தன்மையை பார்ப்பதில்லை. புத்தா தன்மை இல்லாத எந்த ஒரு பணியும் இல்லை என்பதை அவர்கள் கண்டடைவதில்லை. - ட�ோஜன் சென்ஜி
ட�ோ
ஜன் திடீரென்று மடத்தை இடம் மாற்ற வேண்டிய அவசியமாக இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பார்ப்பது அவருக்கு இருந்த புற அழுத்தங்களாக இருந்திருக்கலாம் என்பது. அன்றைய காலத்தில் க�ோஷ�ோஜி பகுதியில் ஏகப்பட்ட ஜென் பெளத்த மடாலயங்கள் உருவாகத் த�ொடங்கிவிட்டன. ட�ோஜனைப் ப�ோலவே சீனாவிற்குச் சென்று ஜென் ப�ௌத்தம் படித்துவிட்டு வந்த துறவிகள் தங்களுக்கென்று மடங்களை அந்தப் பகுதியில் நிறுவத் த�ொடங்விட்டார்கள். இதனால் ட�ோஜனின் மடத்திற்கு வரவேண்டிய சீடர்களின் எண்ணிக்கை குறையத் த�ொடங்கவிட்டது. மடங்களுக்குள் சீடர் சேர்க்கும் விசயத்தில் நடந்த இடைவிடாத ப�ோட்டியும் மற்றொரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சில ஆராய்ச்சியாளர்கள் ட�ோஜனுக்கு மலைகள் மீது இருந்த காதலே அவரை மலைகள் சூழ்ந்த ஒரு இடத்திற்கு இடமாற வைத்திருக்கிறது என்று நினைக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக ஷ�ோப�ோகென்சு 76
நவீனா அலெக்சாண்டர்
புத்தகத்தில் மலைப் பாங்கான இடத்தில் தியானம் செய்வதின் இனிமையை அவர் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறார்கள். அறிவுஜீவிகள் மலையை நாடுகிறார்கள் என்று ட�ோஜன் எழுதியிருக்கிறார். எஜிசேன் பகுதியில் அவருக்கு இருந்த சீடர்களின் ஆதரவும், அரசாங்கத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த சாமுராயாக இருந்த ஹட்டான�ோ ய�ோஷிசிகியின் ஆதரவும் காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எஜிசேனில் ட�ோஜன் மடத்தைக் கட்டுவதற்கு ஹட்டான�ோ ய�ோஷிசிகி ப�ொருளாதரவும் நில ஆதரவும் செய்தார். கி.பி. 1246-ல் எஜிசேனில் அவர் கட்டி முடித்த மடத்திற்கு ஹெய்யீஜி என்று பெயர் வைத்தார். இன்றைய ஜப்பானின் மிகவும் புகழ்பெற்ற ஜென் மடங்களில் ஒன்றாக இருப்பது ஹெய்யீஜி. வாழ்வின் இறுதி வரை இந்த மடத்திலேயே நிலைத்திருந்தார் ட�ோஜன். கி.பி. 1252-யின் இறுதியில் அவருக்கு உடல் நிலை ம�ோசமாகிப்போனது. இதைத் த�ொடர்ந்து உடல் நிலையில் எத்தகைய முன்னேற்றமும் இல்லாமல் 1253-ல் அவர் இறந்தார். ட�ோஜன் உருவாக்கிய ஜென் பெளத்த முறை ச�ோட்டோ என்று அழைக்கப்படுகிறது. அவருக்குப் பின் மடத்திற்குக் குருவாக வந்த அவருடைய சீடர்கள் ட�ோஜனின் சிறப்பையும் ஹெய்யீஜி மடத்தின் சிறப்பையும் ஜப்பானின் பல பாகங்களுக்கும் க�ொண்டு சென்று பரப்பினார்கள். ட�ோஜன் தன்னுடைய சீடர்களுக்கு நடைமுறை பயிற்சிகளின் மூலமே தான் பெற்ற ஜென் ஞானத்தைக் கடத்த முயற்சி செய்தார். சீடர்களை அடித்து ஞானம் பெற வைப்பதையும் திட்டி ஞானம் பெறவைப்பதையும் அவர் முற்றிலும் எதிர்த்தார். தன்னுடைய பயிற்சி முறைக் குறித்து நேரடியாகவே அவர் தன்னுடைய சீடர்களுடன் விவாதம் செய்தார். எத்தகைய ஒளிவு மறைவையும் அவர் தன்னுடைய பயிற்சி முறைக்குள் க�ொண்டிருக்கவில்லை. சீனாவில் எப்படிப் ப�ோதி தர்மர் சாமானியனையும் உள்ளடக்கிய ஜென்னைக் க�ொண்டுவந்தார�ோ அதையே ட�ோஜனும் ஜப்பானில் செய்தார். சாமானியன் முதல் அரசில் செல்வாக்குக் க�ொண்டவர்கள் வரை அனைவருக்கும் அவர் ஜென் ப�ௌத்தத்தைத் திறந்துவிட்டார். இதன் மூலம் கிராம புரத்தில் இருந்த படிப்பறிவு அற்றவனுக்குக் கூடப் பெளத்த ஞானத்தைப் பெறும் வாய்ப்புக் கிடைத்து. இந்த அம்சம் ஜப்பானின் கிராம புறங்கள் முழுவதும் ட�ோஜனின் ச�ோட�ோ ஜென் பெளத்த பயிற்சிக்கு பெரும் ஆதரவை பெற்றுத் 77
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
தந்தது. அதை அவருக்குப் பிறகு வந்த சீடர்களும் மிக அருமையாகப் பயன்படுத்திக்கொண்டு ஹெய்யீஜி மடத்தை ஜப்பானின் செல்வாக்கு மிக்கச் ஜென் பெளத்த மடமாக வளர்த்தெடுத்தார்கள். இன்றைக்கு மேற்குலகில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கும் தினப்படி வாழ்வியல் ஜென் என்பதை வளர்த்து எடுத்தவர் ட�ோஜன். இன்றைக்கு வழக்கிலிருக்கும் பெரும்பான்மை க�ோன் கதைகள் இவரின் எழுத்துக்களின் வெளிச்சத்தின் மூலமே பரவலான வாசிப்பைப் பெற்றன. ஆனால் வரலாற்று முரண்நகை என்னவென்றால் ட�ோஜன் அவருடைய காலத்தில் க�ோன்களின் பயன்பாட்டை அதிகமாகக் கண்டனம் செய்திருக்கிறார். அடுத்த முரண்நகை, ஜப்பானின் க�ோன் கதைகளுக்கு இலக்கியத்தன்மையைக் க�ொடுத்தவரும் அவரே. அதாவது க�ோன் கதைகளை இலக்கியத்தரத்திற்கு அவர் உயர்த்தினார். அவருடைய எழுத்துக்களில் க�ோன் கதைகள் வாசிப்பு அனுபவ மாயாஜாலங்கள் காட்டின. நேர்த்தி, ச�ொல்கட்டு, நகைச்சுவை என்று பல நிலைகளிலும் க�ோன் கதைகளை அவர் தன்னுடைய எழுத்துக்களில் உயர்த்தினார். க�ோன் கதைகளை அவ்வளவு எளிதாகப் புரிந்துக�ொள்ள முடியாது. அவை விடுகதைகளைப் ப�ோன்றவை. அப்படியிருந்தும் இன்றைக்கு மேற்குலகில் க�ோன் கதைகள் பிரசித்திப்பெற்றிருப்பதற்குக் காரணம் ட�ோஜனின் எழுத்து வீச்சு. ஆராய்ச்சியாளர்கள், தத்துவவியல் மேதைகள், மன�ோதத்துவ நிபுணர்கள், சூழலியல் ஆர்வலர்கள் என்று பலதரப்பட்ட அறிவு தரப்பினரையும் கவர்ந்து இழுக்கக் கூடியது ட�ோஜனின் க�ோன் கதைகளும் அவற்றின் விளக்க உறைகளும். அர்த்தம் புரியவில்லையென்றாலும் க�ோன் கதைகளைப் படிப்பவர்களுக்கு அதில் வரும் கதாப்பாத்திரங்கள் படிக்கும் ந�ொடியில் உயிர்பெற்று வரும் அதிசயத்தை உணர முடியும். மற்ற ஜென் மாஸ்டர்கள் தத்துவ விளக்கங்களுக்கு வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்க அதிலும் சீன வார்த்தைகளை, ட�ோஜன் வார்த்தை தேர்வுகளுக்கான எவ்வித பிரச்சனையும் இன்றி வழிந்தோடும் நீர்போல ஜப்பானிய ம�ொழியிலும் தன்னுடைய ஜென் கருத்துக்களை எழுதியிருக்கிறார். அவருக்கும் அவருடைய புத்தகத்தைப் படிப்பவருக்கான நேரடியான உடனடியான த�ொடர்பை ஏற்படுத்திவிடுகிறது அவருடைய எழுத்து முறை. புத்தகத்தைப் படிப்பவர்களை நீங்கள் என்று அழைத்து நீங்கள் இப்படிக் கேட்டால் நீங்கள் இப்படி நினைத்தால் நீங்கள் இப்படிச் 78
நவீனா அலெக்சாண்டர்
ச�ொன்னால் என்று குறிப்பிட்டு படிப்பவருக்கும் அவருக்குமான விவாதமாக மாற்றிவிடுகிறார் அவருடைய எழுத்துக்களை. இந்த முறையில் படிக்கிறப�ோது படிப்பவர் அந்தப் புத்தகத்தின் வழி அவருக்கு எதிரில் உட்கார்ந்து உரையாடுவது ப�ோன்ற த�ோற்ற மயக்கத்தை உண்டாக்குகிறது. இதுவே அவருடைய எழுத்துக்களின் பலமும் தனிச் சிறப்பும். மற்ற ஜென் மாஸ்டர்கள் தங்களின் எழுத்துக்களில் படிப்பவருக்கும் அவர்களுக்குமான த�ொலைவை கடைப்பிடிக்க அந்தத் த�ொலைவை இல்லாமல் செய்துவிடுகிறார் ட�ோஜன். சும்மா இருத்தல் குறித்து ஷ�ோப�ோகென்சு புத்தகத்தில் அவர் க�ொடுத்திருக்கும் விளக்கத்தை இதற்கு ஒரு உதாரணமாக இங்கே எடுத்துக்கொள்ளலாம். ‘யாராவது இப்படிக் கேட்டால்: ஏதும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பது எப்படி ஞானம் பெறுவதற்கான வழியாகும்? நான் ச�ொல்வேன்: புத்தகர்களின் சமாதி நிலை என்பது ஏதும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பது என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் ‘பெரும் பாதையை’ (Great Vehicle) அவமதித்தவர்களாகிப்போவீர்கள். இப்படிச் ச�ொல்வது என்பது பெரும் கடலுக்கு மத்தியில் இருந்துக�ொண்டு இங்கே தண்ணீரே இல்லையே என்று ச�ொல்வதற்கு நிகராகும். நம்மைக் குறித்துத் தெரிந்துக�ொள்ளவும் தெரிந்துக�ொண்டதை பயன்படுத்தவம் சும்மா இருத்தல் என்பது (சமாதி) உதவுகிறது. ஒரு ப�ொது விதியாக, சரியாகச் செயல்படும் முறைகள் நம் மனதிற்குள் த�ோன்றும்போது நாம் அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். அப்படி இல்லாதப�ோது சும்மாய் உட்கார்ந்திருத்தலே நலம். மனம் செயல்படத் தயாராக இல்லாத நிலையிலும் எதையாவது செய்தாகவேண்டுமே என்று மன ஒட்டுதல் இல்லாமல் செய்யும் காரியங்கள் நம்முடைய சக்தியையும் செய்யப்படும் ப�ொருளின் நேர்த்தியையும் வீணடிப்பதில் ப�ோய் முடியும்.’ சீன மற்றும் ஜப்பான் ஜென் மேலும் இரண்டு பெரும் தத்துவங்களில் இருந்தும் சில கருத்துக்களை உள்வாங்கி இருக்கின்றன. ஜென்னின் தனித்துவமாக இருக்கும் க�ோன் கதைகளுக்கும் முன்பே அதுப�ோன்ற குட்டிக் கதைகள் சீன பழம் பாரம்பரியத்திலிருந்திருக்கிறது. பெளத்த 79
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
மதம் சீனாவிற்குள் நுழைவதற்கு முன்பு செல்வாக்குப் பெற்றிருந்த ச�ொல்லப்போனால் இன்றைய மேற்குல தத்துவ இயலும் விழுந்து விழுந்து படிக்கும் அந்த இருபெரும் தத்துவங்கள் எவை?
80
நவீனா அலெக்சாண்டர்
81
நாய்க்கு புத்ததன்மை உண்டா
நாம் என்னத்தான் விரும்பினாலும் பூவானது வாடாமல் நின்றுவிடுவதில்லை. நாம் என்னத்தான் வெறுத்தாலும் களை வளராமல் ப�ோய்விடுவதில்லை. - ட�ோஜன் சென்ஜி
இ
ரத்த குவியலாகக் கிடந்த நாயின் கண்கள் குத்திட்டுவிட்டன. அதன் உடல் மட்டுமே உயிர் பிரியும் தருணத்திலான வெட்டி இழுப்பில் இருந்தது. அந்த இழுப்பும் க�ொஞ்சம் க�ொஞ்சமாக வேகம் குறைந்தபடி இருந்தது. அதன் அருகில் குனிந்து உட்கார்ந்த நித்தின் அதைக் காப்பிற்றிவிடும் முனைப்பில் அவசர அவசரமாகத் தன்னுடைய ம�ொபைலை எடுத்துப் புளுகிராஸ் எண்ணை தேடத் த�ொடங்கினான். அந்த இடத்தைக் கடந்து பல அடிகள் முன்னால் ப�ோய்விட்ட ட�ோஜன் மீண்டும் திரும்பி அவனிடம் வந்தார். வந்தவர் படக்கென்று அவன் கையிலிருந்து ம�ொபைலைப் பிடுங்கிக்கொண்டார். ‘இதுகுலாம் நேரத்த வீணாக்க முடியாது. நமக்கு வேல நிறைய இருக்கு எந்திரி தம்பி’ ட�ோஜன். ‘இதுக்கு இன்னும் உயிரு இருக்குப் ப�ோனை க�ொடுங்க…புளு கிரா…..’ நித்தின் ச�ொல்லி முடிப்பதற்குள் ட�ோஜன் குறுக்கிட்டார். ‘இதயெல்லாம் பாத்துக்கிட்டிருந்தா நம்ம வேல ஓடாது தம்பி. நமக்கு நம்ம வேலதான் முக்கியம் கிளம்பு’ ட�ோஜன். 82
நவீனா அலெக்சாண்டர்
‘என்னங்க கண்ணுக்கு எதுருல ஒரு உயிரு ப�ோயிட்டிருக்கு அத காப்பாத்தறத விட்டுட்டு இப்படிப் பேசறீங்க’ நித்தின். அவரைக் குற்றம் ச�ொல்வதைப் ப�ோலிருந்தது அவனது குரல். ‘இந்த நாயிக்கு வலுத்தது பிழைக்குங்கற சங்கதி தெரியலையே தம்பி. இந்த மாதரி ர�ோட்டுல அடிப்பட்டாலும் ஒன்னும் ஆகாத மாதரி அதுக்குத் தன்ன மாத்திக்கத் தெரியலையே’ ட�ோஜன். ‘இது அநியாயம்’ நித்தின். அவர் பேசுவது அவனுக்குப் புரியவில்லை என்பதால் அது அவனுக்கு அநியாயமாகத் தெரிந்தது. ‘அடுத்தவன அடிச்சு வாழறதுதானே சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட். அததான் அந்த வண்டிக்காரன் செஞ்சுட்டு ப�ோயிருக்கான். அவன் பயணத்த தடுக்கற மாதரி இந்த நாயி குறுக்கால வந்துடுச்சு அடிச்சுட்டான். இதுல நீ நானும் செய்யறதுக்கு என்ன இருக்கு. இந்த நாயிக்கு வாழ தகுதியில்ல அவ்வளவுதான். வாழ தகுதியில்லாத நாயிக்கு நாம ஏன் உதவி பண்ணனும்’ ட�ோஜன். இப்போது அவருடைய உதடுகளில் அந்த மெல்லிய சிரிப்பு மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது. வெட்டிக்கொண்டிருந்த நாயின் உடல் முழுதுமாக அடங்கவிட்டது. நித்தின் அதைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து ட�ோஜனைப் பார்த்தான். ‘கிளம்பு தம்பி’ ச�ொல்லிவிட்டு ட�ோஜன் நடக்கத் த�ொடங்கிவிட்டார். நித்தினுக்குள் ஒரு நிமிடம் அனைத்தையும் புரட்டிப்போட்டதைப்போல இருந்தது. கல்போட்ட குளத்திற்குள் சேறு புகையாக மேலே கிளம்புவதைப் ப�ோல அதுவரை அவன் வாழ்வின் வரையறைகளாக வைத்திருந்த அனைத்து அளவீடுகளும் அவனுடைய மனதை முட்டிக்கொண்டு மேலே கிளம்பி வந்தன. நம் வாழ்வின் முன்னேற்றத்திற்காக எதிர்ப்படுபவரின் வாழ்க்கையைச் சந்தைப்பொருளாகப் பார்க்க வேண்டும் என்று அவனுக்குள் திணிக்கப்பட்டிருக்கும் அறிவுரைகள் அவன் மனதிற்குள் ஜீரணமாக முடியாத குமட்டலை திடீரென்று கிளப்பியது. வலுத்தது பிழைக்கும் என்று ச�ொல்லிக்கொண்டு யூஸ் அன்ட் துர�ோ பாணியில் அடுத்தவரின் வாழ்வைக் கசக்கி தூக்கி எறிய எந்த நேரத்திலும் தயாராக இருந்த மனதைப் பார்த்து செத்துக்கிடந்த நாய் குறைப்பதைப் ப�ோன்று த�ோன்றியது. 83
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
கண்மண் தெரியாமல் படு வேகமாகச் சாலையில் செல்லும் வாகனங்களும் அவனுடைய வாழ்வும் ஒன்றாக இருப்பதைப் ப�ோலத் த�ோன்றியது. சாலையில் அடிப்பட்டுச் செத்துக் கிடந்த நாய் அவனால் வேலையிலிருந்து துரத்தப்பட்டவர்களின் நிலையை ஞாபகப்படுத்தியது. பேச்சற்றவனாக அவன் நடந்துக�ொண்டிருந்தான். துடித்துக்கொண்டிருந்த நாய்க்குப் பரிதாபப்பட்ட நான் ப�ோலியானவனா? அடுத்தவர்களைச் சுயநலமாக எனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நான் ப�ோலியானவனா? சக உயிர்கள் மீது இயல்பிலேயே அக்கறைக்காட்டும் மனித தன்மை வேண்டுமென்றே காயடிக்கப்படுகிறதா? நமக்குத் தேவையான இடங்களில் தேவையான நேரங்களில் அன்பும் கருணையும் திறந்துவிடப்பட்டு, மற்ற நேரங்களில் அவற்றை மூடிவைத்துக்கொண்டு திரியும் எந்திரங்களாக மனித மனத்தைச் சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட் செய்துவிட்டதா? இப்படித் த�ொடர்ச்சியாக அவனுக்குள் கிளம்பிவந்த கேள்விகளுக்கு எல்லாம் அவனது வாழ்க்கை ஆமாம் என்று பதில் ச�ொல்லியது. ‘இப்படி உன்ன நீயே உணர்ந்துக்கறதுதான், உன்ன நீயே யாருன்னு கேள்விகேட்டு பாத்துக்கறதுதான், உன்ன நீயே உனக்குள்ள தேடி கண்டடையறதுதான் ஜென். இத நீ செய்யத் த�ொடங்கிட்டின்னா நீதான் புத்தா. புத்தாங்கறது ஞானம். உன் வாழ்க்கைக்கான வளர்ச்சி உனக்குள்ளத்தான் இருக்கு. அடுத்தவன�ோட உழைப்புல இல்ல. அடுத்தவன�ோட வாழ்க்கைக்குக் குழிப்பறிக்கறதுல இல்ல. அடுத்தவன் மேல ப�ொறாமப்படுறதுல இல்ல.’ ட�ோஜன். ‘சரியான புரிதல், சரியான நடத்தை, சரியான பேச்சு, சரியான செய்கை, சரியான த�ொழில், சரியான முயற்சி, சரியான கவனம், சரியான விழிப்புணர்வு இந்த எட்டும்தான் மனித வாழ்க்கைய�ோட வளர்ச்சிக்கான இரகசியமே தவிர வலுத்தது பிழைக்குங்கற அடாவடித்தனம் இல்ல’ ட�ோஜன். ‘தன்னை அறிஞ்சுக்கிட்டவனுக்கு இந்த எட்டு விதிகளுக்கு ஏத்தமாதரி வாழ்க்கைய வாழறது பெரிய கஷ்டமில்ல. நா மட்டும் இப்படி இருந்தா மத்தவன் என்னைய முழுங்கிட்டு ப�ோயிடமாட்டானான்னா, தன்னைய அறிஞ்சவன அவ்வளவு சுலபமா யாராலையும் அவங்க இஷ்டத்துக்குச் சிதச்சிட்டு ப�ோயிட முடியாது. ஏன்னா அவனுக்கு எந்த நிலையிலயும் வாழத் தெரியும்’ ட�ோஜன்.
84
நவீனா அலெக்சாண்டர்
85
ஆதிகாலத்தில் யின்னும் யானுமே
மனதளவில் ச�ோர்ந்துப்போயிருக்கிறேன், இதிலிருந்து மீள நான் என்ன செய்யட்டும், சீடன். மற்றவர்களை உற்சாகப்படுத்து, குரு – ட�ோஜன் சென்ஜி
அ
ந்த இரு பெரும் பழமையான சீன தத்துவங்களைத் தெரிந்துக�ொள்வதற்கு முன்பாகச் சீனாவின் வரலாற்றுக்கு முந்தைய காலகட்ட பகுதிகளைக் குறித்தும் தெரிந்துக�ொள்ளவேண்டியது அவசியமாகிறது. இது தெரியாமல் அந்தத் தத்துவங்களைக் குறித்துப் பார்ப்பது அறையும் குறையுமான காரியமாகப் ப�ோய் முடிந்துவிடலாம். சீன பாரம்பரிய பழங் கதைகளின் படி இந்தப் பிரபஞ்சத்தின் த�ொடக்கமாக இருந்தவை வெறுமையும் இருளும்தான். பிறகு ஒரு குமிழித் த�ோற்றம் பெறுகிறது. அது புகைப் பந்து ப�ோல மாற்றமடைந்து பல ஆயிரம் வருடங்கள் கழித்துச் சிவந்த முட்டைப் ப�ோன்ற வடிவத்தைப் பெற்றது. இதுதான் பான் கு. பான் கு 18,000 வருடத்திய நெடுந்தூக்கத்திலிருந்து கண் விழிக்கிறார். தன்னைச் சூழ்ந்திருக்கும் இருளையும் வெறுமையையும் பான் கு தன் கைகளையும் கால்களையும் விரித்து அகற்றி பூமியையும் பிரபஞ்சத்தையும் தனித் தனியே பிரிக்கிறார். நேர் மறை (positive - Yang) சக்திகள் ஒன்று திரண்டு வானமாக மேலே எழுகின்றன. எதிர் மறை (negative - Yin) சக்திகள் ஒன்று திரண்டு பூமியாக நிலைப் பெறுகிறது. இப்படித்தான் பழங்காலச் சீனர்களிடையே யின் யாங் கருத்தாக்கம் உருபெற்றது. பிறகு பான் கு முதல் மனிதனைப் படைக்கிறார். 86
நவீனா அலெக்சாண்டர்
சீனர்களின் இந்தப் படைப்பு பழங்கதை யூத, கிருத்தவ, இஸ்லாமிய படைப்புக் க�ொள்கைகளுடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது. பிரபஞ்சம், பூமி, மனிதன் என்று படைப்புக்கள் முடிந்ததும் பான் கு சீனாவை (அதாவது உலகத்தை) கண்டுபிடிப்புகளிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய அரசர்களிடம் தருகிறார். இவர்களே மனித இனத்திற்கான கண்டுபிடிப்புகளையும், சமூகத்திற்கான சட்டதிட்டங்களையும், இவற்றை நடத்திச் செல்லும் நிறுவனங்களையும் வழங்குகிறார்கள். இவர்களை அந்தப் பழங்கதைகள் திரி சாவரிஜின்ஸ் அன்ட் பைவ் எம்பரர்ஸ் என்று குறிப்பிடுகிறது. இவர்களின் காலம் சுமார் கி.மு. 2852 த�ொடங்கி 2070 வரை. இவர்களை நம்மூர் கடவுள் அவதாரங்களுடன் ஒப்பிடலாம். இவர்கள் உண்மையில் வரலாற்றில் வாழ்ந்த மனிதர்கள்தானா என்பதற்கு இதுவரை எத்தகைய த�ொல்லியல் ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஆனால் இவர்களில் ஒருவரான யாவ�ோ-வின் தலைநகரை கண்டுபிடித்திருப்பதாகச் சீன அகழ்வாராய்ச்சி துறை அறிவித்திருக்கிறது. இந்த ஐந்து அரசர்களில் மிகவும் முக்கியமானவர் ஹூவாங்டி. இவரை எல்லோ எம்பரர் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவரே எழுதும் முறையையும், மண் பாண்டங்ள் செய்யும் த�ொழில் நுட்பத்தையும், நாள் காட்டியையும் அறிமுகப்படுத்துகிறார். அடுத்தவர் யாவ�ோ. இவருடைய காலம் சுமார் கி.மு. 2436 - 2366. இவர் ஆறுகளையும் நதிகளையும் கட்டுப்படுத்தி விவசாயத்திற்கு ஏற்றப்படி பயன்படுத்தும் த�ொழில் நுட்பத்தைக் கற்றுத்தருகிறார். இவருடைய தந்தை கூ. இவருடைய பிறப்பு கதை கிரேக்க கடவுளர்களின் கதைகளுடன் ஒத்திருக்கிறது. இவருடைய தாய் ஹூவாங்ஈ, கிரகங்களில் ஒன்றான சுக்கிரனுடன் காதல் வயப்பட்டு இவரைப் பெற்றார் என்று சூஜிங் (Book of Documents) புத்தகம் குறிப்பிடுகிறது. கர்ணனின் பிறப்பு கதைக்கும் இதற்கும் இருக்கும் ஒற்றுமையும் கவனிக்கத்தக்கது. செவ்வியல் இலக்கியங்கள் ஐந்து இலக்கியங்கள் சீனாவின் பழங்காலச் செவ்வியல் இலக்கியங்களாகப் பார்க்கப்படுகின்றன. சீஜிங் (Classic of Poetry) சீனாவின் மிகப் பழைய கவிதைகளின் த�ொகுப்பு நூல். கி.மு. பதின�ொன்று த�ொடங்கி ஏழாம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட கவிதைகள் இந்த நூலில் த�ொகுக்கப்பட்டிருக்கிறது. சூஜிங் 87
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
(Book of Documents) புத்தகம் வரலாற்றுக்கு முற்பட்ட ஐந்து அவதார அரசர்களின் வரலாற்றைத் தருகிறது. இது கி.மு. ஆறாம் நூற்றாண்டில் த�ொகுக்கப்பட்ட நூல். லீஜி (Book of Rites), இது சாவ�ோ பேரரசின் அரசாங்க நடைமுறைகள், ஆட்சி முறைகள் மற்றும் க�ொண்டாட்டங்களைப் பற்றிச் ச�ொல்கிறது. ஐ-சிங் (I Ching), இது பழங்காலச் சீன ச�ோதிட இலக்கியம். சுன்கியு (Spring and Autumn Annals), சாவ�ோ பேரரசில் இருந்த லு மாநிலத்தின் அரசவை த�ொகுப்பு இந்த நூல். கி.மு 722 – 479 வரையிலான அரசவை நடவடிக்கைகள் இந்த நூலில் காலவரிசைப்படி த�ொகுக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர ஹான் பேரரசு (கி.மு. 206 – கி.பி. 220) காலத்தில் சிமா கியான் த�ொகுத்த ஷிஜி (The Records of the Grand Historian) நூலும் சீனாவின் மிக முக்கியப் பழங்கால இலக்கியங்களாகப் பார்க்கப்படுகின்றன. வரலாற்று அரச பரம்பரைகள் சியா அரச பரம்பரை அடுத்து வருபவர்கள் சூன் மற்றும் யூ. அரசர் யூ-வின் காலத்திலிருந்து வரலாற்றுத் த�ொல்லியல் ஆதாரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கத் த�ொடங்குகின்றன. பேரரசர் யூ கி.மு. 2205-ல் சியா அரச பரம்பரையைத் த�ொடங்கிவைக்கிறார். அதாவது இன்றையிலிருந்து 4200 வருடங்களுக்கு முன்பு. சில ஆராய்ச்சியாளர்கள் இது நடந்தது கி.மு. 2070-ல் என்று கருதுகிறார்கள். மஞ்சள் ஆற்றின் சமவெளிப் பகுதிகளில் கி.மு. 2070 த�ொடங்கிக் கி.மு. 1600 வரைக்குமான காலகட்டங்களில் சியா அரச பரம்பரையின் அரண்மனை மற்றும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. சாங் அரச பரம்பரை அடுத்தது சாங் அரச பரம்பரை. இதன் காலம் கி.மு. 1600களில் த�ொடங்குகிறது. இந்த அரச பரம்பரையினரின் காலம் த�ொட்டு த�ொல்லியல் ஆதாரங்கள் முழுமையாகக் கிடைக்கத் த�ொடங்கிவிடுகிறது. கிடைக்கும் ஆதாரங்கள் சிமா கியானின் ஷிஜி (The Records of the Grand Historian) புத்தகத்துடனும் சாங்சு (Book of Documents) புத்தகத்துடனும் ஒத்துப்போகின்றன. இந்த அரச பரம்பரை மத்திய கிழக்கு சீனாவை மையமாகக் க�ொண்டு செழித்திருக்கிறது. 88
நவீனா அலெக்சாண்டர்
சுவ�ோ அரச பரம்பரை கி.மு. 1046-256 சாங் அரச பரம்பரை உச்சத்திலிருந்த காலகட்டத்திலேயே சுவ�ோ அரச பரம்பரையும் சீனாவில் தலையெடுக்கத் த�ொடங்கியிருந்தது. ஒரு கட்டத்தில் சுவ�ோ அரச பரம்பரை சாங் அரச பரம்பரையை ஓரம்கட்டிவிட்டு சீனாவின் பேரரச பரம்பரையானது. இது நடைபெற்றது சுமார் கி.மு. 1046 வாக்கில். சீனாவின் அரசபரம்பரை வரலாற்றில் மிக நீண்ட காலம் அதாவது ஏறத்தாழ 800 ஆண்டுகள் த�ொடர்ச்சியாக எந்தவித இடையூறும் இல்லாமல் அதிகாரத்திலிருந்தது இந்த அரசபரம்பரையே. இந்தப் பரம்பரை மத்திய கிழக்கு சீனப் பகுதியை மையமாகக் க�ொண்டிருந்தது. இந்த அரச பரம்பரைக்கும் இதற்கு முன்பிருந்த சாங் அரச பரம்பரைக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும் சில குறிப்பிட்ட முக்கியமான வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்தன. அவற்றில் ஒன்று சாங் அரச பரம்பரையில் அரசப் பதவி என்பது அண்ணனிடமிருந்து தம்பிக்கு என்று கைமாறியது ஆனால் இது சுவ�ோ அரச பரம்பரையில் தந்தையிடமிருந்து மகனுக்கு என்று கைமாறியது. மேலும் சுவ�ோ அரச பரம்பரை நிலமானிய முறையை அரசு நிர்வாக அமைப்பாக எடுத்துக்கொண்டது. அதாவது அரசரே நிலங்களைப் பிரித்து, பிரித்த நிலங்களுக்குத் தலைவர்களை நியமிப்பது. புதிய நிலங்களுக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அந்த நிலங்களில் இருந்து வரி மூலம் வருவாய் பெறுவதுடன் வேண்டியப�ோது அரசருக்குப் படை உதவியும் செய்யவேண்டும். இந்த நிலமானிய முறையானது அன்றைய சீன சமூகத்தில் மிகப் பெரிய வளர்ச்சிகளைக் க�ொண்டுவந்து சேர்த்தது. மேலும் வெண்கல சுரங்கங்களின் மீதிருந்த அரசர்களின் பிடி அந்த அந்தப் பகுதி தலைவர்களின் கைக்குப் ப�ோனதும் வெண்கல த�ொழில் நுட்பமும் பெரும் வளர்ச்சி நிலையை ந�ோக்கிப் ப�ோனது. வணிகம் பண்ட மாற்று முறையிலிருந்து பணப் பரிவர்தனை முறைக்கு மாறியது. இத்தகைய அபரிமிதமான வளர்ச்சி இறுதியில் அழிவில் ப�ோய் முடிந்தது. ம�ொத்தமாகச் சீனாவை ஆள சுவ�ோ அரச பரம்பரை அரசர்கள் 170 சிற்றரசர்களை நியமித்திருந்தார்கள். பேரரசின் இறுதிக் கால நூற்றாண்டுகளில் இந்தச் சிற்றரசர்கள் தங்களின் நிலப் பகுதிகளை விரிவாக்கும் விதத்தில் தங்களுக்குள் ப�ோரிட்டுக்கொண்டார்கள். 89
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
சுவ�ோ அரச பரம்பரையினர் சுத்தமாக இவர்களின் மீதான தங்களின் அதிகாரத்தை இழந்தேவிட்டார்கள். தங்களுக்குள் ப�ோரிட்டுக்கொண்ட இந்த 170 சிற்றரசுகளும் இறுதியில் ஏழு மாகாணங்களாகப் பிரிந்துப்போனார்கள். ஒட்டும�ொத்த சீனாவும் குயி, சூ, யான், ஹான், சாவ�ோ, வேய் மற்றும் குயின் மாகாணங்களாக உடைந்தது - இது த�ொடங்கிச் சீனாவின் நவீன காலம் வரை சீனா மாகாணங்களாகப் பிரிவதும் அதை ஒரு பேரரசின் கீழ் க�ொண்டுவரும் முயற்சிகளும் த�ொடர்ந்த பெரும் அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சுவ�ோ பேரரசின் இடைக் காலத்தில் த�ோன்றியவை அந்த இரு பெரும் தத்துவங்கள். அவை தாவ�ோயிசம் மற்றும் கன்பூசியனிசம்.
90
நவீனா அலெக்சாண்டர்
91
தவறுகளை மறைக்கா மனம் புத்தா
நாம் மற்றவர்களின் வாழ்கையில் ஒளி ஏற்றினால், அந்த ஒளி நம் வாழ்வின் முன்னேற்றப் பாதையையும் பிரகாசமாக காட்டும். – ஜென்
ச�ொ
ட்டு ச�ொட்டாக மாலை நகர்ந்துக�ொண்டிருந்தது. ட�ோஜனும் நித்தினும் காஞ்சிபுரத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். இப்போது ட�ோஜனின் நடையில் க�ொஞ்சம் வேகம் கூடியிருந்தது. சில மணி நேரம் அப்படி நடந்த அவர் ஒரு வீட்டிற்கு முன்பாகப் ப�ோய் வெளி வாசல் இரும்பு கதவைத் திறந்துக�ொண்டு விறுவிறு என்று உள்ளே ப�ோனார். யார் வீடு இது இவர் பாட்டுக்கு உள்ளே ப�ோகிறாரே பின்னால் ப�ோவதா வேண்டாமா என்கிற தயக்க அடிகளுடன் நித்தின் மெதுவாக அந்த வீட்டிற்குள் நுழைந்தான். அந்த வீட்டின் வாசல் வரை வந்துவிட்டான் ஆனால் அவனுக்கு முன்பு உள்ளே நுழைந்த ட�ோஜனைக் காணவில்லை. நித்தின் சுற்றும் முற்றும் பார்த்தான் அவரை நிச்சயமாகக் காணவில்லை. வீட்டிற்குள் பேயிருப்பார�ோ என்கிற சந்தேகத்துடன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே நின்றுவிட்டான். சில விநாடிகள் கழித்து உள்ளப் ப�ோனவர் அவராகவே வெளியே வரட்டும் நாம் வெளியே ப�ோய்விடலாம் என்று நினைத்தவனாகத் திரும்பி இரண்டு அடிகள் எடுத்து வைக்கப் பின்னால் இருந்து அவனுக்குப் பழக்கமான குரல் ஒன்று படு ஆச்சரியத்தைத் தாங்கிக்கொண்டு வந்தது.
92
நவீனா அலெக்சாண்டர்
‘ஆய் நித்தின் வாட் எ சர்பிரைஸ். என்னால நம்பவே முடியல. என்ன இவ்வளவு தூரம்’ அது திவ்யாவின் குரல். இரண்டு நாட்களுக்கு முன்பு நித்தின் வேலையை விட்டு வீட்டிற்கு அனுப்பிய இரண்டுபேரில் அவளும் அடக்கம். நித்தினின் மனதிற்குள் அந்தக் காட்சி சட்டென்று வந்துப்போனது. மூன்று பக்கமும் கண்ணாடி சூழ்ந்திருந்த அந்த அறைக்குள் அவளும் நித்தினும் எதிரெதிரே உட்கார்ந்திருந்தார்கள். அவள் முகத்தில் இந்த வேலையை எப்படியாவது காப்பிற்றிக்கொள்ள வேண்டும் என்கிற தவிப்பு. பரிதவிப்பு என்று ச�ொல்வது சரியாகப் ப�ொருந்தும். ‘அத நிச்சயமா நான் பிக்கப் பண்ணிடுவேன் நித்தின். பிளீஸ் ஐ வான்ட் சம் டைம் தட்ஸ் ஆல்’ திவ்யா. ‘சீ திவ்யா. இதுல நா ஒன்னுமே பண்ண முடியாது. ஐ நீட் டூ ஷ�ோ மை ரிசல்ட். மத்தவங்களுக்கு டைம் க�ொடுத்துக்கிட்டிருந்தா நா சர்வைவ் பண்ண முடியாது. என்னோட கரியரையும் நா பாக்கனுமில்லையா. என்ட் ஆப் தி டே அதுதான் முக்கியம்’ நித்தின். சில விநாடிகள் அவன் முகத்தைப் பார்த்திருந்துவிட்டு திவ்யா எழுந்து அந்தக் கண்ணாடியை அறையை விட்டு வெளியே சென்றுவிட்டாள். நித்தின் நின்று திரும்பிப் பார்த்தான். அவனுக்குள் இருந்த வார்த்தைகள் அனைத்தும் மனதின் எங்கோ ஒரு மூலையில் சிறைப்பட்டுவிட்டதைப் ப�ோன்று இருந்தது. அவளுக்குப் பதில் ச�ொல்ல அவனுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை. ஆச்சரியத்துடன் திவ்யா அவனுக்கு முன்பாக வந்து நின்றாள். ‘என் வீட்ட எப்படிக் கண்டுப்புடுச்சீங்க நித்தின்’. வார்த்தைகள் அற்ற நித்தின் கைகளை அப்படியும் இப்படியும் அசைத்து ஏத�ோ ச�ொல்ல முயற்சி செய்தான். ‘க�ோயிலுக்கு எதுக்காவது வந்தீங்களா. அப்ப கூட என் வீட்ட எப்படிச் சரியா கண்டுப்புடுச்சீங்க’ திவ்யா. ‘உங்க கிட்ட சாரி கேக்கனும்னு த�ோனுச்சு அதான் வந்தேன்’ படக்கென்று தயக்கத்தை உடைத்துக்கொண்டு நித்தினுடைய மனம் பதிலை ச�ொல்லியது. ‘சாரியா….எதுக்கு’ திவ்யா. 93
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
‘உங்கள வேலய விட்டு அனுப்புசதுக்கு. உங்களுக்கு நா ஒரு சான்ஸ் க�ொடுத்துருக்கலாம் ஆனா நா என்னோட கரியர் குர�ோத்துக்காக, மேனேஜ்மெண்ட்ல நல்ல பேரு வாங்கனுங்கறதுக்காக உங்கள……ஐ ஆம் சாரி’ நித்தின். இப்போது அவனுடைய மனம் தெளிந்த குளமாக மாறியிருந்தது. அதில் நிறைவு என்கிற நிலவின் பிரதிபலிப்பு. வார்த்தைகள் தங்கு தடையின்றி வந்தன. வந்த வார்த்தைகள் அவனுக்கு மேலும் மேலும் இதம் தருவதைப் ப�ோல இருந்தன. தான் செய்த தவறை எத்தகைய ஒளிவு மறைவுமில்லாமல் எத்தகைய சாக்கு ப�ோக்குகளுக்குள்ளும் மறைத்து வைக்காமல் வெளிப்படையாகச் ச�ொல்லி மன்னிப்பு கேட்பது மீண்டும் புதிதாகப் பிறக்கும் உணர்வை அவனுக்குள் ஏற்படுத்தியது. ‘சென்னையில இருந்து நடந்தே வந்துட்டீங்களா இப்படி இருக்கீங்க’ திவ்யா. அதற்கு ஆமாம் என்பதைப் ப�ோல நித்தின் தலையசைத்தான். ‘நடந்தேவா வந்தீங்க’ திவ்யா மேலும் ஆச்சரியமாகி புருவங்களை உயர்த்திக் கேட்டாள். ‘இம். கடவுளுக்கு வேண்டிக்கிட்டு அவர பாக்க நடந்தே ப�ோறதில்லையா. அத மாதரி நா செஞ்ச தப்புக்கு நடந்தே வந்து உங்க கிட்ட மன்னிப்பு கேக்கறேன்னு வைச்சுக்குங்களேன்.’ நித்தின். அப்போது தெருவில் சென்றுக�ொண்டிருந்த ஒருவரின் கைப்பேசியிலிருந்து வந்த ரிங்டோன், ‘தெய்வம் வாழ்வது எங்கே தெய்வம் வாழ்வது எங்கே தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்….’. நித்தினின் கண்கள் லேசாகப் பனித்துவிட்டது. அதைச் சமாளித்துக்கொண்டவனாக, ‘நீங்க இன்னும் என்னோட மன்னிப்பு ஏத்துக்கலன்னு நினைக்கறேன்’ என்றான். ‘எனக்குப் பண்ண மாதரி வேற யாருக்கும் பண்ணிடாதீங்க அதுவே ப�ோதும்’ திவ்யா. நித்தின் மாட்டேன் என்பதைப்போலத் தலையை அசைத்துவிட்டுத் திரும்பி நடக்கத் த�ொடங்கினான். ‘உள்ள வாங்க நித்தின். காப்பிச் சாப்பிட்டுப் ப�ோலாம்’ திவ்யா அவனுக்குப் பின்னாலேயே குரல் க�ொடுத்தபடி வந்தாள். ‘பரவால்ல திவ்யா தேங்க்ஸ்’ நித்தின் நடக்கத்தொடங்கினான். ட�ோஜன் அவன் கண்களுக்குத் தென்படவில்லை. இனி அவர் தெரியவும் மாட்டார் என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. 94
நவீனா அலெக்சாண்டர்
அவன் மனம் விடுதலைப் பெற்றுவிட்டது. விடுதலைப் பெற்ற மனம் புத்தா தன்மைக்கொண்டதாகிவிடுகிறது. புத்தா மனம் வாழ்வின் இன்ப துன்பங்களை எட்டி நின்று அணுக உதவுகிறது. இன்ப துன்பங்களைக் கையாளும் புத்தா மனம் அவற்றோடு தன்னை ஒன்றுபடுத்திக்கொள்வதில்லை. அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அதே சமயத்தில் அவற்றைக் கடந்துப்போக மனிதனுக்கு உதவி செய்கிறது. இதுவே ஞானம். வண்டி வண்டியாகப் புத்தகங்களைப் படித்துத் தகவல்களை மண்டைக்குள் ஏற்றிக்கொள்வது அல்ல ஞானம். அந்த வயதான விவசாயி உழவுத் த�ொழிலுக்கு என்று வளர்த்து வந்த இரண்டு குதிரைகளும் ஒருநாள் காட்டுக்குள் ஓடிவிட்டன. நிலத்தில் பயிர் வைக்கலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் இது நடந்தது. அக்கம் பக்கத்தினர், ‘அட கடவுளே இப்படி ஆகிப்போச்சே. என்ன ச�ோதனையப்பா உனக்கு’ என்று அவரிடம் துக்கம் விசாரித்தனர். அதற்கு அவர் ‘இதுவும் கடந்து ப�ோகும்’ என்றார். க�ொஞ்ச நாட்கள் கழித்து ஒரு நாள் காலையில் காட்டுக்குள் ஓடிய அவருடைய குதிரைகள் மேலும் இரண்டு புதிய குதிரைகளைக் கூட்டிக்கொண்டு அவருடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தன. அக்கம் பக்கத்தினர், ‘பார்யா உனக்கு அதிர்ஷ்டம்தான் ப�ோ’ என்றார்கள். அந்த வயதான விவசாயி ‘இதுவும் கடந்து ப�ோகும்’ என்றார். அவருடைய மகன் புதிதாக வந்த குதிரைகளைச் சவாரிக்குப் பழக்கிக்கொண்டிருந்தப�ோது கீழே விழுந்து கால்களை உடைத்துக்கொண்டான். அக்கம் பக்கத்தினர், ‘ஐய்யோ உன் மகனுக்கு இப்படியாகனுமா. உனக்குக் கெட்ட காலம்தான் ப�ோ’ என்றார்கள். அதற்கு அவர் ‘இதுவும் கடந்து ப�ோகும்’ என்றார். இந்த நிலையில் இராணுவத்திற்கு ஆள் சேர்க்க வேண்டி அரசனுடைய ஆட்கள் வீடு வீடாக வந்து இளைஞர்களை அழைத்துச் சென்றுக�ொண்டிருந்தார்கள். அந்த வயதான விவசாயியின் வீட்டிற்கும் வந்தார்கள். அவருடைய மகன் கால்கள் முறிந்து கட்டுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு அவன் இராணுவத்திற்குச் சரிப்படமாட்டான் என்று அவனை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அக்கம் பக்கத்தினர், ‘உண்மையிலேயே அதிர்ஷ்டகாரன்தான்யா நீ. உன் மகன் இராணுவத்துல ப�ோய்ச் சாகனும்னு விதி இல்லாம இருக்கே’ என்றார்கள். அந்த விவசாயி ‘இதுவும் கடந்து ப�ோகும்’ என்றார். அந்த வயதான விவசாயியின் மனம் புத்தா மனம். அவரது மனம் தன்னை 95
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
அறிந்த மனம். இன்ப துன்பங்களில் தன்னை மூழ்கடித்துக்கொள்ளாமல் அவற்றைச் சரிசமமாகப் பாவித்து எத்தகைய தடுமாற்றமும் இல்லாமல் கடந்துப்போகும் மனம். தன் வாழ்வின் முன்னேற்றத்திற்காக அடுத்தவனின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிட்டு கடவுளை வெளியே தேடி ஓடும் மனம் அல்ல அவருடையது.
96
நவீனா அலெக்சாண்டர்
97
தத்துவங்களின் நூறு பள்ளிகள்
உன்னிடத்தில் நீ ஞானத்தை கண்டடைய முடியாவிட்டால் பிறகு வேறு எங்கே உன்னால் ஞானத்தை கண்ட்டைய முடியும். – ட�ோஜன் சென்ஜி
தா
வ�ோயிசம் மற்றும் கன்பூசியத்திற்கு முன்பான பழங்காலச் சீன இறையியல் மற்றம் சமூகக் க�ோட்பாடுகள் என்பது மேலிருந்து கீழ் என்கிற பிரமிடிய அமைப்பிலேயே இருந்தது. பேரரசின் உச்சப் படிநிலையில் அரசர்கள் இருந்தார்கள். இவர்களுக்கு அரச பதவி என்பது ச�ொர்கத்தின் கருணையின் மூலமாகவே வழங்கப்படுவதாகப் பார்க்கப்பட்டது. அரசர்கள் சமய சடங்குளையும் திருவிழாக்களையும் நடத்துபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அந்த அந்தப் பகுதி தலைவர்களை (இவர்கள் ப�ோர் காலங்களில் தளபதிகளாகச் செயல்பட வேண்டும் என்பது நிபந்தனை) கட்டுப்படுத்தியே பேரரசர்கள் சீனாவை ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த அந்தப் பகுதி தலைவர்களின் கீழ் நிலவுடமையாளர்களும், அவர்களுக்குக் கீழே விவசாயிகளும் அவர்களுக்கும் கீழே அடிமைகளும் என்று அன்றைய சீன சமூக அமைப்பு இருந்திருக்கிறது. சமூகத்தின் கீழ் நிலையில் இருந்த அடிமைகளுக்கு மற்றொரு தலையாயக் கடமையும் இருந்தது. அரசர்கள் இறக்கும்போது அவர்களுடைய கல்லறைகளில் அவர்களின் அடிமைகளும் புதைக்கப்பட்டார்கள். அதாவது அரசனின் அடிமைகளின் தலை துண்டிக்கப்பட்டு வெற்று உடம்பு அரசனின் இறந்த உடலுடன்
98
நவீனா அலெக்சாண்டர்
சேர்த்துக் கல்லறையில் வைக்கப்பட்டது. அன்றைய சீன மக்களின் சமய நம்பிக்கையைப் ப�ொறுத்தமட்டில் அவர்கள் அரச வமிசத்து மூதாதையர்களையே (Royal Ancestral Deities) கடவுளாக வழிபட்டார்கள். காரணம் அரசர்கள் கடவுளரின் மறு அவதாரமாகத் தங்களை அறிவித்துக்கொண்டது. இயற்கையை வழிபடும் த�ொல் பழங்கால வழக்கமும் இருந்திருக்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள், சாங் அரச பரம்பரை காலத்திய சீனர்கள் டீ என்கிற முதன்மையான ஏக இறைவனை வழிபட்டார்கள் என்றும் ச�ொல்கிறார்கள். ஷாங்டி என்பதின் சுருக்கமே டி என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இவரே இந்தப் பிரபஞ்சத்தையும் உலகத்தையும் த�ோற்றுவித்தவர் என்று அன்றைய சீனர்கள் கருதியதாகச் ச�ொல்லப்படுகிறது. இங்கே ஒரு விசயத்தை மீள் பார்வை செய்யவேண்டியிருக்கிறது அது பான் கு என்பவரே இந்த உலகத்தைப் படைத்ததாக நாம் முன்பே பார்த்தோம். ஆனால் சீன வரலாற்றுத் த�ொகுப்புக்களில் இந்த உலகத்தைப் படைத்தவரின் பெயர் குறித்த தெளிவற்ற தன்மையே இருக்கிறது. பான் கு, ஷாங்டி, நுவா, ஹியாவன் மற்றும் யு வுவாங் இந்தப் பெயர்கள் சீனாவின் உலகத் த�ோற்ற கருத்துகள் என்று வரும்போது மாற்றி மாற்றி ஒரே ப�ொருளில் கையாளப்படுகிறது. ஆனாலும் ஆராய்ச்சியாளர்கள் ஷாங்டி என்கிற பெயரே நம்பகமானது என்கிற முடிவிற்கு வந்திருக்கிறார்கள். இங்கே ஒரு விசயத்தை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது அது யூத, கிருத்தவ, இஸ்லாமிய உலகத் த�ோற்றக் கருத்துக்களுடன் சீனர்களின் உலகத் த�ோற்ற கருத்துக்களும் மிகப் பெரும் அளவில் ஒத்துப்போவதை. யூத மற்றும் கிருத்தவர்களின் ஏக இறைவனான யக�ோவாவிற்கு எல் ஷாடி என்று ஒரு பெயர் உண்டு. எல் ஷாடி என்கிற வார்த்தை பைபிளில் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்தில் 17 மற்றும் 28-ஆம் அதிகாரங்களில் வருகிறது (Genesis 17:1, 28:3). ம�ொழியியல் ஆராய்ச்சியாளர்கள் எல் ஷாடி என்கிற வார்த்தைக்கும் ஷாங்டி-க்கும் ஒற்றுமை இருப்பதாக எண்ணுகிறார்கள். இந்த எண்ணத்திற்கு மேலும் வலுசேர்ப்பதுப�ோலச் சீனர்களின் உலகத் த�ோற்ற கருத்துக்களும் யூத கிருத்தவ மற்றும் இஸ்லாமியர்களின் உலகத் த�ோற்றக் கருத்துக்களுக்கும் நெருங்கிய த�ொடர்பு இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சாவ�ோ பேரரசு காலத்தின் இடைப்பகுதி சீன இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்த 99
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
காலகட்டம். கிழக்கின் மிகச் சிறந்த தத்துவ ஞானிகளின் பட்டியலில் இருக்கும் லாவ�ோ-ட்சா, கன்பூசியஸ், ம�ோசி மற்றும் மெனிஷியஸ் ப�ோன்றவர்கள் இந்தக் காலகட்டத்தில்தான் த�ோன்றினார்கள். இறையியலிலும் தத்துவத்திலும் கடவுளர்களுக்கு எதிரான புரட்சிகர கருத்துக்கள் த�ோன்றின. பல நூறு ஆண்டுகளாகக் கடவுள் நிலையில் இருந்து வந்த பழம் சீன அரசர்களின் புனைவுகள் கேள்விக்குட்படுத்தப்பட்டது. ப�ோதா குறைக்குச் சாவ�ோ பேரரசின் சர்வாதிகார ப�ோக்கும் அதனால் விளைந்த அரசியல் பிரச்சனைகளும் சேர்ந்துக�ொண்டு அன்றைய சீன மக்களின் சிந்தனையிலும் கருத்துக்களிலும் புதிய மாற்றங்களையும் கேள்விகளையும் க�ொண்டுவந்தன. புதிய சிந்தனைகளும் கேள்விகளும் நூற்றுக்கணக்கில் சிந்தனையாளர்களை முளைக்க வைத்தது. இதன் காரணமாகப் பல தத்துவ மடங்கள் த�ோன்றின. இந்த மடங்களை ஹண்டிரட் ஸ்கூல்ஸ் ஆப் தாட் என்று அழைக்கிறது ஷிஜி புத்தகம். இவற்றில் சீன கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களைச் செலுத்திய தத்துவக் க�ோட்பாடுகள், கன்பூசியனிசம், லீகலிசம், தாவ�ோயிசம், யின்-யாங்க், ம�ோயிசம், லாஜிஷியன்ஸ் மற்றும் ஸ்கூல் ஆப் அக்ரிகல்சர். இந்த அனைத்துக் க�ோட்பாடுகளுக்கும் மூல வேராக இருப்பவை இரண்டே இரண்டுதான். அவை கன்பூசியனிசம் மற்றும் தாவ�ோயிசம். இந்த இரண்டிலிருந்து பிரிந்து கிளைத்தவையே மற்ற க�ோட்பாடுகள். லாவ�ோ-ட்சா மற்றும் கன்பூசியசின் சீடர்களே இவற்றை உருவாக்கியவர்கள். இந்தியாவிற்குள்ளிருந்து வந்த ப�ௌத்தம் சீன கலாச்சாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு சீன மக்களின் சமய மற்றும் தத்துவக் க�ோட்பாடுகளாக வழக்கில் இருந்தவை தாவ�ோயிசமும் கன்பூசியனிசமும். தாவ�ோயிசமும் கன்பூசியனிசமும் சீன சமூகத்தின் இருவேறு படி நிலைகளில் இருந்து உருவானவை. தாவ�ோயிசம் உழவு கலாச்சாரத்தையும் கன்பூசியனிசம் வணிகக் கலாச்சாரத்தையும் மூலவேராகக் க�ொண்டவை. ஒன்றுக்கு ஒன்று முரண்படக் கூடியவையுமாகும். தாவ�ோயிச க�ோட்பாட்டாளர்கள் கன்பூசியனிசத்தையும், கன்பூசிய க�ோட்ப்பாட்டாளர்கள் தாவ�ோயிசத்தையும் தாக்கிப் பேசுவது எழுதுவது அன்றைய நடைமுறை. பெருநில கிழார்களும், விவசாயிகளும் பெரும்பான்மை தாவ�ோயிசக் க�ொள்கைகளைப் பின்பற்றுபவர்களாக இருந்தார்கள். வணிகர்களும், கலைஞர்களும், அரசு ஊழியர்களும் கன்பூசியக் 100
நவீனா அலெக்சாண்டர்
க�ொள்கை க�ொண்டவர்களாக இருந்தார். தாவ�ோயிசம் விவசாயக் கலாச்சாரத்திலிருந்து வந்த காரணத்தால் அது இயற்கைய�ோடு இணைந்த வாழ்க்கையைக் குறித்துப் பேசக் கூடியது. இயற்கையின் அழகு மற்றும் அதன் இயல்பை மேன்மைப் படுத்துவதுடன் மனிதன் அவனுடைய வாழ்க்கையை இறக்கையின் இயல்புடன் ஒன்றிணைத்துக்கொண்டு வாழவேண்டும் என்றது. இயற்கை வழிபாட்டைத் தன்னகத்தே இழுத்துக்கொண்டது. தாவ�ோயிசம் இயற்கையுடன் இணையும் தனி மனித வாழ்வைக் குறித்து அதிகமதிகம் பேசியது. தாவ�ோ ச�ொல்லும் மனிதன் சமூகக் கட்டுக்கள் அற்றவன். மனித வாழ்வின் இடர்பாடுகளில் சிக்கிக்கொள்ளாமல் தன்னுடைய மனதை அதிலிருந்து விடுவித்துக்கொண்டு இயற்கையின் உன்னதத்துடன் ஒன்றினையக் கூடியவன். இந்தத் தன்மையின் காரணமாகவே தாவ�ோயிச க�ொள்கைகளைப் பிற்காலத்தில் வந்த ப�ௌத்தமும், ஜென் ப�ௌத்தமும் தங்களின் க�ொள்கைகளுக்கு மிக நெருக்கம் க�ொண்டவையாகப் பார்த்தன. கன்பூசியனிசம் மனிதனின் ஒழுக்கக் குணத்தை அடிப்படையாகக் க�ொண்டது. சமூகத்தில் தனி மனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதே ஒரு மேம்பட்ட மனித சமூகத்தை உருவாக்கக் கூடியது என்றது. சமூகத்துடனான தனி மனித வாழ்வைக் குறித்து அதிகம் பேசியது. மனிதனின் அன்றாட வாழ்க்கை சமூக நடிவடிக்கைகளுடன் பின்னப்பட்டு இருப்பதால் சமூகத்தின் சிக்கல்களையும் அதை மனிதன் எப்படித் தன்னுடைய தனி மனித ஒழுக்கத்துடன் கடந்துப�ோவது என்பதையும் விலாவாரியாக அலசியது. சுய ஒழுக்கம் கன்பூசியனிசத்தின் ஜீவ நாடி. யின்-யாங் க�ோட்பாடும், ஸ்கூல் ஆப் அக்ரிகல்சர் க�ோட்பாடும் தாவ�ோயிசத்துடன் மிக நெருக்கம் க�ொண்டவை. ஒருவகையில் தாவ�ோயிசத்தின் அடிப்படையில் கிளைத்தது என்று கூடச் ச�ொல்லலாம். யின்-யாங்க் இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்தும் ஐம்பூதங்களைக் குறித்தும் பேசக் கூடியது. ஸ்கூல் ஆப் அக்ரிகல்சர் முழுக்க முழுக்க விவசாயத் த�ொழில் நுட்பங்களையும் உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் பேசியது. லீகலிசம், ம�ோயிசம், லாஜிஷியன்ஸ் இந்த மூன்றும் கன்பூசியனிசத்திலிருந்து கிளைத்தவை. லீகலிசம் சட்ட திட்டங்களைக் குறித்துப் பேசியது. மனித சமூகத்தை ஒழுக்கம் க�ொண்டதாக 101
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
வைத்திருக்கச் சட்டங்கள் மிக அவசியம் என்றும் அந்தச் சட்டங்கள் மேலிருந்து கீழாகக் கடுமையாகச் செயல்படுத்தப்படவேண்டும் என்று ச�ொன்னது. ம�ோயிசம் மக்கள் அனைவரும் சமம், மனிதர்களிடையே எந்த நிலையிலும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்றது. நம்மவர்களின் யாதும் ஊரே க�ொள்கையைக் க�ொண்டது இது. லாஜிஷியன்ஸ் காரணக் காரிய த�ொடர்புகளை முன்னிறுத்தியது. தாவ�ோயிசமும் கன்பூசியனிசமும் சீன கலாச்சாரத்தில் ஏற்ற இறங்க காலகட்டங்களைச் சந்தித்திருக்கின்றன. தாவ�ோயிச க�ோட்பாடுகளைப் பின்னுக்குத் தள்ளி கன்பூசியனிசமும் பிறகு சில ஆண்டுகள் கழித்துக் கன்பூசியனிசத்தைப் பின்னுக்குத் தள்ளி தாவ�ோயிசமும் மக்களிடம் செல்வாக்கு பெற்றவையாக இருந்திருக்கின்றன. இந்த நிலைகள் எல்லாம் கி.பி. 100 வரைதான். சுமார் கி.பி. 64-ல் இந்தியாவிலிருந்து திபேத் வழியாக மஹாயன ப�ௌத்தம் சீனாவிற்குள் நுழைந்து பரவிய பிறகு ப�ௌத்தமே சீனாவின் தனிப் பெரும் சமயக் க�ோட்பாடாகவும் தத்துவமாகவும் மாறிப்போனது.
102
நவீனா அலெக்சாண்டர்
103
சேறு ச�ொட்டி நிற்கும் எருமையாக என் மனம்
சவ்-ச�ோ ஒருமுறை பனி குவியலில் சிக்கிக்கொண்டார். ‘என்னை காப்பாற்றுங்கள்’, ‘என்னை இதிலிருந்து யாராவது தூக்கிவிடுங்கள்’ என்று உதவி கேட்டு உறக்க கத்தினார். அவருடைய கதறலை கேட்டு அங்கே வந்த மற்றொரு ஜென் குரு உதவிக்கு கதறிக்கொண்டிருந்த சவ்ச�ோவிற்கு அருகில் அமைதியாக நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொண்டார். இந்த செயலை பார்த்த சவ்ச�ோவ் சட்டென்று ஞானம் வரப்பெற்றவராக அவராகவே அந்த புதை குழியிலிருந்து எழுந்து சென்றுவிட்டார். – ஜென் க�ோன் கதை
இ
ந்தப் பகுதியில் இருப்பவை ட�ோஜன் சென்ஜியால் சேகரித்துத் த�ொகுக்கப்பட்ட க�ோன் கதைகள். முந்நூறு க�ோன் கதைகள் க�ொண்ட தி டுரூ தர்மா ஐ என்கிற அவருடைய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகள். இந்தக் கதைகள் தற்போது வழக்கிலிருக்கும் எளிமையான ஜென் கதைகளைப் ப�ோன்றவை கிடையாது. இந்தக் கதைகள் அமைப்பில் விடுகதைகள் ப�ோன்றவை. ஞானம் பெற தன்னிடம் வரும் சீடர்களுக்குப் பயிற்சிக்காக ஜென் மாஸ்டர்கள் க�ொடுக்கக் கூடியவை இந்தக் கதைகள். இந்தக் கதைகளுக்கான விடையைத் தியானத்தில் உட்கார்ந்து சீடர்கள் கண்டுபிடிக்கவேண்டும். இந்தக் கதைகளின் விடையைத் தியானத்தில் தேடும் தருணத்தில் அவர்களுக்கு இந்தக் கதைகளுக்கான விடைய�ோடு 104
நவீனா அலெக்சாண்டர்
சேர்த்து அவர்கள் தேடிவந்த ஞானமும் கிடைக்க வாய்ப்புண்டு. அதற்காகவே இந்தப் பயிற்சி. மேலும் தியானத்தில் மனதை அலை பாய விடாமல் ஒரே இடத்தில் குவிக்கவேண்டியும் இந்தக் கதைகள் சீடர்களுக்குத் தரப்படும். இந்தக் கதைக்கான விடையைத் தேடி தியானத்தில் உட்காரும் சீடனின் மனது இந்தக் கதைகளுக்கான விடையைத் தேடி அதன் மீதே குவியும்போது மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி கிடைக்கிறது. க�ோன் கதைகளை நிலவைப் பார்த்து சுட்டும் விரலுக்கு ஒப்பிடுகிறார்கள் ஜென் மாஸ்டர்கள். வானில் இருக்கும் அழகிய நிலவை நாம் பார்க்க ஒரு விரல் அந்த நிலவை ந�ோக்கிச் சுட்டும்போது நாம் எப்படிச் சுட்டும் விரலைப் பார்க்காமல் நிலவைப் பார்ப்போம�ோ அதே ப�ோல மனதை ஒருமுகப்படுத்தல் என்கிற நிலவைச் சுட்டிக்காட்டும் விரல் க�ோன் கதைகள். சீடன் கவனிக்க வேண்டியது மனதை ஒருமுகப்படுத்தும் இரகசியத்தைத் தானே தவிரக் க�ோன் கதைகளின் விடைகளை அல்ல. பல க�ோன் கதைகள் சீடனை சாமர்த்தியமாகத் திசை திருப்புவதற்கு என்றே எழுதப்பட்டவை. அவற்றுக்கு உறுதியான இறுதியான பதில்கள் என்று எதுவும் கிடையாது. எந்தக் க�ோணத்திலிருந்தும் இவற்றுக்கான பதில்களை முன்வைக்க முடியும். சில க�ோன் கதைகளுக்குப் பதில் என்பதே கிடையாது. அவை வெறும் வார்த்தை விளையாட்டுக்கள் மாத்திரமே. அந்த விளையாட்டில் ஏமாறாமல் இருப்பது சீடனின் சாமார்த்தியம். மனதை ஒரு நிலைப்படுத்த விரும்புபவர்கள் இந்தக் க�ோன் கதைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கேஸ் 1: ஜென் மாஸ்டர் கான்ஷேன் தன்னுடைய குரு நான்குவானிடம் கேட்டார், ‘தன்னை அறிந்த ஒருவன் எங்கே செல்கிறான்’ நான்குவான், ‘மலைக்கு அருகில் இருக்கும் செல்வந்தனின் வீட்டிற்கு. பிறகு அவன் எருமையாக மாறிவிடுகிறான்’ கான்ஷேன் குருவின் இந்த அறிவுரைக்கு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். பிறகு நான்குவான் ச�ொன்னார், ‘நேற்று இரவு நிலவு ஓளி சன்னல் வழியே வந்தது’
105
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
கேஸ் 2: ஒரு மடாதிபதி ஜென் குரு குயின்கியானிடம் கேட்டார், ‘ப�ோதி தர்மர் இந்தியாவிலிருந்து வந்ததற்கான ந�ோக்கம் என்ன’ குயின்கியான், ‘இது ப�ோலத்தான்’ அந்த மடாதிபதி மேலும், ‘இந்த நாட்கள்ல ச�ொல்லிக் க�ொடுக்க உங்களுக்கு எதாவது இருக்கா’ குயின்கியான், ‘க�ொஞ்சம் கிட்டே வரவும்’ அந்த மடாதிபதி குருவின் அருகில் சென்றார். குயின்கியான், ‘இதை மனத�ோடு வைத்துக்கொள்ளவும்’ கேஸ் 3: ஒருமுறை ஜென் மாஸ்டர் பாவ�ோஜி சந்தைக்குச் சென்றார். அப்போது இறைச்சி வாங்க வந்த ஒருவர் கறி வெட்டுபவரிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க நேர்ந்தது. இறைச்சி வாங்க வந்தவர், ‘சின்னச் சின்னதாக வெட்டி நல்ல கறித் துண்டுகளை எனக்குப் ப�ோடுங்கள்’ இதைக் கேட்ட கறிகடைக்காரர், தன் கையிலிருந்த கறி வெட்டும் கத்தியை கீழே வைத்துவிட்டு இறைச்சி வாங்கவந்தவரைப் பார்த்து, ‘அய்யா இதுல எதாவது ஒரு கெட்ட கறித் துண்டு இருக்கிறதா நீங்களே பார்த்து ச�ொல்லவும்’ கறிக்கடைக்காரரின் இந்தப் பதிலை கேட்ட ந�ொடியில் ஜென் மாஸ்டர் பாவ�ோஜிக்கு ஞானம் பிறந்தது. கேஸ் 4: ஒருமுறை ஜென் ஆசிரியர் லியாங், ஜென் குரு மாசுவிடம் பாடம் படித்துக்கொண்டிருந்தார். ஜென் குரு மாசு, லியாங்கைப் பார்த்துக்கேட்டார், ‘என்ன சூத்திரத்தை நீ கற்றுக்கொடுக்கிறாய்’ லியாங் ச�ொன்னார், ‘தாமரை சூத்திரா’ மாசு கேட்டார், ‘அதை எப்படிக் கற்றுக்கொடுக்கிறாய்’ லியாங் ச�ொன்னார், ‘மனதின் மூலமாகக் கற்றுக்கொடுக்கிறேன்’ மாசு கேட்டார், ‘மனம் என்பது நடிகனைப் ப�ோன்றது. மன உறுதி என்பது அதன் துணை நடிகனைப் ப�ோன்றது. ஆறு உணர்வுகளும் அப்படியே. இப்படியிருக்க அவை எப்படிக் கற்றுக்கொடுக்க முடியும்’ லியாங் திருப்பிக் கேட்டார், ‘மனதால் முடியாது என்றால் பிறகு வெறுமையால் முடியுமா?’ 106
நவீனா அலெக்சாண்டர்
மாசு ச�ொன்னார், ‘ஆம். வெறுமையால் கற்றுக்கொடுக்க முடியும்’ இதைக் கேட்டதும் லியாங் தன் உடைகளை மடித்துவிட்டுக்கொண்டு எழுந்து நடந்தார். மாசு அவரைக் கூப்பிட்டார், ‘ஆசிரியரே’ லியாங் நின்று திரும்பி அவரைப் பார்த்தார். மாசு ச�ொன்னார், ‘பிறப்பு த�ொடங்கி இறப்பு வரை இது இதுதான்’ அந்த ந�ொடியில் லியாங்கிற்கு ஞானம் பிறந்தது. கேஸ் 5: அவ்வளவாகப் படிப்பறிவில்லாத பான்குயான் ஜென் ஆசிரியர் ஷிடுவிடம் கேட்டான், ‘எந்த ஒரு விசயத்திலும் ஒத்துப்போகாத மனிதன் யார்’ அதற்குப் பதில் ச�ொல்லும் விதமாக ஷிடு தன் கையால் பான்குயானின் வாயை மூடினார். அந்த ந�ொடியில் பான்குயானுக்கு ஏத�ோ புரிந்ததைப் ப�ோல இருந்தது. மற்றொரு நாள் ஜென் குரு மாசுவைப் பார்த்தப�ோது இதே கேள்வியை அவரிடமும் கேட்டான். மாசு ச�ொன்னார், ‘அத�ோ அங்கே ஓடும் ஆறு முழுவதையும் ஒரே மடக்கில் உன்னால் எப்பொழுது குடித்து முடிக்க முடிகிறத�ோ அப்போது உனக்குப் பதில் ச�ொல்கிறேன்’ அந்த ந�ொடியில் பான்குயானுக்கு ஞானம் பிறந்தது. கேஸ் 6: மந்திரி பேக்சியு ஒருமுறை பெளத்த மடம் ஒன்றிற்கு சென்றார். வாசனை ஊதுபத்திகளை ஏற்றி வழிபாடு செய்த பிறகு அந்த மடத்தின் சுவர்களில் இருந்த ஓவியங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு ஓவியம் அவரை மிகவும் ஈர்த்தது. மடத்தின் அதிகாரியை கூப்பிட்டு அது என்ன மாதரியான ஓவியம் என்று கேட்டார். மடத்தின் அதிகாரி, ‘இந்த மடத்தின் ஓவியம் அய்யா’ மந்திரி பேக்சியு, ‘அது தெரிகிறது. ஆனால் ஓவியத்தில் எங்கே மடம் இருக்கிறது?’ மடத்தின் அதிகாரிக்கு இதற்குப் பதில் தெரியவில்லை. முழித்துக்கொண்டு நின்றார். மந்திரி பேக்சியு, ‘இங்கே ஜென் துறவி யாராவது இருக்கிறார்களா?’ மடத்தின் அதிகாரி ஓடிப்போய் ஒரு ஜென் துறவியைக் கூட்டிவந்தார். மந்திரி பேக்சியு தன்னுடைய கேள்வியை அந்தச் ஜென் துறவியிடம் 107
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
கேட்டார். ஜென் துறவி உறக்க கத்தி, ‘மந்திரியே’ என்று கூப்பிட்டார். மந்திரி பேக்சியு, ‘ஊம்’ ஜென் துறவி, ‘நீ எங்கே இருக்கிறாய்’ மந்திரி பேக்சியு புரிந்துவிட்டது. கேஸ் 7: ஜென் மாஸ்டர் டாங்ஷான் தன்னுடைய சீடர்களைப் பார்த்து, ‘புத்த தன்மையைக் கடந்து ப�ோவதை உணருங்கள், பிறகு ஒரு வார்த்தை ச�ொல்லுங்கள்’ ஒரு சீடர் கேட்டார், ‘ஒரு வார்த்தை ச�ொல்வது என்றால் என்ன?’ டாங்ஷான் ச�ொன்னார், ‘ஒரு வார்த்தையைச் ச�ொல்லும்போது அதை நீங்கள் கேட்பது இல்லை’ சீடர் கேட்டார், ‘நீங்கள் அதைக் கேட்கிறீர்களா?’ டாங்ஷான் ச�ொன்னார், ‘நான் பேசாதப�ோது நான் அதைக் கேட்கிறேன்’ கேஸ் 8: யாங்ஷான் அவனுடைய ஜென் மாஸ்டர் குயிஷானிடம் கேட்டான், ‘க�ோடிக்கணக்கான ப�ொருள்கள் ஒரே நேரத்தில் த�ோன்றினால் எப்படி இருக்கும்?’ குயிஷான் ச�ொன்னார், ‘நீலம் மஞ்சள் அல்ல. நீளம் சிறியது அல்ல. எல்லாப் ப�ொருள்களும் அதன் அதன் இடத்தில் இருக்கின்றன. அதைக் குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை’ யாங்ஷான் தலைகுனிந்து குருவை வணங்கினான். கேஸ் 9: துறவி ஒருவர் ஜென் குரு ஜிங்ஷேன்னிடம் கேட்டார், ‘மலைகளையும், ஆறுகளையும், இந்தப் பூமியையும் எப்படிப் புரட்டுவீர்கள் அதன் பிறகு தன்னிலைக்குத் திரும்புவீர்கள்?’ ஜிங்ஷேன் ச�ொன்னார், ‘தன்னிலையை எப்படிப் புரட்டுவீர்கள் அதன் பிறகு மலைகளுக்கும், ஆறுகளுக்கும் இந்தப் பூமிக்கும் திரும்புவீர்கள்?’
108
நவீனா அலெக்சாண்டர்
கேஸ் 10: ஒருநாள் ஜென் குரு குயிஷான் நிலத்தை உழுதுக�ொண்டிருந்தப�ோது அவருடைய மாணவர் ஜென் மாஸ்டர் ஹூயிஜி அவருடன் இணைந்துக�ொண்டார். இவரும் சேர்ந்து நிலத்தை உழுதார்கள். அப்போது ஹூயிஜி கேட்டார், ‘குரு இந்த இடம் தாழ்வாக இருக்கிறது. இதை எப்படி உயரமான இடத்துடன் சமன் படுத்துவது?’ குயிஷான் ச�ொன்னார், ‘தண்ணீர் சரி சமமானது. ஏன் தண்ணீரை பயன்படுத்தி இந்த முழு நிலத்தையும் சமன்படுத்த கூடாது?’ ஹூயிஜி, ‘தண்ணீர் அவசியமில்லை குரு. உயரமான இடங்கள் அதன் அளவில் சமமாக இருக்கின்றன. தாழ்வான இடங்கள் அதன் அளவில் தாழ்வாக இருக்கின்றன.’
109
Reference Books
Ancient Scriptures 1. Zen Teaching Of Bodhidharma by Red Pine 2. The Way Of Chuang Tzu by Thomas Merton History of Zen 1. The Bodhidharma Anthology: The Earliest Records of Zen by Jeffrey L. Broughton 2. The Budddhist Religion: A Historical Introduction 3. The Way of Zen by Alan Watts 4. Zen Masters edited by Steven Heine & Dale S. Wright 5. How Zen Became Zen The Dispute over Enlightenment and the Formation of Chan Buddhism in Song-Dynasty China by Morten Schlutter
110
நவீனா அலெக்சாண்டர்
Koan Books 1. The Blue Cliff Record translaed by Thomas Cleary & J.C. Cleary 2. Dogen’s Extensive Record: A Translation Of The Eihei Koroku 3. First Dogen Book: Selected Essays From Dogen Zenji’s Shobogenzo translated by Bob Myers 4. Mumonkan: Gateless Gate 5. Shobogenzo The True Dharma-Eye Treasury Vol.1 6. The Book Of Serenity 7. The True Dharma Eye: Zen Master Dogen’s Three Thundred Koans 8. The Koan: Texts and Contexts In Zen Buddhism Ritual Zen Ritual: Studies Of Zen Buddhist Theory In Practice Zen Stories 1. Zen Flesh Zen Bones compiled by Paul Reps 2. 101 Zen Stories 111
புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும்
Understanding Zen 1. Buddhism Is Not What You Think by Steve Hagen 2. Everyday Zen by Charlotte Joko Beck 3. Instant Zen: Waking Up In The Present translated by Thomas Cleary 4. The Essential Teachings Of Zen Master Hakuin translated by Norman Waddell 5. The Three Pillars Of Zen: Teaching Practice Enlightenment 6. Zen and the Art of Makin a Living by Laurence G. Boldt 7. Zen Mind, Beginner’s Mind by Shunryu Suzuki Chinese Philosophy A Short History Of Chinese Philosophy by Fung Yu-Lan Chinese History Ancient Chinese Dynasties by Cindy Jenson-Elliott 1421 The Year China Discovered The World by Gavin Menzies 112
நவீனா அலெக்சாண்டர்
113